அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய ஆலய தகவல்கள்…

0
60
  1. சிவ சின்னங்களாக போற்றப்படுபவை –
    திருநீறு, ருத்ராட்சம், நமசிவாய மந்திரம்
  2. சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் காலம் –
    ஐப்பசி பவுர்ணமி
  3. சிவன் யோகியாக இருந்து ஞானத்தை அருளும் கோலம் –
    தட்சிணாமூர்த்தி
  4. ஆன்மாவைக் குறிக்கும் சிவன் எங்கிருக்கிறார்?
    திருப்பெருந்துறை (ஆவுடையார் கோயில்)
  5. காலனை உதைத்த காலசம்ஹார மூர்த்தியாக ஈசன் அருளும் தலம் –
    திருக்கடையூர்
  6. ஞானசம்பந்தரைக் காண சிவன் நந்தியை விலகச் சொன்ன தலம் –
    பட்டீஸ்வரம்
  7. ஆண்டுக்கு ஒரு பாடல் வீதம் சிவன் மீது பாடியவர் –
    திருமூலர்
  8. முக்திவாசல் என்று போற்றப்படும் திருத்தலம் –
    திருவெண்காடு (நவக்கிரக புதன் ஸ்தலம், நாகப்பட்டினம் மாவட்டம்)
  9. ஐப்பசியில் காவிரியில் சிவபார்வதி நீராடுவது –
    துலாஸ்நானம்
  10. ஐப்பசி கடைசியன்று மயிலாடுதுறையில் நீராடுவது –
    கடைமுகஸ்நானம்

11.சிவனுக்கு மாடக்கோயில் கட்டிய மன்னன் – கோச்செங்கட்சோழன்

  1. கூத்தப்பன் என்று போற்றப்படும் இறைவன் –
    நடராஜர் (கூத்து என்றால் நடனம்)
  2. தரிசிக்க முக்தி என்ற சிறப்பைப் பெற்ற தலம் –
    சிதம்பரம்
  3. வாழ்வில் ஒருமுறையேனும் செல்ல வேண்டிய தலம் –
    காசி
  4. சிவன் நெருப்பாக வளர்ந்து நின்ற தலம் –
    திருவண்ணாமலை
  5. அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த தலம் –
    மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்
  6. மாதம் தோறும் வரும் விழாக்களைப் பட்டியலிடும் தேவாரம் –
    மயிலாப்பூர் தேவாரம் (சம்பந்தர் பாடியது)
  7. தட்சிணாமூர்த்தி கைவிரல்களை மடக்கிக் காட்டும் முத்திரையின் பெயர் –
    சின்முத்திரை
  8. கயிலாயத்தில் தேவலோகப் பெண்களுடன் காதல் கொண்டதால், பூலோகத்தில் பிறவி எடுத்தவர் –
    சுந்தரர்
  9. வேடுவச்சியாக இருந்த பார்வதியை வேடனாய் வந்து ஈசன் மணந்த தலம் –
    ஸ்ரீசைலம் (ஆந்திரா)
  10. சக்தி பீடங்களில் பைரவி பீடமாகத் திகழும் தலம் –
    ஒரிசா மாநிலம் பூரி ஜெகந்தாதர் கோயில்
  11. இறைவன் இறைவிக்கு இடபாகம் அளித்த தலம் –
    திருவண்ணாமலை
  12. கார்த்திகை தீபத்திருளில் அவதரித்த ஆழ்வார் –
    திருமங்கையாழ்வார்
  13. திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருநாளன்று காலையில் ஏற்றும் தீபம் –
    பரணிதீபம் (அணையா தீபம்)
  14. அருணாசலம் என்பதன் பொருள் –
    அருணம்+ அசலம்- சிவந்த மலை
  15. ஆறாதாரங்களில் திருவண்ணாமலை
    ஆதாரமாகத் திகழ்கிறது –
    மணிபூரகத் தலம்
  16. திருவண்ணாமலையில் பவனிவரும் சோமஸ்கந்தரின் பெயர் –
    பக்தானுக்ரக சோமாஸ்கந்தர்
  17. “கார்த்திகை அகல்தீபம்” என்னும் அஞ்சல் முத்திரை வெளியான ஆண்டு –
    1997, டிசம்பர் 12
  18. அருணகிரிநாதர் கிளிவடிவில் முக்தி பெற்ற இடம் –
    திருவண்ணாமலை (கிளி கோபுரம்)
  19. கார்த்திகை நட்சத்திரம் – தெய்வங்களுக்கு உரியது
    சிவபெருமான், முருகப்பெருமான், சூரியன்
  20. குறைந்தபட்சம் விளக்கு ஏற்ற வேண்டிய காலம் –
    24 நிமிடங்கள் (ஒரு நாழிகை)
  21. சிவாம்சமாகப் போற்றப்படும் ராமபக்தர் –
    அனுமன்
  22. ‘நமசிவாய’ என்று தொடங்கும் சிவபுராணம் எதில் இடம்பெற்றுள்ளது?
    திருவாசகம்
  23. தர்மதேவதை நந்தி என்னும் பெயர் தாங்கி ஈசனைத் தாங்கி வருவதை எப்படி குறிப்பிடுவர்? –
    அறவிடை (அறம்-தர்மம், விடை-காளை வாகனம்)
  24. மனிதப்பிறவியில் அடைய வேண்டிய நான்கு உறுதிப் பொருள்கள் –
    அறம், பொருள், இன்பம், வீடு (மோட்சம்)
  25. சிவபெருமான் ஆடிய நாட்டியங்கள் எத்தனை? –
    108
  26. சிவபெருமானின் நடனத்தை காணும் பேறு பெற்ற பெண் அடியவர் –
    காரைக்காலம்மையார்
  27. ‘மனித்தப்பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று நடராஜரிடம் வேண்டியவர் –
    அப்பர் (திருநாவுக்கரசர்)
  28. நடராஜரின் காலடியில் கிடக்கும் முயலகன் எதன் அடையாளம் –
    ஆணவம் (ஆணவம் அடங்கில் ஆனந்தம் உண்டாகும்)
    முயலகன்
  29. பஞ்ச சபையில் சித்திரசபையாகத் திகழும் தலம் –
    குற்றாலம்
  30. நள்ளிரவில் சிவன் ஆடும் நடனம் –
    சங்கார தாண்டவம்
  31. இடக்காலில் முயலகனை ஊன்றிய கோலத்தை எங்கு காணலாம்? –
    வெள்ளியம்பலம் (மதுரை)
  32. மாலைவேளையில் இறைவன் மகிழ்ந்தாடும் திருநடனம் –
    பிரதோஷநடனம் (புஜங்கலளிதம்)
  33. நடராஜருக்குரிய விரத நாட்கள் –
    திருவாதிரை, கார்த்திகை சோமவாரம்
  34. நடராஜருக்குரிய திருவாதிரை பிரசாதம் –
    களி
  35. திருச்சிராப்பள்ளியில் வீற்றிருக்கும் இறைவன் –
    தாயுமானசுவாமி
  36. பஞ்சபூத தலங்களில் வாயுத்தலம் –
    காளஹஸ்தி
  37. வண்டுவடிவில் இறைவனை பூஜித்த முனிவர் –
    பிருங்கி
  38. திருமூலர் எழுதிய திருமந்திரம் –
    பத்தாம் திருமுறை
  39. திருஞானசம்பந்தர் பொன் தாளம் பெற்ற தலம் –
    திருக்கோலக்கா (தாளமுடையார் கோவில்) சீர்காழிக்கு அருகில் உள்ளது
  40. விபூதி என்பதன் நேரடியான பொருள் –
    மேலான செல்வம்
  41. சுக்கிரதோஷ நிவர்த்திக்குரிய சிவத்தலம் –
    கஞ்சனூர்
  42. ஜோதிர்லிங்கத்தலங்கள் மொத்தம் எத்தனை? –
    12
  43. மதுரையில் உள்ள சித்தரின் பெயர் –
    சுந்தரானந்தர்
  44. திருஞான சம்பந்தருக்கு திருமணம் நிகழ்ந்த தலம் –
    ஆச்சாள்புரம் (திருப்பெருமணநல்லூர்)
  45. நாவுக்கரசரின்உடன்பிறந்த சகோதரி –
    திலகவதி
  46. சுந்தரருடன் கைலாயம் சென்ற நாயனார் – சேரமான் பெருமாள் நாயனார்
  47. “அப்பா! நான்வேண்டுவன கேட்டருள்புரியவேண்டும்” என்ற அருளாளர் –
    வள்ளலார்
  48. மதுரையில் சைவ சமயத்தை நிலைநாட்டிய சிவபக்தை –
    மங்கையர்க்கரசியார்
  49. மாணிக்கவாசகர் யாருடைய அவையில் அமைச்சராக இருந்தார்? –
    அரிமர்த்தனபாண்டியன்
  50. திருநாவுக்கரசரால் சிவபக்தனாக மாறிய பல்லவ மன்னன் –
    மகேந்திரபல்லவன்
  51. சிவபெருமானின் ஐந்து முகங்களில் காக்கும் முகம் –
    தத்புருஷ முகம் (கிழக்கு நோக்கிய முகம்)
  52. சிவன் வீரச்செயல் நிகழ்த்திய தலங்கள் எத்தனை? – 8
  53. மகாசிவராத்திரி எந்நாளில் கொண்டாடப்படுகிறது? –
    மாசி தேய்பிறை சதுர்த்தசி
  54. மகாசிவராத்திரியில் கோயிலில் எத்தனை கால அபிஷேகம் நடக்கும்? –
    4 கால அபிஷேகம்
  55. வாழ்விற்கு வேண்டிய நல்வினை பெற ஐந்தெழுத்தை ஓதும்விதம் –
    நமசிவாய
  56. முக்தி பெற்று சிவபதம் பெற நமசிவாயத்தை எப்படி ஓத வேண்டும்? –
    சிவாயநம
  57. சிவசின்னங்களாக போற்றப்படுபவை –
    திருநீறு, ருத்ராட்சம், ஐந்தெழுந்து மந்திரம் (நமசிவாய அல்லது சிவாயநம)
  58. சிவனுக்குரிய உருவ, அருவ அருவுருவ வழிபாட்டில் லிங்கம் எவ்வகை?
    அருவுருவம்
  59. பன்னிரு ஜோதிலிங்கத் தலங்களில் தமிழகத்தில் உள்ள தலம் –
    ராமேஸ்வரம்
  60. சிவவடிவங்களில் ஞானம் அருளும் சாந்தரூபம் –
    தட்சிணாமூர்த்தி
  61. கும்பாபிஷேகத்தை எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை நடத்துவர்? –
    12

73.. குறும்பலா மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட கோயில் –
குற்றாலம் குற்றாலநாதர் கோயில்

  1. ஸ்ரீவிருட்சம் என்று சிறப்பிக்கப்படும் மரம் – வில்வமரம்
  2. அம்பிகையின் அம்சமாக இமயமலையில் அமைந்திருக்கும் ஏரி –
    மானசரோவர்
  3. திருநாவுக்கரசர் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தார்? –
    81
  4. பதிகம் என்பதன் பொருள் –
    பத்து அல்லது 11 பாடல்கள் சேர்ந்த தொகுப்பு
  5. சைவ சித்தாந்தத்தை விளக்கும் முழுமையான சாத்திரநூல் –
    சிவஞானபோதம்
  6. உலகைப் படைக்கும் போது ஈசன் ஒலிக்கும் உடுக்கை –
    டமருகம் அல்லது துடி
  7. அனுபூதி என்பதன் பொருள் –
    இறைவனுடன் இரண்டறக் கலத்தல்
  8. உலகத்துக்கே அரசியாக இருந்து ஆட்சி புரியும் அம்பிகை –
    மதுரை மீனாட்சி
  9. மதுரை மீனாட்சியம்மையின் பெற்றோர் –
    மலையத்துவஜ பாண்டியன், காஞ்சனமாலை
  10. மீனாட்சிக்கு பெற்றோர் இட்ட பெயர் –
    தடாதகைப் பிராட்டி
  11. பழங்காலத்தில் மதுரை _என்று அழைக்கப்பட்டது –
    நான்மாடக்கூடல், ஆலவாய்
  12. மீனாட்சியம்மன் கோயில் தலவிருட்சம் –
    கடம்ப மரம்
  13. மீனாட்சி __ ஆக இருப்பதாக ஐதீகம் –
    கடம்பவனக் குயில்
  14. மீனாட்சி கல்யாணத்தை நடத்தி வைக்கும் பெருமாள் –
    திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள்
  15. மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடிய புலவர் –
    குமரகுருபரர்
  16. மீனாட்சியம்மனை சியாமளா தண்டகம் என்னும் நூலில் போற்றிப் பாடியவர் –
    மகாகவி காளிதாசர்
  17. சொக்கநாதரை தேவேந்திரன் வழிபடும் நாள் –
    சித்ராபவுர்ணமி
  18. மீனாட்சியம்மனுக்கு தங்க ஷூ காணிக்கை கொடுத்த ஆங்கிலேய கலெக்டர் – ரோஸ் பீட்டர்
  19. காய்ச்சல், ஜலதோஷம் தீர்க்கும் கடவுள் யார்?
    ஜுரகேஸ்வரர்
  20. “நாயேன்” என்று நாய்க்கு தன்னை சமமாக தன்னைக் கருதி பாடிய சிவபக்தர் யார்?
    மாணிக்கவாசகர்
  21. தருமிக்காக பாடல் எழுதிக் கொடுத்த புலவர் –
    இறையனார் (சிவபெருமானே புலவராக வந்தார்)
  22. திருநாவுக்கரசரை சிவன் ஆட்கொண்ட விதம் –
    சூலை நோய் (வயிற்றுவலி)
  23. அம்பிகைக்கு உரிய விரதம் –
    சுக்கிரவார விரதம் (வெள்ளிக்கிழமை)
  24. பிறவிக்கடலைக் கடக்கும் தோணியாக ஈசன் அருளும் தலம் –
    தோணியப்பர் (சீர்காழி)
  25. ‘தாசமார்க்கம்’ என்னும் அடிமை வழியில் சிவனை அடைந்தவர் –
    திருநாவுக்கரசர்
  26. ‘தம்பிரான் தோழர்’ என்று சிறப்பிக்கப்படும் சிவபக்தர் –
    சுந்தரர்
  27. திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்) பாடி நாயன்மார்களைச் சிறப்பித்தவர் –
    சேக்கிழார்
  28. சிவபெருமானுக்கு திருப்பல்லாண்டு பாடி போற்றியவர் –
    சேந்தனார்
  29. திருவாலங்காட்டில் காளியுடன் சிவன் ஆடிய நடனம் –
    சண்ட தாண்டவம்
  30. மாணிக்கவாசகருக்கு இறைவன் குருவாக காட்சி அளித்தது எந்த மரத்தடியில் –
    குருந்த மரம் (ஆவுடையார்கோவில்)

104 . அப்புத்தலம் (நீர் தலம்) என்று போற்றப்படும் சிவாலயம் –
திருவானைக்காவல்

  1. தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெறும் நால்வர் –
    சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர்
  2. ‘சிவசிவ என்றிட தீவினை மாளும்’ என்று கூறியவர் –
    திருமூலர்
  3. பிருத்வி (மண்) தலம் என்று சிறப்பிக்கப்படும் இரு சிவத்தலங்கள் –
    காஞ்சிபுரம், திருவாரூர்
  4. சிவாயநம என்பதை –
    பஞ்சாட்சர மந்திரம் என்று கூறுவர்.
    சூட்சும (நுட்பமான) பஞ்சாட்சரம். பஞ்சாட்சரம் என்றால் “ஐந்தெழுத்து மந்திரம்’.
  5. மனதிலேயே இறைவனுக்கு கோயில் கட்டியவர் –
    பூசலார் நாயனார்
  6. அன்பின் சொரூபமாக அம்பிகை விளங்கும் தலம் –
    திருவாடானை (அன்பாயியம்மை அல்லது சிநேகவல்லி)
  7. அறுபத்துமூவர் விழாவிற்கு பெயர் பெற்ற சிவத்தலம் –
    மயிலாப்பூர் கபாலீஸ்வரர்
  8. பிச்சைப் பெருமான் என்று குறிப்பிடப்படுபவர் –
    பிட்சாடனர் (சிவனின் ஒரு வடிவம்)
  9. சதுரகிரியில் மகாலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தவர் –
    அகத்தியர்
  10. ஞானவடிவாக விளங்கும் சிவபெருமானின் திருக்கோலம் –
    தட்சிணாமூர்த்தி
  11. சமயக்குரவர் நால்வரில் திருவிளையாடலில் இடம்பெறும் இருவர் –
    திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர்
  12. தஞ்சாவூரில் உள்ள மூலவர் –
    பிரகதீஸ்வரர் அல்லது பெருவுடையார்
  13. சிவபெருமான் மீது திருப்பல்லாண்டு பாடியவர் –
    சேந்தனார்
  14. ‘உள்ளத்துள்ளே ஒளிக்கும் ஒருவன்’ என்று இறைவனைக் குறிப்பிடுபவர் –
    திருமூலர்
  15. இறைவனிடம் காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிய அடியவர் –
    திருஞானசம்பந்தர்
  16. “நாமார்க்கும் குடியல்லோம்” என்று கோபம் கொண்டு எழுந்தவர் –
    திருநாவுக்கரசர்
  17. “ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவன் ஈசன்” என்று பாடியவர் –
    சுந்தரர்
  18. “இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான்’ என்று போற்றியவர் –
    மாணிக்கவாசகர்
  19. “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்” என்று துதித்தவர் –
    திருமூலர்
  20. “உழைக்கும் பொழுதும் அன்னையே” என்று ஓடி வரும் அருளாளர் –
    அபிராமி பட்டர்
  21. ஈன்ற தாய் மறுத்தாலும் அன்புக்காக ஏங்கும் குழந்தையாய் உருகியவர் –
    குலசேகராழ்வார்
  22. திருவண்ணாமலையில் ஜீவசமாதியாகியுள்ள சித்தர் –
    இடைக்காட்டுச்சித்தர்
  23. கோயில் என்பதன் பொருள் –
    கடவுளின் வீடு, அரண்மனை
  24. நால்வர் என்று குறிக்கப்படும் அடியார்கள்-
    சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்
  25. சித்தாந்தத்தில் “சஞ்சிதம்” என்று எதைக் குறிப்பிடுவர்?
    முன்வினைப்பாவம்
  26. கோளறுபதிகம் யார் மீது பாடப்பட்ட நூல்?
    சிவபெருமான்
  27. சிவபெருமானுக்கு பிரியமான வேதம் –
    சாமவேதம்
  28. ‘நமசிவாய’ மந்திரத்தை இசைவடிவில் ஜெபித்தவர் –
    ஆனாய நாயனார்
  29. யாருக்காக சிவபெருமான் விறகு விற்ற லீலை நடத்தினார்?
    பாணபத்திரர்
  30. அப்பர் கயிலைக்காட்சி கண்டு அம்மையப்பரை பாடிய தலம் –
    திருவையாறு
  31. சிவபாதசேகரன் என்று சிறப்புப் பெயர் கொண்டவர் –
    ராஜராஜ சோழன்
  32. சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாக திகழ்பவர் –
    சோமாஸ்கந்தர்
  33. கயிலை தரிசனம் பெற அருள்புரியும் விநாயகர் துதிப்பாடல் –
    விநாயகர் அகவல்.
  34. மதுரை சுந்தரேஸ்வரருக்கு சந்தனம் அரைத்துக் கொடுத்து சிவபதம் பெற்ற அடியவர் –
    மூர்த்திநாயனார்
  35. நக்கீரர் முக்தி அடைந்த சிவத்தலம் –
    காளஹஸ்தி
  36. அன்னத்தின் பெயரோடு சேர்த்து வழங்கப்படும் தலம் –
    திருச்சோற்றுத்துறை (திருவையாறு அருகில் உள்ளது)
  37. பக்தருக்காக விறகினைச் சுமந்த சிவபெருமான் –
    மதுரை சொக்கநாதர்
  38. தாயாக வந்து பிரசவம் பார்த்த சிவன் –
    திருச்சி தாயுமானவர்
  39. மார்கண்டேயனைக் காக்க எமனை சிவன் உதைத்த தலம் –
    திருக்கடையூர் (காலசம்ஹார மூர்த்தி)
  40. பார்வதியைத் தன் இடப்பாகத்தில் ஏற்றபடி அருளும் தலம் –
    திருச்செங்கோடு (நாமக்கல் மாவட்டம்)
  41. பஞ்சபூதங்களில் காற்றுக்குரிய சிவன் எங்கு வீற்றிருக்கிறார்?
    காளஹஸ்தி
  42. அம்பிகையே உச்சிக்கால பூஜை செய்யும் தலம் –
    திருவானைக்காவல் (திருச்சி) ஜம்புகேஸ்வரர் கோயில்
  43. அடியும் முடியும் காணா முடியாதவராக சிவன் அருளும் கோயில் –
    திருவண்ணாமலை
  44. காளியோடு சேர்ந்து சிவன் திருநடனம் ஆடிய தலம் –
    திருவாலங்காடு நடராஜர் கோயில் (கடலூர் மாவட்டம்)
  45. கருவறையில் சடைமுடியோடு காட்சிதரும் சிவலிங்க கோயில்கள் –
    திருவையாறு ஐயாறப்பர், சிவசைலம் சிவசைலநாதர் கோயில் (திருநெல்வேலி மாவட்டம்)
  46. சிவபெருமானின் வாகனம் 6
    ரிஷபம் (காளை)
  47. மதுரையில் நடராஜர் ஆடும் தாண்டவம் –
    சந்தியா தாண்டவம்
  48. ஆதிசங்கரர் முக்திலிங்கத்தை ஸ்தாபித்த திருத்தலம் –
    கேதார்நாத்
  49. சிவலிங்கத்தை எத்தனை பாகங்களாகக் குறிப்பிடுவர்?
    மூன்று (பிரம்ம, விஷ்ணு, ருத்ரபாகம்)
  50. மூங்கிலை தலவிருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள் –
    திருநெல்வேலி, திருவெண்ணெய்நல்லூர்
  51. சிவ வடிவங்களில் வசீகரமானதாகப் போற்றப்படுவது –
    பிட்சாடனர்
  52. சிவபெருமானை ஆடு பூஜித்த தலம் –
    திருவாடானை (ராமநாதபுரம் மாவட்டம்)
  53. தண்ணீரில் விளக்கேற்றிய சிவனடியார்-
    நமிநந்தியடிகள் ( திருவாரூர்)
  54. அர்ச்சகர் அம்பிகையாக சிவனை பூஜிக்கும் தலம் –
    திருவானைக்காவல்
  55. தேவாரத் தலங்களில் சுக்கிரதோஷம் போக்கும் சிவன் –
    கஞ்சனூர் அக்னீஸ்வரர் (தஞ்சாவூர் மாவட்டம்)
  56. சிவன் “அம்மா’ என்று யாரை அழைத்து மகிழ்ந்தார்?
    காரைக்காலம்மையார்
  57. தாச (பக்தி அடிமை) மார்க்கத்தில் சிவனைப் போற்றியவர் –
    திருநாவுக்கரசர்
  58. முல்லைவனமாகத் திகழ்ந்த சிவத்தலம் – திருக்கருக்காவூர்
  59. தினமும் பிரதோஷபூஜை நடக்கும் தலம் – திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
  60. சிவனின் கண்ணாகப் போற்றப்படும் பொருள் –
    ருத்ராட்சம்
  61. முக்கண்ணன் என்று போற்றப்படுபவர் –
    சிவன்
  62. சிவனால் எரிக்கப்பட்ட மன்மதனை__ என்ற பெயரால் அழைப்பர் –
    அனங்கன் (அங்கம் இல்லாதவன்)
  63. ஸ்ரீருத்ரம் ஜெபித்து சிவனை அடைந்த அடியவர் –
    ருத்ரபசுபதியார்
  64. இரவும் பகலும் இடைவிடாமல் ஸ்ரீருத்ரம் ஓதியவர் –
    ருத்ரபசுபதியார்
  65. ஆதிசங்கரருக்கு சிவன் அளித்த லிங்கம் எங்குள்ளது?
    சிருங்கேரி (சந்திரமவுலீஸ்வரர்)
  66. சிவனைப் போற்றும் சைவ சாத்திரங்களின் எண்ணிக்கை – 14
  67. ஆதிசங்கரர் ஸ்தாபித்த முக்திலிங்கம் எங்குள்ளது?
    கேதார்நாத்
  68. நடராஜரின் பாதத்தில் பாம்பு வடிவில் சுற்றிக் கொண்டவர் –
    பதஞ்சலி முனிவர்.
  69. சிவபெருமானின் நடனத்தை தரிசிக்க தவமிருந்தவர்கள் –
    வியாக்ரபாதர், பதஞ்சலி
  70. உபமன்யுவுக்காக பாற்கடலை வரவழைத்தவர் –
    சிவபெருமான்
  71. நடராஜரின் தூக்கிய திருவடியை _ என்பர் –
    குஞ்சிதபாதம்
  72. தில்லை அந்தணர்களுக்கு யாகத்தீயில் கிடைத்த நடராஜர் –
    ரத்தினசபாபதி
  73. உமாபதி சிவாச்சாரியார் எழுதிய சித்தாந்த நூல் –
    சித்தாந்த அட்டகம்
  74. கருவறையில் சிவ அபிஷேக தீர்த்தம் வழியும் இடம் – கோமுகி
  75. பெரியகோயில்களில் தினமும் எத்தனை முறை பூஜை நடக்கும்?
    ஆறுகாலம்
  76. சிவனுக்கு “ஆசுதோஷி’ என்ற பெயர் உள்ளது. அதன் பொருள் –
    விரைந்து அருள்புரிபவர்
  77. சிவசந்நிதியின் பின்புறம் மேற்கு நோக்கி கோஷ்டத்தில் இருப்பவர் –
    லிங்கோத்பவர்
  78. சிவனுக்குரிய மூர்த்தங்கள் (சிலை வடிவங்கள்) எத்தனை?
    64
  79. சிவமூர்த்தங்களில் கருணாமூர்த்தியாகத் திகழ்பவர் –
    சோமாஸ்கந்தர்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here