யாவும் நமக்காகையில்…

0
11

வன்மம், வன்புணர்வு,
கொலை , கொள்ளை, கற்பழிப்பு,
நுண்தொற்று, உயிர் பலி… யாவும்
செவி வழி நுழையும் செய்திகளே
எங்கோ நடக்கையில்
நமக்கு நடக்காத வரையில்…

உடல் உதறும், மனம் பதறும்,
உயிர் உறையும்,
வார்த்தைகள் பேசா வரம் ஏற்கும்
கண்ணீர் மொழியாகும்….
ஆம்…
எங்கோ நடந்தது
எதிரே நடக்கையில்…

-சசிகலா திருமால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here