உலக தாய்மொழி தினம் கவிதை… !

0
120

முணு முணுக்கும் வாய்க்கு
முத்தமிழைச் சொல்லிக் கொடுத்தேன்
தேன்துளிப் பட்டதுபோல்
இனிக்கிறதென் சொற்கள்
உச்சரிக்கும் பொழுதெல்லாம்…

செவி வேண்டும் தேவைக்கு
செந்தமிழை ஊட்டி வைத்தேன்
பசியாறிய வேகத்தில்
பறை சாற்றுகிறது
எந்’தமிழே எனதுயிரென்றும்
எதுவும் உண்டா?
எனக்கு நிகரென்றுமெனவே…!

– கனகா பாலன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here