பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119-வது பிறந்த நாள் விழா

0
45

இன்று(15.07.2021) காலை 11 மணியளவில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 119-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விருதுநகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் அவர்களின் திருவுருவச் சிலைக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் கழக மகளிர் அணி செயலாளர் அக்கா திருமதி. கனிமொழி அவர்களும்,மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களும், மாண்புமிகு தொழிற்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்களும், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு.ஜே.மேகநாதரெட்டி அவர்களுடனும், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் M குமார் அவர்களும், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.A.R.R. சீனிவாசன் அவர்களுடன் மற்றும் நாடார் மகா சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ் அவர்களும் நமது மக்கள் MLA S.தங்கபாண்டியன் அவர்களும் காமராஜர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ராஜபாளையம் தொகுதியில்  பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.

கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று (15.07.2021) காலை இராஜபாளையம் தொகுதி முகவூர், தளவாய்புரம் ஊராட்சி, செட்டியார்பட்டி பேரூராட்சியில் உள்ள காமராஜர் அவர்களின் திருவுருவ சிலைக்கு நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்கள். இந்நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் கிளை செயலாளர்கள் தொந்தியப்பன் தங்கமணி ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் மற்றும் கழக நிர்வாகிகள் ஊர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here