இசையுலகின் ஜாம்பவான் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

0
75

இசையுலகை தனது குரலால் கட்டிப் போட்டு வைத்திருந்தவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். அவரது பாடல்களுக்கு மயங்காதவர் யாரும் இல்லை. கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று உயிரிழந்தார் இதனால் ஒட்டுமொத்த நாடும் கண்ணீர் கடலில் மூழ்கியுள்ளது.

இந்நிலையில் அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இதனையடுத்து எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல், 72 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தனது இனிமையான குரலால் ரசிகர்களை உறங்க வைத்த அவர், தற்போது துயில் கொள்ள சென்றார்.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு திரையுலகினர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், பாடகர் மனோ, இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், நடிகர் விஜய் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழகம், ஆந்திரா, கேரளாவைச் சேர்ந்த ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர்.

அவர் இந்த உலகை விட்டு மறைந்தாலும், அவரது பாடல்கள் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here