இந்தியாவின் டாப் 10 விளையாட்டு வீரர்கள்!

0
113

விளையாட்டு இந்தியர்களின் பொழுதுபோக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் அங்கீகாரமும் கூட என்று உணரவைக்கும் அளவிற்கு இந்தியர்கள் விளையாட்டின் எல்லாத் துறைகளிலும் சிறப்பாக செயல்படுகின்றனர். தங்கம், வெள்ளி பதக்கங்களும், கோப்பைகளும் இந்தியாவிற்கு உரித்தாக்கிய வீரர்களின் பட்டியல் நீளம். இந்தியர்கள் என்று சொல்வதில் பெருமிதம் கொள்ளவைக்கும் இவர்களின் விளையாட்டு. இந்தியாவின் விளையாட்டு வீரர்கள் பெற்ற பதக்கங்களையும், கோப்பைகளையும், பட்டங்களையும் கொண்டு டாப் 10 இந்திய விளையாட்டு ஹீரோக்களின் பட்டியல் இதோ..!

இந்தியாவின் டாப் 10 விளையாட்டு வீரர்கள்!

01.விஸ்வநாதன் ஆனந்த்:

புத்திக் கூர்மையில் இவரை மிஞ்ச யாருமில்லை என்று வியக்க வைக்கும் திறன் இவருக்குச் சொந்தம். இந்தியாவிலேயே அதிக போட்டிகளில் வெற்றி மட்டுமே மகுடமாக சூட்டியவர் என்ற பெருமைக்குரியவர் விஸ்வநாதன் ஆனந்த். தமிழ்நாட்டிலிருந்து இந்தியாவிற்கு பெருமைச் சேர்த்த இந்த கிராண்ட்மாஸ்டர்,  2000ல் நடந்த உலக செஸ் போட்டியில் தன் முதல் வெற்றியை பதித்தார். அதுமட்டுமில்லாமல் 2002, 07, 08, 10, 12 என்று அடுத்தடுத்து ஐந்து முறை உலக செஸ் சாம்பியனாக தன்னுடைய திறமையை நிரூபித்துக் காட்டியவர். அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதினை 1991ல் பெற்றார். சிறிய வயதிலேயே பத்மஸ்ரீ விருதை வாங்கியதும் இவரே.

02. அபினவ் பிந்த்ரா:

இந்திய ஒலிம்பிக் வீரரான அபினவ் துப்பாக்கி சுடுதலில் வல்லவர். இவர் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் குறிபார்த்து சுடுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார். ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற முதல் தங்கப் பதக்கமும் இவருடையது என்ற பெருமைக்கும் உரியவர்.  அதுமட்டுமில்லாமல் 2006 நடந்த ISSF உலக துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.

03.சுஷில் குமார்:

இந்தியாவிற்கு மற்றொரு முகவரி சுஷில் குமார். மல்யுத்தம் போட்டிகளில் உலக அளவில் வெற்றியை இந்தியாவிற்கு வாரி குவித்துக் கொண்டிருக்கும் தில்லியின் நாயகன் இவர். முதன் முதலாக ஓர் இந்தியன் மல்யுத்தம் போட்டிகளில் பங்கேற்று  தங்கப்பதக்கத்தினை 2010 காமன்வெல்த் விளையாட்டில் வென்று இந்தியாவின் சாதனை நாயகனாக திகழ்ந்தார். பின்னர். 2014 காமன்வெல்த் போட்டியிலும் உலக மல்யுத்த சாம்பியனாக தன்னுடைய வெற்றியை பதிவு செய்தார். மேலும் 2012 ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும், 2008ல் வெண்கலப் பதக்கமும் வென்றார்.

04.சாய்னா நேவால்:

உலகில் இறகு பந்தாட்ட வீரர்கள் தரவரிசையில் 7வது இடத்தில் தற்போது இருக்கும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் சாய்னா நேவால். இறகுபந்தாட்டத்தில் உலக  தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியவர்களில் இவரும் ஒருவர். 2012 ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கமும் 2010 காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தினையும் வென்றவர். அடுத்தடுத்து பல போட்டிகளில் தங்கம், வெண்கலம் என்று பதக்கங்களை குவித்தவர்.

05. மேரிகோம்:

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த குத்துச் சண்டை வீரர் மேரிகோம். உலக மகளிர் குத்துச் சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 5 முறை தங்கப்பதக்கம் வென்ற முதலாவது இந்தியாவின் வீராங்கனை ஆவார். 2012 லண்டன் கோடை கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தெரிவுசெய்யப்பட்ட இந்தியாவின் ஒரேயொரு குத்துச்சண்டை வீராங்கனை இவராவார். இதில் 51 கிலோ எடை பிரிவில் போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார். AIBA (சர்வதேச குத்துச்சண்டை அமைப்பகம்) வின் தரவரிசையில் இவர் உலக பெண் குத்துச்சண்டை வீரர்களில் 5 ஆவது இடத்தில் இருக்கிறார்.

06.லியாண்டர் பயஸ்

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ். இரட்டையர் போட்டிகளில் மிகச் சிறந்த வீரர் பயஸ். மொத்தமாக 14 கிராண்ட் ஸ்லாம் வென்றவர். அதில் எட்டு ஆண்கள் இரட்டையர் பிரிவிலும், ஆறு போட்டிகள் கலவை இரட்டையர் போட்டிகளிலும் வென்றவர். மரியாதைக்குரிய US ஒபன் டென்னிஸ் போட்டியில் 2013ல் பட்டம் வென்றவர்.

07.ககன் நரங்:

ககன் நரங் தன்னுடைய சிறிய வயதில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பலூன் சுடுதலில் ஆர்வமாக அனைத்து பலூனையும் சுட்டு வீழ்த்தினாராம்.  அதில் ஆர்வமாகிய ககன்,  உலக அளவில் துப்பாக்கிச் சுடுதலில் பதக்கங்களை இந்தியாவிற்காக வாங்கித் தந்ததற்கு வித்தாக அமைந்தது.  இந்தியாவின் ஹீரோ ககன். 2012 ஒலிம்பிக்கில் ஆண்கள் 10 மீ துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார். மேலும் 2014 காமன்வெல்த் போட்டிகளில் 50 மீ துப்பாக்கிச் சுடுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் சாதனை நாயகனாக மாறினார். இவர் நான்கு தங்கப் பதங்கங்களை 2006 மற்றும் 2010 காமன் வெல்த்  போட்டிகளில் வென்றவர்.

08. யோகேஸ்வர் தத்:

மல்யுத்த நாயகன். இந்தியாவின் எதிர்கால சாதனையாளர் யோகேஸ்வர் தத். 2012 சம்மர் ஒலிம்பிக் போட்டியில் ஆண்கள் 60கிலோ ஃப்ரீ ஸ்டைல் மற்போரில் வெண்கலப் பதக்கதினை வென்றார். பின்னர். 2010 மற்றும் 2014 காமன் வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கத்தினை வென்று தலைசிறந்த மல்யுத்த வீரனாக உலக அளவில் உயர்ந்து நிற்கின்றார் யோகேஸ்வர். இந்திய அரசு இவரை பெருமை படுத்தும் விதமாக ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதினை 2012லும், பத்மஸ்ரீ விருதினை 2013ல் வழங்கி பெருமை படுத்தியது.

09. ஜிடு ராய்:

இந்தியாவின் சுடுதல் போட்டியின் சூப்பர் ஸ்டார். 2014 இண்டர்நேஷனர் ஷூட்டிங் ஸ்போட் ஃபெடரேஷன் (ISSF), உலக கோப்பையில் வெள்ளி பதக்கம் வென்றார். மேலும் அதே போட்டியில் 50 மீ பிஸ்டல் சுடுதலிலும் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இந்தியாவிலேயே ஒரே போட்டியில் இரண்டு பதக்கம் வென்ற ஒரே வீரர் இவரே. 2014 காமன் வெல்த் போட்டியில் தங்கப் பதக்கத்தினை வென்று புதிய சாதனை படைத்தவர்.

10. மகேந்திரசிங் டோனி:

இந்தியாவின் கிரிக்கெட் அணியின் கேப்டன், விக்கெட் கீப்பர், ராக்கெட் ஷாட்டின் செந்தக்காரர் டோனி. இந்தியா 2007 ICC டி-20 உலக கோப்பை, 2011 ICC உலக கோப்பை, 2013 ICC சாம்பியன் அடுத்தடுத்த வெற்றிகளுக்கு உரித்தான இந்தியா கிரிக்கெட்டின் தூண் டோனி. 2009ஆம் ஆண்டு நவம்பர் வரை ஐசிசி தரவரிசைப் பட்டியலில் டோனி அதிக மதிப்பெண் பெற்ற மட்டையாளராக இருந்தார்.  2009ஆம் ஆண்டில் விஸ்டமின் முதலாவது டிரீம் டெஸ்ட் XI அணிக்கான தலைவராகவும் இடம்பெற்றிருந்தவர். ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையால் தொகுக்கப்பட்ட உலகின் முதல் 10 அதிக வருமானம் ஈட்டும் வீரர்களில் மகேந்திர சிங் டோனி முதலாவதாக இருக்கிறார். தற்போது நடக்கும் இங்கிலாந்து இந்தியா டெஸ்ட் போட்டிகளில் வீழ்ந்ததற்கும், அடுத்த ஒருநாள் போட்டியில் வெற்றி வாகை சூடியதும் இவரின் தலைமையிலான இந்திய அணியே.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here