அகலிகை

0
109

அகலிகை

தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி வாசுகி எனும் பாம்பை கயிராகத் திரித்து இமய மலையை மத்தாக்கி பாற்கடலை கடைந்த போது பல ஆயிரக்கணக்கான விசேஷப் பொருட்களும், உயிரனங்களும் தோன்றின.அவற்றுள் அழகிற்கு இலக்கணமான ஓர் மங்கையும் தோன்றினாள். அவளே அகலிகை. அவளை மணப்பதற்கு இந்திரனும், கெளதம முனிவரும் விருப்பம் கொண்டனர். இருவரின் விருப்பத்தையும் அறிந்த பிரம்மா அவர்களுக்கிடையே ஒரு போட்டி வைத்தார். இருவரில் யார் இருபக்கமும் தலையுடைய பசுவைப் பார்த்து சாட்சியுடன் நிருபிக்கிறார்களோ அவர்களுக்கே அகலிகை உரித்தானவள் என்றார். தேவர்கள் கூட்டமாய்ச் சென்று பிரம்மதேவரிடம் மன்றாடினர். “ரெண்டு தலைப் பசு’ நிபந்தனையைத் தவிர வேறு ஏதேனும் போட்டி வைக்குமாறு வேண்டினார். பிரம்மதேவரும் சிரித்தபடி, “”சரி. அது முடியாதென்றால் உலகை முதலில் எவர் வலம் வருகிறாறோ அவருக்கு அகலிகையைத் தருகிறேன்! என்றார். இதைக் கேட்டதும் தேவர்கள் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தனர். ஆரவாரம் செய்தபடி அவரவருக்கு கிடைத்த வாகனங்களில் ஏறிப் பறந்தார்கள்.

இந்திரன் ஐராவதத்தின் மீது ஏறிப் பறந்தார். நாரதருக்கு அகல்யாவை கௌதம முனிவருக்குத் திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று தோன்றியது. கௌதம முனிவர் ஆஸ்ரமத்தில் அவருக்குப் பணிவிடை செய்ய ஏற்றவள் அகல்யாவே என்று அவருக்கு ஓர் எண்ணம். எனவே பூரண கருவுற்றிருந்த ஒரு காராம் பசுவை ஓட்டிக்கொண்டுபோய் கௌதம முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தார். கௌதமரை வெளியே அழைத்தார். அந்தப் பசுவும் எப்போது கன்றை ஈந்தது. அப்போது பசுவின் பின்புறம் கன்றின் முகம் தோன்றியது! உடனே நாரதர் கௌதமரை அந்தப் பசுவை வலம் வரச் செய்தார். கௌதமர் இரண்டு தலைகளை உடைய பசுவை இப்போது தரிசனம் செய்துவிட்டார். பசு கன்று ஈனும்போது அதனை வலம் வந்தவர் உலகை வலம் வந்த புண்ணியத்தைப் பெறுவர் என்பது சாஸ்திரம். நாரதர் கௌதமரை பிரம்மதேவரிடம் அழைத்துப்போய் நடந்ததைக் கூறி கௌதமருக்கு அகலிகையைத் தருமாறு கேட்டார். பிரம்மதேவரும் வாக்குத் தவறாமல் மலர்ந்து முகத்தோடு அகலிகையைக் கௌதமருக்குத் திருமணம் செய்து வைத்தார். திரும்பி வந்த இந்திரனால் பெருத்த ஏமாற்றத்துடன் ஏக்கப் பெருமூச்சை மட்டுமே வெளிப்படுத்த முடிந்தது. என்றாவது ஒரு நாள் உன்னை அடைந்தே தீருவேன் என்று அகலிகையை பார்த்து அவன் மனம் உறுதி பூண்டது. அகலிகையும் மகிழ்ச்சியுடன் கௌதமருடன் இல்லறத்தில் மகிழ்ந்திருந்தாள். இல்லறத்தின் பயனாக அவருக்கு சதானந்தர் பிறந்தார்.

இந்திரன் உள்ளத்தில் எழுந்த காமத்தீ அகலிகைக்குக் குழந்தை பிறந்திருந்தாலும் அவளை அடையத் துடித்தான்.எப்படியாவது அகலிகையை அடையும் நோக்கத்துடன் அவன் சந்திரனின் உதவியை நாடினான். அவன் சொல் கேட்டு சந்திரன் நள்ளிரவில் கோழி போல் கூவினான். வெள்ளி வெளுக்கும் முன் காலைக் கடன்களையும் நித்திய அனுஷ்டானங்களையும் முடிப்பது பெரியோர் வழக்கம். கோழி கூவிய சத்தத்தைக் கேட்ட கௌதமர் சுருக்கென்று எழுந்து தன் கமண்டலத்தை எடுத்துக் கொண்டு கங்கை நோக்கிச் சென்றார்.
அவர் தலை மறைந்த சற்று நேரத்திற்கெல்லாம் அவரின் உருவம் கொண்டு குடிலின் கதவைத் தட்டினான் இந்திரன். கதவைத் திறந்து ‘இவ்வளவு
விரைவில் திரும்பிவிட்டீர்களா?’ என்று கேட்டபடியே அரையிருட்டில் போலி கௌதமரைப் பார்த்து கேட்டவாரே அதிசயித்த அகலிகை, அதற்கான காரணத்தை உணர்ந்து வெட்கினாள்.பல ஆண்டுகள் கழித்து ஆத்மாவிற்கு கிடைத்த சாந்தி அவளை அமைதி கொள்ளச் செய்தது.கங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த கௌதமர் இன்னும் இருள் விலகவில்லையே என ஆச்சரியம் அடைந்து, காலம் தவறாக கணிக்கப்பட்டுவிட்டதை அறிந்து தன் குடிலை நோக்கித் திரும்பினார்.
அகலிகையை அழைத்தவாரே கதவைத் தட்டியவருக்கு உள் நிகழ்ந்த செயல் நிழல் போல திருஷ்டியில் தெரிய கோபத்தால் எட்டி உதைத்தார் குடிலின் கதவை. வெளியில் தன் கணவன், தன் அருகிலும் தன் கணவன் என இருவரையும் ஓர் உருவத்தில் கண்ட அகலிகை பதறிப் போனாள். அதற்குள் தனது தவறு வெளிப்பட்டுவிட்ட பயத்தில் இந்திரன் பூனை உருவெடுத்து குடிலின் கூரை வழியாக தப்பியோடினான்.

கொண்டவனுக்கும் வந்தவனுக்கும் வித்தியாசம் அறியாமல் இந்திரனுடன் கூடிய பாவத்திற்காக அகலிகையை ஊண் உணவு உறக்கம் இல்லாமல் கல்லாகக் கிட என்ற சாபத்தை இட்டார் கௌதமர். தப்பியோடிய இந்திரனும் அவர் சாபத்தில் இருந்து தப்பவில்லை. எந்தச் சுகத்துக்காக அலைந்து பிறன் மனையைக் கூடினானோ அந்த சுகம் இனி அவனுக்கு கிடைக்காத வண்ணம் அவனை ஆண்மையற்றவனாக போகக் கடவது என்று அவனையும் சபித்தார் முனிவர்.அகலிகையும் உண்மை உணர்ந்து கௌதமர் காலில் விழுந்து கதற, “”கற்பில் உறுதியில்லாத நீ கல்லாகப் போ!” என்று சபித்துப் பின்பு “”தசரத ராமன் அடிப்பொடி பட்டால் உன் சாபம், பாவம் இரண்டுமே தீரும்” என்று அருளுகிறார்.

கங்கைக் கரையிலே, தாடகை வதம் முடிந்து, கம்பீரமாக நடந்து வருகிறார்
விசுவாமித்திரர் . அவரின் பின்னே, ராமரும், லட்சுமணரும் ஓடிப்பிடித்து விளையாண்டவாறு, அவரைத் தொடர்கின்றனர்.முன்னால் ஓடி வருகிறார் லக்ஷ்மணர். துரத்துகிறார் ராமர். கெளதம முனிவரினால் சபிக்கப்பட்டு கல்லாய்க் கிடக்கும் அகலிகையின் மீது ராமரின் பாதம் பட, அகலிகைக்கு சாப விமோசனம் கிட்ட, பெண்ணுருக் கொள்கிறாள். ஸ்ரீ ராமரை வணங்கி ஆசீர்வாதம் பெற்று கெளதம முனிவரிடம் சேர்ந்தாள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here