ஆசிரியர் தினம் – 2020

0
100

உற்றுழி உதவி
உறுபொருள் கொடுத்து
பிற்றைநிலை முனியாது
கைகட்டி
வாய் புதைத்து
ஆண்டவன் முன்பு
அடியவனாய்
ஆசான் முன்பு
சீடன் நின்றிருந்த
காலமொன்றிருந்ததே!

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக
தமிழ் மண்ணில்
எண்ணும் எழுத்தும்
கற்பித்தவரும்
கற்றோரும் வழுவாது
இங்ஙனம் வாழ்ந்தார்!
திண்ணையில் அமரவைத்து
அரிசியில் அரிச்சுவடி
எழுத வைத்து
வித்யாரம்பம் செய்தவரே வாத்தியார்
எனப்பட்டார்

பள்ளிகள் வந்தன!
பயிலும் வகுப்பறைகள் தோன்றின
கையில் பிரம்பும்
கண்களில் நெருப்பும்
உள்ளத்தில் ஒருவரும் அறியா அன்பும்
இல்லத்தில் வறுமையும்
‘வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை’
எனும் பெருமையும் சுமந்து
அறியாமையெனும்
இருள் அகற்றினார்

ஏணியாக நின்று உயர்த்தியும்
தோணியாக மிதந்து
சுமந்தும்
மாணாக்கர்களுக்கு உலகமெனும் பெரும்பரப்பில்
‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என
அறிவு கொளுத்தி
நெறிப்படுத்தி
ஆசிரியர் என்று பெயர் பெற்றார்!

தான் உரைக்கப் போகும்
பொருள் அவர் உள்ளத்தில் அமைந்திருக்கும்!

உரைக்கும் விதமே பசுமரத்தாணியாய் மனதுள் பதியும்!

அற்றைநாள் ஆசிரியரின்
அர்ப்பணிப்பு அங்ஙனம் இருந்தது!

கிரேக்கத்தின் சாக்ரடீஸ்,
பிளட்டோவைக் கண்டெடுத்தார்

பிளட்டோ,
அரிஸ்டாட்டிலை
அனைவருமறியச் செய்தார்!

அரிஸ்டாட்டில்,
மாவீரன் அலெக்சாண்டரை
அகிலமே
அறியும்படிச்
செய்தார்!

தமிழ் மண்ணில் அகத்தியர்
தொல்காப்பியரைத் தந்தார்
தொல்காப்பியர் பன்னிருவரைத் தந்தார்!

வாழையடி வாழையென
வந்தத் திருக்கூட்டம்

ஆண்டுகள் கடந்தும்
எமைத் தமிழ் வாசிக்க வைத்தார்!
முன்னோர் மூச்சை சுவாசிக்க வைத்தார்! மகாவித்துவான்
தமிழ்த் தாத்தாவையும்
தாத்தா வாகீச கலாநிதியையும்
வாகீச கலாநிதி
வரதராசனாரையும்
தமிழுலகுக்குத் தந்தனர்!
வரதராசனார் எண்ணற்ற மாணவர்களை நமக்கு ஆசிரியர்களாகத் தந்து மறைந்தார்!

இந்த மரபு மறையலாமோ?

எழுத்தறிவித்தவன் இறைவனாமே!

இற்றை நாளில்
இறைவரும் இல்லாதாயனர்

வணங்கி மகிழும் மாணாக்கரும் இல்லாதவிடத்து நன்றாமோ?

‘ஆச்சார்ய தேவோ பவ’
என்று வடமொழியும் பகரம்!

ஆதலினால்

ஆசிரியரைப் போற்றாதவர்
நன் மாணாக்கர் இல்லை!

சென்றிடுவீர் அருகிருக்கும் ஆசிரியர் இல்லம் நோக்கி இன்று!

உங்கள் பிள்ளைகளையும்
உடன் அழைத்துச் செல்வீர்!

வணங்கியெழுந்து வாழ்த்துகளைப் பெறுவீர்!
பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூர்ந்து இதற்கே!

ஆசிகள் பெறுவீர்!
நலமும் வளமும் பெறுவீர்!

ஆனாலும்

ஆசிரியர் தினம்
ஆசிரியர்களைக்
கொண்டாடும்
நாள் மட்டுமன்று!

கொண்டாடப்படும்
விதத்தில்
ஆசிரியரும்
அமைய நினைவூட்டும்
நாளுமாகும்!

உற்றுழி உதவி
உறுபொருள் கொடுத்து
பிற்றைநிலை முனியாது
கைகட்டி, மெய்யது ஒடுக்கி,
வாய் புதைத்து
ஆண்டவன் முன்பு
அடியவனாய்
ஆசான் முன்பு
சீடன் நின்றிருந்த
காலமொன்றிருந்ததே!

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக
தமிழ் மண்ணில்
எண்ணும் எழுத்தும்
கற்பித்தவரும்
கற்றோரும் வழுவாது
இங்ஙனம் வாழ்ந்தார்!
திண்ணையில் அமரவைத்து
அரிசியில் அரிச்சுவடி
எழுத வைத்து
வித்யாரம்பம் செய்தவரே
வாத்தியார்
எனப்பட்டார்

பள்ளிகள் வந்தன!
பயிலும் வகுப்பறைகள் தோன்றின
கையில் பிரம்பும்
கண்களில் நெருப்பும்
உள்ளத்தில் ஒருவரும் அறியா அன்பும்
இல்லத்தில் வறுமையும்
‘வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை’
எனும் பெருமையும் சுமந்து
அறியாமையெனும்
இருள் அகற்றினார்

பெரும்பணி ஆசிரியர் பணி
அரும்பணி- ஆயினும் அன்று
வரும்படி வகையாயின்றி இத்
திருப்பணி செய்தார்!

ஏணியாக நின்று உயர்த்தியும்
தோணியாக மிதந்து
சுமந்தும்
மாணாக்கர்களுக்கு
உலகமெனும் பெரும்பரப்பில்
‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என
அறிவு கொளுத்தி
நெறிப்படுத்தி
ஆசிரியர் என்று பெயர் பெற்றார்!

அரிச்சுவடி கற்றுத் தருபவரும்
கல்லூரியில் பாடம் எடுப்பவரும்தான்
ஆசிரியர் எனக் கருதுதல் வேண்டா!

ஆயகலைகளும்
ஆகும் தொழில்களும்
அட்டியின்றி பயிற்றுவிப்போர்
அனைவரும் ஆசிரியரே!

தான் உரைக்கப் போகும்
பொருள் அவர் உள்ளத்தில் அமைந்திருக்கும்!

உரைக்கும் விதமே
பசுமரத்தாணியாய் மனதுள் பதியும்!

அற்றைநாள் ஆசிரியரின்
அர்ப்பணிப்பு அங்ஙனம் இருந்தது!

கிரேக்கத்தின் சாக்ரடீஸ்,
பிளட்டோவைக் கண்டெடுத்தார்

பிளட்டோ,
அரிஸ்டாட்டிலை
அனைவருமறியச் செய்தார்!

அரிஸ்டாட்டில்,
மாவீரன் அலெக்சாண்டரை
அகிலமே
அறியும்படிச் செய்தார்!

தமிழ் மண்ணில் அகத்தியர்
தொல்காப்பியரைத் தந்தார்
தொல்காப்பியர்
பன்னிருவரைத் தந்தார்!

வாழையடி வாழையென
வந்தத் திருக்கூட்டம்

ஆண்டுகள் கடந்தும்
எமைத் தமிழ் வாசிக்க வைத்தார்!
முன்னோர் மூச்சை
சுவாசிக்க வைத்தார்!
மகாவித்துவான்
தமிழ்த் தாத்தாவையும்
தாத்தா வாகீச கலாநிதியையும்
வாகீச கலாநிதி
வரதராசனாரையும்
தமிழுலகுக்குத் தந்தனர்!
வரதராசனார் எண்ணற்ற மாணவர்களை நமக்கு
ஆசிரியர்களாகத் தந்து மறைந்தார்!

இந்த மரபு மறையலாமோ?

எழுத்தறிவித்தவன் இறைவனாமே!

இற்றை நாளில்
இறைவரும் இல்லாதாயினர்

வணங்கி மகிழும் மாணாக்கரும் இல்லாதொழிவது நன்றாமோ?

‘ஆச்சார்ய தேவோ பவ’
என்று வடமொழியும் பகரும்!

ஆதலினால்

ஆசிரியரைப் போற்றாதவர்
நன் மாணாக்கர் இல்லை!

சென்றிடுவீர் அருகிருக்கும் ஆசிரியர் இல்லம் நோக்கி இன்று!

உங்கள் பிள்ளைகளையும்
உடன் அழைத்துச் செல்வீர்!

வணங்கியெழுந்து
வாழ்த்துகளைப் பெறுவீர்!
பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூர்ந்து இதற்கே!

ஆசிகள் பெறுவீர்!
நலமும் வளமும் பெறுவீர்!

ஆனாலும்
ஒன்றை உரைக்க விழைவேன்:

ஆசிரியர் தினம்
ஆசிரியர்களைக்
கொண்டாடும்
நாள் மட்டுமன்று!

கொண்டாடப்படும்
விதத்தில்
ஆசிரியரும்
அமைய நினைவூட்டும்
நாளுமாகும்!

உற்றுழி உதவி
உறுபொருள் கொடுத்து
பிற்றைநிலை முனியாது
கைகட்டி, மெய்யது ஒடுக்கி,
வாய் புதைத்து
ஆண்டவன் முன்பு
அடியவனாய்
ஆசான் முன்பு
சீடன் நின்றிருந்த
காலமொன்றிருந்ததே!

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக
தமிழ் மண்ணில்
எண்ணும் எழுத்தும்
கற்பித்தவரும்
கற்றோரும் வழுவாது
இங்ஙனம் வாழ்ந்தார்!
திண்ணையில் அமரவைத்து
அரிசியில் அரிச்சுவடி
எழுத வைத்து
வித்யாரம்பம் செய்தவரே
வாத்தியார்
எனப்பட்டார்

பள்ளிகள் வந்தன!
பயிலும் வகுப்பறைகள் தோன்றின
கையில் பிரம்பும்
கண்களில் நெருப்பும்
உள்ளத்தில் ஒருவரும் அறியா அன்பும்
இல்லத்தில் வறுமையும்
‘வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை’
எனும் பெருமையும் சுமந்து
அறியாமையெனும்
இருள் அகற்றினார்

பெரும்பணி ஆசிரியர் பணி
அரும்பணி- ஆயினும் அன்று
வரும்படி வகையாயின்றி இத்
திருப்பணி செய்தார்!

ஏணியாக நின்று உயர்த்தியும்
தோணியாக மிதந்து
சுமந்தும்
மாணாக்கர்களுக்கு
உலகமெனும் பெரும்பரப்பில்
‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’ என
அறிவு கொளுத்தி
நெறிப்படுத்தி
ஆசிரியர் என்று பெயர் பெற்றார்!

அரிச்சுவடி கற்றுத் தருபவரும்
கல்லூரியில் பாடம் எடுப்பவரும்தான்
ஆசிரியர் எனக் கருதுதல் வேண்டா!

ஆயகலைகளும்
ஆகும் தொழில்களும்
அட்டியின்றி பயிற்றுவிப்போர்
அனைவரும் ஆசிரியரே!

தான் உரைக்கப் போகும்
பொருள் அவர் உள்ளத்தில் அமைந்திருக்கும்!

உரைக்கும் விதமே
பசுமரத்தாணியாய் மனதுள் பதியும்!

அற்றைநாள் ஆசிரியரின்
அர்ப்பணிப்பு அங்ஙனம் இருந்தது!

கிரேக்கத்தின் சாக்ரடீஸ்,
பிளட்டோவைக் கண்டெடுத்தார்

பிளட்டோ,
அரிஸ்டாட்டிலை
அனைவருமறியச் செய்தார்!

அரிஸ்டாட்டில்,
மாவீரன் அலெக்சாண்டரை
அகிலமே
அறியும்படிச் செய்தார்!

தமிழ் மண்ணில் அகத்தியர்
தொல்காப்பியரைத் தந்தார்
தொல்காப்பியர்
பன்னிருவரைத் தந்தார்!

வாழையடி வாழையென
வந்தத் திருக்கூட்டம்

ஆண்டுகள் கடந்தும்
எமைத் தமிழ் வாசிக்க வைத்தார்!
முன்னோர் மூச்சை
சுவாசிக்க வைத்தார்!
மகாவித்துவான்
தமிழ்த் தாத்தாவையும்
தாத்தா வாகீச கலாநிதியையும்
வாகீச கலாநிதி
வரதராசனாரையும்
தமிழுலகுக்குத் தந்தனர்!
வரதராசனார் எண்ணற்ற மாணவர்களை நமக்கு
ஆசிரியர்களாகத் தந்து மறைந்தார்!

இந்த மரபு மறையலாமோ?

எழுத்தறிவித்தவன் இறைவனாமே!

இற்றை நாளில்
இறைவரும் இல்லாதாயினர்

வணங்கி மகிழும் மாணாக்கரும் இல்லாதொழிவது நன்றாமோ?

‘ஆச்சார்ய தேவோ பவ’
என்று வடமொழியும் பகரும்!

ஆதலினால்

ஆசிரியரைப் போற்றாதவர்
நன் மாணாக்கர் இல்லை!

சென்றிடுவீர் அருகிருக்கும் ஆசிரியர் இல்லம் நோக்கி இன்று!

உங்கள் பிள்ளைகளையும்
உடன் அழைத்துச் செல்வீர்!

வணங்கியெழுந்து
வாழ்த்துகளைப் பெறுவீர்!
பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூர்ந்து இதற்கே!

ஆசிகள் பெறுவீர்!
நலமும் வளமும் பெறுவீர்!

ஆனாலும்
ஒன்றை உரைக்க விழைவேன்:

ஆசிரியர் தினம்
ஆசிரியர்களைக்
கொண்டாடும்
நாள் மட்டுமன்று!

கொண்டாடப்படும்
விதத்தில்
ஆசிரியரும்
அமைய நினைவூட்டும்
நாளுமாகும்!

மா.பாரதிமுத்துநாயகம்,
விக்கிரமசிங்கபுரம்

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here