தீராத சொற்கள்…

0
17

என் தீராத பசிக்கு
காதலை அள்ளியள்ளி ஊட்டுகிறாய்
என் இதழ் மௌனம் களையவே எத்தனிக்கும்
நின் இதழ் முத்தங்களுக்கு தான்
அப்பப்பா எத்தனை வலிமை…

எனை முழுவதுமாய் உனதாக்க முயலும்
உன்னத இரவுகளில் எல்லாம்
உடையை பகையாக்கியே
மோகத் தீயொன்றை
எரிதழலென்று மூட்டுகிறாய்..
இரவினை இரவல் பெற்று
இடை இடையே இடைவிடாமல்
இறுக்கி பிடித்து
இம்சை செய்தே
இதயத்திற்கு இதமளிக்கிறாய்…

தனிமையின் சுமை தாளாமல்
உடைந்தழும் மோகம்…
உடல் நடுங்கும் உறைபனி காலமதில்
உன் அருகாமையற்றுத் தவிக்கும்
என் ஏகாந்த தாபத்தின் தனிமையை
தீராத சொற்கள் கொண்டே
எழுதித் தீர்த்திட எத்தனித்து
இதய கதவுகளுக்கு பின் மறைந்திருந்து
கண் சிமிட்டி எட்டி பார்த்து
தனித்து உருகி
மோகம் கொண்டே தவித்திருக்கிறது
என் தாகம்..

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here