குருவி எங்கே…?

0
26

கிளையின் நுனியில்
கிணற்றின் விளிம்பில்
சன்னலின் ஓரத்தில்
இருக்கத்தான் செய்கிறது
அவை தேடும் உணவு

காணாத அவற்றின்
கால் பட்ட இடத்தை
கண்ணில் நிறுத்தி
பெருகிக் கொண்டிருப்பது
கவிதைகள் மட்டுமே

எங்கோ வளர்ந்திருக்கும்
கிளை விரிந்த மரத்தின்
இலையசைவுகள்
அவை இட்ட வித்திற்கு
நன்றி சொல்வதாகவே இருக்கலாம்

குருவிக்காரி யென்றே
அழைக்கப் பிடிக்கிறது
தங்கையை இப்போதும்…

அதுசரி..

அந்தக் குருவி எங்கே…?

#கனகா பாலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here