உயிர் ஒருமித்த தருணம்

0
56

‘காதலர் கடைக்கண் காட்டிவிட்டால்

மண்ணில் குமரர்க்கு மாமலையும்

ஒர் கடுகாம்!’

என்பார் பாரதிதாசன்!

எட்டாத உயரத்தில் தன்

உயிர் இருக்கும் இடம் நாடி

பனை உயர் ஒற்றைச் சக்கரவண்டி

மீதூர்ந்து வந்தவனுக்கு

அமுதூற்றினை ஒத்த

இதழ் தந்தாள்- அவன்

இதழ் பதித்தான்!

முத்தம் என்பது முத்தம் மட்டுமேயல்ல!

காதலிருவர் உயிர் ஒருமித்த தருணமுமாகும்!

– மா.பாரதிமுத்துநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here