ராகு நிற்கும் பாவங்களின் பொது பலன்கள் .

0
75

 1. ராகு கேந்திரங்களில் இருந்து பாவிகளின் சம்பந்தம் பெற்றால் எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வருடங்களில் நன்மையான பலன்களை எதிர்பார்க்க இயலாது. (உதாரணமாக 4 பாவத்தில் இருந்தால் 4- 16-32-48-64 வயதுகளில் நன்மையான பலன் நடைபெறாது.
 2. ராகு சூரியன் சந்திரனின் உச்ச ஆட்சி வீடுகள் ஆகிய மேஷம் ரிஷபம் கடகம் சிம்மம் இவைகளில் இருந்து அவை லக்னமாக அமைந்து அனைத்து வசதி வாய்ப்புகளும் ராகு பகவான் தருவார். ராஜயோகம் என்பார்களே அதை அனுபவிக்கும் தகுதி பெறலாம்.
 3. ராகு புதன் வீடுகளில் இருந்து அவை கேந்திரங்கள் ஆக அமைந்தால் இறை உணர்வு மிக்கவர்கள். என் கடமை பணி செய்வதே என்ற மனித நேயம் பண்பாட்டுடன் இருப்பார்கள்.

4.சனியின் வீடு லக்னமாக அமைந்து அங்கு ராகு அமைந்த நிலையில் செல்வமும் புகழும் ஆசைக்கோர் மகனும் உடையவர் ஆவார்.

 1. ராகு இரண்டாம் பாவத்தில் இருந்தால் செல்வநிலை தட்டுப்பாடு ஏற்படும். பிறருக்காக உழைக்கும் நிலையில் அவருக்காக செல்வம் சேர்த்து கொடுக்கும் உண்மையான ஊழியராக இருப்பார்..
 2. ராகு மூன்றாம் பாவத்தில் இருப்பது அறிவாற்றல் தருவார் அவைகளினால் உலகில் வாழ்க்கையில் பலன் பெறும் அமைப்பாக அமையும். ஆயுள் வளரவளர தம் அறிவாற்றலையும் வளர்த்துக் கொள் வார். சுபர் பார்வை பெற்றிருந்தால் இடையூறுகள் ஏற்படாது. வளமான வாழ்க்கையை சிறப்பாக அனுபவிப்பார் ஆனால் சகோதர உறவு பாதிக்கப்படும்.
 3. ராகு 4-ஆம் பாதத்தில் இருப்பது அம்மாவை தெய்வமாக பார்ப்பார்கள். அசையாத சொத்துக்களில் அதில் அதிகமாக அதிர்ஷ்டம் அடைவார்கள்.

8.ஐந்தாம் பாவத்தில் ராகு இருப்பது பெற்ற குழந்தைகளை கொஞ்சி விளையாடும் எண்ணம் உடையவர்கள் ஆகும் குழந்தைகள் மேல் அதிகமாக பாசம் கொண்டவர்களாகவும் குழந்தைகள் தூற்றினாலும் மாறாத பாசம் கொண்டவர்களாக இருப்பார். காதலில் வெற்றிபெற வாய்ப்பை உண்டாக்குவார்..
ஐந்தில் இருக்கும் ராகுவை சுபர் பார்வை பெற்று அந்த வீட்டின் அதிபதி கேந்திரம் திரிகோணம் ஆட்சி உச்சம் பெற்று அந்த வீடு கடகம் ஆனால் தங்க மகன் பிறப்பான் தரணி ஆள்வான்.

 1. ஆறாம் பாவத்தில் ராகு வலிமை பெற்றவர் உழைப்பை உயர்வு எனக் கருதுபவர் கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகம் இருக்கும் . ஆறாம் பாவம் வியாதிகளை குறிக்கும் பாவம் ஆனதால் அங்கே ராகு இருந்தால் உடலில் ஏதாவது காரியம் பெரும் நிலை ஏற்படும் சுபர் பார்வை இருந்தால் நோய் சற்று குறையும்.
 2. ஏழாம் பாவத்தில் ராகு பெண்களுக்கு அடிக்கடி கருச்சிதைவு மறைவு ஸ்தானங்களில் தீராத நோய் திருமணத் தாமதம் விபத்துக்கள் சந்திக்கும் நிலை. ஆண்கள் ஜாதகத்தில் ஏழில் ராகு இருந்து சுபர் பார்வையின்றி இருந்தால் பல பெண்களுடன் தொடர்பு மற்றும் பாலியல் உணர்வு அதிகமாக இருக்கும். அசையாத சொத்துக்களால் நஷ்டமும் பிள்ளைகளால் தொல்லைகளும் சந்திக்க நேரிடும்.

குருவின் வீடு ஏழாம் பாவகம் ஆக அமைந்து அங்கு ராகு இருக்குமானால் இறையுணர்வு மிக்க கணவன் மனைவி அமையும்.

11.எட்டாம் பாவத்தில் ராகு உதவி மற்றும் கூட்டாளிகளின் உதவி பெற்று உயர் நிலையை அடைவார். ஜோதிடம் எனும் தெய்வீக கலையில் ஆர்வம் ஏற்படும்.
அடிக்கடி உடல் பாதிப்பு ஏற்படும்.
திருட்டு பயம் புற்றுநோய் பாதிப்பு கால்நடைகளால் பயம் சொந்தங்களால் பகை இவைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

 1. ஒன்பதாம் பாவத்தில் ராகு தவறுகள் பல தன்னை அறியாமல் செய்தபின் அதன் விளைவுகளை எதிர்நோக்கும் நிலையை உண்டாக்கும். மனம் திறந்து தன் நிலையைக் கூற காரணத்தினால் பல இன்னல்கள் வந்து சேரும்.
  விளம்பரம் வெளியீடுகள் அயல்நாட்டில் தொழில் துறை உத்தியோகம் போன்றவை அமையும்.. அரசியலில் ஈடுபடுபவர்கள் ஆக இருப்பார்கள்.
 2. பத்தில் ராகு தொழில் மேன்மையும் உத்தியோக உயர்வும் தலைமை ஏற்று நடத்திச் செல்லும் தகுதியும் அதிகாரம் ஆணையிடும் உத்தியோகம் பொது நல சேவை அரசியல் தலைவர்கள் தொண்டு செய்யும் எண்ணம் பொதுமக்களால் போற்றப்படும் நிலை பல இடங்களும் திருத்தலங்களுக்கும் சென்று இறைவனை தரிசனம் போன்ற அனைத்தும் நடக்கும்.

16.பதினொன்றில் ராகு நண்பர்கள் அதிகம் உடையவர்கள் நல்ல நண்பர்கள் இறுதிவரை உறவு பல தடைக் கற்களையும் முட்களையும் கடந்து இறுதியில் வெற்றி பெறுவது இறுதி காலகட்டத்தில் துறவி போல் வாழும் நிலைமையும் பெறுவார்கள்.

 1. பன்னிரெண்டாம் பாவத்தில் ராகு வாழ்க்கையில் பல பாடங்களை படிக்க வேண்டிய சூழ்நிலையை உருவாக்குவார் சலிப்புத் தன்மையை ஏற்படுத்துவார் அதிர்ஷ்டம் என்பது அபூர்வமாக இருக்கும் இயற்கையின் நீதி நீதிக்கு ஏற்ப பாதையை அமைத்துக் கொள்வார்.
  ஜீரண உறுப்புகள் பாதிக்கப்படும் வயிற்றில் புண் ஏற்படும் கெட்ட கனவுகள் வரும் தன் செய்கையை தன்னை வாடும் நிலை ஏற்படும்.
  காம உணர்வு அதிகமாக இருக்கும் உடலும் பாதிக்கப்படும்.
  . மேலே கூறப்பட்டுள்ள அனைத்தும் ராகு நிற்கும் பாவங்களில் பொதுபலன்களே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here