விசிக மாவட்டப் பொறுப்புகளுக்கான விண்ணப்பம் – கட்டணம் & சந்தா செலுத்த வேண்டிய விவரம்:

0
78

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிர்வாகத்தில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போதுள்ள மாவட்ட நிர்வாகத்தின் பணிக்காலம் ஆக-31 அன்றுடன் நிறைவடைகிறது எனவும், செப் 01 – 07க்குள் புதிய மாவட்ட நிர்வாகத்தை நியமிப்பது எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான விண்ணப்பத்தை www.vckofficial.com என்னும் (லிங்க்) இணைப்பின்வழியாக காணலாம். அதனை உரிய விவரங்களுடன் நிரப்பி, கட்டணம் மற்றும் சந்தா ஆகியவற்றுக்கான வங்கி ரசீது போன்ற ஆவணங்களையும் (ஃபோட்டோ/ ஸ்கேன்) இணைத்து இணைய வழியாகவே அனுப்ப வேண்டும்.

புதிய மாவட்ட நிர்வாகத்துக்கு
1.மாவட்டச் செயலாளர்,
2.பொருளாளர்,
3.செய்தித்தொடர்பாளர்,
4.துணைச் செயலாளர்கள்,
5.செயற்குழு உறுப்பினர் – ஆகிய பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 25-07-2020-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.1000/- (பெண்கள் ரூ.500 /-மட்டுமே) கட்சியின் மாத இதழுக்கான சந்தா ரூ.2000/- (அனைவரும் செலுத்த வேண்டும்/ உறுப்பினர்கள் உட்பட) பின்வரும் வங்கிக் கணக்கில் மொத்தமாக செலுத்த வேண்டும்.

வங்கி கணக்கு விவரம்:

VIDUTHALAI CHIRUTHAIGAL KATCHI
A/c NO: 129602000002627
INDIAN OVERSEAS BANK,
VELACHERY, CHENNAI – 43,
IFSC : IOBA0001296

தொகையை நேரடியாக வங்கியில் செலுத்தலாம் அல்லது GooglePay, Paytm, Phonepe போன்ற ஆன்ட்ராய்டு செயலிகளின் (Android App) மூலமாகவும் மேற்கண்ட வங்கி கணக்கில் செலுத்தலாம்.

பணம் செலுத்திய விவரங்களை விண்ணப்பப் படிவத்திலேயே உரியமுறைப்படி இணைக்க வேண்டும். கட்சிக்கான விண்ணப்பக் கட்டணம் மற்றும் தமிழ்மண் சந்தா செலுத்திய விவரங்கள் இல்லாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

( ஏற்கனவே வெளியிடப்பட்ட வரையறைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.)

மாவட்ட நிர்வாகப் பொறுப்புகளுக்குக்கு விண்ணப்பிப்பதற்கான வரையறைகள்.

1.குறைந்தது பத்தாண்டு காலம் கட்சிப்பணிகள் ஆற்றியிருக்கவேண்டும். பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், முன்னேறிய சமூகப்பிரிவினர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோருக்கு இதில் விதிவிலக்கு உண்டு. இது கட்சித் தலைமையின் முடிவுக்குட்பட்டதாகும்.

2.மாவட்ட அமைப்பாளராகவோ, மாவட்டச் செயலாளராகவோ இரண்டுமுறை பொறுப்பிலிருந்தவர்களுக்குத் தற்போது முன்னுரிமை அளிக்கப்படாது.

3.அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுகிறவர்கள் – தற்காலிகமாகவோ, பகுதிநேரமாகவோ பணியாற்றினாலும் விண்ணப்பிக்க இயலாது.
(மேற்கண்ட வரையறைகள் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு விண்ணப்பிபவர்களுக்கு மட்டும் பொருந்தும்)

4.விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கப்படும் மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

5.இணையத்தின் வழியாக மட்டுமே விண்ணப்பித்தல் வேண்டும், கைப்பட எழுதப்படும் விண்ணப்பங்களோ அச்சிடப்பட்ட விண்ணப்பங்களோ ஏற்புடையதல்ல.

6.ஆறுமாத காலம் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்கள் விண்ணப்பிக்க இயலாது.

7.நமது தமிழ்மண் இதழுக்கு ரூ.2000/ சந்தா செலுத்திய விவரங்களை விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே கட்டியிருந்தாலும் அது தற்போதைக்குச் செல்லாது. ஒவ்வொருவரும் கட்டாயம் செலுத்த வேண்டும். மேலும் இந்த தொகை 5 ஆண்டுகளுக்கான தொகையே ஆகும்.

8.பொறுப்புகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000/ செலுத்திய வங்கி ரசீது விவரம் விண்ணப்பத்தில் பதிவுசெய்யப்பட வேண்டும். பெண்கள் ரூ.500/ மட்டும் செலுத்தவும்.

9.ஒருவர் இரண்டு பொறுப்புகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். அவற்றுக்குத் தனித்தனியே விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டும்.

10.பரிந்துரைகள் மூலம் அழுத்தம் கொடுப்பவர்களின் விண்ணப்பம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாது.

11.கட்சித் தலைமையின் முடிவே இறுதியானது. இந்த வரையறைகளில் தேவையினடிப்படையில் கட்சியின் தலைவரால் உரிய மாற்றங்கள் செய்யப்படலாம்.

12.மாவட்டங்களைப் பிரிப்பது தொடர்பாக சூன்30க்குள் பொறுப்பாளர்களின் கருத்தறியப்படும். பின்னரே அது இறுதி செய்யப்படும்.

இவண்:
தொல்.திருமாவளவன்,
நிறுவனர் – தலைவர்,
விசிக.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here