அன்றலர்ந்த பொழுதாய்…

0
12

மீண்டும் மீண்டு மீள முடியாத
உலகொன்றைத் தேடித்தேடியே தொலைகிறது
என் இரவுகளின் பாதைகள்…
கலைந்து சென்ற மேகங்கள்
வரைந்துச் சென்ற ஓவியமென
நிலவது எட்டிப்பார்த்து
தன் கூட்டுக்குள் நுழைய
அதிகாலை சூரியனோ
பளிச்சென்று வெளிவர முயற்சிக்க…

அந்த ஏகாந்த வேளைதனில்
மழைக் குழந்தையின் அழுகையென
சிறு தூறல்கள் சிதறிட…
இதோ பசுமையின் வீட்டில் விடியும் வரை
படுத்துறங்கிய பனிக்கூட்டமோ
முகாரிகளினாலும் பாடிட முடியாத
உறைபனியின் முகடுகளிலும்
கரையாத வலியின் உணர்வுகளைக் கரைத்திட முற்பட்டே
மெதுவாய் புலர்கிறது அன்றலர்ந்த பொழுதொன்று…

இசைக்கேற்று அசைந்தாடும் மரங்கள்
சற்றே சிணுங்கிட
சில்லென்ற தென்றல் மேனிதனில் சிலிர்த்து சிலிர்ப்பூட்டிட …
இனிதே விடிகிறது
இன்றைய இனிமையான பொழுது….

-சசிகலா திருமால்,
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here