எது மகிழ்ச்சி ?

0
98

பல மாதங்கள்
காத்திருந்து;
மழலையின்
அழுகுரல் கேட்பது
“மகிழ்ச்சி “

நாக்கு வறண்டு
தாகமெடுக்கும்
போது
துளிநீர் பார்த்தால்
“மகிழ்ச்சி “

முதிர்கன்னிகளுக்கு
நல்ல மணவாளன்
அமைவது
“மகிழ்ச்சி “

பசியால்
வாடுபவர்களுக்கு
ஒரு நேர உணவு
கிடைத்தால்
“மகிழ்ச்சி “

வாடிய பயிர்களுக்கு
எல்லாம் மழையைக்
கண்டால்
“மகிழ்ச்சி “

ஆண்டுகள் பல ஏங்கி
அரசாங்க வேலை
கிடைத்தால்
“மகிழ்ச்சி “

சுதந்திர பறவைகளாக
பெண்களை காண்பது
“மகிழ்ச்சி “

பிறர் கை
எதிர்பாராமல்
எந்த வயதிலும்
உழைக்கும்
தெம்பு இருந்தால்
“மகிழ்ச்சி “

விளை நிலங்கள் எல்லாம்
கட்டிடமாக மாறாமல்
விவசாயம் செய்தால்
“மகிழ்ச்சி “

கொடிய நோய்க்கு
அதிஷ்டமாக
மருந்து கண்டுபிடித்தால்
மகிழ்ச்சியோ

“மகிழ்ச்சி “

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here