உனது ஒட்டு
மொத்த பிரச்சினைக்கும்
தற்காலிக தீர்வு
இந்த துயில்
பச்சிளங்குழந்தை
கடவுளோடு
பேசிக்கொள்ள
ஊடகமானது
இந்த துயில்
என்றோ வரப் போகும்
இறுதி தூக்கத்திற்கு
தினம் தினம்
ஒத்திகை
இந்த துயில்
வயதானவரும்
வயதுவந்தவரும்
வெகுவாக கொள்ள
முடியாதது
இந்த துயில்
சில சமயம்
அன்பான கொஞ்சலில்
துகில் இல்லா துயில்
அனைவருக்குமான
இரவு நேர பொறுப்பு
இந்த துயில்
-ம. வினு மணிகண்டன்