என்னை சுமந்த ஆத்தா நீ! நினைத்தாயோ !
உன் கருவறையில் பிண்டமாய் நான்கிடக்க!
கத்தி எடுப்பவனோ! களவாட பிறந்தவனோ!!
கத்தி ! கத்தி ! உரைத்தேன்
தமிழ்த்தாயின் கவிதைவரிளை!!
களவாடிதிரிந்தேன்
கம்பன்சொத்தையும்!
கண்ணகி காப்பியத்தையும்!!
வால்மிகி புராணத்தையும்!!
தொல் காப்பியத்தையும்!!
ஐயம் தீர்க்க ஐம்பெருங்காப்பியங்களையும்!!
களவாட பிறந்த தமிழ் பற்றுக்களவாளி!!
பலகோடிதமிழ் இதயங்களை
தமிழ் சொல் வாளால் கொலை செய்யும் வேற்றுமொழி பகையாளி!!
என் தாய்க்கு பிறந்தேன்!! பிளையாய் மட்டும்!!
என் தாய் தமிழுக்கு பிறந்தேன் கவியரசு வைரமுத்து வாய் மட்டும்!
– கவிப்பிரியன்,
கவிதை மாணிக்கம்.