magizhchifm2020@gmail.com சனி, 10 October 2026
⚡ சமீபத்திய
கவிஞர் மு.ரம்யாமுத்துபாபு கவிதைகள் அக்டோபர் 9 உலக அஞ்சல் தினம் ஆயிரமாயிரம் ஆய்வுக் குரல்களை ஆவணமாக்கும் ஆளுமை மாணிக்கவாசகர் கண்ட பெண்மை  எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் மகிழ்ச்சி பண்பலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பி. கே. ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” பன்னாட்டு கருத்தரங்கம் – உலகச் சாதனை நிகழ்வு பார்போற்றும் பாவையர் (Globally Celebrated Women) 25 தொகுதிகள் கொண்ட மிக பிரம்மாணட ஆய்வுக்கட்டுரைகள் நூல்கள் கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES கவிஞர் மு.ரம்யாமுத்துபாபு கவிதைகள் அக்டோபர் 9 உலக அஞ்சல் தினம் ஆயிரமாயிரம் ஆய்வுக் குரல்களை ஆவணமாக்கும் ஆளுமை மாணிக்கவாசகர் கண்ட பெண்மை  எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் மகிழ்ச்சி பண்பலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பி. கே. ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” பன்னாட்டு கருத்தரங்கம் – உலகச் சாதனை நிகழ்வு பார்போற்றும் பாவையர் (Globally Celebrated Women) 25 தொகுதிகள் கொண்ட மிக பிரம்மாணட ஆய்வுக்கட்டுரைகள் நூல்கள் கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES
கவிதைகள்

கவிஞர் மு.ரம்யாமுத்துபாபு கவிதைகள்

10 அக்டோபர் 2026 Admin 18 பார்வைகள்
கவிஞர் மு.ரம்யாமுத்துபாபு கவிதைகள்

001.மரங்களின் இறுதி வாக்குமூலம்

வாய்விட்டுப் பேசினால்
உணர்ந்திட முடியுமா..

வார்த்தைகள் எல்லாம்
தெளிந்திட வைக்குமா

ஆறறிவு கொண்ட
மானிடப் பிறவிகளே..

ஓரறிவு உயிர்களின்
உணர்வினை உணரவில்லையோ..

இயற்கையைத் தூரத்தும்
ஓட்டத்தில் நீங்கள்..

செயற்கையாய் நடத்தும்
நாடகங்கள் காணீரோ..

வெளியிடை வழியாக
வளமையைக் கொணர்ந்தோமே..

வளியினைத் தந்தவனுக்கு
வலியினைத் தரலாமோ..

மரங்களின் இறுதி
வாக்குமூலமாய் சொல்கிறோம்..

தலைமுறை காத்திட
ஒருவிதை விதைத்திடு....

 

002.முத்தமிழ் அத்தினி

சட்டென கடந்திடும்
காற்றோ முகிலோ

பட்டென நினைத்தேன்
படர்ந்தது குழலோ

கற்றென்ன பயனோ
தீர்வில்லா கணக்கோ

பற்றென உன்னைப்
பிடித்தது மனமோ

அற்றது நாணம்
வென்றது சிலையோ

திக்கெட்டும் காணா
தீந்தமிழ் சுவையோ

மொட்டது முகிழ்ந்து
முறிந்தது உளமோ

யாரோநீ பெண்ணே
முத்தமிழ் அத்தினியோ!!

 

003.உலக அழிவை மாற்றும் அறிவின் தேடல்

உலகஅழிவை மாற்றும்
அறிவின் தேடல்..

உதயமானால் இயல்பாகும்
புவியின் சுழல்..

அணுஉலை அபாயம்
அறிந்திடா மானிடம்

அகிலத்தின் இதயத்தை
அடக்குமே நாளும்..

மரங்களை அழித்திடும்
மனிதனின் ஆக்கம்

மரணத்தை வரவேற்கும்
மதியிழந்த கூட்டம்

நிசமதை உணர்த்திடும்
நிலைமையைக் கண்டு

விழித்திடு மனிதா..
விடிவைத் தேடி

பணம் பொருள்
பகட்டான வாழ்வென்றே..

பாதாளத்தை நாடாதே
பாவங்களைச் சேர்க்காதே..

புவியன்னை மடியிலே
புரண்டோடும் சமூகமே..

புதுவாழ்வைப் பெற்றிடுவோம்
புரட்சிகள் செய்திடுவோம்.

 

004.உலக அழிவை மாற்றும் அறிவின் தேடல்

உலகஅழிவை மாற்றும்
அறிவின் தேடல்..

உதயமானால் இயல்பாகும்
புவியின் சுழல்..

அணுஉலை அபாயம்
அறிந்திடா மானிடம்

அகிலத்தின் இதயத்தை
அடக்குமே நாளும்..

மரங்களை அழித்திடும்
மனிதனின் ஆக்கம்

மரணத்தை வரவேற்கும்
மதியிழந்த கூட்டம்

நிசமதை உணர்த்திடும்
நிலைமையைக் கண்டு

விழித்திடு மனிதா..
விடிவைத் தேடி

பணம் பொருள்
பகட்டான வாழ்வென்றே..

பாதாளத்தை நாடாதே
பாவங்களைச் சேர்க்காதே..

புவியன்னை மடியிலே
புரண்டோடும் சமூகமே..

புதுவாழ்வைப் பெற்றிடுவோம்
புரட்சிகள் செய்திடுவோம்.

005.ஊனோடு உறைந்த பாசம்..

வெந்தும் தணியவில்லை மனது
படும் வேதனைக்கும் முடிவில்லை
அள்ளி இறைத்த அன்பால்
அவதிக் கொண்டது இன்று..
ஒதுக்கிய உறவுகள் அறியுமா..
சுவற்றில் பட்ட பந்தாய்
சுடும் வலிகள் திரும்பிடுமென்று...
என்ன பிதற்றல் என்பேன்
புத்தி நிலையாது சரணடைந்ததாலே
கண்ணீரும் கருகியது இன்றே
என் நிசங்களும் கற்பனையானதாலே
என்னுயிரும் அமைதி கொள்ளாமல்
உறவுகளைச் சுற்றித் திரிகிறதே
புத்திக்குத் தெளிந்த அறிவு
உள்ளத்தை உரச மறுக்கிறதே
தானுண்டு என்றிருந்தால் நானோ
தடுமாற்றம் இன்றி இருந்திருப்பேனோ
ஊனோடு உறைந்த பாசம்..
பொய்த்திட பொசுங்கும் மனது
வேரோடு அறுக்கத் துணிவில்லை
என் வேராய் அவர்களானதால்
பச்சை வயலாய் நின்றேன்
என்னைக் கானல் நீராக்கியதேனோ..
அழுது முடித்தும் தீரவில்லை
என் அருகில்வா என்றதொரு சத்தம்
தலைத் தூக்கிப் பார்த்தேன்
தாங்கிப் பிடித்தது மகவு..
சொல்லில் முடியாத என் வேதனை
தமிழ் சொல் ஆற்றுமோ என்றே
துடித்தே வடித்தேன் மனநிலையை
தூக்கம் வருமா இனியாவது...

 

006.உலக மகளிர்தின நல்வாழ்த்துகள்

பெண்கள் முன்னேற்றம்
உலகத்தை முன்னேற்றும்
இதிகாச காலமுதல்
இன்றளவும் பார்போற்றும்..

ஏட்டில் தொடங்கியன்று
ஏவுகணைத் தளத்தில்வரை
ஏற்றமிகு செயல்களில்
ஏந்திழையர் இருக்கின்றனர்..

அழகுக்காய் மட்டுமில்லாமல்
அதிசயம் நிகழ்த்துகின்றனர்
அணுக்களையும் ஆராய்ந்து
அற்புதம் நடத்துகின்றனர்..

காக்கி உடையணிந்து
காவலும் காக்கின்றனர்
காட்டுத் தீயாகி
கயவர்களை எரிக்கின்றனர்..

தனித்தே விடப்பட்டாலும்
தன்னிச்சையாய்ச் செயல்படுவர்
குறுநகை வீசியே
குவலயம் ஆண்டிடுவர்...

பட்டங்கள் வென்றனர்
சட்டங்கள் செய்தனர்
பாரின் பாதியாகி
சாதனைகள் புரிகின்றனர்..

இல்லத்து அரசிகளும்
சும்மா இல்லை
நினைவில் கொள்ளுங்கள்
எழிலானக் குடும்பத்திற்கு
ஏணிப்படிகள் அவர்களே..

தவங்கள் புரிந்தாலே
மங்கையராய்ப் பிறக்கமுடியும்
வரமானப் பிறவிகளை
வணங்கியே நடைபோடுங்கள்..

விலையில்லாக் கல்வியைச்
சட்டங்கள் ஆக்குவோம்
மலைவாழ் மகளிர்க்கும்
மாண்போடு வழங்குவோம்..

பெண் குழந்தைகளைக்
கண்போன்று காத்திடுங்கள்
பொல்லா உலகத்திலே
பிழைத்திட கற்றுக்கொடுங்கள்..

மலராக வேண்டியவளை
மொட்டிலே கிள்ளாதீர்கள்
புதையலாய் காக்கவேண்டியவரைப்
புண்ணாக்க நினைக்காதீர்..

பெண்கள் முன்னேற்றம்
பெயரளவில் நிற்காமல்
கருத்தோடு நாமும்
கவனமாய்ச் செயல்படுத்துவோம்!..

 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE