ஆள் காட்டிவிரலே…!

0
25

ஆள் காட்டிவிரலே! உனக்கு மவுஸ்தான்,,!!
ஆண்டவன் என்ன? ஆகாதவனென்று தலையெழுத்தை மாத்துவது!!
ஆட்காட்டி விரலில் வைக்கர கையெழுத்துமையே ! மாத்துவது!!

பத்து வருஷ தமிழக தலையெழுத்தை மாத்த போகுது!
நல்ல வனைசுட்டி காட்டுவதும்‌ நீதான்!!
நல்லா! இல்லாதவனை சுட்டிகாடடப்போவதும் நீதான்!!
அழுக்கான பல்லை விலக்குவதும்!நீதான்!!
அழுக்கான அரசுன்னா!விலக்கப்போவதும் நீதான்!!

செஞ்சோற்று கடன் தீர்த்த, கர்ணனை போல ஆகாதே!!
செறுக்கானவன் பணம்கொடுத்தப்போ!! அதுக்கு
செருப்பா‌அவனுக்குமாறாதே!!
செஞ்சதெல்லாம் நல்லதா !கெட்டதா நீ! அறிவாளி!!
உன்னை அதட்டுறவனைஆக்கு‌கோமாளி!!
உனக்கு தெரியாம ஐந்து வருசம் அவன் ராஜாளி!!
நீதியைநிலைநாட்டும் ஆள்காடாடி விரல், உங்களோட தின்னா பாராட்டுகிறேன்!!

மனசாட்சிக்கு விரோதம் செய்யாது!!
மனிதநேயம்பார்த்து
நாட்டில், நடந்தவைகளை ஆராய்ந்து!!

பொதுசமூக மேம்பட!
நம்தமிழர்உரிமை பாதுகாத்திட!!
தொகுதி மேம்பாடு காண!!
அழுக்கான சட்டையை மாத்தி போடவும்!!
அழுக்கோடே! வாசனை திரவியத்தை பூசிமொழுக நினைக்காதீர்!!
இலவசமாய் புழுவை போட்டு மீன் பிடிக்கும்!
தூண்டிலில் மாட்டாதே!

அரசியல்வாதி ! அரசியலில் கதிக்கும் முன்பு!! அவரின் பணபலம் பார்!!
அரசியலில் குதித்துமுடித்தவனின் சம்பாத்தியம்பார்!!

வாக்களிக்க சொன்னவனின் வாசல் உயர்கிறது!!
வாக்களித்தவன்வாசல் தாழ்ந்து எழமுடியாது தவிக்கிறது!!

ஒருநாள் வயிறை நிறைத்து!
ஓறைந்துவருடம்
வயிறு எரியவாழாதே!

-கவிதை மணிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here