நெல்லை கண்ணன் ஐயா அவர்களுக்கு இதய அஞ்சலி..!
நெல்லை கண்ணனே!
எங்கள் தமிழர்களுக்கெல்லாம் அண்ணனே!
உம் நடையில் தமிழ் பேசும் மன்னனனே! பட்டிமன்றங்கள் பலபேசி தமிழை பரப்பும் சூரியனே!
காமராஜர் தொட்டு இந்நாள் முதல்வர் வரை !அனைவரையும் தொட்டு!
அரும் தமிழ் உரையால்! நகைச்சுவை பேச்சால்!
எங்கள் உள்ளம் கவர்ந்த நெல்லை கண்ணன் என்னும் எங்கள் உயர் அண்ணனே!!
உன் மரணம் தமிழ் பற்றாளர்களுக்கெல்லாம் !பேரிடியாய் தெரிகிறதே!
உன் மரணச் செய்தி கேட்டு என் நெஞ்சில் இடி விழுந்தார் போல் ஒளி பிறக்கிறதே!
போய் வாருங்கள் என்று சொல்ல மனமில்லை!
போக வேண்டுமா என்று கேட்க நான் கடவுள் இல்லை!
நீர் இவ்வுலக விட்டுச் செல்ல !
எங்கள் விழிகளில் கண்ணீர் வெள்ளம்!
நீர் மண்ணை விட்டு சென்றாலும் !
உம்தமிழ் பேச்சுக்களும் தமிழ் நூல்களும் !
நீர் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகளும்!
எங்கள் நெஞ்சத்தில் உறைந்து கிடக்கும்!
விழிகளில் நீங்கா உருவம்! வேதனையில் உறுத்தலாகவே இருக்கும்!!
கண்ணீர் வரிகளுடன் தமிழ் பற்றாளன் !
-கவிதை மாணிக்கம்.