செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அபியின் கவிதைகள் , அபியின் கவிதைகள் , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

கர்ம வீரர் காமராஜர் விருது கவிதைப் போட்டி கவிதைகள்

02 ஜூலை 2023 93,097 பார்வைகள்
கர்ம வீரர் காமராஜர் விருது கவிதைப் போட்டி கவிதைகள்

கர்மவீரர் காமராஜர் விருது கவிதைப் போட்டி கவிதைகள் ...

001.மீண்டும் எப்பொழுது வருவீர் காமராசரே...!

இந்தியத் தாயின்
காலில் பிறந்தவன்
தலை யாரென்று 
தீர்மானித்தவன்..!

இவன்
கைத்தூய்மையால்
கை உயர்ந்தது
தமிழகத்தில்..! 

பிறருக்கோ
எழுத்துக்களை மட்டும்
படிக்கும் கண்ணாடி..! 

இவருக்கோ
இவரின்
நேர்மை பேசும்
கண்களையும் படித்தது..!

வெள்ளாடையுடுத்தி
பவனி வந்த
ஆண் கலைமகள்..! 

நல் இதயம் கொண்டவன்
பாடசாலையில்
தீனி போட்டான்
மூளைக்கும் வயிற்றுக்கும்..! 

மலைகளையும் அணைத்தான்
மழலைகளையும் அணைத்தான்..!

ஊர் தோறும்
இவன் திறந்த
அறிவுத் திருக்கோயிலில்...!

குழந்தைகள் ஓதினர்
'அ' ன்னா! 'ஆ' வன்னா! 
மந்திரங்களை..! 

வானத்தைப் போல
உயர்ந்தவன்...!
கார்மேகத்தைப் போல
கருத்தவன்...!

பனித்துளியைப் போல
சிரித்தவன்...!
நிழல் தரும்
மரம் போல
அரவணைத்தவன்...!

எறும்பைப் போல
உழைத்தவன்
கரும்பைப் போல
இனித்தவன்...!

நீர் வங்கி 
கட்டியவன்
கண்ணீரைத்
துடைத்தவன்...!

ஏர் கலப்பையால்
நிலத்தையும்
எழுதுகோலால்
மூளையையும்
கிளரச் செய்தான்...!

பச்சைப் பட்டாடை
உடுத்திய நிலமகள் கண்டு
மனம் மகிழ்ந்தவன்...!

கூரையின் மேலமர்ந்த
பறவையைப் போல்
மகிழ்ச்சியாக வாழ்ந்தான்
எளிமையாக...! 

இவன் திறந்த
கோயிலில்
எந்த சாதிக்கும்
தடையில்லை...!

எந்த மதத்திற்கும்
சொந்தமில்லை
இங்கே எச்சாதியினரும்
அர்ச்சகராகலாம்..!

உழவுக்கும்
தொழிலுக்கும்
வந்தனை செய்தவன்...!

புண்ணியங்  கோடியாக
ஏழைக்கு எழுத்தறிவித்தவன்...!

கோடி கோடியாக
சேர்த்தான்
வான் நீரையும்...! 
நற்பெயரையும்...! 

உயரம் போல்
இவன் பிடித்த செங்கோலும்
இன்று வரை 
ஆச்சர்யக்  குறியாகவே நிற்கிறது..!

பிழை செய்த மக்கள்
ஐம்பது ஆண்டுகள் தாண்டியும்
தவங்கிடக்கிறார்கள் 
மீண்டும் ஒரு
காமராசர் வேண்டி...! 

முனைவர்  ம.ப.சாந்தி சங்கரி,
புதுச்சேரி.

*************************************************

002.விருதுகளின் நாயகர்..!

ஆனித் திங்கள் பிறந்தவராம்! 

அகிலம் போற்ற உயர்ந்தவராம்! 

விருது நகர்தனில் உதித்தவராம்! 

விருதுகளின் நாயகராம்! 

வறுமை பிடியில் இருந்தவராம்!

 வையம் வணங்கிட வாழ்ந்தவராம்! 

மதிய உணவு வழங்கியவராம்! 

மக்கள் பசியைப் போக்கியவராம்!

 எளிமையின் உருவம் கொண்டவராம்! 

ஏழையின் துயரை துடைத்தவராம்! 

கல்வி தரத்தை உயர்த்தியவராம்! 

கருணை உள்ளம் உடையவராம்! 

பாசனத் திட்டம் தந்தவராம்! 
பாரினை செழிக்க வைத்தவராம்! 
கர்ம வீரர் என்றிவரை நித்தம் நாமும் பொற்றிடுவோம்!

மு. பாரதி, காயல்பட்டினம், தூத்துக்குடி 

*************************************************

003.

காமராசர்

பல பேரறிவு கொண்ட மாணவர்கள் மனதில் 

நம்பிக்கை நாயகனாய் இவர் முகம் மட்டுமே….

சூலை மூவைந்தில் விருதுபட்டியில் எளியோனாய் 

சிவகாமி மைந்தனாய் மண்ணில்  அவதரித்தாய் .!

அபிராமி அந்தாதியாய் 
அகிலமெங்கும் 
ஒளியானாய் .!

காமாட்சியாய் குலமான குலசாமியும் நீயே !

காமராசாய் வளமான 
ராசாவும் நீயே ! 

கம்பிக்குள் வாழ்ந்த கம்பீரமும் நீயே ! 

குலக்கல்வி ஒழித்து நலக்கல்வி தந்தாய் .!

இலவசக்கல்விஅளித்து நல்லுணவை ஈந்தாய் .! 

கல்வி ஒளிவிளக்கு உன்னாலே ஒளிர்ந்தது ... 
கல்லாமை அறியாமை
 தன்னாலே அகன்றது ...

எதிர்த்தோரை
 ஏணியாக்கிய கலிங்கத்துப்பரணி 
நீயே !

கீழோரை 
மேலோராக்கிய  பெரியபுராணமும் நீயே ! 

திட்டங்கள் தீட்டுவதில் எந்நாளும் பிதாமகன் ..

துயரங்கள் நீக்குவதில்  எப்பொழுதும் உழவன் மகன் ..

நீர்ப்பாசனத் திட்டத்தால் கண்ணீர் அருகியது ...


மின்சாரத்திட்டங்களால் இருளும் நீங்கியதே .!

உழவாரப் பணிகளால்  வேளாண்மையும் ஓங்கியதே .! 
 
அணைகளைப்பெருக்கி உழவினை  அரவணைத்தாய் ..

தடைகளைத் தகர்த்துச்  சட்டங்களை வகுத்தாய் .. 
வாய்க்காலுக்கு  வாயிருந்தால் 
நாளெல்லாம் புகழ்பாடும் ...

ஒளிரும் வெற்றியில்  மயங்காது நின் கதராடை 

தோல்வியில் கலங்காது நின் 
மனவோடை ..

உதவியைக் 
கருணையாக்கும் மக்களின் முதல்வர் ...

பதவியைத் துறந்து வழிகாட்டுவதிலும் 
முதல்வர் ... 

வறியோரின் 
மனதினைப் படித்த படிக்காத மேதை !

புகழுக்கு மயங்காத கர்மவீரர் மனதளவில் குழந்தை ! 

உனதாட்சி ஏழைகளின் கண்ணாடி மனசாட்சி !

மறைந்தும் வாழ்கிறாய் அணையா விளக்காய் ...

படிக்கும் குழந்தையின் வாழ்க்கையில் ஒளிவிளக்காய் ...

மீண்டும் பிறவாயோ நானிலமும் பயனுறவே .!

முனைவர் ப.விக்னேஸ்வரி
உதவிப்பேராசிரியர்
தமிழ்த்துறை
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கோவை.

**************************************************

004. 

விருதுபட்டியின் வைரமே!
மனதருள் மாணிக்கமே!

உன்னைப் போல் உயர்ந்தவர் இனி ஒருவர் பிறப்பாரோ!

எண்ணமோ உயர்வு!
எளிமையான வாழ்வு!

கல்வியறிவோ குறைவு!
ஆனால் நீ காலூன்ற துறையோ குறைவு!

சட்டங்கள் கற்றதில்லை!
பட்டங்கள் பெற்றதில்லை!

திட்டங்கள் பல கோடி தந்திட்ட அறிவுப் பெட்டகமே!

சத்தியமூர்த்தியின் தளபதியே!
கல்விக்கண் கொடுத்த படிக்காத மேதையே!

உணவுத்திட்டம் வகுத்த மகத்தானவரே!
அனைகளைக் கட்டிய வல்லுனரே!

தலைவர்களை உருவாக்கிய பெருந்தலைவரே!

தரணியை தழைக்கச் செய்த நாயகனே!
வெள்ளை உள்ளம் கொண்ட கருப்பு காந்தியே!

 ச. திரிஜா பாலா
கும்பரையூர், கொடைக்கானல்.

***********************************************

005.

கர்ம வீரர்

வித்தென்னவோ சிறிதுதான்/

விருதுப்பட்டியின்  முத்தல்லவோ இவருதான்/

தமிழச்சி கருவில் தமிழனாய் வந்தார்/

தமிழும் போற்றிட தலைநிமிர்ந்து நின்றார்/

சூத்திரத்தின் விதையாய் முளைத்தார்/

நேத்திரத்தைக் கல்வியால் நிறைத்தார்/

கல்விக்கு வழிகண்டு சோறிட்டு வளர்த்தார்/

எளிமைக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாய் திகழ்ந்தார்/

கல்வியின்பால் பெரும் ஈர்ப்பினைக் கொண்டார்/

கடைக்கோடி குழந்தைக்கும் கல்வியைத் தந்தார்/

சூரராய் நெஞ்சுரம் நெடுமைக் கொண்டார்/

 சூழலைக் கல்வியால் மாற்றம் கண்டார்/

உணவோடு கல்வியை ஊட்டியே வளர்த்தார்/

உன்னத முதல்வர் இவரெனத் திகழ்ந்தார்/

படிக்காத மேதையாய் படிப்பினை உணர்ந்தார்/

பெருந்தலைவர் என்னும் பட்டமும் வென்றார்/

படிக்கும் பிள்ளைகளின் பசியினை உணர்ந்தார்/

இலவசமாய் சோறிட்டு இன்புற்று நின்றார்/

உலகை பகுத்தறிந்து பட்டதாரி ஆனார்/

பதவி சுகமற்று பண்பட்டு நின்றார்/

பள்ளி பல ஆயிரம் திறந்து வைத்தார்/

மதிய உணவு திட்டம் மூலம் விருந்து வைத்தார்/

கருப்பு காந்தியாய் கதருடுத்தி வாழ்ந்தார்/

கல்விக் கடவுளென காலமெல்லாம் திகழ்ந்தார்/

புலவர் பெ. மீனா
பட்டாபிராம்.

************************************************

006.

கல்விக் கண் திறந்த ஊற்றுக் கண்ணே!

சரித்திரத்தில் நீங்கா கர்ம வீரனே!
ஆலைகள் செய்தாய்
கல்விச் சாலைகள் செய்தாய்!

ஆடு மேய்க்கும் சிறுவன் படிக்க மதிய உணவு திட்டம் தந்து அற்புதம் செய்தாய்!

மாடு மேய்க்கும் குழந்தை கையில் கைத்தடி பிடுங்கி!

மதிவளர்கும் காகித புத்தகம் தந்தாய்!

ஆலமரமாய் விழுது விட்ட அரசு பள்ளிகள் எல்லாம்
அடியோடு சாய்கிறது
இந்த நாளில்!

கல்வி வியாபாரம்
கொடி கட்டி பறக்குது!
கள்ளுக்கடை வியாபாரம் அரசாங்கம் நடத்துது!

கர்ம வீரனே நீ எழுந்து வா!

சரித்திரம் நிறைந்த தமிழ் மண்ணில் 
தரித்திர ஆட்சி நடப்பதுவோ!

சாதி சண்டை 
மத சண்டை
அரசியல் ஆச்சி இன்று
நாட்டை பற்றி யோசிக்காமல் பதவி மோகம் உண்டு!

உனக்கு கிடைத்த பதவியை இன்னொருவருக்கு தந்த மனசு இன்று எவருக்கும் இல்லை!

பதவிக்காக செய்கின்றார் கொத்து கொத்தாய் கொலை இன்று!

சிறப்பான செய்தியெல்லம் மலையேறி போச்சு!

சாதி சாண்டை மத சண்டை சிறப்பு செய்தி ஆச்சி!

சாதி மத வாக்கு வங்கி அரசியல் நோக்கம் ஆச்சி!

நாட்டினிலே நடத்தவில்லை உன் போல் ஒரு ஆட்சி!

உன்னை நினைத்து விடுகிறோம் நாங்கள் பெருமூச்சு!

அணைகள் கட்டி நீரு சேமித்தாய்!
குளம் வெட்டி காடு வளர்த்தாய்!
நீ செய்த திட்டமெல்லாம் கானல் நீர் ஆட்சி!

எதிர்கால தலைமுறைக்கு எதிர்காலம் இல்லை என்ற நிலை ஆச்சு!
மணல் கொள்ளை நடக்குது ஆறு வரண்டு கிடக்குது!
 
ஆனாலும் அரசியல் வாதி பிள்ளைகள் செழிப்பாக இருக்குது!

பிள்ளை பெறாத தியாகம் செய்த உன் வாழ்க்கை சரித்திரமாய் இருக்குது!

கோ பெரியசாமி உதவிப் பேராசிரியர் பெரம்பலூர்.

*******************************************

007.

காமராஜர்
குமாரசாமி சிவகாமியின் மைந்தனே
"கர்மவீரறாய்" காலத்திலும் நிற்பவரே !
படிப்பின் அவசியம் உணர்ந்த "படிக்காத மேதையே" !
"பாரத ரத்னா விருது"ம் தேடி வந்ததே உன்னை தேடி !

படிக்கும் பிள்ளைகளின் பசியை உணர்ந்தவரே !
இலவச உணவை வழங்கி இன்புற்றவரே !
எளிமைக்கும் நேர்மைக்கும்
எடுத்துக்காட்டாய் விளங்கியவரே !

பதவி சுகம் இல்லாத
பண்பட்ட மானிடனே !
"பெருந்தலைவர்" எனும்பட்டம்
போற்ற வேறு யாருமுண்டோ ?'

மூன்று முறை தமிழக -
"முதலமைச்சராய்" இருந்தும் கூட ;
முழுமையான வீடும் இல்லை!
வசதியாக வாழவுமில்லை!
வாழ்ந்த காலம் எல்லாமே -
வாடகை வீட்டில்தானே !

"கருப்பு காந்தியாக"
காதர் உடுத்தி வாழ்ந்து வந்தாய் !
"கல்வியின் நாயகனாக"
காலமெல்லாம் வாழுகின்றாய் !

 ச.யோகேஸ்குமார்,
 பொள்ளாச்சி.

************************************************

008.

காமராசர்...

தமிழகம் தேடிய
தங்க சுரங்கம்...!
தாய்நாடு தேடிய
சுதந்திர சின்னம்..!

தமிழனின் கனவை
தரணிக்கு தந்தவன்..!
தாய்மை அன்பில்
தாவி அணைத்தவர்..!

கருணை நோக்கில்
காலத்தை வென்றவன்..!
கடமை செய்து
காவியம்  ஆனவன் ..!

பொறுப்பில் நின்று
பெருமை படைத்தவன்..!
பெருமை கண்டது
பொற்காலம் என்று..!

விருது பட்டியின்
விலைமதிப்பற்ற கோபுரம்..!
விருது கூட
விழுந்து வணங்கிடும்..!

சாதனை நாயகன்
சரித்திர கண்டவன்..!
மக்கள் நலவேண்டி
மாநிலம் வளர்த்தவன்..!

உழவன் கண்ணீர்
துடைத்த தூயவன்..!
உயர்ந்த அணைக்கள்
உற்பத்தி செய்தவன்...!

கர்மவீரரே காவிய
தலைவரே ...காலம் வென்று காப்பியம் ஆனீரே..!!


வீரகனூர் ஆ இரவிச்சந்திரன் சேலம்.

***************************************************************************************

009. காமராஜர் 

இந்தியாவின் கருப்பு வைரமாய் 
இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருப்பவரே! 
கல்வி ஒன்றை மட்டும் கருத்தாக புகுத்தியவரே! 
அணைகள் பலக் கட்டித் தாகம் தீர்த்தவரே!
மதிய உணவுத் திட்டத்தை  அறிமுகப்படுத்தி பசியைப் போக்கியவரே! 
பிறர் நலம் வாழத் தன் நலம் துறந்தவரே!
கடமையே கண் என வாழ்ந்தவரே! 
மக்கள் வளர்ச்சிக்காக மண வாழ்வில் ஈடுபடாதவரே! 
தான் கொண்ட கொள்கைக்காக மட்டும் உழைத்தவரே! 
உள்ளமும் வெண்மையே, தோற்றமும் எளிமையே, 
எம் கர்ம வீரருக்கு. 

ச. மதுமிதா, 
இளங்கலை தமிழ் மூன்றாம் ஆண்டு தூய வளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.

**************************************************

010.

எளிமை என்றால் காமராசர்

கல்வி கண் திறந்த கர்ம வீரர் நீரே/1
தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட
தன்னலமில்லா/2
தலைவன் நீரே! ஏழைகளின் கடவுளே/3
பட்டம் வாங்காமல் இந்த உலகை/4
பகுத்தறிந்த பட்டதாரி நீரே தலைவா/5
நானிலம் போற்றும் நல்லவர் நீங்களே/6
படிக்கும் பிள்ளைகளின் பசியைப் போக்கியவரே !7
இலவச உணவை வழங்கி இன்புற்றவரே !8
எளிமைக்கும் நேர்மைக்கும்
எடுத்துக்காட்டாய் விளங்கியவரே !9
ஒன்பது ஆண்டுகள் தமிழக"முதலமைச்சராய்"/10
பதவியில் இருந்தாலும்
உங்களுக்கென வீடில்லையே/11
வசதியாக நீர் வாழவும் இல்லையே/12
நீங்கள் வாழ்ந்த காலம் எல்லாமே /13
வாடகை வீட்டில் என்றாலும் எப்போதும்/14
சுயநலம் இல்லா தியாக உள்ளம்
கொண்டவர்/15
படிப்பின் அவசியம் உணர்ந்த "படிக்காத மேதையே" /16
அணைகள் பல கட்டி தாகம் தீர்த்தாயே/17
எளிமையின் நாயகனே உன்னைப் போல்/18
ஒருவரை எங்கு தேடுவேன் ஐயா/19
வாழ்க நீர் வாழிய வாழியவே/20

இர.உஷாநந்தினி சதீஸ்குமார்
கோவை.

**************************************************

011.

காமராசர்

சிவகாமி அம்மை பெற்றெடுத்திட்ட சீரிய தலைவரே

சிறுவயதிலேயே தேசப்பற்று மிக்க கொண்டவர் நீயன்றோ

விருதுநகரிலிருந்தே நாட்டு விடுதலைக்காக புறப்பட்ட எங்கள் சிங்கமே

அண்ணல் காந்தி அடிகளை பின்பற்றியே
விடுதலைக்கு உழைத்திட்ட தொண்டரன்றோ

பத்தாண்டு சிறைசென்று 
பலகொடுமைக்கு ஆளான தியாகச்செம்மலே நீயன்றோ

உன் பத்தாண்டு ஆட்சியிலே தான்
எண்ணிலா பல சாதனைகள் செய்தவரே நீயன்றோ

அந்த பொற்கால ஆட்சிமீண்டுமிங்கே வரவேண்டுமென்றே சொல்லிடுவார்

பசியோடு பள்ளிக்கு சென்றிடும் பிள்ளைகளும் பசியார


மதிய ஊணவெனும்
மாபெரும் திட்டம் கொண்டுவந்தாய்

ஊரெங்கும் பள்ளிக்கூடம் ஓராயிரம் வந்ததெல்லாம் உன் ஆட்சியில் தானய்யா

நடெங்கும் பலஅணைகளை கட்டியே
 தமிழ்நாட்டினில் விவசாயம் செழிக்க வைத்தாய்

படிக்காத மேதை பச்சை தமிழர் எங்கள் காமராசர் தானென்றே உனை கூறிடுவார்


ஊழலில்லா ஆட்சிசெய்த
உத்தம தலைவர் காமராசர்தானென்றே
இன்றும் சொல்லிடுவார்

தேசிய தலைவனாய் உயர்ந்து நின்ற
தென்னகத்து கருப்பு காந்தி நீயன்றோ

தீயாகசீலராம் ஙஎம்பெருந்தலைவர் நாட்டுபிரதமரையும் நீயன்றோ தேர்ந்தெடுத்தாய்

ஓயாமல் உழைத்திட்ட எங்கள் ஏழைபங்காளர் 
காமராசர் புகழ் என்றும்
வாழ்கவே!

                   அன்புடன்,
துளசி கிருஷ்ணன்,போரூர்
சென்னை 600125.
************************************************

012.

கர்மவீரர் காமராஜர் ..

கல்லாதார் இல்லையெனும் சமுதாயம் உருவாக
 அவதரித்த கடவுளவர்.   பெருந்தலைவர் காமராஜர்
கல்விக்கு கண் கொடுத்தார்- அவர்  தன்
கண்ணில் உறக்கம்  தொலைத்தார்.
 கற்றதன் பயனை அவர் அறியார் -எனினும் 
கற்றவர்கள் உருவாக வழி செய்தார் .
அவர் கற்றது கையளவு என்றாலும் 
அவர் பயின்றது பார் அளவு.
புத்தகங்களை அதிகம் பயின்றவர்  அல்லர்
எனினும் மக்களை அதிகம்  படித்தவர். ஆங்கோர்
ஏழைக்கு எழுத்தறிவித்தல் புண்ணியம்   
என்றார் பார் போற்றும் பாரதி. பாரத தேசத்தில் ஒரு ஏழைக்கு   அல்ல 
ஓராயிரம் ஏழைகளுக்கு எழுத்தறிவித்தார்  காமராஜர்.
அவர் கடமையைச் செய்தாரென்று எண்ணுவதே
 நம்மில் பலர் செய்யும் மடைமை.
கடவுள் கொடுத்த வரமானவர். காமராஜர்
காலத்தின் கடைசி கருணையாம் காமராஜர்...!
இத்தனை நாள் உலகமெல்லாம்  இருந்தறிந்த 
பெரியவர்கள் இசைத்த ஞானம் அத்தனையும்
ஓருருவாய்த் திரண்டதெனக் கலியுகத்தே அவதரித்தோன்!
உடலோடு வந்து போகும் உருவினில் தெரிவதன்றிக் கடவுளை
உலகில் யாரும் நேருறக் காண்ப தில்லை.
அடைய விரும்பும் அந்தக் கடவுளின்
அன்பு  தன்னை நடைமுறை வாழ்விற் செய்த
காமராஜரே நமது தெய்வம்!
குலக்கல்வித் திட்டத்தை நீக்கியவர் .
இலவசக் கல்விக் கொள்கை       தொடங்கியவர் .
மழலைக்கு மதிய உணவை வழங்கியவர் .
கல்விக் கண்ணைத் திறந்திட்டவர்!
மாசற்ற மாணிக்கமாய்த்  திகழ்ந்திட்டவர்! 
 தன்னலமற்ற வாழ்வினை வாழ்ந்திட்டவர்! 
சத்தியமூர்த்தியின் அரசியல் சீடனவர்! 
தன்னிகரில்லாத் தலைவர் அவர்!
 கடவுள் தந்த மனிதக் கொடையை!
 மனிதருள் மாணிக்கத்தை  மாமனிதரை !
 கல்விக் கண் திறந்த கடவுளை!
நாடு போற்றும் நல் தலைவரை!
வானத்து வளர்பிறைச் சந்திரனை!
கல்லாமல் துயில் கொண்டு  இருந்தோரை 
கல்வியின் சிறப்புணர்த்தி   ஊக்கமளித்து
பாமரனையும் பயிலச் செய்த பரமனை!
அள்ளி வழங்கும் அருட்கொடையை,
கொடையின் ஆணி வேரை பள்ளிச் சிறார் பசி தீர்த்த  வள்ளலை, 
பற்றிலாத் துறவி போல் வாழ்ந்தவரை,
பிள்ளைகளின் தளிர் நடை காணும் பெற்ற
தாயவள் நெஞ்சம் போல பள்ளிக்குப் பிள்ளைகள் செல்லும் பாங்கினை 
ரசித்து அதில் புதையலைப் பெற்றவரை!
நாளும் உள்ளத்தில் வைத்துப் போற்றிடுவோம்! 
அவர் புகழ் என்றும் நிலைத்திருக்க வேண்டிடுவோம்!
கனிந்தஅன்பினால் நம் மனம் நிறைந்த 
நல் தலைவர் அவரை வாழ்த்திடுவோம்!
 நின் புகழ் ஓங்குக!
இந்தியத் திருநாட்டின் புதல்வர் அவர் எல்லோர்  
இதயங்களிலும் நின்று விளங்கும் தலைவர் . அவர் 
காந்தியின் வழியில் நின்றிட்டார் !
கல்வியின் தரத்தினை உயர்த்திட்டார்! அவர்  
எளியோரும் கற்க வழி செய்தார்.
மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தார்.
 சிறுவர்களின் பசியினைப் போக்கிட்டார்.
இந்திய நாட்டின் இருளை அகற்றி  எங்கும் ஏற்றம் கண்டிட்டார்!
தொல்லுலகில் 
 இந்தியத்தாய் உலகினுக்கே ஈந்த தெய்வம்...!

புலவர்  ஈ. வாசுதேவன், நாமக்கல் மாவட்டம்.

**************************************************

013.

கர்மவீரர் காமராஜர்

கர்மவீரரே; காமராசரே;
விருதுநகரின் கருப்பு காந்தியே ;
குமாரசாமி மற்றும் சிவகாமியின் புதல்வனே;
சத்தியமூர்த்தியை அரசியல் குருவாக ஏற்றவரே;
கிங்மேக்கர் என்றழைக்கப்படும் எளியவரே;
மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்த  வள்ளலே;
மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரே;
திறமைக்கும் நல்லாட்சிக்கும் பெயர் பெற்றவரே;
தமிழகத்தின் மறுமலர்ச்சியை வித்திட்டவரே;
படிக்காத மேதையே; தென்னாட்டு காந்தியே;
நல்லாட்சியை வித்திட்ட நல்லவரே;
பாரத ரத்னா விருது பெற்ற படிக்காத மேதையே;
K.Plan கொண்டு வந்த கிங்மேக்கரே;
இம்மண்ணை விட்டுச் சென்றாலும் எங்கள் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்த ஏழைப் பங்காளனே..
உங்களை எ‌ன்று‌ம் போற்றுவோம்.

பெ. ராஜலட்சுமி M.A;B.Ed;
ஆசிரியை- வைமா வித்யாலயா,
ராஜபாளையம்

 

************************************************

014.

படிக்காத மேதை....

கற்கண்டான கல்வித்திட்டங்களைத் தீட்டிய கலங்கரைவிளக்கே!!!!

விருதுநகரின் வித்தான விலையில்லா விளைநிலமே!!!!

பெண்கல்வியைப் போற்றிய கல்வியின் தந்தையே!!!

கல்மனதையும் கசக்கிப் பிழிந்த கருப்புகாந்தியே!!!

 இல்லற இன்பத்தினை துறந்த இலட்சியவாதியே!

பட்டடங்களைப் பெறாமல் திட்டங்களைத் தீட்டிய அறிவுப்பெட்டகமே!!!!

பள்ளிகளால் இறைவனுக்கு மகிழ்ச்சியென முழங்கியவரே!!!

காந்திவழியில் கண்ணியமான கருப்பு காந்தியே!!!

மதிய உணவுத்திட்டம் படைத்த மதியொளியே!!!

இலட்சங்களின்றி இலட்சியத்தை காத்த வீரவரலாறே!!!!

அணைகள் தொழிற்சாலை பலவமைத்த நேர்மையின்சிகரமே!!!!

பணம் பதவிக்கு அடிமையாகாத புரட்சித்தலைவனே!!!!!

அன்பால் மனிதர்களை ஆட்டுவித்த தாயுமானவனே!!!

பகட்டான வாழ்வின்றி பண்பான பொதுநலத்தொண்டனே!!!!

கடமையே கண்ணாகக் கொண்ட பகல்நிலவே!!!!

முக்காலத்தை முற்றும் உணர்ந்த படிக்காதமேதையே!!!!

தரணியிலே அவதரித்த தருமத்தின் தலைவனே!!!

எளிமையாகவே வாழ்ந்த ஏழையின் இமயமலையே!!!

உழைப்பையே உண்மையாக்க  உரைத்த உத்தமத்தலைவனே!!!

உள்ளத்தால் உலகை வென்ற உலகநாயகனே!!!

தன்னலத்தை புறந்தள்ளி நாட்டிற்குழைத்த கர்மவீரனே!!!

கவிநாயகி.
த.கலைச்செல்வி
காவேரிப்பட்டினம்.

***********************************************

015.

மீண்டும் பிறந்து வருவாயா காமராஜரே...


குமாரசாமி பெற்று எடுத்த குலக்கொழுந்தே கல்விக் கண் திறந்தவரே காவியமானவரே
காமராஜரே

அணைக்
கட்டுக்களை கட்டி அனைவரையும. அன்பால் அரவணைத்தவரே

தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தவரே
தமிழக முதல்வரே

சத்துணவைக் கொடுத்து
குழந்தைகளை
சதா சர்வ நேரமும் 
கல்வி கற்றிடச்
செய்தவரே

முதலமைச்சராய் இருந்து முத்தான திட்டங்களைத்
தந்தவரே எங்கள் காமராஜரே

படிக்காத மேதையாய் இருந்து படிக்கிற பிள்ளைகளுக்கு ஏணியாய் இருந்தவரே

ஏழைப்பங்காளரே
கிங்மேக்கர் என்றே அழைக்கப்பட்ட
தன்னிரகற்றவரே

தரணி போற்றிய காமராஜரே
தனக்கென எதுவும்   வேண்டாதவரே

தன்னலம்
கருதாமல் மக்கள்நலன் ஒன்றையே தன் நலனாகக்
கொண்டவரே

கண்ணும் கருத்துமாக
கல்வியை எண்ணி
கல்விக்கு கடவுளானவரே
காமராஜரே


மீண்டும் பிறந்து வாருமய்யா
வேண்டும் எங்களுக்காக

யாண்டும் இடும்பை கண்ட நீவிர்
மீண்டும் பிறந்த வந்தால்
தாங்கிடுவோமே எங்களின்
வற்றாத அன்பால்

புண்ணியரே
பொக்கிசமாய் எண்ணியே அழைக்கிறோம்
கண்ணிலே வைத்தே காக்கிறோம்
மீண்டும் பிறந்தே
வாருமய்யா காமராஜரே...

முனைவர் கவிநாயகி
சு.நாகவள்ளி மதுரை.

************************************************

016.

மனிதருள் தெய்வம்...

ஆழிசூழ் உலகத்தில் கிடைத்த அமிர்தமாய்//
அருந்தமிழ் அன்னையின் அன்புப் புதல்வனாய்//
கல்லாமை இருளில் தவித்த ஏழை மக்களுக்கு//
அறிவிச்சுடர் ஏந்திய அருந்தமிழனாய்//
பொருள் தேடலில் தொலைந்த அரசியல்வாதிகளின்//
இடையே தர்மம் காத்த செம்மலாய் //
விடுதலை இந்தியாவின் வசந்தகாலமாய்//
தலைவருக்கெல்லாம் தலைவராய் //
தன்னம்பிக்கை மிகுந்த கர்மவீரனாய்//
உழைப்பின் உறுதியாய் உண்மையின் உயிர்த்தோழனாய்//
ஏழையின் பங்காளனாய் படிக்காத மேதையாய்//
பார் போற்றும் பகலவன் போன்று //
பாரதம் செழித்து வளர பாதைகள் அமைத்தாய்//
அணைகள் பல கட்டி விவசாயிகளின்//  
பெருந்துயர் போக்கி நீர் வளத்தை பெருக்கினாய்//
தொழிற்சாலைகள் அமைத்தாய் தொழில் முன்னேற்றம் கண்டாய்//
மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி //
மனிதாபிமானத்தின் தனித்துவம் போற்றினாய் //
விருதுபட்டியில் முளைத்த ஆழமரமாக// 
உன் நிழலில்
மக்களை இளைப்பாற வைத்தாய்//
மகத்துவம் பற்பல புரிந்தாய்//
மக்கள் மனதில் என்றென்றும் நிலைத்தாய்...

கவிஞர் உமாதேவி ப. முனைவர் பட்ட ஆய்வாளர், கோவை.

***********************************************

017.

தர்மத்தின் தலைவனே
 

பார்க்காத கல்வியை
படிக்க வைத்தாய்!

பசியென்று வந்தவர்களுக்கு 
புசிக்க
வைத்தாய்!

பணமென்று ஆண்டோவர்க்கு
பாடம் 
ஆனாய்!

நடிப்பவர்
முன்
நயமென்று
நீயேயானாய்!

வள்ளலார்
என்பதற்கு
வடிவம்
கொண்டாய்!

உள்ளத்தில்
நல்லுள்ளம்
நான்தான்
என்றானாய்!

கள்ளம்
கபடம்
என்பதனை 
தீண்டாயென்றாய்!

எதையெதையோ
கேட்டவர்க்கு
ஏட்டுக்கல்வியைத்தானே
இலவசமாயளித்தாய்!

தரிசாயிருந்த
ஞானத்தை
போதிமரமாய்
பரிசளித்தாய் !

மகத்துவம்
யாதெனில்
மாணாக்கரே
என்றாய்!

மூடனாவதை
முடக்கி
மேதைகளாய்
விதைத்தாய்!

எளிமையே
தலைமைக்கு
ஏற்புடையதென்றே
கற்பித்தாய்!

எப்படியும்
வாழ்ந்தோர் முன் 
இப்படித்தான்
வாழவேண்டுமென்றே
வாழ்ந்தவரானாய்!

சந்திக்க வந்தவரையெல்லாம்
சிந்திக்க 
வைத்திட்டாய்!

ஏதோவொன்றாயிருந்த
பகுத்தறிவுதனை
எளிதாக்கி
வளந்தந்தாய்!

மக்கள்
மகத்துவமாக
நீயே
மகாத்மாவானாய்!

தலைவனாக நீயே
இருந்தாலும் நீயே
தொண்டனாகவே
தோன்றினாய்!

அரசியல்
வானில் நீயே
அறிவியல்
ஆனாய்!

வறிய 
அற்புத வாழ்வில் 
நீ மட்டும் 
அதிசயமானாய் ! 

குணம் கொண்டவனே
கோமகன் என்றானாய்!

தாய்நாடும்
தாயும்
ஒன்றென்றே
ஒப்புதல் தந்தாய்!

தேசியத்தையும்
மாநிலத்தையும்
உயிராய்
சுவாசித்தாய்!

வேடதாரிகளை
விபரமறிந்தே
களையாக
கலைத்தவரானாய்!

விலைபோகாத
விலைமதிப்பானாய்
சளைக்காமல்
உழைப்பாளரானாய்!

உனக்குப்பின்
உதாரணமாக
ஒருவரையாவது
தேடிப் பார்த்தால்
நீ மட்டுந்தானே இன்னும் 
நினைவில் வருகிறாய்!

எங்கோவல்ல
நீ
இங்கேயென்றும் 
மக்கள் மனதில் 
நீ
நீமட்டுந்தானே
நீயே மட்டும் தானே!

இராசாதி இராச
காமராசரே!

ஆக்கம் 
ஆளுமைச்சுடர் கவிஞர் 
முனைவர் 
அரங்க சக்திவேல்
வணிகவியல் துறை
திரு கொளஞ்சியப்பர்
அரசு கலைக் கல்லூரி விருத்தாசலம் .

***********************************************

018..

எளிமையின் நாயகன்...!

விருதுநகரில் பிறந்த எங்கள் விருட்சமே..!//
கல்வி கண் திறந்த காமராஜரே..!//
மதிய உணவு திட்டத்தை அறிமுக..!//
படுத்தி பிஞ்சு மழலைகளின் இதயத்தில்..!//
நீங்கா இடம் பிடித்த கர்மவீரர்ரே..!//
உன் அன்பை கொண்டு அணை..!//
கட்டுக்களை கட்டி எங்கள் மக்களை..!//
உன் வசம் படுத்தினாய் என்றும்..!//
 தன் செலவுகளை குறைத்து கொண்டு..!//
மக்கள் நலனுக்காக செலவு செய்தார்..!//
புகழுரைகளை விரும்பாத ஒரே தலைவர்..!//
படிக்காத மேதை என்று அன்பாய்..!//
அழைக்கபடுவாய் மக்களிடத்தில் உனக்கு வெற்றியும்..!//
தோல்வியும் ஒரே சமாக பார்க்கும்..!//
ஒரே தலைவர் மக்கள் செல்வன்..!//
காமராஜர் மட்டுமே வெள்ளை உடையே..!//
உன் அடையமாகி போனது உன்..!//
சொல்லே வேதம் ஆகி விட்டது..!//
என் மக்களுக்கு எளிமையின் அடையமாகி..!//
மாறி விட்டனர் உன் செயல்கள்..!//

கவிஞர் ஜெ. உ . தரணி ஜெகதீசன்,
கொடுவாய்.

*********************************************

019.

கர்ம வீரர் காமராசர்

படித்தவர் அனைவரும்
                  அறிஞரானதில்லை
படிக்காதவர் யாவரும்
                 புரியாதவரில்லை
படிக்காத மாமேதையவர்..
                             - பாமரரை
படிக்க வைத்த பெருந்
             - தலைவர் காமராசர்.!

அவரால் படித்தவர்கள் 
                   ஆட்சியாளர்களாக
அமைச்சராக பொறியாளராக
                         மருத்துவராக
அரசின் அதிகாரிகளாக 
            தகுதி பெற்றார்கள்.

படிப்பும் பட்டமும் அரசதிகாரமும்
பாராட்டும் எங்களுக்கே 
                     சொந்தமென..
ஒரு சாரர்கள் ஆதிக்க 
                  நிலையை மாற்றி
எல்லோருக்கும் உரிமை 
             உண்டென வகுத்த...
வல்லோன் கல்வித் திலகம்
                             காமராசர்.!

இந்திய காங்கிரசு தலைமையின்
                            பாயும் புலி
இந்தியப் பிரதமரை வழி
             நடத்திய கரும்புலி
இந்திப் பேயை விரட்டிய 
                     அமைதிப் புலி
விந்தைகள் பல தமிழகத்தில்
                நடத்திய அம்புலி.

தமிழர் நலன் காக்க 
            தொழிற்சாலைகள் பல
தமிழ்நாடு வளம் செழிக்க
           அணைக்கட்டுகள் பல
தன்னலம் பாராது 
            தொண்டுள்ளம் கொண்ட
தமிழகத்தின் முதன்மை    
                       முதலமைச்சர்.

இறந்த போது சட்டைப் பையில்
                     சில்லரை நோட்டு
சென்ற போது வெறுங்கை
   நீட்டிய தென்னக அலெக்சாண்டர்.
வாழ்ந்த வீடும் அவருக்கு
                   சொந்தமில்லை
வாகனத்தை கட்சிக் காரர்கள்
          எடுத்துக் கொண்டார்கள்.

விருதுநகர் கண்டெடுத்த  
                    கருப்பு வைரம் .!
விருதுகள் யாவும் உமக்கே
                          பொருந்தும்.!
திருமகனே.! நீ பறந்து
              சென்றாலும் - உன்
திருப் புகழை வரலாற்று 
            ஏடுகள் புகழ் பாடும்.!

கலைநன்மணி/கவிஞர்
அ.சை. தஸ்தகீர்.
திருச்சி.

***********************************************

020.

கருணை கடவுள் காமராஜர்

"நீங்கள் இட்ட ஆணைக்கு
கல்லும் மண்ணும் மட்டுமல்ல
உன் கருணையும் சேர்த்து
எழுந்தது பல அணை
அதற்கு இல்லை இணை
பலர் வாழ்விற்கு அதுவே துணை

உம் கல்வி சிறுதுளியாயினும்
பலர் கல்வி பெருவெள்ளமாய்
பெருகியது உன் கையெழுத்தாள் 

உணவில் சிறந்தது சத்துணவானது
பள்ளியில் பாடத்தோடு பசிக்கும்
நீங்கள் வழிவகுத்த நாள்முதல்

உங்கள் பெயருக்கு பின்னால்
பட்டம் இல்லை எனினும்
பட்டம் பெரும் அனைவரும்
உங்களை பாடமாய் பயில்கின்றனர்

நீங்கள் ஆண்ட காலங்கள்
பல ஆண்டு கடந்தாயிற்று
இன்றும் நீண்டு நிற்கிறது
மக்களின் மனதில் மறையாமல்

ரா.வஞ்சித்குமார்   B.Tech,
கோவில் பாளையம் புதூர்,
திருப்பூர்.

************************************************

021.

கர்ம வீரர்  காமராசர்.....

விருதுநகரில் விதையாக விழுந்த முத்தே

விருதுநகரே வியக்கும் வண்ணம் செய்தாயே

தன்தாயால் காமாட்சி என்ற  பெயரை

தாயார் ராசா என்று அழைக்க காமராசு என்றானதே

சிறந்த பேச்சாளர் சத்தியமூர்த்தியை தன்

சிறந்த அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டவரே

எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவரே

எளிய மக்களை சந்தித்த முதல்வரே

பள்ளி குழந்தைகளை பள்ளிக்கு வர

 இலவச மதிய உணவுத் திட்டத்தை  தொடங்கியவரே

தமிழ்நாடு கண்டெடுத்த கிங் மேக்கரே 
 தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபட்ட வரே
 விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்றவரே
 விவசாயத்திற்காக நீர் பாசன திட்டத்தை அறிமுகம் செய்தவரே
 தமிழகத்தின் மூன்று முறை முதலமைச்சரே
 வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் வாழ்ந்த வரே
 படிக்காத மேதை என்ற புகழுக்கு  சொந்தக்காரரே

ப.பஞ்சாபகேசன் முதுகலை ஆசிரியர்
அரசு மேல் நிலைப்பள்ளி பொன்பரப்பி
அரியலூர் மாவட்டம்.

**********************************************

022.

கர்மவீரர் காமராஜர் ஐயாவுக்கு

என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். தமிழ்நாட்டின் கல்வித் தந்தை கர்ம வீரர் காமராஜ் அவர்கள்

விருதுநகரில் வேர் விட்ட விருச்சகம்.

நல்ல ஆட்சி தந்த நீ மனிதரில் உச்சம். திருமதி சிவகாமி அம்மையார் திரு குமாரசாமி நாடாரின் அன்பு மகனாக ஜூலை 15ஆம் தேதி 1903 ஆம் ஆண்டு பிறந்தவர்.

எளிமைக்கு நீ ஒரு எடுத்துக்காட்டு.

நம் தமிழ் நாட்டுக்கு மக்கள்தான் உன் உயிர் மூச்சு.

தன்னை மறந்து பிறரை நினைத்து தன் வீட்டையும் மறந்து நாட்டுக்காக வாழ்ந்தவர் .

பயிர்கள் விளைந்தால் உயிர்கள் வாழும் என்பதால் பசுமை செழிக்க பல திட்டங்கள் செய்தவர்.

பல பேரறிவு கொண்ட மாணவர்கள் மனதில் நம்பிக்கை நாயகனாய் இவர் முகம் மட்டுமே.

மனிதாபிமானம் கொண்ட தென்னாட்டு காந்தி இவர் .

கதர் ஆடை அணிந்த கல்வியின் தந்தை. மக்கள் வளர்ச்சியை மனதில் கொண்டவர். மணவாழ்க்கை கூட இல்லாமல் மக்களுக்காகவே வாழ்ந்தவர்.

நேர்மை இவரது அடையாளம் எளிமை அவரது அவதாரம்.

சட்டம் கையில் இருந்த போதும் அவர் சட்டைப்பை கூட நிரம்ப வில்லை. கோடிகளில் புரளவில்லை.

பல நாடுகளில் சுற்றவில்லை. அதனால் தானோ இவர் இன்றளவும் போற்றப்படுகிறார்.

ஏழை என இருந்தவனையும் ஏடு எடுத்து படிக்க வைத்தவர்.

பசியையும் தீர்த்து வைத்தவர். கல்விக்கண் திறந்து வைத்த படிக்காத கருப்பு காந்தியவர்.

ஆண்டவனே வந்தாலும் உன் போல் ஆள முடியுமா? தெரியவில்லையே மாண்டவனே உம்மை எழுப்பி மீண்டும் ஆள சொல்ல வழி இல்லையே.

இவ்வுலகம் இருக்கும் வரை ஐயா உன் உருவம் நிலைத்திருக்கும்.

நீர் போட்ட கல்வி பிச்சையில் தானையா என் இனமே பிழைத்திருக்கும்.

கல்வி கடவுளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அப்பச்சியை வணங்கி மகிழ்கிறேன்.

டாக்டர் ஃப்ரீ டா தூத்துக்குடி

*********************************************

023.

காமராஜரின்  கல்விப்பணி....

காமராஜர் படிக்காத மேதை என்ற பட்டத்தை பெற்று, 
பல குழந்தைகளின் படிப்பிற்கு காரணமாக இருந்தார்.
ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி திட்டத்தை கொண்டுவந்தார்.
குழந்தைகளுக்கு
பள்ளிக்கூடங்களை நிறுவினார்.
குழந்தைகள் பசியின்றி படிக்க
சத்துணவு திட்டத்தை அமைத்தார்.
உழைப்பால் உயர்ந்த வல்லவர்
இவரே!
ஊருக்கு
உழைத்த உத்தமர் இவரே!
நாட்டிற்காக 
வாழ்ந்த நல்லவர்
இவரே!
முதல்வர் பதவி வகித்தவர்
மதிய உணவு தந்தவர்
கல்விக்கண் திறந்தவர்
நம் கர்மவீரர் காமராஜர்.

ஜீ. தேன்மொழி
திருச்சி.

**************************************************

024.

*மகிழ்ச்சி fm நடத்தும்* *கவிதை* *தலைப்பு* 

 *கர்மவீரர் காமராசர்* 

விருதுநகரில் பிறந்தவராம்
விடுதலைக்காக 
உழைத்தவராம்//

 கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர்//

 தனக்கென வாழா பிறருக்கென வாழ்பவர்//

 கருணை மனம் கொண்ட கார்மேக வள்ளல்//

அணைகள் தந்த அணையா விளக்கு//

 அரசியல் உலகின் அற்புத மனிதர்//

 விடுதலைப் போரின் வியத்தகு வீரன்//

 மனை இன்பம் மறந்து மக்கள் சுகத்திற்கு//
 தன்னையேஅர்ப்பணித்ததனிப்பெரும்தலைவர் //

செயல் வீரர் ஏழைப் பங்காளர்கிங்மேக்கர்

 படிக்காத மேதை பார் போற்றும் தலைவர்//

 மதிய உணவு திட்டம் கொணர்ந்த மகான்//

 இலவச கல்வி தந்த தியாக தீபம் //

 வேலையில்லா திண்டாட்டத்தைப் போக்க//

 தொழிற்சாலைகளை தொடங்கியமுதல்வர்/

 இந்திரா காந்தி லால்பகதூர் சாஸ்திரி இரு பிரதமர்களை உருவாக்கியதலைவர்

 சத்தியமூர்த்தி வழி நின்று சாதித்தவர்//

 இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்திய தலைவர்//

 ஏழை எளிய மக்களின் அறியாமை 
இருளைஅகற்றியவர்/

சிறந்த தேசபக்தியும் கடமை உணர்வும்//

 கொண்ட பெரும் தலைவர் காமராசர்//

 நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமைஆசிரியர் ந.மலர்க்கொடி, பெரம்பலூர்.

*************************************************

025.  

           தலைவர்களின் தலைவர்!     

சிவகாமியின் செல்வனாய் சீரும் சிறப்புமாய் உதித்தவரே!

குமாரசாமியின் குமாரராய் குவலயத்தில் குடிபுகுந்தவரே!

விருதுநகரில் பிறந்து விருதுகள் பெற்றுச் சிறந்தவரே!

தென்னாட்டுக் காந்தியென்று இந்நாட்டில் இருந்தவரே!

பெருந்தலைவர் எனப்பட்ட பெருமைக்கு உரியவரே!

கர்மவீரராய் அடையாளப்பட்ட கனிவான செயல்வீரரே!

மதிய உணவுத் திட்டத்தை மகிழ்வுடன் கொண்டு வந்தவரே!

ஒன்பதாண்டு முதல்வராக, என்பதாண்டுக்குச் சாதித்தவரே!

எளிமைக்கும் நேர்மைக்கும் இனியதாய் பேர் பெற்றவரே!

படிக்காதமேதையென்று பாரெங்கும் போற்றத் திகழ்ந்தவரே!

தப்பைத் தட்டிக்கேட்க உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்தவரே!

எட்டுபேர் அமைச்சரவையில் எட்டா உயரம் தொட்டவரே!

மூன்றுமுறை முதலமைச்சராகி, முத்தாய்ப்பாய் ஆண்டவரே!

நீர்ப்பாசனத் திட்டங்களால் நீண்டகால நன்மை செய்தவரே!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தால் நெஞ்சத்தில் நின்றவரே!

பாரத மிகுமின் நிறுவனத்தால் வாழ்வில் ஒளியேற்றியவரே!

ஓய்வூதியத் திட்டம் தீட்டி, உள்ளத்தில் உவகை ஊட்டியவரே!

வெள்ளை ஆடைகள் உடுத்தும் வெள்ளைமனம் கொண்டவரே!

ஓயாத உழைப்பால், தமிழ்நாட்டை அண்ணாந்து பார்க்க வைத்தவரே!

ராஜாவாக இருந்து, பல ராஜாக்களைச் சிம்மாசனத்தில் அமர்த்தியவரே! 

குலக்கல்வியை ஒழித்து, உலகத்தாரை உன்னதமாய் பேச வைத்தவரே!

ஊழலில்லாமல் ஊக்கத்துடன் ஆட்சி செய்த உயர்வான தலைவரே!

நம் மண்ணை மாசில்லாமல் மாட்சிமையாய் காத்த மணிமகுடமே! 

உம்மைப் போன்றதொரு உத்தமத் தலைவரை என்று இனி காண்போம்?

- டி.என்.இமாஜான், சிங்கப்பூர்.

**************************************************

026.

பொற்கால ஆட்சியின் முதல்வன் காமராஜர்... 

தமிழன்னையின் தவப்புதல்வனாய்
தரணியிலே அவதரித்தவர்
பட்டித்தொட்டி எங்கும் 
பள்ளிகளைத் திறந்து
ஏழைகளின் வாழ்வினில் 
கல்வி எனும் ஒளியேற்றி
அறியாமை இருள் அகற்றியவர்... 

தண்ணீரின் தேவையறிந்து
அணைகள் பல கட்டியவர்
பசியின்றி பாடம் கற்றிடவே
மதிய உணவளித்த வள்ளல் அவர்.. 
மனிதநேயம் போற்றும் மாமனிதர்
நானிலம் போற்றும் நல்லவர் அவர்.. 

சமத்துவம் போற்றியதால் பெருந்தலைவர் ஆனவர்
சட்டங்கள் கற்று பட்டங்கள் பல பெறவில்லை அவர்
மக்களுக்காய் நலதிட்டங்கள் பல உருவாக்கிட்ட உத்தமர் அவர்... 

காலத்தை வென்ற கர்மவீரர்
எளிமையின் இலக்கணம் அவர்
தமிழகத்தை தலைநிமிர்த்துவதற்காக
தன்னலமின்றி போராடியவர்...
பற்பல தலைவர்களை உருவாக்கிய கிங்மேக்கர்...
அவரின் பொற்கால ஆட்சியே
பிற்கால ஆட்சிக்கு முன்மாதிரி.. 
தொழில்துறையில் பல புரட்சிகள் செய்தவர்.. 

சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டியவர்
கலங்கரைவிளக்கின் அறிவுச்சுடராய்
ஆட்சி செய்திட்ட அகிலத்தின் தலைவரவர்.. 
பார் போற்றும் கல்வியை பாமரனுக்கு வழங்கிய படிக்காத பாரதி
பள்ளிச்சீருடை திட்டத்தால் ஏற்றத்தாழ்வுகள் கலைந்த சமதர்மவாதி
முதியோர் கல்விக்காய்
இரவுப் பாடசாலைகளை திறந்த சாமார்த்தியவாதி...

பச்சைத் தமிழனென ஈரோட்டு தந்தையால் பாரட்டப்பட்ட சத்தியவான்
கல்விக்கண் திறந்ததாலே
கல்வி வளர்ச்சி நாளாய் கொண்டாடி மகிழ்கின்றோம்
உமது பிறந்த நாளை... 
விருதுநகர் வார்த்தெடுத்த தென்னகத்தின் காந்தியாம்
காமராஜரின் வழி நடப்போம்.. 
காலமெல்லாம் அவர் புகழ் பாடுவோம்.. 

கவிஞர் சசிகலா திருமால்
கும்பகோணம்.

***********************************************

027.

கல்விக்கண் திறந்த கர்மவீரர் ...

விருதுநகரில் பிறந்திட்ட வீரன்..
வியக்கவைத்த விந்தை..
படிக்காத மேதை
கல்வி கண் திறந்த கர்ம வீரர் 
தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட
தன்னலமில்லா தலைவர்
பட்டம் வாங்காமல் உலகை
பகுத்தறிந்த பட்டதாரி ....
ஒன்பது ஆண்டுகள் 
அரசாண்ட பச்சைத் தமிழன்...

களத்து மேட்டில் கிடந்தவனை
கல்வி கற்க வைத்தவர்
ஆடு மாடு மேய்த்தவனை
ஏடெடுக்க வைத்தவர்
கல்வி எனும் செல்வம் தன்னை
தமிழ்ச் சந்ததிக்கு தந்தவர்
மதிய உணவுத் திட்டத்தினை
உலகினுக்கே ஈந்தவர்...

தமிழகத்தை ஆட்சி செய்து
அதை பொற்காலமாய் மாற்றியவர்
வரலாற்றுப் பக்கங்களில் மறத்தமிழனாய்
வாகை சூடி நிற்பவர் ...
பல ஆயிரம் பள்ளிகளை பகிர்ந்த பகுத்தறிவுப் பகலவன் அவர்
எளிமையின் ஏகாந்தத் தலைவர்..

அணைகள் பல கட்டி 
அகிலத்தை அசரவைத்தவர்...
பாமரனின் பங்காளன் அவர்
உண்மையின் உறைவிடம் அவர்.. 
புவி உள்ளளவும் புகழ் மங்கா 
புதையல் அவர்...
தர்ம வீரர் இவர்
கர்ம வீரர் இவர்.. 
என்றென்றும் வான்நோக்கி வாழட்டும்
கல்விக்கண் திறந்திட்ட 
கர்மவீரரின் புகழ்... 

கோ. ஶ்ரீஆதேஷ்
கும்பகோணம்.

*************************************************

028.

தென்னாட்டு காந்தி... 

தர்மத்தின் தலைவனாக தரணியிலே உதித்தவராம்
அழகு தமிழிலே இவரது பேச்சாம் சமத்துவம் என்பதே இவரது மூச்சாம்…
அணைகள் பல கட்டி நீரைத் தேக்கியே விவசாயம் காத்தவராம்
விவசாயம் செழிக்க மின்சாரமும் கொடுத்தவராம்.. 

தனக்கென வாழாததால் 
பெருந்தலைவர் எனும் பெயரும் பெற்றாராம்… 
கல்லாமை என்பதை இல்லாமல் செய்தவராம்
மனிதாபிமானம் கொண்ட 
தென்னாட்டு காந்தியாம்...
கதராடை அணிந்த கல்வியின் தந்தையாம்... 

இளமையிலிருந்தே எளிமையாக வாழ்ந்தவராம்
தான் கொண்ட கொள்கைக்காக உழைத்தவராம்
உழைப்பால் உயர்ந்த உத்தமராம் ஊருக்கு உழைத்த நல்லவராம்.. 
பண்பாக வாழ்ந்தே
பல இதயங்களை தொட்டவராம்
அவர் தான்
காமராஜர் எனும் நம் கர்மவீரராம்... 

கோ.ஶ்ரீஅஹிலேஷ்
கும்பகோணம்.

************************************************

029.

காமராசருக்கு கவி மாலை!!

 பாமரனுக்கு கல்வி கொடுக்க பள்ளிகள் அமைத்தவரே//

 படிக்க வரும் மாணவர்களுக்கு பசிப்பிணி போக்க மதிய உணவு வழங்கியவரே//

நீர் வளம் பெருக்க நிலவளம் காக்க அணைகள் கட்டியவரே//

 தொழில் வளம் பெருக தொழிற்சாலைகள் அமைத்தவரே//

 அதிகமானவர் கல்வி பெற காலை, மாலை கல்லூரி கொடுத்தவரே//

 பருத்தி ஆடையின் முக்கியம் உணர்த்திய கதர் ஆடை காவியரே//

 பணமதிப்பை அறிந்து கொள்ள சிக்கன வாழ்வை வாழ்ந்து காட்டியவரே//

 சுயநலம் இன்றி பொதுநலம் போதித்த புரட்சியாளரே//

 சுதந்திர இந்தியாவின் முதல் பொற்கால ஆட்சி வழங்கியவரே//

 சிந்தனைச் செம்மலாய் செயல்பட்ட வித்தகரே//

 நாடாள  நல்லோரை தேர்வு செய்த தேச சிற்பியே//

உன் புகழ் முத்திரையாய் முழு நிலவாய்//

 இத்திரை மீது மோகனமாய் வாழும்//

 அதில் பொய்மை இல்லையே!!

ரா.சாந்தி
ஆசிரியர்,
தாராபுரம்,
திருப்பூர் மாவட்டம்.

************************************************

030.

கர்ம வீரர் காமராஜர் கவிதை போட்டி.

கர்மம் செய்யத் தோன்றிய அட்சய பாத்திரம்.

மடிகனக்காது சுரந்த காருண்யப் பசு.

ஞானத்தின் வாசலில் பூத்த கல்விச் சோலை.

உயரத்திற்கு ஏற்ப விளைந்த வாய்மை.

விருதுநகரில் சுரந்த ஊற்று.

நல்லுருக்கள் பல உருவாக்கிய கரு.

விந்தை நாதனாய் வியனுலகில் வந்த பரிசு.

படிக்காத மேதையாய் பாருக்கு ஒளிதந்த சுடர்.

ஏழைக் கப்பல்களுக்காய் வந்த கலங்கரை விளக்கம்.

நீரைத் தேக்கி பாரை உயர்த்த வந்த பரம்பொருள்.

நாடாமல் வந்து
 நாடாளுகின்ற எம் குணக்குன்று.

வாரிசும் இல்லாமல் சிபாரிசும் இல்லாமல்
வாழும் வரலாறு.

இனிவரும் வையமும் இனிமேலும் காணாத கருப்பு வைரம்.

கண்ணுக்கு கண்ணாக வந்து காலக்கொடுமையினால் காலாவதியான 
கலாமின் 
முதல் ஆன்மா.

கவிஞர்.அ.எபநேசர் அருள் ராஜன்.
புளியங்குடி.

**************************************************

031.

"கல்வி வளர்ச்சி நாயகனே! சிந்தனைச் சிற்பியே!"

அன்பும், பண்பும் நிறைந்தவரே!
அணைகள் பல தந்தவரே!
ஆளுமை நிறைந்த ஆசானே!
இளைஞர்களின் இதயத்தில் என்றும் 
இமயமாய் உயர்ந்து 
நிற்பவரே!
ஈகைக் குணம் நிறைந்தவரே!
உலகம் போற்றும் உத்தமரே!
ஊர்,நகரம்,நாடு கல்வி கற்கக் கல்விச்சாலைகள் 
அமைத்தவரே!
எண்ணத்திற்கு செயல்வடிவம் தந்து,
மதிய உணவுத்திட்டத்தை அமல்படுத்தியவரே!
ஏற்றமிகு இந்தியாவில் 
பல்துறைப் பெருகி,
ஏழைகளின் கனவு நாயகனாய் வலம் வந்தவரே!
ஐம்பொறிகளையும் பயன்படுத்தி,அயராது 
உழைத்த மூத்த முதலமைச்சரே!
ஒப்பில்லா வாழ்வை 
எளிமையாய் வாழ்ந்து 
காட்டியவரே!
ஓர்குலமாய் மக்களை 
அரவணைத்தக் காவலரே!
ஔடதம் நீக்கி,ஆரோக்கியமாய் 
வாழ்ந்து,இப்பூவுலகை
விட்டு மறைந்தவரே!
கர்மவீரரே காமராஜரே!
கருப்புத் தங்கமே!
கிங் மேக்கரே! படிக்காத மேதையல்ல நீவீர்!
படித்தவர்களுக்கு
எல்லாம் படித்த மேதையாய்த் திகழ்பவரே!
உங்களது 121-வது அகவையில் கவி புனைய வாய்ப்புக் கிடைத்தது நான் கற்றக் 
கல்விக்குப் பெருமை. 
அனைவருக்கும் என் 
சிரம்தாழ்ந்த நன்றிகள்.

கவிஞர்.முனைவர்.
ச.மீனாட்சி,ப.ஆ.,
தாரமங்கலம், சேலம்.
636502.

*************************************************

032. காமராஜர் 

  அன்பின் வழிநின்று அறத்தை உலகிற்கு ஈந்த பேராளுமை பதித்த தடம் யாவும் மானுடத்தின் வளர்ச்சிக்கே..                                          அவைகண்ட போதிலும் எளிமையின் எழிலாய் சமத்துவத்தின் குறி கொண்டு பசியகற்றி கல்விக்குக் கரை அமைத்த கர்மவீரன்..

அமைதியின் விழிகாட்டி ஆளுமையில் புன்னகைக்கும் செஞ்சுடரின் ஒளியாய், எளியோரின் நலம் காத்து கல்விநலம் புகட்டும் விந்தையன்..

ஆழிகடல் போலும் அகன்ற நல்மனத்துள் ஓய்வறியாது உதிக்கும் நற்குடிகளுக்கு அளிக்கும் திட்டங்கள் என மாற்றோர் புகழ, என்னே செய்தேன்..

கடமைக்குப் புகழாரம் செய்வதொழிக என விடுக்கும் தன்னடக்கத் திருமகனே..

நின்னை அல்லால் எந்தனுக்குப் பெருந்தலைவர் யாரோ!

முனைவர் ந.அரவிந்த்குமார்.. கோவை.

*********************************************

033.

கருணையே வடிவான காமராஜர்...!

கண்ணே!
நீ உறங்கு!
கனியே!
நீ உறங்கு.
கர்மவீரர்
நம்ம காமராசர் கதை
பொன்னே! நீயும்
அதைப் போற்றி
நீ உறங்கு.

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

விருதுநகர் உதித்த
வீரர் அவரல்லவா
மதிய உணவுத்திட்டம்
வகுத்தார்
சிறப்பல்லவா
அனுபவக் களஞ்சியம் தான்
அதிலே மாற்றமில்லை
கொள்கையை
மாற்றிக் கொண்டு
கூட்டணி
அமைத்ததில்லை.

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

அரசைக் குடும்பச்
சொத்தாய்
ஆக்கும்
மிருகமில்லை.
விலைகள் போகும்
வெட்கங்கெட்ட
மனிதரில்லை.
ஏழையின் பால்
இரக்கம்
எண்ணம்
அவரும் கண்டார்
"கோழையாய்
வாழாதே" கூறும்
பழக்கம் கொண்டார்.

ஆராரோ ஆரிரரோ
ஆரிரோ ஆராரோ.

ஒப்பனை செய்யாத
உயரிய தலைவர் அவர்

பொய் மழை
பொழியாத
புண்ணிய முதல்வர் அவர்.

அவசர முடிவு
எடுக்கும்
தலைக்கனம்
கொண்டதில்லை

அரசியல் வானில்
அவர்க்கு
ஈடு,இணை
யாருமில்லை.

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ

கவிஞர்
ந.ஆறுமுகம்
ஏம்பலம், புதுச்சேரி.
***********************************************

034.

மணிமகுடம்

விருதுப்பட்டியின் விருதாய் வந்த பேசும் 
மலரே கர்மமே கண்ணாக வாழ்ந்த 
வீரனே வாய்ச் சொல்லில் காட்டாமல்
செயல் ஆக்கம் புரிந்த தமிழகத்து
நாயகனே சிவகாமி பெற்ற நல்முத்தே
முடிசூட வாய்ப்புக்கள் பல உனைத் 
தேடி வந்தபோதிலும் அவைகளை நீ 
ஏற்காமல் பிறரை ஏற்றிவைத்து ரசித்த
முதல் தலைவன் நீ  பள்ளிகளில் 
மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தி
மாணவச் செல்வங்களின் பசி போக்கிய
வள்ளலே! உன் கை உயர்ந்ததால் 
தமிழகத்தில் நல்லாட்சி மலர்ந்திட பாரெங்கும்
வியக்குது இன்றும் மேதை உன் 
செங்கோல் ஆட்சித் திறன் கண்டு!!
தெற்கில் உதித்தாலும் உலகெங்கும் அறிந்து
வியந்த மணிமகுடமே பாரதத்தின் ரத்தினமே......

முனைவர். 
ப்ரியா நாகராஜன்.

*************************************************

035.

காமராசர்

காட்டு மேட்டில் ஆநிரை மேய்ப்பவனும்//

கல்வி கற்று ஏற்றம் பெற//

பல கல்வி நிலையங்களை திறந்தவர்//

அறியாமை இருளை அகற்றியவர்//

பசியில் பிள்ளைகள் படிக்காமல் நின்றுவிடாமலிருக்க//

மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தியவர்//

விவசாயம் செழித்து உணவு உற்பத்தியை பெருக்க//

பல அணைகளை உருவாக்கியவர்//

தொழில்துறை மாநிலமாக தமிழகத்தை மாற்ற//

பல தொழிற்சாலைகளை திறந்தவர்//

ஏழைகளின் வாழ்வை ஏற்றிவிடும் தீபமாய்//

ஏழைப் பங்காளனாய் திகழ்ந்தவர்//

கதராடை உடுத்திய கருப்பு காந்தி//

தனக்கென ஏதும் சேர்த்து வைக்காத //

தன்னலமற்ற தாயுள்ளம் கொண்ட முதலமைச்சர்//

பொதுநலமாய் சிந்தித்தே தமிழகம் ஆண்ட//

தன்னிகரில்லா தனித்துவமான தனிப்பெரும் தலைவர்//

அவர் தான் கல்விக்கண் திறந்த காமராசர்//


சி. சங்கீதா
கிருஷ்ணகிரி.

*************************************************

036.

தென்னாட்டு காந்தி காமராஜர்!


சிவகாமி குமாரசாமி குல வாரிசாய்
விருதுநகரில் பிறந்திட்ட சீமை புத்திரரே!
விட்டு கொடுத்தல் அமைதி பேசும் பண்பு விடாது குணமாய்க் கொண்ட பண்பாளரே!
இராஜாஜிதலைமையில் உப்பு சத்தியாகிரக...
போராட்டம் புரிந்த போர் வீரனே!
சிறையில் இருந்து தமிழக தேர்தலில்...
போட்டி இட்டு சிகரம் தொட்ட...
விருதுநகர் நகரத்தின் நகராட்சி தலைவராய்..
வெற்றி பெற்ற மாபெரும் கர்மவீரரே!
ஒன்பதாண்டுகள் மக்கள் நலன் கருதி
ஓயாமல் சிறை சென்ற சிங்கமே!
மக்களின் வாக்கெடுப்பில் வென்று நின்று
முதல் முறை தமிழக முதல்வராய்...
மும்முறை ஆட்சி செய்த முதல்வனே!
மதிய உணவு திட்டம் தொடங்கி..
ஏழை மாணவரின் பசி போக்கி..
குல கல்வி திட்டத்தை கைவிட்டு...
கல்வி கற்க உதவிய மாமேதையே!
நெய்வேலி நிலக்கரி திட்டம் வகுத்தவரே!
சேலம் இரும்புருக்கு ஆலை நிறுவியவரே!
மேட்டூர் காகித தொழிற்சாலை அளித்தவரே!
கல்பாக்கம் அணு மின் நிலையம் தந்தவரே!
மேட்டூர் கால்வாய் திட்டம் பவானி திட்டம்...
டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்
அணைக்கட்டுகள் பல உருவாக்கிய வீரரே!
மணிமுத்தாறு அமராவதி வைகை சாத்தனூர் மகத்தான நீர்ப்பாசன வசதி கொடுத்தவரே!
எளிமையின்மறு முகம் காட்டி...
எளியவர் மனதின் தென்னாட்டு காந்தி!
வங்கி கணக்கு நிதி உயராமல்...
வாழ்ந்த கல்விக்கண் காமராஜரே!
வாழ்க என்றும் நினைவில் கோமகனாய்...!!
         -  ‌‌ கே. நஜீமா ஜமான் ,
                     சவூதி அரேபியா.
**********************************************

37.

விருதுநகரின் வீரனே!
வியக்க வைத்த விந்தையே!

படிக்காத மேதையே!
பல ஆயிரம் பள்ளிகளை
பகிர்ந்த பகுத்தறிவு பகலவனே!

பொறுமையின் சிகரமே!
எளிமையின் ஏகாந்த தலைவனே
ஏழைகளின் துணைவனே!

மாற்றத்தை கண்டோம் உன்னால்!
மதிய உணவளித்த மனிதநேயமே!

மக்களின் துயர் துடைத்த மகானே!
கரை வேட்டி கட்டிய போதும்
கறை படியாத கைகளை உடையவரே!

கருப்பு காந்தியே! கண்ணியமானவரே!
வெண்ணிற ஆடை அணிந்தவரே!

அணைகள் பல கட்டி அகிலத்தை
அசர வைத்த அதிசயமே!

நீர்ப்பாசன திட்டத்தின் துவக்கமே!

தென்னகத்து தென்றலே!
உழைப்பால் உயர்ந்தவரே! உத்தமவீரரே!

உன்னால் வடக்கிலும் வெற்றிகள்  குவிந்தனவே!
 தொழிற்சாலைகள் பல தந்த தொழிலாளியின் தொண்டனே!

பாரத ரத்னாவே!
புவி உள்ளளவும் !புகழ் மங்காதவரே!
உண்மை நாங்கள் வணங்குகிறோம்!

பெ. சித்ரா இளஞ்செழியன்
பள்ளி முதல்வர் ஓஎப்டி 
 திருச்சி 16.

**************************************************

038

விருது பட்டியின் கருப்பு நிலா

காதில் மணக்கும் செந்தமிழ் உமது பெயரப்பா

காலம் போற்றும் கடமை கண்ணிய வாதியப்பா

தமிழக மண்ணின் பெருமையை உலகில் பறை சாற்றியவர்

தன்னலமில்லா பிறர்க்கு என வாழ்ந்த பெருந் தலைவரவர்

ஆயுதப் புரட்சியாலல்ல அறிவு புரட்சியூட்டிட

பட்டி தொட்டியெல்லாம் பள்ளிகளை நிறுவியவர்

நாட்டின் உயர்வே தம்
உயர்வாய்

உயிராய் மூச்சாய்  வாழ்வில் கொண்டிருந்தார்

பண்பால் நாட்டையே கவர்ந்திழுத்தே

பணிகள் பலவற்றை நிறைவேற்றினார்

துணிவாய் பற்பல தொழிற்சாலைகள்

பலரின் துயரை துடைக்கவே நிறுவினார்

கறை படாத கைகளினால் கடமைகள் கருத்தாய் செய்தாரே

தனக்கென எச்சொத்தும் சேர்க்காமல்

பிறர்க்கென இறுதிவரை உழைத்த பெருந்தகையாளர்

உழவு தொழிலது செழிக்கவே

பல பாசன அணைகள் கட்டியவர்

வறுமையின் பிடியில் இருந்தாலும்

பிறர் வறுமை போக்கிட பாடுபட்டார்

பள்ளிப் பிள்ளை பசியறிந்து

தினம் மதிய உணவை வழங்கிட ஆணையிட்டார்

துயரம் நீக்குவதில் தன்னிகரற்று

தன் உயரமளவிற்கு மேல் குணத்தால் உயர்ந்தாரே

நாட்டை வளமாக்க நினைத்திடவே

இருண்ட  சிறைக்குள் வாசம் செய்தாரே

தரித்திரப் பிடியில்  நாளும் வாழ்ந்தாலும்

சரித்திரம் போற்ற கடமை செய்து யர்ந்தாரே

கவிஞர். செ.கிரேஸ் பரிமளா லால்குடி.

*************************************************

039

கர்ம வீரர் காமராசர்

தான் செய்யும் அனைத்து கர்ம

வினைகளிலும் ‌வீரத்தையும் விவேகத்தையும் கொண்டவரல்லவா

இளம் வயதில் தந்தையை இழந்தாலும்

இன்று‌ தமிழக புதல்வர்களை பெறாமலேயே

தந்தையாக செயலாற்றி தீரா நோயான

பசியினைப் போக்க மதிய உணவு 

திட்டத்தை வழங்கி சென்றதுடன் ‌இல்லாமல்

நாட்டின் கல்வி முன்னேற்றத்திற்கு அயராத‌ 

உன் உழைப்பையும் தந்து சென்றாயே

சுதந்திர போராட்டத்தில் தன்னை இணைத்துக்

கொண்டு வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் 

அறிந்து நாட்டுக்காக சிறைக்கும் செல்ல

துணிந்து அந்நியரால் காயப்பட்டும் சகித்து

கொண்டு பின் வெளியே வந்தும்கூட

நாட்டின் நலனே தன்னலன் என

உணர்ந்து மீண்டும் போராட்டத்தில் இணைந்தாயே

முதல்வராக பதவியேற்றப்பின் மூடப்பட்ட பள்ளிகளை

திறந்ததோடு இல்லாமல் மக்களின் கல்வி

சதவீதத்தையும் பெருக்கினாயே எளிய ஆட்சி

என்றால் உன் ஆட்சி மட்டுமே!

-பா.கீர்த்தனா
திருப்பூர்.

***********************************************

040

என் தலைவன் காமராஜர் 

பார் புகழும் நாயகரே!
பாமர மக்களின் நண்பரே!
நாடு போற்றும் நாயகரே!
சிவகாமியின் மைந்தரே!
கல்விக்கண் திறந்தவரே!
கருணை உள்ளம் கொண்டவரே!
கறைபடியா கைகளுக்கு சொந்தக்காரரே!
எளிமையின் சிகரமே!

அஞ்சா நெஞ்சரே!
ஆற்றலின் ஊற்ரே"
இயற்கையை நேசிப்பவரே!
இன்னிசை நாயகனே!
ஈதலின் நாயகரே!
உள்ளம் கவர்ந்தவரே!
ஊறார் போற்ற வாழ்ந்தவரே!
எட்டு திக்கும் புகழ் உள்ளவரே!
ஏழைகளின் தோழரே!
ஐந்தினையும் தெரிந்தவரே! 
ஒயாத பாலகரே!
ஓய்வரியா சூரியனே!
ஒளவையாரின் மகத்துவம் புரிந்தவரே!!

விண்ணும் மண்ணும் புகழ் மணக்க வாழ்ந்தவரே!!
 உந்தன் புகழ் மணக்கும் எந்நாளும்!! 

பெயர் : சி. தேவிபிரியா
சாரா டக்கர் கல்லூரி திருநெல்வேலி.

**************************************************

041

பாதச்சுவடு

மண்ணுலகில் அவதரித்த மாமேதையே!

காமாட்சியாய் அறிமுகமாகி காமராசர் ஆனவரே!

ஆறு வயதில் தந்தையை இழந்தாய் ஆறாம் வகுப்பிற்கு

மேல் கல்வியை இழந்தாய் பொதுநலத்தில் சுயநலத்தை மறந்து வாழ்ந்தாய்!

நாட்டிற்காக ஒன்பது ஆண்டுகள் சிறையில் இருந்தாய் ..!

நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சராய் !

.முள் கிரீடம் சுமந்தாய் பிரபஞ்சத்தையே மாற்றி அமைத்த மாமன்னனே!

நீ ஆண்ட காலம் தமிழகத்தின் பொற்காலம் அல்லவா!

செய்ய முடியாது செய்யத் தெரியாது என்று கூறாமல் செய்து காட்டுவோம் என்று கூறியவர் நீர்! ஊதியத்தின் மதிப்பை விட உழைப்பின் மதிப்பு உயர்வானது என உணர்த்தியவர் நீர்!

சிந்தித்து திட்டமிட்டு செயல்படுத்துவதில் உமக்கு நிகர்...

நீரே எதுவெல்லாம் பயனுடையதாக இருக்குமோ...

எதுவெல்லாம் சமூகத்திற்கு பயன்படுமோ அவற்றை நோக்கியே ...

உன் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டாய்

அதைப் போற்றி உன் பாத சுவடுகளைத் தொடர்ந்து

உங்கள் நினைவால் தொடரும் எங்கள் பயணம் பாதைகள்

மாறினாலும் பயணங்கள் முடிவதில்லை....

முனைவர் சு. விஜயலட்சுமி,
அனவர்திகான் பேட்டை, ராணிப்பேட்டை மாவட்டம்.

**************************************************

042

கோடியில் ஒருவர்

குமாரசாமி சிவகாமி தம்பதியரின் தவப்புதல்வனே உலகம் போற்றும் உத்தமனே கோடியில் ஒருவனாய் விருதப்பட்டியில் பிறந்தாய் பட்டித்தொட்டி எல்லாம் புகழடைந்தாய் பச்சைத்தமிழனே படிக்காத மேதையே! கிராம வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்றவர் காந்தியடிகள் - நாட்டின் மலிவான பாதுகாப்பு, கல்வி வளர்ச்சி என்று கூறிய தென்னாட்டு காந்தியே! மூடி இருந்த 6000 பள்ளிகளையும் புதிதாக 17000 த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறந்து அக இருளை அகற்றிய அறிவொளியே கல்வித் தந்தையே, கருப்பு காந்தியே, ஏழைகளின் நண்பனே நீ பிறந்த நாளை நாங்கள் உன் நினைவாய் கல்வி வளர்ச்சி நாள் என கொண்டாடுகிறோமே!
மாடு மேய்த்த சிறுவன் பேச்சால் மதிய உணவு திட்டத்தைக் கொண்டு வந்த மாமேதையே பாகுபாடின்றி பயின்றிட பள்ளிச்சீருடை திட்டத்தைப் பெற்றுத் தந்த கர்மவீரரே! மின்சாதன வசதி இல்லாத ஊரிலும் மின்சார வசதியினை கொண்டு வந்து புற இருளை அகற்றிய செயல் வீரரே! k திட்டம் கொண்டு வந்த king மேக்கர் நீ! உன்னை போல் ஒருவன் இனி பிறப்பது அரிதே கோடிக்கு ஒருவர்!

V. ராதிகா B.Tech IT
CTS, Bangalore.

**************************************************

043

கர்மவீரர் காமராஜர் விருது 2023 கவிதைப் போட்டி :

விருதுபட்டி மண்ணின் தவப்புதல்வனே....
கல்வி கண்ணை திறந்து வைத்து அறியாமையெனும் இருள் அகற்றிய கர்மவீரரே...

சமத்துவம் போற்றிய மனிதருள் மாணிக்கமே...
பகலவனாய் தத்துவங்கள் பல தந்த  கருப்பு நாயகனே....

உழவர் வாழ்வு சிறக்க ஓயாமல் உழைத்து நாடே வியக்க நல்லாட்சி செய்த தமிழ் மண்ணின் மைந்தனே ...
கரைபடியா கரங்கள் கொண்டே காந்திய வழியில் பயணித்த உத்தமரே ....

சாதியெனும் விஷபூச்சை கல்வியிலிருந்து நீக்கிய அருமருந்தே ....
சரித்திர சாதனைகளால் தமிழகத்தை தன்னிறைவு அடையச் செய்த பெருந்தலைவரே...

பட்டமே வாங்காமல் உலகையே பகுத்தறிந்த பட்டதாரியே...
புரட்சிக்காய் புறப்பட்டாய்....
எழுட்சிக்காய் உரமானாய்...

படிக்கும் பிள்ளைகளின் பசியுணர்ந்தே உணவோடு உன்னதக் கல்வியையும் ஊட்டி வளர்த்தாய்...
சுழியமாய் இருந்த ஏழைகளின் வாழ்வுதனை ஏற்றம் செய்யும் சூத்திரத்தின் விதையாய் முளைத்தாய்....

கருப்பு காந்தியென கதருடுத்தி வாழ்ந்தவரே...
இலட்சங்களை விரும்பாது லட்சிய வாழ்க்கை வாழ்ந்தவரே....

நேர்மையே அடையாளமாய்
எளிமையே அவதாரமாய் தர்மத்தின் தலைவனாக வாழ்ந்து மறைந்தாய் இம்மண்ணில்...
கல்வியின் நாயகனாக காலமெல்லாம் வாழ்கிறாய் என்றும் எங்கள் நெஞ்சமதில்...

முனைவர் அனிதா சந்திரசேகர்.

*************************************************

044

காமராஜர் 

விருதுநகரில் விளைந்த வித்தகன்
சிவகாமி பெற்றெடுத்த
கர்மவீரர்
வரலாற்றில்
புகழ்பெற்ற
ஆதவன்
ஊருக்கு உழைத்த
உத்தமன்
தலைவர்களை
உருவாக்கிய தலைவன்
தன்னலமில்லா
தன்னிகரில்லா
தலைவன்
கல்விக்கண்
கொடுத்த காவலன்.;
அமைத்தார்
கிராமம்தோறும்
பள்ளி!
கொடுத்தார் பள்ளிதோறும்
மதிய உணவு:
இருந்தார் மக்கள்
பணியே மகேசன்
பணியென;
காட்டினார்
அனைவரிடமும்
அன்பு:
வஞ்சமில்லா நெஞ்சம் கொண்டவர்:
வஞ்சம் 
உன்னைக் கண்டு
அஞ்சும்:
அவரிடம் இல்லை
ஆணவம்:
ஏழ்மையிலும்
காட்டினாய்
கம்பீரம்:
ஆகட்டும் பார்க்கலாம்
என்பதே தாரக
மந்திரம்:
தன் வீட்டுக்கு
சேர்க்கவில்லை
வளமை:
நாட்டுக்கு
சேர்த்தார்
செழுமை;
பார்க்கமாட்டார்
யாரிடமும்
பாகுபாடு;
இந்தியாவின்
உயிர்ப்பிக்கும் 
அமிர்தகலசம்:
ஏழைகளின்
வாழ்வினை
ஒளிர்வித்த 
மகாதீபம்:
இந்தியாவின்
ஒப்பற்ற
தவபுதல்வன்:
அவர் ஒருமெழுகு
வர்த்தி
மெழுகாய் உருகி
நாட்டிற்கு ஒளியேற்றினார்:
உன்பிறப்பில் ஏற்பட்டது
ஈடுசெய்ய முடியா
வெற்றிடம்:
ஏங்கி
தவிக்கிறோம்
அவரைப்போல
ஒருவன்:
மீண்டும் பிறந்து
வருவானா,?

அரங்கநாயகிகண்ணன் தருமபுரி.

**************************************************

045

ஆளுமையின் சிற்பி கர்மவீரர் காமராஜர் ..

இந்தியாவின் ஆளுமையை மலரச்செய்த உத்தமர்/// அறிவை வளர்க்க கல்விச்சாலை திறந்தவர்/// அணைக்கட்டுகள், தடுப்பணைகள் பல கட்டியவர்/// ஏழைகளின் மனதிற்கேற்ற வகையில் ஆட்சிசெய்தவர்/// பள்ளிகளில் மதிய உணவுத்திட்டம் புகுத்தியவர்/// சுயநலமின்றி பொதுநலனாக பாடுபட்ட வித்தகர்/// மக்களின் தேவைகளை புரிந்துகொண்டு செயல்பட்டவர் /// விண்ணும் மண்ணும் வணங்கும்படி வாழ்ந்தவர்/// சமதர்ம சமுதாயமாக மாண்புடன் மலரச்செய்தவர்/// எண்ணும் எழுத்தும் கிராமந்தோறும் அறியவைத்தவர்/// எளிமை,ஏற்றம் இலக்கணமாக திகழ்ந்தவர்/// அனைவரும் விரும்பதக்க போதகராக மிளிர்ந்தவர்/// நாட்டை நம்பிக்கை நிலைக்கும் தூணாக்கியவர்/// அனுதினமும் மக்களைப்பற்றியே மனதில் நினைத்தவர்/// புதுமைகளை புகுத்தி மாற்றங்களை கண்டவர்/// கருணை உள்ளம் உடைய மகத்துவர்/// தமிழ்நாடு முக்காலமும் போற்றும் தலைவர்/// தரணியில் அனுதினமும் ஒளிரும் திருவிளக்கானவர்/// தலைவர்களை ஈர்க்கும் ஆற்றலை பெற்றவர்/// தனக்கென தனிப்பாதை அமைத்த சிற்பியானவர்//// பூமியில் செழிப்பான சூழலை கொடுத்தவர்////

முனைவர் எ.செந்தில்வெங்கடாசலம் ஆசிரியர், ஊ.ஒ.தொ.பள்ளி, ஜேடர்பாளையம் , நாமக்கல் மாவட்டம்.

**************************************************

046

     கண்ணியமே! காமராஜரே!

நேர்மையின் பிறப்பிடம்!
நேயத்தின்  இருப்பிடம்!
நிலங்களை அபகரிக்கும்
நீசர்வாழும் நாட்டில்....(2)...

நல்லாட்சி தந்துநின்ற
     நாயகனும்  நம்மவர்தான் ! 
நலமெல்லாம்  நல்கிட்ட 
      நல்லவரும் நீர் தான்!(4)

தமிழினம்  ஈன்றெடுத்தத்
     தங்கத் தலைவர்!
நனிசிறக்க  வாழ்ந்திட்ட
     நற்றமிழர்  நாயகன்(6)

எண்ணிலாப் பள்ளிகள்
     எம்மண்ணில் விதைத்திட்டு
இன்னலிலா அருங்கல்வி
     ஈந்திடவே  இவண்நின்றார்(8)

கன்னலென  மதிய உணவு
     கண்டளித்த  அமுதசுரபி!
கல்விக்கண்  திறந்த
     கலைமகளின்   காலச்சிற்பி(10)

கண்ணீரால் பயிர்வளர்த்து
     கனவுகளில் மெய்யுருக
செந்நீரும் உரமாகும்
    சீரன்றி வேறுண்டோ ? (12)

பெய்நீரும் பிழைக்குங்கால்
     பெருமழையும் அழிக்குங்கால்
நன்னீரைத் தேக்கிடவே
     நதிதோறும் தேக்கங்கள் ! (14)

உள்ளமெலாம் புதுவெள்ளம்
    உவகையிலே உழவருள்ளம் ! 
கள்ளமில்லாக் காமராசர்
     காட்சியின் அருள்வெள்ளம்  ! (16)

வேற்றுமைகள்  ஒழித்துயிங்கு
    வேதனைகள் களைந்துநின்று
வாழவைத்த  பெருந்தலைவர்
      வாழ்கவெங்கள் காமராசர் !(18)

எல்லோர்க்கும்  வேண்டிய
    உதவிகள் அளித்திட்டாய்!
நல்லோனே! நாயகமே!
     நாற்றிசையும் வாழ்த்திடுமே!(20)

இதுபோலொரு பெருந்தலைவரைக்
    காண்பதுநாம்  எக்காலம்?
களங்கமில்லா வெள்ளையுள்ளம்
    காண்பதுதான் எக்காலம்?(22)


*முனைவர்.கிருட்டிணதிலகா*.
போரூர்.
சென்னை.

*உறுதிமொழி*
*இது என் சொந்த படைப்பு!*
*குழுவிற்கு மட்டுமே எனது படைப்பைத் தருகின்றேன்*என உண்மை சான்றளிக்கின்றேன்!*


 இப்படிக்கு,
 முனைவர் கிருட்டிண திலகா.
 போரூர் 
சென்னை.

**************************************************

047

காமராஜர்

*கல்வி ஊற்றே!!* 
 **கரையா சரித்திரமே* !

 குமாரசாமி
 சிவகாமியின் சீமந்த புத்திரரே!!

இப்புவியை ஆள வந்த வித்தகரே!!

 விருதுநகரில் விதைத்த ஒரு விதையோ!! ஊரெல்லாம் விளைந்து விருட்சமானது ஏழைகளின் பசி தீர்க்க!!

 மதிய உணவு தந்த மாவீரனே மங்காத ஜோதியாய் இன்னும் வாழ்பவரே !!

மனிதருள் மாணிக்கம் என்றும் நீரே!!
 மாசற்ற மனம் உன் போல் யாரேனும் உண்டோ!!

 உமக்கு நிகர் என்றும் நீரே!!

 கல்விக்கு கண் திறந்தீர் அன்று !!
பல அறிவுக்கண்கள் திறந்து நிற்கிறது இன்று!!

 முதலமைச்சராய் இருந்தீர் நாட்டுக்கு!! முழு மூச்சை தந்தீர் கல்வி வாழ்க்கைக்கு!!

 ஏழைகள் ஏங்கி நின்ற கல்விக்கு!!
 இலவசம் என்று விடை தந்தீர் நல்வாழ்க்கைக்கு!!

 அன்று கிடைத்த அமுதமா நீ!!
 இன்றுவரை சுவைக்கிறோம் திகட்டாமல்!!

 அன்று படிக்காத மேதையாய் நீ இருந்து இன்று பட்டங்கள் பல பெற்றுத் தருகிறாய் எங்களுக்கு!!

 தர்மத்தின் தலைவரே!!
 தலைகனம் சிறிதும் இல்லாதவரே!!

 அரசியலில் ஆசை கொண்டவரே!! அரியனைக்கு என்றும் விலை போகாதவரே!!

 நினைக்க நினைக்க இன்பம் பொங்குதே!!

 இப்புவி உள்ளவரை உன் புகழ் அனைவர் நெஞ்சிலே!!

க.எப்சிபா  MA.B.Ed.D.T.Ed
காவேரிப்பாக்கம்.

**********************************************

048

என் புரிதலில் காமராஜர் 

ஊர்கள் தோறும் ஓர் சிறப்புண்டு.
நீங்கள் முளைத்து எழுந்தபிறகு 
எங்கள் மண்ணிற்கு அடையாளம் ஆகிப் போனீர்கள்.

விருதுநகரினை காய்ந்துபோன பூமி என்பார்கள் 
ஆனால் காமராசரைக் கண்டுபிடித்து அவரை 
கர்மவீரராக்கிய புண்ணிய பூமி 
எங்கள் விருதை மண்!

நீங்கள் விதைத்தது கழனியில்  நெல் அல்ல!
ஏழைகளின் வாழ்வில் கல்வி என்னும் சொல்!
உங்களின் எளிமை கண் கொள்ளாத வியப்பு!
உங்கள் சொல் திருத்தி எழுதமுடியாத தீர்ப்புகள்.

ஏழைகளின் பசியை நாடி பிடித்து பார்த்த 
எங்களின் அன்னதான பிரபு!
மக்களால் மட்டுமே உருவானது அரசாங்கம்!
என்ற வார்த்தையை வடிவமைத்துக்  கொடுத்த     
கிங் மேக்கர் நீங்கள் தான்!

வீண் வார்த்தைகள் வேண்டாம்!
பொய்யான முகஸ்துதி வேண்டாம்!
முடிந்தால் உதவி செய்யுங்கள் ஏழைகளுக்கு!
இல்லையேல் நான்கடி தூரம் ஒதுங்கி செல்லுங்கள் ஓரத்தில்!
இது அய்யா உங்களது வாக்கு!

அய்யா நீர் ஏழைகளின் பேரரசன்!
வீணை மீட்டாத சரஸ்வதி
பசித்த வயிற்றினை காணப்  பொறுக்காத அன்னபூரணி!

அய்யா எளியநடையில் உமது உரை வீச்சு 
நீர் எழுந்து நின்றாள் இமயமும் வாங்கும் பெருமூச்சு!
நீர் நின்ற இடமெல்லாம் பள்ளிக்கூடம் 
உமது பார்வை பட்ட இடமெல்லாம் 
பகுத்தறிவாளர்கள் மாநாடு!
சமயோஜித புத்தியில் நீர் சாணக்கியன்!
கல்வி கரை காணாத நீர் 
பள்ளியறையில் மாணவனாய் இல்லாமல் 
பாடங்கள் ஆகிவிட்டீரே  
கல்விக்கும் ஆற்றலுக்கும்   புள்ளியளவுகூட தொடர்பில்லை என்று 
முன்னேற துடிப்பவர்களுக்கு முன் யோசனை சொன்னீரே 
எங்கள் விருதை மண் சுமந்த கருப்பு வைரமாம் 
பெருந்தலைவர் காமராசர் அய்யா அவர்களே! 

ஞா. சர்மிளா தேவி, No 12,சொக்கலிங்க நகர், கூடல் நகர்,மதுரை- 18.

*******************************************

049

கர்ம வீரர் காமராஜர்...

புனிதமான மாமனிதர்...

புனிதமான மண்ணிலே பிறந்தவரே வாழ்ந்தவரே

தனக்கு வாழ்க்கை வாழாமல் மக்களுக்காக வாழ்ந்தவரே

மனதில் தூய்மையோடு வார்த்தையில் உண்மையோடு

செயலில் நேர்மையோடு நம்பிக்கையோடு தன்னம்பிக்கையோடு

எண்ணத்தில் வலிமையோடு எளிமையோடு இருந்தவரே

விழிக்க வைத்து வழி காட்டியவரே

கல்வி அவசியமே முக்கியத்துவம் கொடுத்தவரே 

உறங்காமல் உழைத்தவரே உயர்வு தந்தவரே

பாலைவனம் மண்ணை சோலைவனமாக மாற்றியவரே

சுயநலம் இல்லாதவரே பொதுநலம் கொண்டவரே

இரக்கத்தோடு கருணையின் எண்ணமே இறக்கும் வரையிலே

மக்கள் தானே எனக்கு வாழ்க்கை வாழ்ந்தவரே

உங்களுடைய சிந்தனை மகிழ்ச்சி கொடுத்ததே

இரக்கத்தின் கருணை வளர்ச்சி கொடுத்ததே

பள்ளிக்கூடத்தில் சத்துணவு வழங்கியவரே

வெற்றியாளர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கிவரே

எண்ணற்ற புனிதமான திட்டங்களை கொடுத்தவரே

 எண்ணற்ற அற்புதமான சாதனைகளை படைத்தவரே 

புத்தகம் கொடுத்து கத்தி தீட்ட வைக்காதவரே

மூளையின் புத்தியோடு தீட்ட வைத்தவரே

என்றுமே மக்களை விரும்பியவரே நினைப்பவரே

விருது பெற்று விருதுநகருக்கு பெருமை கொடுத்தவரே

தகராறு செய்யாதவரை வரலாறு படைத்தவரே 

மனதோடு வாழ்ந்து மானத்தோடு வாழ்ந்தவரை ...

 

கவிஞர் சுஜி மாதேஸ் பெரியபுளியம்பட்டி கிருஷ்ணகிரி 

************************************************

50.

கர்மவீரர் காமராஜர்


ஒரு கவிதையில் அடுங்குபவரா காமராஜர்?
அவருக்கு நிகர் வேறு ஒருவர் இல்லையே.
விருதுநகர் நமக்கு அளித்த பெரும் பேர்.

1903 ம் ஆண்டு,15 ஜூலை மாதம் 
நாட்டுக்கு அளித்த பெரும் புதல்வர் .
அன்னை சிவகாமியும் தந்தை குமாரசாமியும்

நாட்டுக்கு என்று ஈன்று அளித்த பெரும் பொக்கிஷம்
ஆவார் காமராஜர்.

மக்களுக்கு சேவை செய்யவே பிறந்த மாமனிதர்.
பெரும் தலைவர், மனிதருள் மாணிக்கம்,
எளிமை, நேர்மை, நாணயம்,நியாயம்
மறு பெயர் காமராஜர்.

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர்.
தமிழகம் செய்த பாக்கியம்.
எத்தனை எத்தனையோ பயனுள்ளத் திட்டங்கள்
தமிழ் நாட்டுக்காக 
அறிமுகம் செய்து
தன்னலம் கருதாது உழைப்பின் சிகரம்.

பட்டங்கள் பெற்றவர் அல்ல
சட்டங்கள் கற்றவரும் அல்ல
கல்விக்கு முதல் இடம் கொடுத்து 
பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் அறிமுகம் செய்து
குழந்தைகள் படிக்க பெற்றோர்கள் அனுப்ப வேண்டும் என்று

கருத்தில் கொண்டு சேவை செய்யவே ,
காமராஜர் பெருந்தலைவர் ஆனார்.
ஆற்றல் மிக்க அறிவு பெட்டகம் காமராஜர்.
சிந்தனை சிற்பி 
சிங்கம் போல நெஞ்சு உடையவர்.

ஜாதி மதம் பிரிவுகள் நினைத்தவர் இல்லை.
படிக்காத மேதை காமராஜர்
பாரத் ரத்னா விருது பெற்றவர் ஆவார்.

கதர் உடுத்தி, ஆடம்பரம் அற்று வாழ்ந்த மாமேதை.
அவர் சொன்ன
"எல்லோர் வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை
வரலாறாய் ஆனவர்கள்
தனக்காக வாழ்ந்ததில்லை."

இன்று அதனால் தான் அவர் வரலாறு ஆகி இருக்கிறார்.

கர்மவீரராக , காலம் எல்லாம் வாழும் காமராஜர் போல்
இனி ஒரு மானிடன் தொன்றுவாரோ?

விஜயலக்ஷ்மி கண்ணன் .

*************************************************

051.

காமராசர் கல்வியின் நாயகர்..

காமாட்சி பெயரோடு ராசாவாய் அழைத்ததினால்/

காமராசர்  ஆனாரே கலிவிரக்கம் கொண்டாரே/

காங்கிரசில் இணைந்தாரே கண்ணியத்தைக் காத்தாரே/ 

கடமையிலே கண்ணியமாய்த் தடம்மாறா புண்ணியராம்/

ஆறுவரைக் கற்றாலும் ஆற்றலிலே வல்லவராம்/

நேருமகான் போற்றுகிற நேர்மையான நாயகராம்/ 

போராட்டம் பலகண்டு பாராட்டு பெற்றவராம்/

 ஏரோட்டும் உழவர்க்கு நீரோட்டம் தந்தவராம்/


தமிழகத்தின் முதல்வரென அமிழ்தான ஆட்சியாக/

திட்டம்பல தீட்டிட்ட தியாகத்தின் திர்வுருவாம்/ 

கட்டடங்கள் பலகட்டி கல்விக்கண் திறந்தவராம்/

பாசனத்தைப் பெருக்கிடவும் உழவர்கள் உயர்ந்திடவும்/

நேசமிகு மக்களுக்கு அணைகட்டி மகிழ்ந்தவராம்/

படிக்காத மேதைதான் பார்போற்றும் தலைவரானார்/

பள்ளியிலே படிப்பவர்க்கு பக்குவமாய் உணவளித்தார்/

ஆசையிலா மனிதராக ஈடில்லா ஈகையுடன்/

ஆலமர விருட்சமாக அனைவரையும் தாங்கினாரே/

தொழில்புரட்சி கண்டவராம் தமிழ்வாழ உழைத்தவராம்/

எழில் கொஞ்சும் இனத்த லைவா!

 அகிலம் இருக்கும்வரை..அழியாது நும்புகழ்/

கவிஞர்
மா.சுந்தரசாமி.செயலாளர்,
அ.சா.தொ.மு.ச,
கோவை மாவட்டம்,

************************************************

052.

காமராசர்  எனும் மாமனிதர்

சீர்மிகு திருமகனே  சிவகாமியின்  மகனே !

 விருதுநகர்  பெற்ற உலகின்  மிகச்சிறந்த விருதே!

ஆறாம்  வகுப்பறை  கண்ட கல்விக் கடவுளே!

மூன்று முறை தமிழகத்தை ஆண்ட முதல்வனே!

மூன்றின் மூன்று மடங்கு ஆண்டு ஆண்டவனே!

கரைபுரண்டு ஓடிய வைகைக்கு அணை கட்டியவனே!

ஆர்பரித்த மணிமுத்தாறுக்கு  தடுப்பு  அமைத்தவனே!

கீழ் பவானிக்கு மேல்  அணையமைத்து  மேம்படுத்தியவனே!

நிலத்தில் நிறம் மாறிய நிலக்கரியை நெய்வேலியில் செப்பனிட்ட செல்வனே!

தளவாடத் தொழிற்சாலை  இராணுவத்திற்கு  அளித்த நாட்டுப்பற்றாளனே!

  பள்ளி குழந்தைகளுக்கு  உணவளித்த தாயிற்கும்  தாயான தயாளனே!

மணமுடிக்காமல்  மக்கள் மனங்களை கொள்ளை கொண்ட மன்னவனே!

மன்னர்களை  உருவாக்கி ஆட்சி அதிகாரம் தந்த மாமன்னனே!

தமிழ்  மண்ணின் பெருமையினை தலைநகரம் சேர்த்தவனே!

மக்களின் இதயங்களில்  நீக்கமற நிறைந்தவனே!
 மீண்டும் இம்மண்ணில் பிறந்து வாரும்மையா!

தமிழச்சி மா.சித்ரா
தருமபுரி

**********************************************

053

கல்விக்கண் திறந்த காமராஜர்....

தமிழகத்தில் அணை கட்டினாய்

 ஏழைகளை அணைத்து கட்டினாய் !!

கிராமங்கள் தோறும்  பள்ளி கட்டினாய்

ஏழைகளுக்கு பசியில்லாது இணைத்து கட்டினாய் !!

சாலை திறந்தாய் ஆலை திறந்தாய்

 தமிழகத்தின் பல வேலை நிறைத்தாய்

 ஆட்சி துறந்தாய் மனசாட்சி மருந்தாய்

 துரோகம் மறந்தாய் அரசியல் விருந்தாய் !!

கிங் மேக்கராய் பலரை உருவாக்கினாய்

எனினும் கசங்கிய சட்டையுடன்

கறை படியாத கைகளுடன்

தெளிந்த சிந்தனையுடன் செருக்கில்லாமல் திகழ்ந்தாய் !!

எளிமையின் அடையாளமாய் அங்கீகாரமாய் வளர்ந்தாய் !!

தமிழகத்தை உயிர் மூச்சாய் நினைத்தாய்

தமிழ் மொழியை
பேச்சாய் வளைத்தாய் !!

கட்சிக்கு தொண்டனாய் தொண்டாற்றினாய்

காட்சிக்கு எளியனாய்
பங்காற்றினாய் !!

தமிழக முதல்வராய்  தலைவனாய் செயலாற்றினாய் !!

படிக்காத மேதை என்று 

பார் போற்ற நடந்தாய் !!

படிக்காத நின் பிறந்தநாள்

 கல்வி வளர்ச்சி நாள் என்று

கொண்டாடி மகிழ்ந்திட சிறந்தாய் !!

வாழ்க நின் புகழ் என்றும் உயர்வாய் !!

கவிஞர் ம. சுபாசினி
ஆசிரியை
சிறுமுகை கோயம்புத்தூர்
**********************************************

054.

படிக்காத மேதை
கடந்து வந்த பாதை....

இன்றும் தமிழர்களின் தாகம்
 தீர்ப்பது
 
நீ என்றோ கட்டிய
 அணைநீர் !!

  
விவசாயம் குடிநீர் செழிக்க தமிழகத்தில்

தடுத்து தடுப்பு  அணை கட்டினாய் !!

கல்விக் கண் திறக்க
 நீ 

கட்டியதோ அரசுப் பள்ளி !!
 
குழந்தைகளின்
வயிறு நிறைப்பது

 நின் மதிய
 உணவுத்திட்டம் !!

 எங்களை என்றும்
 காப்பது 

நீ அன்று
 இயற்றிய சட்டம் !!

 
கரும்பு எஃகு  ஆலைகள் திறந்தாய்

சாலைகள் கடைந்தாய் இன்னல்பல கடந்தாய் !!

நீதியின் பக்கம் என்றும் நின்றாய் 

மக்கள் மனதை இன்றும் வென்றாய் !!

கருப்பு காந்திக்கு
 எதற்கு
 வண்ணப்பொடி
 
படிக்காத மேதை
 எனும் அடைமொழி

 அடுக்குகிறது 
  நீ ஆற்றிய 
சமூகப்பணி(யை) .. !!
 
நாங்கள் எல்லோரும்
 எப்போதும்
 உன் அணி !!

நீ சரித்திரத்தை புரட்டிப்போட்ட

 சாதனை தமிழன் 
சாமானிய தலைவன் !!

 சரித்திரம் உன்னை புரட்டிக் கொண்டிருக்க 

 சாகாவரம் பெற்றவன் நீ!!

படிக்காத மேதையாய்
பார் ஆண்ட

பெரும் தலைவராம் காமராசன் நீ !!

கவிமாமணி உள்ளொளி S.P.அருண்
ஆசிரியர் 
சிறுமுகை கோயம்புத்தூர்

*************************************************

055.

கவிதை தலைப்பு :நேர்மை தேரோட்டி!..

 நாடாளும் தலைவன் ஆனபோதும்!
 நின் வாழ்வில் எளிமையாய்! எளிமையின் மறுமுகமாய்! ஏழ்மையின் மதிமுகமாய்! கண்டோமே!
 கறை படியா சுடர் முகமாய்!

 கதர் ஆடை அணிந்து வந்த கருப்பு காந்தியே!
 கண்ணியம் குறையாது!
 கடமை உணர்வு தவறாது!
 கண்டோமே! கர்மவீரராய் மிளிரிய கதிரவனின் சுடர் முகமாய்!
 நதிநீர் அணைகளிலும்! நதிநீர் அலைகளிலும்! கல்விக்கூடங்களிலும்!
 கற்கும் புத்தகங்களிலும்! கண்டோமே புனித திருமுகமாய்! அரியணை அரசாட்சியில் ஆண்ட! அந்த நல்முகம் கண்டோமே!
 நாங்கள் தெய்வத்திருக்காச்சியாய்!
 காலம் அது தடுமாறினாலும்!
காலன் அவனே எதிர்த்தாலும்! கறைப் படியா-
நின் அரசியல் வாழ்வை பயிலாத! எந்த அரசியல் தொடக்கமும் உண்ட!
 இதுவரை 
காலத்தால் அழியா கறைப்படியா!-
 நின் அரசியல் வரலாறு!
 கற்க வேண்டிய புனித வரலாறு!

கவிதாயினி 
ச.கலைச்செல்வி திருப்பூர் .

************************************************

056

கர்மவீரர் காமராசர் 

பெருந்தலைவர் என்று தமிழ்நாடு மக்களால் அழைக்கப்பட்டவர் 
விருதுநகர் மாவட்டத்தின் விருதாளர் 
காமாட்சி என்ற இயற்பெயர் கொண்டவர் பார் போற்றும் தன்னகரில்லாதத்  தலைவர் 
பன்மொழிப் புலமைக் கொண்டவர் 
கடமையாற்றுவதில் கர்மவீரர் 
எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர் 
பணிவால் பதவியை அலங்கரித்தவர் 
தன்னலம் கருதா தொண்டுள்ளம் கொண்டவர்  
காந்தி வழி பின்பற்றிய தென்னாட்டு காந்தியவர்
கருப்பு வைரம், ஏழை பங்காளன் என பல பெயர்களால் அழைக்கப்பட்டவர் 
நீர்ப்பாசனத் திட்டங்களை வழிவகுத்தவர்  
படிப்பறிவை விட அனுபவ அறிவால் சாதித்தவர்
எளியவர்களின் தோழனாய் வாழ்ந்தவர் சாமானிய மக்களின் துயர் துடைத்தவர்
தான் படிக்காவிட்டாலும் இந்த தேசம் படிக்க வேண்டும் என்று நினைத்தவர் 
மாடு பிடித்த கைகளை ஏடு பிடிக்க வைத்த பெருமைக்குரியவர் 
கல்விக் கண் திறந்த படிக்காதமேதை யவர் 
பட்டித்தொட்டி எங்கும் பள்ளிகள் நிறுவியவர் 
கல்லாதவர்களையும் கற்கத் தூண்டியவர் 
ஏழைகளின் இரைப்பையைச் சிந்தித்தவர் 
இலவச மத்திய உணவைக் கொண்டு வந்தவர் 
கரும்பு ஆலைகளைப் பெருக்கியவர்
கிங்மேக்கர் என அனைவராலும் புகழப்பட்டவர் 
காலத்தால் கற்களில் பதிக்கப்பட்டவர்
அவரே நானிலம் போற்றும் காமராசர்!.

முனைவர் கே.பி.கனிமொழி
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, அக்சிலியம் கல்லூரி, வேலூர்-6.

**********************************************

057

காமராசர்  உள்ளம் வேண்டும்
(நிலைமண்டில ஆசிரியப்பா)

மெள்ள ஏதும் இன்றியே வயிறு

 கிள்ளும் போது காரணம் அறியா
 
  துள்ளிக் கண்ணீர் ஓடிடும் பருவம்
  
   பள்ளிக் கூடம் போனால் சோறு 
   
   அள்ளி உண்ணலாம் வயிறு எல்லாம்
   
    பள்ளி தோறும் சோறு போட்டு 
    
    தள்ளி நிற்கச் சொன்ன சாதிப் 
    
    பிள்ளை யோடு கல்வி ஞானம் 
    
    அள்ளித் தந்த கர்ம வீரர் 
    
    வெள்ளி தங்கம் சொத்து நாட்டம் 
    
    கொள்ளாத் தேசப் பக்தர் சாதிக் 
    
    கொள்ளை நோயைப் போக்கச் சீராய் 
    
    வெள்ளைச் சட்டை ஆடை தந்த 
    
    வெள்ளை நெஞ்சம் கொண்ட தீரர் 
    
    கள்ளம் கொள்ளாக் காம ராசர் 
    
    உள்ளம் வேண்டும் நாடாள் வோர்க்கே.
    

பேராசிரியர் சு.முத்தையா, சோழவந்தான்.

**************************************************

058.

ஒரே உலக அதிசயம்...

காமராஜர் என்பது ஒற்றைச் சொல்லின் உலக அதிசயம் இவர் வாழ்வை தெரிந்தவர்  இப்படி பொது வாழ்வு வாழ இயலுமா? 

பள்ளியின் பயனை பாரரறியச் செய்த படிக்காத மேதை 
பணத்தின் பயனில் பற்றேதுமில்லாத ஏழ்மைத் தலைவன்.

பசி பள்ளிப்படிப்பை பாழ்படுத்தாது காத்த பாரத முதல்வன்.தன் சொல் செயலெலாம்  நாட்டு வளர்ச்சிக்கு என வித்திட்டவர். 

அனுபவத்தால் நாட்டு பூகோளம் அறிந்த ஒரு புதுமைப் பித்தன்
விவசாயம் தொழில்
இருகண்ணாக காத்த காவியத் தலைவன். 

தாயார் இறந்த போது சாவுகாசு போட கேட்ட வெட்டியான் முன் சட்டைப்பை தடவி பார்த்து ஏதுமில்லாது உறைந்து நின்றவர்

பெருந்தலைவர் என போற்றப்பட்ட ஒற்றை உத்தமர் இவரே
ஈடில்லா இவர் வாழ்வு  உலக அதிசயம் தான் உணர்வீர்

மா  கோமகன்

***********************************************

059

*கர்மவீரர்  காமராசர்!*
***************************
தன்லைமே இல்லாத தகைமை யாளர்!
       தனக்கென்றும் வாழாதோர்! ஏழை மக்கள்
இன்னல்கள் நீக்கிவைத்த ஒளிவிளக்கு!
       இந்தியாவின் விடுதலைக்காய்ப் பாடு பட்டோர்!
நன்றாக ஆய்ந்தெதையும் செய்ய வல்லோர்
       நாட்டுநலன் ஒன்றினையே கருத்தில் கொண்டோர்!
*தென்னாட்டுக் காந்தியெனப்* போற்றப் பட்டோர்
        தெளிவான முடிவெடுக்கும் திறமை பெற்றோர்!

எல்லோரும் படிப்பதற்கே பள்ளிக் கூடம்
       எங்கெங்கும் திறந்திட்டார் ஊர்கள் தோறும்!
பள்ளியிலே மதியவுணவு திட்டம் தன்னைப்
      பயனுறவே கொண்டுவந்தார்! ஏழை மக்கள்
இல்லமெல்லாம் அறிவொளியை ஏற்றி வைத்தே
        இருளினையும் கலைந்திட்டார் *காம ராசர்!*

தொலைநோக்காம் எண்ணத்தைக் கருத்தில் கொண்டு
      தொழில்பெருக தொழிற்சாலை அமைத்துத் தந்தார்!
விளைச்சலையும் பெருக்கிடவே அணைகள் கட்டி
        விண்முட்டும் சாதனைகள் பலவும் செய்தார்!
நிலையான கொள்கையினை நெஞ்சில் வைத்து
        நேர்மைவழித் தூயநல்ல ஆட்சி கண்டார்!
மலைபோலும் நிமிர்ந்தநடை! மாசே இல்லா
         மனம்படைத்த *மாமனிதர் காம ராசர்!*

(இது என் சொந்தப் படைப்பு எனச் சான்றளிக்கிறேன்)
            ************
பாவலர் க.சண்முக சிதம்பரம்
தரகம்பட்டி ,
கரூர் மாவட்டம்.

***********************************************

060

நானிலம் போற்றும் நல்லவர்

விருதுநகரில் விளைந்த ஒப்பற்ற வைரமே, 
மனிதருள் மாணிக்கம் என்றும் நீரே! 

கறை படியா கரத்துக்குச் சொந்தக்காரே,
கருமை தேகத்தில் வெள்ளை மனசுக்காரே! 

கல்விகண் திறந்தவராய் காலத்தை வென்றீர், 
படிக்காத மேதையாக பாரெங்கும் சென்றீர்!  

கல்வி புரட்சிக்கு வித்திட்ட வித்தகனே, 
தந்தையை இழந்ததால் கல்வியை இழந்தீர்!

குழந்தைகளின் கல்வி தரத்தை உயர்த்த, 
குருகுல கல்வி முறையை ஒழித்தீர்! 

பகல் உணவுடன் கல்வியை ஊட்டினீர், 
பசிபிணி போக்கிய அமுதசுரபியாய் மாறினீர்! 

படிக்காத மேதையான நீரோ நாங்கள், 
பட்டங்கள் பெற கல்லூரிகளை தந்தீர்!

தமிழ்நாடு நீர் மேலாண்மையில் சிறந்திட, 
அணைக்கட்டுகள் பலதந்த பொறியாளரே! 

ஏழையாய் பிறந்தாலும் பார் போற்றும், 
அரசர்களை உருவாக்கிய நவீன சிற்பியே! 

எளிமைக்கும்  நேர்மைக்கும் புகழ்பெற்ற, 
நின்  வழியில் நாங்கள் செல்வோம் எந்நாளும்!!! 

ஆ. ஜெசிந்த்
கேரள வித்யாலயம் மேல் நிலைப்பள்ளி
சென்னை. 

************************************************

061.

காமராஜர் கண்ட காவியம்
அன்பை தந்த அண்ணல். 
ஆருயிர் கலந்த நண்பர். 
இயற்கையை வளர்த்த அன்பர். 
ஈட்டியாய் ஆழ்ந்த அறிவர். 
உண்மையை உரைக்கும் உத்தமன்.
 ஊக்கம் போல் மக்களுக்கு உழைத்தவன். 
எட்டாத உயரத்தில் உயர்ந்தவன். 
ஏட்டில் எழுதாத மாமேதை. 
ஐ என்னும் சொல்லுக்கு உரியவர். 
ஒற்றுமைக்கு என்றும் எடுத்துக்காட்டு. 
ஓவியமாய் என்றும் மனதில் நின்றவர். 
ஔடதமாய் மக்களுக்கு  தொண்டு செய்தவர். 
புதிய தலைவர்களை தந்தவர். 
பூவை போன்று மலர்ந்த முகம் உடையவர். 
கல்வி கண் திறந்த செம்மல். 
சொத்து சேர்க்கா பெரியவர். 
மக்களை சொந்தமாய் பார்ப்பவர். 
என்றும் மாணவர் மனதில் நிலைத்து நிற்பவர். 
பெருந்தலைவர் என்ற பட்டத்திற்கு உரியவர். 
சே. ஜெயபாக்கியலட்சுமி.

********************************************

062

விருதுநகரின் விருது !

விருதுநகர் பெற்றெடுத்த விருது !

வெள்ளை மனம் படைத்த கருப்புக் காந்தி!

ராசா என்றழைத்த சிவகாமியின் ரோஜா!

அரசியலின் ஆச்சர்யக்குறி!

கல்விக்கூடத்தின் தாயுமானவன்!

பசி நீக்கி பகுத்தறிவு நல்கிய பகுத்தறிவாளர்!

தன்னலம் உதறி தாய்நாட்டை காத்திட்ட தங்கமகன் !

அணைகள் பல கட்டிய அணையா விளக்கு !

ஏழைகளின் கதிரவன் !

ஆடு மேய்க்கும் சிறுவனையும் 
ஏடு புரட்டச்  செய்திட்ட புரட்சியாளர்!

சிறைச்சாலை பல அடைத்தாலும்
சிந்தனையால் அடைபடாத
சிந்தனைச் சிகரம்!

சீருடை செப்பனிட்ட
சீராளன்!

முதலமைச்சராய் 
மக்கள் மனதில் நின்ற 
முதல் அமைச்சரும் இவரே! 

ஆறாம் வகுப்பு மட்டுமே படித்து
அரியணை அலங்கரித்து
கிங் மேக்கராக திகழ்ந்தவரிவரே!

காமராசரின் உயிர் பிரிந்தாலும்
அவரின் உரத்த சிந்தனைகள்,
உயரிய செயல்கள்,
என்றும் தமிழோடு உயிர்வாழும்!

முனைவர் ந.பிரியங்கா தருமபுரி

***********************************************

063

கர்மவீரர் காமராஜர்//  கருணை உள்ளம் கொண்டவரே! 
கலைகளிடத்தில் காவியரே!
எளிமையதை இன்பமுற்று வாழ்ந்தவரே!
எழில் பெருக கல்விக் கண் திறந்தவரே!

அம்மா என்று அழைக்கவே  அன்னம் தந்த அமுதமே!
சேறுடையை சீருடை யாக்கி மரியாதை தந்த மதிப்பே!
பேரறிஞர்  ஆன போதும் பெரியோரை மதிக்கும் பேரருளே!
கல்வியே நாட்டின்  முன்னேற்றமென்று கத்தி முழங்கிய இடியே!
மாலைகள் குவியலின் முன் வயதானவரின் பூவிற்கு தலைவணங்கியவரே
அலைகடல்  போல் உங்கள் கனவு பழித்திட!
ஆற்றலுடன் எழுவோம் சமூகம்  உயர்ந்திட!
"வந்ததே சுதந்திரம்!"
"காமராஜரின் கன்னியம்!"


ர.சண்முக பிரியா
புனித ஜேம்ஸ்  மேல்நிலைப் பள்ளி 
இளையான்குடி வட்டம்
சிவகங்கை  மாவட்டம் 
சூராணம் 630713

************************************************

064

விருதுநகர் விருதுப்பட்டியின்
 விருது நாயகரே

 படிக்காத மேதையாய்
 வியக்க வைத்த வித்தகரே

 பல்லாயிரம் பள்ளிகள் திறந்த
 பகுத்தறிவு பகலவனே 

வறியவன் வயிற்றுக்கு
 விருந்தளித்த மதிய உணவு மனிதமே

 உழைப்பால் உயர்ந்த உத்தமரே 
ஊருக்கு உழைத்த வல்லவரே

கல்லாமையை இல்லாமையாக்கிய
 கல்விக்கண் திறந்த வள்ளலே 

பாமரனின் பங்காளனே
 உண்மையின் உறைவிடமே 

கரை படியாத கதர் வேட்டி கட்டிய 
கருப்புக் காந்தியே

 அணைகள் பல கட்டி
 அசர வைத்த அதிசயமே 

நீரைத் தேக்கி நீரினால் விவசாயம் செழிக்க

 வைத்து மின்சாரமும் கொடுத்தவரே

 பொருள் தேடவில்லை
 செல்வம் சேர்க்கவில்லை

 தன்னை யோசிக்காமல் தரணிக்காகவே

 வாழ்வை அர்ப்பணித்த தியாகி

 தொழிற்சாலைகள் பல  தந்து

 தொழிலாளியின் தொண்டனானவரே

பாரத ரத்னாவே பார் போற்றும் பெருந்தலைவரே

 மனிதம் வளர்த்து மதங்கள் கடந்த மகாத்மாவே 

ஒரு முறை ஆட்சிக்கு வந்தாய் பலமுறை பேச வைத்து விட்டாய்

பூவி உள்ளளவும் உன் புகழ் மங்காது ஐயா

 நீவீர் வாழ்க  வளர்க உமது புகழ்...

ஆ ரொசாரியோ ராணி உசிலம்பட்டி.

**********************************************

065

கர்ம வீரர் காமராஜர்:

விருதுபட்டியின் வைரமே!
எளிமையின் சிகரமே! 
தமிழ்நாட்டின் தங்கமே! 
மக்களின் சொந்தமே!!!  
கந்தகத் துகள்களின
களஞ்சியரே!
நாடே திருக்கோவில்
என்பவரே! 
மக்களை தெய்வமாக வணங்குபவரே!
மக்கள் தொண்டே குறிக்கோள் என்பவரே! 
காங்கிரஸ் கட்சியின் உயிர் மூச்சாக கொண்டவரே! பிரதமரையே உருவாக்கும் கிங்மேக்கரே!! 
ஏழையின் துயர் துடைத்தவரே! 
பல பள்ளிகளைத்திறந்து கல்விக் கண் திறந்தவரே!! 
மதிய உணவு வழங்கியவரே! 
காந்தியடிகள் காட்டிய   பாதையே உன் வாழ்க்கை உரையே! 
தென்னாட்டு காந்தி என
 போற்றப்பட்டாயே!! 
நீ மீண்டும் ஒருமுறை பிறப்பாயாக! 
உன் பொற்கால ஆட்சியை தருவாயாக!! 
கர்ம வீரர் என்று நித்தமும் இவரை போற்றிடுவோம்!!!!! 

ச. அட்சயா , 
சிவகங்கை மாவட்டம் , 
காளையார் கோவில் ஒன்றியம் , 
சூரணம் அஞ்சல், -630 713
ஏரிவயல் கிராமம் .

**********************************************

066.

காலத்தை வென்ற கர்மவீரரே
படிக்காத மேதையே
எளிமையின் இலக்கணமே
எம் மக்களின் கல்விக்கண்
திறந்ததவரே!


 தமிழகத்தில் உன் பொற்கால
ஆட்சியை
பிற்கால ஆட்சிகளுக்கு
முன்மாதிரி
ஆக்கினாய்
தமிழுக்காக
தமிழ் மக்களுக்காக
வாழ்ந்தவரை!


ஏழைகளின் பங்காளரை
நம் தென்னாட்டு
காந்தியை
காலம் முழுவதும்
நினைத்துப்
போற்றுவோம்
அவரின் வழி நடப்போம்!

க.கண்மணி

புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி
சிவகங்கை மாவட்டம்
காளையார் கோவில் வட்டம்  வலனை 623401

***********************************************

067

தன்னலங் கருதாக் காவியத் திருமகன்...
******************************
குமாரசாமி சிவகாமி பெற்றெடுத்தக் குலசாமி/
விருதுநகர் மண்ணிற்கு வைரமணி அணிமகுடம்/
பேரியக்கக் காங்கிரசின் பேரெழுச்சி நாயகன்/
போராடிச் சிறைபட்ட சீர்மிகு தியாகி/
வரியவர் எளியவர் வாழ்வை உயர்த்திட/
பயிர்த்தொழில் மக்களின் மாத்துயர் துடைத்தவர்/
தொழில்துறைப் பெருக்கிய உன்னதத் தோழர்/
எழில்மணம் கொண்டவர் ஏழையர் ஏந்தல்/
பாமர மக்களின் பிள்ளைகள் படிக்க/
பள்ளிகள் பலவும் கட்டிய கலைமகன்/
மதிய உணவு சீருடை கொடுத்து/
மனித நேயப் பண்பை வளர்த்தவர்/
நீர்மின் நிலையம் பாசனத் திட்டத்தால்/
தொழில்துறை கண்ட தியாகச் செம்மல்/
தன்னலம் கருதாக் காவியத் திருமகன்/
தென்னாட்டுக் காந்தி பொன்னார் மேனியர்/
பகைவரும் மதித்திடும் பாரத இரத்தினம்/
வாய்மை தூய்மை நேர்மை எளிமையாய்/
வாழ்க்கை முழுவதும் சமூகத் தொண்டராய்/
வாழ்ந்த தலைவரை வந்தனை செய்குவோம்/
      கவிஞர்
சைதை பாலு 

**************************************************

068.

கல்வி வள்ளல் காமராசர்....

விருதுநகரில் தோன்றிய முத்தே!
 நீ தமிழகத்தின் சொத்தே!
கல்விக்கு கண் கொடுத்த கல்வி வள்ளலே!
 தமிழகத்தின் கருப்பு காந்தியை!
கல்வி ஒன்றே மாணவர்களின் அடிப்படைத் தேவையை தீர்க்கும் என உணர்த்தியவரே!
மாணவர்களுக்கு உணவில்லை என்றால் செவிக்கு உணவில்லை !
என்று மத்திய உணவு அளித்த உணவு வள்ளலே!
தமிழகத்தின் கறை படாத மாசில்லா மாணிக்கமே!
 சுதந்திரத்தின் சுவாசக் காற்றை ஏழை எளியோர் இடம் சென்று சேர்ந்தவரே!
தமிழகத்தை ஒன்பது ஆண்டுகள் நேர்மையாக ஆட்சி செய்த மாமன்னரே! 
கல்வி மட்டும் போதாது என்று விவசாயமும் செழிக்க ஒவ்வொரு ஊர் முழுவதும் நீர் தேக்கம் கட்டியவரே!
பட்டித் தொட்டி எல்லாம் பள்ளியை திறந்தவரே!
இந்திய நாட்டின் இரண்டு பிரதமரங்களை உருவாக்கிய கிங்மேக்கர் தமிழ் மகனே !
நீங்கள் மறைந்தாலும் நீங்கள் கட்டிய கல்விக்கூடங்கள் இன்னும் உங்கள் பெயர் சொல்லிக் கொண்டே இருக்கிறது!

மதிப்புறு முனைவர் இ. ரவிந்தர் 
கிருஷ்ணகிரி.

************************************************

069

முத்துச் சிப்பி காமராசர்

அலைகடலில் பிறந்த அற்புத சிற்பியே தமிழ்நாடு கண்ட அறிஞரே அல்லல்பட்டபோது அமைதி கொண்ட இமயமே பேராசை கொள்ளாதவரே சுயநல நாட்டில் சுயநலம் இல்லாமல் வாழ்ந்த  மா  மனிதரே உன்னைக்கண்டதுதமிழகம் போற்றியது நம் உலகம்  உன்னைகண்டது தமிழகம் போற்றியது நம் உலகம் ஜாதி மதம் இல்லையே உண் பார்வையிலே உன் ஜாதியும் மதமும் நம் இளைஞர்களே  ஜாதி மதம் இல்லையே உண்பார்வையிலே உண் ஜாதியும் மதமும் நம் இளைஞர்களே உன்        பேச்சு வல்லமையால் நம் தாய்நாடு வல்லரசு ஆகியதே உன் பேச்சு வல்லமையால் நம் தாய்நாடு வல்லரசு ஆகியதே தமிழர்களின் நெஞ்சம் எங்கும் காமராஜர் ஞாபகமே தமிழர்களின் நெஞ்சம் எங்கும் காமராஜர் ஞாபகமே பூவாய் மலரட்டும் உன் ஞாபகம் நம் மாணவர்கள் மனதில் பூவாய் மலரட்டும் உன் ஞாபகம் நம் மாணவர்களின் மனதில்...

ஜ.ஜோ இன்பென்டா ஆக்னஸ்

புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி
சிவகங்கை மாவட்டம்
இளையான்குடி வட்டம்
சூராணம் 630713

*************************************************

070.           

கர்மவீரர் காமராஜர்

கல்விக்கண் திறந்த படிக்காத மேதை/
பாமரனும் கல்விபயில குலக்கல்வியை அழித்தவர்/
மதிய உணவு மகத்தான திட்டத்தால்/
மாணவர்களின் வயிற்றுப் பசியைப் போக்கியவர்/

நேர்மையான அரசியலுக்கு உதாரணமாக விளங்கியவர்/
தனக்கென வாழாத தன்னலமில்லா உத்தமர்/
எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர்/
அழியாப் புகழை நிலைநாட்டிச் சென்றவர்/

கல்லாமையை நாட்டில் இல்லாமல் செய்தவர்/
பட்டங்கள் பெறாத பகுத்தறிவு பட்டதாரி/
இலட்சங்களை புறந்தள்ளிய இலட்சியவாதி இவர்/
ஒப்பற்ற தலைவர் ஒருவருமில்லை உன்போல/

பயிர்களை வளர்த்து உயிர்களைக் காத்தவர்/
பசுமைப்புரட்சியால் விவசாயம் செழிக்கச் செய்தவர்/
உம் பிறந்தநாளில் நான் உறுதிகொள்கிறேன்/
உன்போல நேர்மையான வாழ்க்கை வாழ.../
*****  *****  *****  *****
இது எனது சொந்த படைப்பு. இந்த குழுவில் மட்டுமே பகிர்கிறேன் என்று உறுதியளிக்கிறேன்.

மை.சத்திய பாரதி,
 தூத்துக்குடி..

***********************************************

071

கர்ம வீரர் காமராசர் 

இணைசொல்ல முடியாத நாட்டுப் பற்று! 
ஈடில்லா ஈகம்கொள் பண்பினாலே 
அணைக்கட்டு தொழிற்சாலை பள்ளிக் கூடம் 
அத்தனையும் கட்டிவைத்த முதல மைச்சர்! 
தளைபட்ட சிரமத்தைப் பட்ட போதும் 
தனித்துவம்சேர் பட்டறிவின் நுணுக்கத் தாலே 
எளியோரைக் கல்வியினால் உயர்த்தி வைத்த 
இமயம்நிகர் செம்மல்தான் காம ராசர்! 
காந்தீயத் தத்துவத்தின் தொண்ட னாக 
காசினியில் விளங்கிட்ட கர்ம வீரர்! 
சீந்துவாரின் றித்தெருவில் கிடந்தோர் வாழ்வைச் 
சீலமிகும் நலவாழ்வாய் மாற்று தற்குச் 
சாந்தமிகும் கருணையுடன் திட்டம் தீட்டிச் 
சந்ததமும் ஓய்வின்றிச் செயல்ப டுத்திப் 
பாந்தமுடன் துளியளவும் தடம்மா றாமல் 
பக்குவமாய் உழைத்திட்ட கறுப்புக் காந்தி! 

கவிக்கோ அ அரவரசன் தேவகோட்டை, சிவகங்கை மாவட்டம்.

**********************************************

72.

அவரும் புத்தரே!

அடைந்துவிட்ட துன்பங்கள் அகரவரிசை ஆனதே
ஆசையில்லா மனிதராக வந்தநல் உதயமே 

அன்பில் கருணையவர் ஆற்றலில் ஊற்றவர்
ஆயிரம் பிறைகண்டாலும் அகிலத்தில் கிடைக்காதவர்

ஆறாயிரம் பள்ளிகளை உருவாக்கிய தந்தையவர்
காமாட்சிபோல கருணை உள்ளம் கொண்டவர்

கல்வியிலே அனுபவ ஞானியாக உதித்தவர்
காங்கிரசை வளர்த்தவர் கழனி உருவாக்கியவர்

கண்ணிருந்தும் குருடானது அன்றைய தமிழகமே
காட்சியின்றி இருளானது நாட்டின் வளர்ச்சியே

வீழ்த்திவிட துடித்த துரோககூட்டம் அதிகமே
தாழ்த்திவிட்டு தரணியால இங்கு பேயாட்டமே

குற்றமில்லா ஞாயிறானவரை நன்றி மறந்தே 
சுற்றமில்லா உயர்ந்தவரை தூரவைத்த இழிநிலையே

காணக்கிடைக்காத கற்பகவிருட்சம் மனித உருவிலே
கல்லணைபோல நிலைத்த அணைகள் சொல்லுமே

சிறைகள்  காமராசர்  வாழ்ந்த சிம்மாசனமே
கறைகள் இல்லா காலடிபட்ட புனிததலமே

காசுக்கு மயங்கிடாத மனிததெய்வத்தை மறந்தே
காலடியில்போட்டுவிட்டு கொடிபிடித்தது அறிந்தே

நல்லவர்கள் நாட்டில் கொஞ்சம் குறைவுதானே
நன்றிகெட்ட உலகத்திலே அவரும் புதுமைதானே

ஆசையில்லா மனிதராக வந்தநல் உதயமவரே
ஓசையோடு வாழ்த்துபாடுகிறது ஆழியாறு அணையுமே

த.சங்கீதா ,தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் ,தாராபுரம்.

*********************************************

073.

திறந்த புத்தகம் காமராசர்
********
விருது நகரில் பிறந்த மாணிக்கமே
மக்களை எல்லாம் வியக்க வைத்த மரகதமே
எளிமையின் சிகரமாய் விளங்கிய இரத்தினமே
ஏற்றத்தை எல்லாம் உன்னிடம் கண்டேன்
மதிய உணவு அளித்த மகானே 
அணைகள் எல்லாம் கட்டி அகிலத்தை
அசர வைத்த வள்ளலே
ஏழைகளின் துயரை துடைத்த செல்வனே
தமிழன்னைக்கு மகுடம் சூட்டிய  தங்கமே
தன்னை மறந்து நாட்டுக்காக வாழ்ந்த உத்தமரே
பயிர்களை எல்லாம் செழிக்க வைத்த தங்கமே
தமிழ் நாட்டை கல்வியில் சிறக்க வைத்த முதல்வரே
தென்னாட்டு காந்தியே
கதராடை அணிந்து சிறப்பு செய்தாயே
பகட்டான வாழ்க்கைக்கு இடம் தராதவரே
ஆடையே போல உள்ளமும் தூய்மையே
உழைப்பால் உயர்ந்து நாட்டுக்காக வாழ்ந்தவர்
மக்களை இவரது உயிர் மூச்சு
இறுதி மூச்சு உள்ளவரை
ஊருக்காக உழைத்த மகானும் இவரே
அழகு தமிழால் பேசி அனைவரையும் கவர்ந்தவர்
கல்லாமையை இல்லாது செய்து கல்வியில்
சிறந்த நாடு தமிழ்நாடு
என்று உணர்த்தியவர்
இவரை போல் ஒப்பற்ற தலைவரை இனி தேடினாலும் கிடைக்காது
வாழ்க உம் புகழ் வளர்க கல்வி..

ம.செ.அ.பாமிலா பேகம்,நாகர்கோவில்.

**********************************************

074

 *கல்வித்தந்தை கர்மவீரர் காமராஜர்*

*இருக்கும் மனிதருக்கே ஒதுக்க முடியவில்லை //*

*இன்னொரு காமராஜர் அவர் ஆட்சி //*

*அமைப்பதாக சொல்லி தானே அனைவரும்//*

*பிளைப்பு நடத்தினோம் அவரே வந்து விட்டால்//*

*கடை வை நடத்துவது*  

 *(மன்னிக்கவும்)* 

*கட்சி நடத்துவது கஷ்டமா இருக்காதா//*

*கடும் தலைவா உன் அரசியல்//*

 *மீண்டும் வராது இந்த அரசியல்//*

 *உனக்கு புரியாது நீ கசங்கிய //*

*சட்டையோடு இருந்தாய்*
*(காங்கிரஸ்) கெளரமாக இருந்தது//* 

*இன்று கதசட்டைக்கு கஞ்சிபோட கூட லஞ்சம்//*

*கேட்கிறானே நீ கர்மவீரர்*
*காமராஜர்//*

*நீ காந்தியை  சொல்லாமல் பேசியது இல்லை//*

*இன்றைய அரசியல்வாதி//*

*இவர்கள் பிராந்தி இல்லாமல் பேசியது இல்லை//*

*பெரும் தலைவா உன் அரசியல்//*

 *மீண்டும் வராது  இன்றைய//*
 *இந்த அரசியல் உனக்கு புரியாது//*   

*ஜாதகம் பார்த்து தான் தேர்தலில் நிருத்துரான்//*

*ஜெயித்து முடித்ததும் ஜாமின் கேட்கிறான்//*

*தேர்தலில் ஜெயித்தால் எங்களின் வரலாறு//*

*தோற்றுப் போனால் இயந்திர கோளாறு//* 

*பெரும் தலைவா உன் அரசியல் மீண்டும் வராது//*

*சமூகத்துக்கும் சமுதாயத்துக்கும்*
*உனக்கு புரியாது//*

*நீ தத்துவ குழப்பங்களால் தடுமாறியது இல்லை//*

*பதவி சுபத்திற்காக இடம் மாறியதில்லை//*

*நீ பள்ளி முடிக்கவில்லை*
*ஆனால்//*

*பண்புக்கே நீதான் பாத*
*திட்டம்//* 

*இயற்கை இந்த பூமிக்கு தந்த மானிட விருது//*

*நீ எனவே தான் நீ//*

 *நீ பிறந்த ஊருக்கு விருதுநகர் என்று பெயர்//*

*நீ பொது வாழ்க்கைக்கு வந்ததும்//*

*அந்நையை கூட அன்னையம் ஆக்கினாய்//*

*நீ ஒவ்வொரு முறையும் தலைநகரம் போகும்போது//*

*இந்தியாவின் தலை எழுத்தை எழுதி விட்டு திரும்புவாய்//*

*தன் குடும்பத்துக்கு உயிர் எழுதிவிட்டு//*
 *திரும்புகிறார் இங்கே ஒப்புந்தங்கள் வெற்றி பெற்றால்//*
 *ஒப்புந்தம் போட வரலாறு தோற்றுப் போனால்//* *ஓய்வெடுக்க கோடநாடு*
*பெரும் தலைவா உன் அரசியல்//*
 *மீண்டும் வராது இந்த அரசியல்//*
 *உனக்கு புரியாது நீ மீண்டும் வருவதில்//*

*இருந்த கட்சியில் திரும்பி சேரவா இரண்டே//*

 *தகுதிகள் இருந்தாலே போதும் வேட்டி கட்ட தெரிய வேண்டும்//*

*போர்த்தி சேர்க்க தெரிய வேண்டும்//*
 *அண்மையில் நடந்த கதை சொல்லவா//*
*கதர் வேட்டிகள் கரை வெட்டிகள்//*
*கூட்டணை அமைத்து* *காவிவேட்டியை//*

 *தோற்கடித்து இங்கே கதர் வேட்டிகள்//*
 *கரைவெட்டிகள் கூட்டணி அமைத்து காவிவெட்டியை தோக்கடித்தது//*

*இங்கே பதவி வேட்டி பத்திரப்படுத்தும்//*

 *அவசரத்தில் இவருக்கே அங்கே தமிழனி//*

 *மானம் காத்த இலத்து வேட்டியை//*

*கிழித்து விட்டான் இந்த கொடுமைகள்//*
 *பார்த்து பூமாதேவிக்கு நெஞ்சு வழித்தது//*

*தமிழனுக்கே ரத்தம் கொதித்தது பாரததேவிக்கே//*

 *பக்கவாதம் வந்தது இந்த நோய்களைத்//* 

*தீர்க்க முயற்சிகள் இல்லை எல்லாம்//*

*எல்லாம் தலைவர்களுக்கும் டாக்டர் பட்டம் பெறும்//*  

*தலைவா உன் அரசியல் மீண்டும்//*

 *வராது இந்த அரசியல் உனக்கு புரியாது//*

*நீ புள்ளி விவரங்களை வைத்து பேட்டி கொடுத்தவன் இல்லை//*

*அறிக்கைகள் விட்டு கொண்டு அரசியல் நடத்தியவன் இல்லை//*

*கோட்டையில் அமைத்து கொண்டு கோடையில் வெயில் பற்றி பேசுவதில்லை//*

*வானத்தில் மிதந்து கொண்டு வெள்ளத்தை வேடிக்கை பார்த்தவன் இல்லை//*

*சிறையில் இருப்பதையும் சிம்மாசனத்தில் இருப்பதையும்//*

 *ஒன்றுக்கு ஒன்று இவர் எனவே//*
 *தான் சிறையில் இருந்தது ஒன்பது ஆண்டுஇருந்தது//*
 *ஒன்பது ஆண்டு முதல்வர் பொது வாழ்க்கையில்//*

*உன் மீது ஒருமுறை கூட//*

 *குற்றபத்திரிக்கை* *வாசிக்கப்படவில்லை தனி வாழ்க்கையில்//*

 *உனக்காக கல்யாண பத்திரிகை அச்சரிக்கப்படவில்லை//*  

*ஆனால் சுயநலவாதிகள் சுனாமி உதவி கூட வினாமிகளுக்கு வாங்கி கொடுத்தார்//*

*பெருந்தலைவா உன் அரசியல் மீண்டும் வராது//*

*இந்த அரசியல் உனக்கு புரியாது//*

*நீ கட்டிய ஆணைகளில் தான் இன்னும் தாகம் தீர்த்துக்கொண்டிருக்கிறோம்//*

 *நீ தேடங்காயதொழில் குச்சி//*
 *வைத்து தான் இன்னும் மார்தட்டி கொண்டிருக்கிறோம்//*

*நீ போட்ட சோத்தில்தான் படித்துக் கொண்டிருக்கிறோம்//*

*உனக்கு பின்னால் முன்னேற கழுதைகள் வந்தது//*

*முன்னேற்றம் மாற்றம் வரவில்லை//*

 *பெருந்தலைவா உன் அரசியல்//*

 *மீண்டும் வராது இந்த அரசியல் உனக்கு புரியாது//*

*நல்லவர் நெஞ்சில் நீ கல்வெட்டாய் இருக்கிறாய் நயவஞ்சக தேசம் இது மீண்டும் நீ வருவாயா//*

*கர்மவீரர் காமராஜர் தலைவா
கல்வித்துறையில் நாங்கள் உங்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம்//*

*எங்களை மீட்டெடுப்பதற்காக உங்களை அழைக்கிறோம் பெருந்தலைவா//*

*எங்களின் தேடலில்* 
*மீட்டெடுக்க மீண்டும் வருவாயா கர்மவீரர் காமராஜர் ஐயா//*

கவித்தேடல்  எம். மொய்தீன் மத்திய சென்னை.

************************************************

075.

"கர்மவீரர் காமராஜர்"

கறைப்படியாய் ஆளு காமராஜர் பாரு!
தர்மத்தோடு வாழ்ந்துவந்த கர்மவீரர் பாரு!
தமிழகத்தின் முதல்வராக இருந்தபோது கேளு!
தடுப்பணைகள் கட்டி தண்ணீர் திறந்துவிட்டாரு!

விருதுநகரில் பிறந்த வீரத்திருமகன் பாரு!
விருதுப்பல அவர்பெயரில் வழங்குது  தமிழ்நாடு! ஏழைகுழந்தை கல்வி பயில கையெழுத்திட்டாரு!
மதியஉணவு திட்டத்தையும் கொண்டு வாந்தாரு!

எளியமுறை வாழ்க்கையை வாழ்ந்து வந்தாரு!
இனிமையாக மக்கள் வாழ வழிவகுத்தாரு!
அரசியல் ஆட்சியிலே சிறந்து விளங்கினாரு!
அறவழியில் ஆட்சிமுறை நடத்தி வந்தாரு!

ஆறாயிரம் பள்ளிகளை திறந்து வைத்தாரு!
அன்பான கல்வி கண்ணன் பேறெடுத்தாரு!
மண்ணையாண்ட மன்னாதி மன்னன் கர்மவீரர்!
மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தாரு!

கவிஞா்
அ. இளையராஜா
கடலூர் மாவட்டம்

076

கர்ம வீரர் காமராசர்

விருதுநகரில் பிறந்த எளிய மாமனிதர்/
குமாரசாமி சிவகாமி பெற்ற காமாட்சி/
ஆறாவதே படித்த அரும்பெரும் கருப்புராசா/
தாய்மாமன் வளர்த்த தேசிய நாயகன்/
பதினாறாம் வயதில் அரசியல் புகுந்தார்/
திட்டங்கள் போட்டு மேன்மை கண்டார்/
நல்லொழுக்கமும் அமைதியும் அவருக்கு உரியது/
நேர்மையும் கருணையும் அவரை உயர்த்தியது/
நாட்டுப் பற்றில் சிறந்ததொரு பெருந்தலைவர்/
கொள்கைப் பற்றில் ஈர்ந்த தென்னாட்டுக்காந்தி/
நுண்ணறிவால் பேறு பெற்ற படிக்காதமேதை/
கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராசர்/
மக்கள் முன்னேற்றம் அவருக்கு மகிழ்வோட்டம்/
கட்சியின் முன்னேற்றம் அவருக்குத் தேரோட்டம்/
தமிழக முதல்வராய் தேசியம் வென்றார்/
தேசியத் தலைவராய் தரணியே வென்றார்.

இது எனது சொந்தப் படைப்பென்றும் இக்குழுவில் மட்டுமே எனது கவிதையைத் தருகிறேன் என உண்மைச் சான்றளிக்கிறேன்.

முனைவர் ம.தமிழ்வாணன்,
சென்னை.

077

காலமே தொழும் கல்விக்கடவுள்   காமராசர்!!

*பெருந்துயர் நீக்க; நம் பாரதம் சுதந்திரம் ஏற்க; பெருநற் பேரெடுக்க; நற்பாடு பட்டவர்கள் பலருள் முதலாமவர் காமராசர்!!* 

*அறிவுத்துயர் தீர்க்க தமிழகத்தின் தலை நிமிர பெரும்பாடு பட்டவர்களில் ஒருவர் உண்டென உண்டானவர் கர்மவீரர் காமராசர் !!* 

*கைநாட்டு வழக்கத்தை மை போட்டு அறிந்து, கல்வியெனும் விதைப் போட்டு; அறிவுச் சுடரின் முதல்படியை நிலை நாட்டியவர் காமராசர்!!* 

*எதிர்கால முன்னேற்றத் தடைக்கு எது காரணமென மனதுக்குள் ஏர்ஓட்டி கல்வியேயென விடை கண்டு விதையெடுத்து விதைத்தவரே; அறிவுக் கண்திறந்த காமராசர்!!* 

*தலைக்கனமில்லாத தன்னிகரில்லாத தலைவன் நேர்மையின் ஏர்முனை உறவாயினும் குற்றம்குற்றமே என்றுரைத்த உறைவிட உத்தமர் காமராசர்!!*  

*பெண்ணே!! எதிர்காலப் பேரரொளியென சிந்தையில் எடுத்து பெண்கல்வி உரத்தை ஊன்றிவிதைத்து விளைவித்துவெற்றி கண்டவர் காமராசர்!!* 

*ஏழ்மையில் பங்கெடுக்கவே சூழ்நிலை வரவுகளைத் தடைசெய்தார்; சூழ்சிப் புகழுரைகளை தட்டிவிட்டார்; வாழ்நிலை சிந்தித்து நிதிவரவுகளை பெருக்கியவர் கர்மவீரர் காமராசர்!!* 

*ஐந்து விரல்களும் அடுத்தது நீயேயென உன்னைச் சுட்டுவதால் அவனியில் நீயே இன்னொரு பிறவியெடுத்து வருவாயோ!!? காமராசரே!!*

*அதிகாரத்தின் பொறுப்பை உணராதவரின் அதிகாரம் நிலைக்காது; ஊனமுள்ள அதிகாரம் ஒருநாளும் உயராது; வஜ்ரவரிகளை வாசித்துக் கொடுத்து வாழ்க என்றவர் காமராசர்!!* 

*குறையில்லாத மனிதனுமில்லை; திறமையில்லாத மனிதனுமில்லை; சரியானவரைக் கண்டுபிடிப்போம் என்றவர் செயல்விசை கொண்ட விஞ்ஞானி காமராசர்!!* 

*கல்விச் சாலைக்கு பிள்ளைகளைக் கவர, மருந்தாய்க் கண்ட மகத்துவ வழிதான் மதிய சத்துணவு திட்டம்; திரண்டனர் பிள்ளைகள் கற்கும் சதவீதமும் உயர்ந்தது; இந்தியமே திகைத்தது! தீர்க்கத்தரிசிதானே காமராசர்!!* 

*கிடைக்கும் நேரத்தைப் பணிக்காகவே செலவு செய்தவர்; நேரந்தவறாமை என்பது இவர் தனக்காக நேர்ந்து கொண்ட நிரந்தரக் கொள்கை; இவரே அதன் கதாநாயகன் கர்மவீரர் காமராசர்!!* 

*தொழிலில்தான் நாடு தன்னிறைவு பெறுமென; தீர்மானமானார்! தொடங்கிய தொழில்கள் யாவுமே மேவிவந்து மேன்மை படுத்தியது நாட்டை; கதர்சட்டைக் கெட்டிக்காரர் காமராசர்!!*

*துன்பம் துயரமென பல கடல்களில் வீழ்ந்தாலும்; துடுப்பாய் நின்று நேர்த்தியுடன்செலுத்தி இன்பக் கனிவாக்கி கரை கடந்தவர், குடும்ப மாலுமி; காமராசர்!!* 

*பதவி மகுடங்கள் தேடிவந்தாலும் தேவையைத் தவிர வேறெதையும் தனக்கெனத் தேக்கிக் கொள்ளாதவர்; எதையும் எங்கும்தேடிச் செல்லாதவர்,கர்மவீரர் காமராசர்!!* 

*போதனை வார்த்தைகள் யாவும் புத்தனையும் சிந்திக்க வைக்குமே; முதுமையிலும் செழுமை பெற்றவை; இளமையின் வீரியம் கொண்டவை; இளைய சமுதாயத்தை ஈர்த்ததில் வெற்றிக் கண்டவர் புதிய மனிதன் காமராசர்!!* 

*கருப்புக் காந்தியின் கனவுப் பைகளெல்லாம், சுதந்திரச் சினைக் கொண்டதாகவே பெருத்தன; கருவும் சிசுவாகி, சிசுவும் மகவாகி, மக்களின் உரிமையோடு சுதந்திரத்தை ஒன்ற வைத்தவர் காமராசர்!!*

*வேதங்களைக் கடந்த விவேகன்; வாடாத வழிகாட்டி மரமானாலும், வாழ்ந்த காலம் பொற்காலமே!!தமிழ்த்தாய் பிள்ளைகளுக்கு; காலமும் வணங்கும் கல்வி வள்ளளான காமராசரைப் போற்றுவோம்!!* 

*உயரம் குறையாத தர்மத்தின் தேராக, உன்னதம் கரையாத உத்தம சீலராக, கறைபடியாத கண்ணியத்தின் கொடியாக, பட்டொளி வீசிப்பறப்பது; புகழினும் புகழுக்கானவர் காமராசர் ... 


ஏகலைவன் 12/163 
கர்ணம்தெரு 
எலவானாசூர்கோட்டை 
கள்ளக்குறிச்சி மாவட்டம்

078

 

காமராசர் கவிதைப்  போட்டி- 2023 
 காமராசரைப் போற்றுவோம்

விருதுப்பட்டி விடிவெள்ளியாக அவதரித்தவர்!
வியக்கும் தமிழன்னையின் 
தவப்புதல்வர் !
ஏட்டுக்கல்விக் கண்ணைத் திறந்தவர் !
ஏழைகளின் வாழ்வில் ஒளியேற்றியவர் !
பட்டிதொட்டியெல்லாம் பள்ளிச்சாலை நிறுவியவர்!
பசியின்றி பாடம் 
படிக்கவைத்தவர்!
தரணியெங்கும் அணைகளைக் கட்டியவர்! தன்னலமில்லா பொதுநலத்தோடு வாழ்ந்தவர்! நலத்திட்டங்கள் பல தீட்டியவர்! 
நாடுபோற்றும் மனிதருள் மாணிக்கமானவர்! படிக்காத மேதையாக போற்றப்படுபவர்! படிப்பவரின் எண்ணிக்கை உயர்த்தியவர்!
மக்களுக்காக மும்முறை முதல்வரானவர்! மாண்புமிகு 
பாரதரத்னா விருதாளர்!
மக்களால் போற்றப்படும் 
நல்தலைவர்! 
அறிவுச்சுடர் போல் கலங்கரைவிளக்கானர்! அழகுதமிழில் சமத்துவம் பேசுபவர்! ஓர் குலமாக மக்களை அரவணைத்தவர்! ஓயாமல்  ஒன்பதாண்டுகள் சிறையிலிருந்தவர்!
 தனக்கென பணத்தை  சேமிக்காதவர்!
தன்னலமில்லாத பொதுநலவாழ்க்கைக்கு அர்ப்பணித்தவர்!
வெல்லும் கடமையில் வெற்றி கண்டவர்! வெள்ளையாடை அணிந்த 
கருப்புகாந்தியானவர்!!!!     

முனைவர் சி. வெண்மதி,
 ஸ்ரீ சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி, அம்மாபேட்டை, 
சேலம்.

79.

மாணவர்களின்  விளைநிலம் காமராஜர்
கல்வி கண்ணை திறந்து வைக்க விருதுப்பட்டி நகரில் பிறந்த   கர்மவீரரே!
வறுமையுற்றோரின் பசியை போக்க மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்த கிங்மேக்கரே!
சட்டங்கள் கற்காமல் பல நலத்திட்டங்களை கொண்டுவந்த பெருந்தலைவரே!
பல ஏழைகளின் வாழ்வில் கல்வி ஒளிவிளக்கை ஏற்றிவைத்த மனிதருள் மாணிக்கமே!
பாமர மக்கள் கல்வி கற்றிட கிராமங்கள் எங்கும் பள்ளிகளை திறந்த தென்னாட்டுகாந்தியே!
தனக்கென்று செல்வம் சேர்க்காது இல்லாதவர்க்கு அள்ளிக்கொடுத்த வெண்மை உள்ளம் உடையவரே!
மூடநம்பிக்கையில் மூழ்கியவர்களுக்கு பகுத்தறிவினைக் கற்றுக்கொடுத்த பகலவனே!
பாட்டாளி வர்க்கத்திற்கு நலத்திட்டங்கள் பல கொண்டுவந்த ஏழைப்பங்காளனே!
பயிர்கள் விளைய அணைகள் கட்டி விவசாயம் காத்த தர்மவீரரே! 
கருப்புநிலாவே! உன் புகழ் வாழ்க!
என்றும் உந்தன் அறவழியில் நாங்கள்..
உம்மை போற்றி வணங்குகிறோம்!.


ந.மோகனா,
காயல்பட்டினம்,
தூத்துக்குடி.

 

080.

“தென்னாட்டு காந்தி” காமராசர்

குமாரசாமி சிவகாமி
    தம்பதியருக்கு 15.07.1903
அன்று விருதுநகரில்
    அரும்புதல்வராய் அவதரித்தார்

பள்ளிப் படிப்பைத்
    தொடர முடியாமல்
பதினாறு வயதில்
    காங்கிரசில் இணைந்தார்

    போராட்டங்களில் பங்காற்றி
பலமுறை சிறைப்பட்டார்
    சத்தியமூர்த்தியின் சீடராகி
காங்கிரசுக்காக உழைத்தார்

ஒன்பதாண்டுகள் 1954-1963
    முதலமைச்சராய் பணியாற்றி
மதியஉணவுத் திட்டத்தால் 
    மாணவர்களை அதிகமாக்கினார்

“கருப்புகாந்தி” “தென்னாட்டுகாந்தி”
    “படிக்காதமேதை” “அரசருருவாக்கி”
பட்டங்களால் பாராட்டப்பட்டு
    “பாரதரத்னா” பெற்றார்

காந்தி பிறந்தநாளில்
    சொத்துசுகம் ஏதுமின்றி
வாடகைவீட்டில் 1975ல்
    விடைபெற்றுக் கொண்டார்

நீதிகளையும் தர்மங்களையும்
    நுணுக்கமாய் அறிந்ததரற்காக
சங்கராச்சாரியரால் “மகாபுருசர்”
    சன்மானத்தைப் பெற்றார்

பிரச்சனைகளைப் பகுத்தறிந்து
    புரிந்துத் தீர்வளிப்பவரென 
அன்னை இந்திராகாந்தி
    அனுபவத்தில் இயம்புகிறார்.

முனைவர் ம்.வி.வைத்திலிங்கம்
சர்வதேச மக்கள்தொகை அறிவியல்கள் நிறுவனம், மும்பை

 

081.

கர்ம வீரர் காமராஜர் விருது 2023 கவிதைப் போட்டி

கர்ம வீரருக்குப் புகழாரம்!

விருதைதந்த  விடிவிளக்காம், விலையுயர்ந்த ரத்தினமாம்,
கருமவீரர் காமராசர், கல்விக்கண் திறந்தவராம்!

கருமுகிலில் மறைந்ததுவேன், காலத்தின் கோலமிதா?
கரையிலாத கல்விக்கே ஒளிதந்த ஞாயிறவர்!

கறையில்லா அரசியலில் கலங்கரையாம் விளக்கமவர்!
சிறைசென்றார், சினம்வென்றார், நிறைகொண்ட நெஞ்சமவர் !

மகாத்மாவின் அடிச்சுவடே, விடுதலைக்கு வழிஎன்ற,
மகத்தான கொள்கையிலே மனஉறுதி கொண்டவராம்!

பட்டியிலே பிறந்தாலும் பாரதத்தின் தவப்புதல்வர்,
பட்டினியின் பசியறிந்த பண்பான பைந்தமிழர்!

பள்ளியிலே சிறுவருக்கு மதியவேளை உணவளித்தார்!
தெள்ளியதாய்த் திட்டங்கள் தீட்டினரே முன்னேற!

பசுமையெனும் புரட்சிக்குப் பாங்குடனே வித்திட்டார், 
பசிப்பிணியைப் போக்குதற்கே பலப்பலவே அணைகட்டி,

இன்றெமது தாகமுடன் பசிப்பிணியும் தீர்த்தாரே! 
நன்றெமதாம் அன்னையென அன்புடனே நமைக்காத்தார்!

தலைவனென முதல்வனெனத் தன்னலமில் தொண்டாற்றி,
நிலையிலாதப் பதவிவிட்டு, நெஞ்சத்தில் இடம்பிடித்தார்!

இந்தியாவின் தலைமைக்கும் முடிசூட்டி முகமலர்ந்தார்!     
விந்தையிலும் விந்தையம்மா வளர்த்தகடா பாய்ந்தகதை!

நீலவானம் அழுததம்மா,நெஞ்சமுமே நெகிழ்ந்ததம்மா!
காலத்தை வென்றவனைக் காலனவன் வென்றானே! 

காவியமாய் ஆனவரே, காதியாடை ஓவியமே,
பூவினிலும் மென்மையுள்ளம், பூமியிலே  யாரிருப்பார்?

கட்டியான தங்கந்தான், கருப்பான வைரந்தான்,
விட்டவரும் சென்றதெலாம் வெண்கருணை உள்ளந்தான்!

கொட்டுகின்ற கண்ணீரில், கோடிகோடி மக்களிங்கே,
எட்டுகின்ற திசையெங்கும் இடைவிடாமல் புகழ்ஒலிக்க,
  
எழுந்திங்கே வாராரோ? இயற்கையின் சதிஇதுவோ?
அழுகின்ற மக்களெலாம் அன்புருகும், அலைகடலா?

படிக்காத மேதையாகி மேடைகளில்  உதிர்த்ததந்த,      
நடிக்காத மொழிஎங்கே? நலமிக்க வழிஎங்கே? ‌‍

பச்சையான தமிழ்எங்கே? பட்டிதொட்டிப் பண்பெங்கே? 
கொச்சையான தமிழ்எங்கே? கோபுரத்தின் உயர்வெங்கே?   

இச்சையினால் எதைச்சேர்த்தார்? இந்தியத்தாய் மக்களையே!
மிச்சமீதி வைத்ததென்ன மேன்மைமிகு  மனங்களையே!

தனக்கென்று சேர்க்காமல் தந்தகரம் தளர்ந்ததுஏன்?
எனக்கொன்று தரவேண்டும், கடனாகக் கேட்கின்றேன்!

தன்னலமே இல்லாத "கருணையுள்ளம்" தரவேண்டும்!
தரணியிலே எமைக்காக்க, மீண்டுமிங்கு வரவேண்டும்!.

உறுதி மொழி
இது என் சொந்தப் படைப்பாகும். இக்குழுவுக்கு மட்டுமே எனது கவிதையைத் தருகிறேன் என உண்மையாகச் சான்றளிக்கிறேன்.

கவிஞர் செகவான்,

மருத்துவர். செல்வக் கடுங்கோ வாழியாதன்
சேரன் இல்லம்
1/98-1 சண்முகா நகர் 2 வது தெரு
அழகர் கோவில் சாலை
கோ. புதூர், மதுரை 625007

 

082.

அய்யாவின் புகழ்  ஓங்கட்டும்

 ஒரு முறை கூட பார்த்ததில்லை 

குரல் கேட்டதில்லை,

முகவரிம் தெரிந்ததில்லை,

நான் யார் என்பதையும்
உணர்ந்ததில்லை,

உன் நோக்கம் அறிந்ததுமில்லை,

ஆனால் ஒன்று மட்டும் உண்மை,

நிச்சயம் ஏழைகளின் காவலன் 
தாய்மையின் அன்பு கொண்டவர் நீ

என்னை எனக்கு காட்டியவர் நீ

வெற்றி என்பது தனக்கானது மட்டுமே,
என்ற எண்ணமில்லா இனிய இதய சொந்தக்கார் நீ

எத்தனையோ பெண்களையும் கரம் தூக்கிவிடுபவர் நீ

நிச்சயம்  தென்றலின் தந்தை  எம்மை குளிர வைத்ததில்,
மலர்களின் ராஜா  எம்மை மணம் வீசச் செய்ததில்,
அன்னம் ஊட்டும் ஏழைகளின் தந்தை நீ எம் வெற்றி பசி தீர்த்ததில் இதுவரையில் ஐயமில்லை  உங்களின் நேர்மை 
  எம்மை திறமையில் வாழ்த்தியது

 உங்களின் எளிமையின் வரிகள் 

மக்களின் நாயகன், கல்வி கண்டெடுத்த தந்தை  கர்மவீரர் காமராஜர் ஐயா அவர்களுக்கு சமர்ப்பணம் 

கவிஞர் முனைவர் அ. சுபேதார் 
குளித்தலை 
கரூர் மாவட்டம்
 

083

கர்ம வீரர் காமராசர் 

அனுபவக் கல்வி எனும் அகல்விளக்கில்
அறிவின் வெளிச்சத்தை தேசமெங்கும் பரப்ப
அரசியலின் தளத்தில்  சட்டமென்றாக்கி
கல்லாமை  இருளகற்றி கல்வியை விதைத்திட்ட
கர்ம வீரரின் கனவுகளைப் சுமக்கிறது காலம்
உழவின் வளர்ச்சிக்கென அணைகள் எழுப்பி
ஊருக்கே சோறு போட்ட உத்தமசீலர்.
மக்களின் வறுமையை  முழுமையாய் விரட்ட 
திட்டங்களிலும் செயல்களிலும் தீவிரம் காட்டியவர்
பள்ளிகள் தொடங்கி பாடத்தின் அடிப்படையில்
சரித்திரம் தொடங்கி சமூகத்தின் ஏற்றமென
மக்களின் பூகோளத்தை மனதில் நிறைத்து
ஏள்றங்களை நோக்கி உழைப்பைத் திருப்பி
கட்சிகள் தாண்டி கருத்தினில் நிறைந்தவர்
ஊழலின் ஊற்றில் அதிகாரம் மூழ்கிடாமல்
ஏழ்மையின் தீண்டலில் மக்கள் சிக்கிடாமல்
ஆட்சியை நடத்தி ஆளுமையைக் காட்டியவர்.
தன்னலம் துறந்து பொதுநலத்தையே மூச்சாக்கி
வரிப்பணத்தை தனக்காய் எப்போதும் தீண்டாது
வாழ்வு முழுக்க துறவென வாழ்ந்தவர்.
மக்களுக்கான வளத்தின் பாதைகள் அமைத்திட 
அமைச்சர்கள் திறமையை அதிகமாய் பயனாக்கி
பகலும் இரவும் உழைத்திட்ட சூரியன்.
சேவைக்கென தன்னை அனுபவத்தின் வழியே
தேசத்தை நிமிர்த்திட தலை நிமிர்ந்த தமிழன்.
கல்வியின் சிறப்பு அழியாது நிற்கும்வரை
கர்மவீரரின் புகழும் சூரியனாய் மின்னும்.

       இளையவன் சிவா மடத்துக்குளம்.

 

084.

கர்ம வீரர் காமராஜர் விருது கவிதை போட்டி

தன்னலம் விரும்பும் தரணியிலே
தன்னலம் கருதா தமிழனே
தமிழகம் செழிக்க வளம்
பல கொழிக்க கொடை
பல அழித்தார் பொருளாய் அல்ல...
அழியா பொருளாய்  கல்வியை...
அகிலமே வியக்கும் வண்ணம்
வள்ளுவனின் வாக்கை 
வழி நடத்தினாய் 
வயிற்று பசி செவி பசியை
வழங்கினாய் வாழ்வின் தொடக்கமாகும் பள்ளியில்...
ஆம்
இலவசமாய் இல்லமாய் மாற்றினாய்
இனிமையான கல்வியை
இலவச உணவோடு
இல்லாமை ஆக்கினார்
இல்லாமை நோயை...
ஆக்கப்பூர்வமான பணி பல செய்தாய் 
அரசு கட்டிலில் ஆணவம் இன்றி
அணுவளவும் அண்டவிடாமல்
அமைதியாய் அடக்கமாய் 
அணைகள் முதல் ஆட்சி
அமைப்பு வரை வடிவமைத்தாய்
வல்லவனாய் வழி நடத்தினாய்
படிக்காத மேதை நீ...
பாரத ரத்னா நீ
இல்லை.. இல்லை...
பாரதத்தின் இரத்தினமே நீ...
தென்னாட்டு காந்தி நீ
தெளிவான சிந்தனையால்
தொலைநோக்கு பார்வையால்
திட்டங்கள் பலவற்றை
பார் புகழ படைத்தவன் நீ
ஒன்பதாண்டு முதல்வனாய்
ஒப்பற்ற பணி செய்து
ஒய்யாரமாக ஒளிர்கிறாய்
ஒவ்வொரு பாமரனின்
இதயத்தில் இளைப்பாறுகிறாய்...
தென்னகத்து காந்தியே.
உம்
புகழ் மறையா 
புண்ணியனே நீவிர் வாழ்க.. வாழ்க..


முனைவர். உ.சுப்பிரமணியன்
உதவிப் பேராசிரியர் தமிழ்
தூய சவேரியார் கல்வியியல் கல்லூரி பாளையங்கோட்டை
திருநெல்வேலி 2

085.

அன்பின் பிறப்பிடமாய்
அனைவருக்கும்  கல்வி தந்தவர்...

ஆட்சியின் அர்த்தத்தை
ஆண்டு விளக்கினார்..

இன்சொல் பேசி
இயக்கத்தை வழிசெய்தார்.. 

ஈயென இரக்கும் முன்
ஈந்து வழங்கினார்..

உண்மையாய் வாழ்ந்து 
உதாரணமாய்த் திகழ்ந்தார்.. 

ஊணின்றி வாடிய பிள்ளைக்கு 
ஊட்டமாய் உணவு தந்தார்...

எளிமையின் நாயகமாய்
என்றும் வாழ்ந்தார்..

ஏகாதிபதியாய் நில்லாது
ஏற்றிவிடும் ஏணியாய் நின்றார்..

ஐயா என்று பணிந்தால்
ஐயோவென உதவினார்...

ஒன்றும் கொள்ளாது
ஒவ்வோர் அன்பையும் கொண்டார்..

ஓராயிரம் பள்ளிகள் திறந்து 
ஓங்கி உயர்ந்திடச் செய்தார்..

ஒளடதமாய் உழைத்து
அஃதே நெறியென கற்பித்தார்..

                    - பொன். கனகா
                       உதவிப் பேராசிரியர்,,
                       வ.உ.சிதம்பரம் கல்லூரி,
                       தூத்துக்குடி.

 

086.

கர்மவீரர் காமராசர் 
விருதுநகரில் அவதரித்த பெரு விருதே/
தமிழகத்தின் குலம் காக்கும் காமாட்சியே/
மூடியிருந்த பள்ளிகளின் இருள் அகற்ற/
தீபவொளி ஏற்றிய படிக்காத மேதையே/
மாணவர்களைப் பள்ளிச் செல்ல ஊக்குவிக்க/
மதிய உணவுத் திட்டத்தினை அளித்த/
கல்வி கண் திறந்த பெருமானே/
தமிழக முதல்வராக மூன்று முறை/
அவதரித்த தென்னாட்டு காந்தியே-ஏழைகளின் /
துயர் துடைத்த ஏழைப் பங்காளனே/
தமிழக அணைகள் கட்டிய பெருந்தலைவரே/
தொழிற்துறையில் முற்போக்குச் சிந்தனையை விதைத்து/
 தமிழக இளைஞர்களுக்கு வழிகாட்டிய கர்மவீரரே/
சத்யாகிரக போராட்டம் ஆகஸ்ட் புரட்சியில்/
 பங்கு கொண்ட தென்னாட்டு காந்தியே/
உனதுடல் இப்பூமியை விட்டு மறைந்தாலும்/ புகழ் இவ்வுலகை விட்டு மறையாது/ 
தியாகச் செம்மலே மீண்டும் அவதரிப்பாய்....!!! 

-திருமதி. க. பிரியா, உதவிப் பேராசிரியர், நிர்மலா மகளிர் கல்லூரி,கோயம்புத்தூர்

 

087

காமராசரின் தொலை  நோக்கு பார்வை...

கல்வியை அளித்த கர்ம வீரர்
நல்லாட்சி வழங்கிய நாட்டின் சேவகர்
ஏழையின் மனதில் என்றும் அரசர்
மாழை(இளமை) பருவத்தின் மங்காத சூரியன்

படிக்காத மேதை படிப்பறிவின் தந்தை
துடிப்பான தமிழர்களின் தன்னம்பிக்கையின் சிந்தை
கிராமங்கள் எங்கும் கட்டாயக் கல்வி
அராட்சகம் இல்லாத அரசின் வேள்வி

இலவச மதியஉணவு ஏழைக் குழந்தைக்கு
இலவச பாடநூல் இந்தியாவின் வரலாற்றில்
அணைகள் யாவும் அரணாய் கட்டி
சுணையின் நீரையும் சேகரித்தார் நாட்டிற்கு

அரசியல் மாண்பில் அரியணை ஏறி
தரமான ஆட்சியில் தமிழ்நாட்டை உயர்த்தி
தொழில்கள் பலவும் திண்ணமுடன் நிறுவி
வழுவான தமிழகத்தை வண்ண அழகாக்கினார்


ஈ.தவணிதன்,
பல்லடம்.

 

088

காமராசர்

ஏரின் நலனைக் காத்திடவே
 ஏரி குளங்கள் வெட்டிவைத்தார்    
நீரை யணைத்தார் அணைகட்டி
  நிலத்தில் உழவர் முத்தெடுத்தார்
 நீரின் மேன்மை பேணிடவே
   நெய்யா றுமணி முத்தாறு
பாரில் தொட்டிப் பாலம்போல்
 பார்த்ததுண்டா வேறெங்கும்

 கோடம் பாக்கம் கண்திறந்து
   கொண்டு வந்தார் மேம்பாலம்
கோடம்பாக்கம் மேம்பாலம்
கொணர்ந்த திவரின் பேச்சன்றோ
ஆடம் பரத்தை விரும்பாதார்
 அன்னை நாட்டை விரும்பியவர்
பாடம் ஆனார் படமானார்
 பகட்டை விரும்பா தலைவரிவர்

யாரும் தீட்டா திட்டங்கள்
யாரும் திட்டா வகைமுடித்துப்
   பாரும் மிச்சம் மிஞ்சிவரும்
  பணத்தை அரசு நிதிசேர்த்தார்
நேரு வோடு சாஸ்திரி நம்
நிகரில்லாத இந்திராவை
பாருக்களித்த முதல்வரிவர்
 பண்பால் உயர்ந்த மனிதரிவர் 

ஆழி யாறு பவானியணை
  அடடா  கோவை பரம்பிக்குளம்
வாழி சாத்த னூர்மேட்டூர்
  வையை அமரா வதியணையும்
ஊழிக் காலம் நிலைத்துநிற்கும்
 உறுதி நமக்கும் உணர்த்திடுமே
ஊழின் வலியை வென்றதனால்
உலகம் வியக்கும் புனிதரிவர்

நீண்ட கைகள் இவர் கைகள்
 நீண்டதில்லை எவரிடத்தும்
ஆண்ட தகைமை கண்டதனால்
அகிலம் எல்லாம் போற்றியதே
பூண்ட பொறுமை கண்டிந்தப்
பூமி பெருமை கொண்டதுவே
யாண்டும் இவரை நினைக்குங்கால்
எதிர்த்தார் கூடத் துதிப்பாரே

கரிசல் நிலத்தில் பிறந்தவராம்
கரிச னத்தால் உயர்ந்தவராம்
கரிஇ ருக்கும் நெய்வேலி
கண்டு பிடித்த வேளையிலே
புரிந்து சொன்னார் இவரதனை
புரிந்தும்  மையம் மறுத்தாலும்
அரிய திட்டம் இவர் கொணர்ந்தார்
அதனை யாரும் மறுப்பாரோ?

அணுவைப் பிளக்கும் வேளையிலும்
அதிலும் இவர்தாான் சிரிப்பாரே
அணுமின் சாரம் கல்பாக்கம்
அமைத்தார் சேலம் உருக்காலை
அணுகு  முறையோ தொழில்நுட்பம்
அறிஞர் போற்று(ம்) மதிநுட்பம்
நுணுக்கம் பார்த்தால் புவியெல்லாம்
 நுட்ப மென்று வியக்காதோ

நான்கு வேட்டி கதர்ச்சட்டை
நான்கு மட்டும் கையிருப்பாம்
 பாங்கை எண்ணிப் பாருங்கள்
பாரில் இவரே மாணிக்கம்
நான்கு பேரா சுமப்பார்கள்
 எட்டுக்  கோடி பேர் சுமப்போம்
  நாங்கள் போற்றும் பெருந்தலைவர்
நமது காம ராசர்தான்...

சு.அய்யப்பன்
109 திருவள்ளுவர் நகர்
கோவில்பட்டி- 628501
 

089.

தன்னலமற்ற கர்மவீரர் காமராஜர்  

 விருதுநகரில் உதயமான சூரியன் . 
 
குடும்பத்தின் கஷ்டத்தை போக்க படிப்பினை பாதியில் விட்ட கர்மவீரர். 
 
அரசியல் தலைவர்களின் உரையாற்றால் அரசியலின் மீது ஈர்ப்பு பெற்ற பெரும் தலைவர்.
 
 அரசியலின் மூலம் ஏழை மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஏழைப் பங்காளன். 
  
ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி கிடைக்க பல பள்ளிகள் திறந்து வைத்த  ஆசான்.  
 
 மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து பல்லாயிரம் மாணவர்களின் கல்வி கண்ணாக இருந்த தன்னலமற்ற தந்தை.

ஜாதி மத வேறுபாட்டை மாற்ற பள்ளி மாணவருக்கு இலவச பள்ளி சீருடை தந்த படிக்காத மேதை.
   
படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்க பல தொழிற்சாலைகளை திறந்து வைத்த தென்னாட்டு காந்தி.
  
மணிமேகலை. 
திருப்பூர்.

 

090.

காமராசரின் சீர்மிகு திட்டங்கள் 

விருதுப்பட்டியில் வளர்ந்த கற்பகத் தருவே,
 பெண்களுக்குக் கல்வி மறுத்த,
மனுதர்மத்தை மறுத்த
மனுநீதி வேந்தனே! கல்வியில் புதுமை புகட்டிய புதுமையாளரே! குருகுலக் கல்வியை மாற்றிக் காட்டிய மன்னவனே !
மண்ணின் மக்கள் அனைவருக்கும்,

 மறுக்காமல் கல்வி நிலையக் கல்வியை

 வழங்கிய அரிய கலைஞரே !
ஏழை எளிய மக்களின் துயர் துடைத்து,

 பசிப்பிணி போக்கிக் கல்வி கற்றிட ,
கல்வி நிலையங்கள் பல தந்தவரே,
 ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு அறுக்க,
 பள்ளியில் சீருடை தந்த சீராளனே !
வேளாண்மை சிறக்க நீர்ப்பாசன 
திட்டங்கள் பல வகுத்த வல்லாளரே!
 நின் நீர்ப்பாசனத் திட்டத்தால்,

 பல அணைக்கட்டுகளைக் கண்டது தமிழகம் .
அவை என்றும் என் புகழ் பாடும்.
 வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்கவும் ,
வறுமை போக்கி வளம் காணவும்,
 ஏற்றம் மிகு மாற்றத்தைக் கொண்டு வரவும், தொலைநோக்குத் திட்டங்களால்., தொழிற்சாலைகள் பல அமைத்த வித்தகரே!
 நின் தொலைநோக்குத் திட்டங்கள்  - என்றும்

 எங்களுக்குக் கலங்கரை விளக்கு .
   முனைவர். சு. ஏஞ்சல் லதா. 
வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி, காயல்பட்டினம் .

091

 

கல்வித் தந்தையே!                                                                                                                             விருதுநகரைச் சிறப்பித்தவரே!                                                                                         சிவகாமியின் கருவில் பூத்து                               'ராசா' என அழைக்கப்பட்டவரே!                                                                                   தெய்வத்தின் பெயரைக் கொண்டவரே!                                                                                            l                                                                           காஞ்சியை ஆளும் காமாட்சியே                      தமிழ்நாட்டை ஆண்ட 'காமராசு'                        தன் ஆளும் தன்மையால் 
மக்கள் மனதைக் கொள்ளை கொண்டவரே!                                                             செவிக்கும் வயிற்றுக்கும் உணவிட்டு            ஏழை மக்களின் வாழ்வில் ஒளியேற்றியவரே!                                                      தன் அனுபவத்தால் படிக்காத மேதையானவரே!                                                 பொறுமை காத்தவரே!                                          பூமியை ஆண்டவரே!                                                                                                     எட்டுத்திக்கும் சென்றவரே!                                   வான்புகழ் அடைந்தவரே!                                                                                               தன்னடக்கம் கொண்டவரே!                                                                                                                         மக்கள் நலம் காத்தவரே!                                             கர்மவீரரே!                                                           கருப்பு காந்தியே!                                                         தென்னாட்டு காந்தியே!                                                                                                         நீயோ இன்று  சிலையாக                                       ஆனால் என்றும் மலையாக                                                                                                      மக்கள் மனதில் நிலையாக                                         உன் புகழ் ஓங்குக!                                                                                                                   வையம் உள்ளவரை..............                                                                                                         முனைவர் பா.ரமணி, கௌரவ விரிவுரையாளர், அரசு கலைக்கல்லூரி, தர்மபுரி-5 

 

092

கர்மவீரர் காமராஜர்...

 கர்மவீரர் காமராஜர்.
கருப்புத்தமிழன் ராஜன்.

காமாட்சி என்றே வளர்ந்தவர் நல்லாட்சி என்பதை தந்தவர்.

அரசியல் எனும் நாடகத்தில் அரிச்சந்திரனாய் விளங்கியவர்.

தமிழகத்தின் பொருளாதாரத்தை தரத்துடனே உயர்த்தியவர்.

தொலைநோக்கு சிந்தனை கொண்டவர்.
தொல் பண்பாடும் கண்டவர்.

எளிமை என்பதின் சின்னம் இவர்.
உயர்ந்த நோக்கம் எண்ணமும் இவர்.

திட்டங்கள் அளித்த ராஜ மந்திரி. ஊழல் அழித்த ராஜதந்திரி.

தமிழகம் பெற்ற வரம்.
அரசியல் மீட்டிய ஸ்வரம்.

கம்பீரசிலையாய் நடந்தவன்.
கர்மவீரனாய் திகழ்ந்தவன்.

   தன.மகேஸ்வரி.
  கடலூர்.

 

93.

தென் திசை இமயம் காமராசர்

தென் திசை தன்னில் உதயம் கொண்ட
தென்னவர் அவரின் புகழதனை அந்த
இமயம் கூட எழுந்து பார்க்கும்
இதயம் எல்லாம் மண்டி இடும்....

இதயம் தன்னில் கலந்தவரே
இமைகள் தன்னில் நிறைந்தவரே
மாமலை முகடாய்  உயர்ந்தவரே
மறையா சூரியன் போன்றவரே...

கண்ணியம் அதை காத்தவரே
கடமை மறவா காதலரே
கல்வியைக் காத்த காவலரே
தமிழ்த் தாய் ஈன்ற கலங்கரையே...

எண்ணி எண்ணி மகிழ்கின்றோம்
எல்லை இல்லா நூம் புகழை
அழியாப் புகழைக் கொண்டவரே
அஞ்சா நெஞ்சம் கொண்டவரே...

நெஞ்சம் நிறைந்த நாயகரே
வஞ்சம் இல்லா மானிடமே
கொஞ்சும் தமிழ்ச் சொல்லாலே - சொல்ல
கொஞ்சம் வந்துள்ளோம் காமராசர் புகழதனை...

எண்ணம் தன்னில் உரு கொண்ட
எளிய சொற்கள் தன்னாலே 
வாழ்த்திச் சொல்லும்  பாமாலை -இது
வணங்கி மகிழும் பூமாலை....

இதுஎன் சொந்த படைப்பு

முனைவர் விஜி சிரோமணி,
உதவிப் பேராசிரியர்,
பிரின்ஸ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
சென்னை -73

 

094

கலியுலக அரிச்சந்திரனே!
குமாரசாமி  - சிவகாமிக்கு காமாட்சியாய்

சிறு வயதிலேயே சிதைந்து போன கல்விக் கனவுகளை வறுமையால் இழந்தவனே!

போராட்டக் குணத்தால்
சுதந்திரத்திற்காக
பலமுறை சிறைவாசம் சென்றவனே!

அமைதியான பேச்சாற்றல், 
பொறுமையான குணத்தினாலே
அனைவரையும் கவர்ந்தவனே!

அரசியல் பாதையில் தனி முத்திரையோடு தமிழக முதல்வராக அவதரித்தவனே!

மக்களின் அறியாமை, 
வறுமையைப் போக்க கல்விக்கே முதலிடம் கொடுக்க மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவனே!

தமிழகம் முதல் மாநிலமாக தலைநிமிர பல வளர்ச்சித் திட்டங்களை வகுத்தவனே!

மழைநீர் வெள்ளமாய் கடலில் கலக்காமல் பல அணைகளைக்  கட்டிய நவீன கரிகால் சோழனே!

ஆட்சியில் இளைஞர்களுக்கு  முன்னுரிமை கொடுத்தவனே!

அரசியல் ஆடுகளத்தில் சாணக்கியனாய் வலம் வந்தவனே!

அரிச்சந்திரனைப் போல உண்மையாய் வாழ்ந்த கர்ம வீரனே!

ஆசையில்லாமல் வாழவே துறவறம் மேற்கொண்டவனே!

வறுமையை வரப்பிரசாதமாக பெற்று, பிறர் வறுமையைப் போக்கவே வாழ்ந்த வள்ளலே!

அகிம்சைக்கு தென்னாட்டுக் காந்தியாய் சதுரங்க ஆட்டத்தில் ராஜாவாய் எங்கள் காமராஜனே!

பேரும் ஊரும் கொண்டவனே.
இருந்தாலும் இறந்தாலும்
பேர்சொல்ல வேண்டும்.
இவர்போல யாரென்று
ஊர்சொல்லவேண்டும்.     

      - கவிஞர் கி மு செல்வன்.
                    பருகூர்
       கிருஷ்ணகிரி மாவட்டம்.

 

095.

தலைப்பு.. காமராஜர் கவிதைகள்

மனிதருள் மாணிக்கமே//

விருதுநகரில் பிறந்த கருப்பு வைரமே//

கர்மவீரர் காமராஜரே//

உழைப்பால் உயர்ந்த வள்ளலே//

உன் போல் உழைப்பால் உயர்ந்தவர் யாருமில்லை//

பாரத ரத்னா விருது பெற்ற கர்மவீரரே//

மங்காத ஒளியின் மன்னனே//

படிக்காத மேதை கருப்பு நிலாவே//

கல்விக்கண் திறந்த மாணிக்கமே//

மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்த கர்மவீரரே//

கிங்மேக்கர் என்று பெயர் பெற்றவரே//

எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவரே//

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சரே//

ஆட்சி பொறுப்பை முழு பொறுப்புடன் செய்தவரே//

சமூகப் பொறுப்புகளை உண்மையுடன் செய்த கர்மவீரரே//

என்றும் மங்காத மாணிக்கமே//

அரசியலில் இளைஞர்களுக்கு முழு பொறுப்பு தந்தவரே//

பல அணைகள் நிறுவனங்கள் கட்டியவரே//


த.மாலதி 
சேலம் மாவட்டம்.

 

096.

*விருதுநகரின் விரு(ழு)து*

சூலை
பதினைந்தில்
உதித்த
முத்து !

விருதுநகர்
தந்திட்டக்
காலத்தின்
விருது !

சமூகத்தைப்
படித்த
நடமாடும்
பள்ளிக்கூடம் ..

நடப்பினை
அறிந்த
நடிக்காதக்
கலைக்கூடம் ..

காட்சிக்கு
எளியவராய்க்
கட்சியிலே
தொண்டு !

உதவிக்குப்
பிறந்த
மக்களின்
மலர்ச்செண்டு !

முதல்வர்
பதவியில்
என்றும்
முதலிடம் ..

மக்களின்
இதயத்தில்
என்றென்றும்
தனியிடம் ..

காமராசர்
ஆட்சி
முழக்கம்
எப்பொழுதும் ...

காமராசர்
இல்லையே
கண்ணீரில்
தமிழகம் ...

கல்வி
தந்து
அழியாப்
புகழானாய் !

மதியவுணவு
தந்தே
கல்விக்குத்
தாயானாய் !

அணைகளைத்
உருவாக்கி
பசுமையைக்
காத்தாய் !
 
தொழிற்சாலைகளை
உருவாக்கி
பொருளாதாரத்தை
அரவணைத்தாய் !

பிரதமர்களை
முன்மொழிந்து
காலத்தால்
கவனிக்கப்பட்டாய் .!

தோல்விக்
காலத்திலும்
தளராமல்
பாடுபட்டாய் .!

செயலின்
தீரருக்குச்
சீடராய்க்
கர்மவீரர் ..

கொள்கைகளில்
உறுதியான
உதவியான
பெருந்தலைவர் ..

அணையா
விளக்காய்
என்றும்
ஒளியாகிறாய் ..!

மறைந்தும்
மக்களின்
மனதில்
வாழ்கிறாய் ..!

முனைவர் இரா. இராமகுமார்,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
விவேகானந்தா கல்லூரி,
அகஸ்தீஸ்வரம்,
கன்னியாகுமரி மாவட்டம்.

 

097.

*விருதைநாயகன்*

கருப்பு வானில் வெண்ணிலாவாகவே..
கருத்த உடலில் வெண்ணிற ஆடையுடனே..
விருதுபட்டியில் முளைத்த விடிவெள்ளியே!!

ஏழ்மையில் தொலைத்த ஏட்டு படிப்பை..
தாழ்மையின்றி அனைவருக்கும் கொடுத்த துடிப்பே..

பசித்த வயிறும் காதடைக்கச் செய்திடுமோவென..
புசிக்க மதியஉணவிட்டு அறிவுப்பசி போக்கியவரே!!

ஏழைகள் கல்வி கண்ணை திறந்தவரே!!
தாழ்த்தப்பட்டோரை ஏணியாய் உயர்த்தியவரே!

சீருடை திட்டத்தால் மாணவச் செல்வங்களை..
சீர்படுத்தியே சிந்தனையில் ஒன்றாக்கியவரே!!

இலவச கட்டாய கல்வி திட்டத்தால்...
இலவம்பஞ்சாய் கல்விக் கட்டணமும் ஆச்சே!

தொழிற்சாலைகள் தொடங்க காரணமான முதல்வரே!!
கழிவுகள் பலவற்றை நீக்கிய கருப்பு காந்தியே!!

தென்னாட்டில் வாழ்ந்த பெருந்தலைவரே!!
பன்னாட்டிலும் மணக்குது உந்தன் சிறப்பே!!

கி. உமாமகேஸ்வரி விருதுநகர்.

 

098.

*கர்மவீரர் காமராசர் !* 

ஏழை மக்களுக்கு பணியாற்றிய 
ஏடிலில்லா பெருந்தலைவரே ! 
ஏட்டுக்கல்வியின் பெருமை உணர்த்திய 
எதார்த்த உலக மக்களின் நாயகனே ! விருதுநகரில் பிறந்த படிக்காத மேதையே ! 
விருதிற்காக ஏற்றவேண்டும் உம்மை பல மேடைகளிலே ! 
குமாரசாமி சிவகாமி தம்பதியின் கர்மவீரரே ! 
தமிழ்நாடே போற்றும் தென்னாட்டு காந்தியே ! 
அரசியல் தலைவராக பணியாற்றிய 
இந்திய தேசத்தின் மன்னனே ! 
உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்திற்காக 
உரிமை கொடுத்து சிறை சென்றவரே ! 
தனக்காக செய்வோருக்கு நடுவில் 
தாய்பூமிக்காக செய்த தங்கமகனே ! 
நேர்மையின் வழிநடந்த நவநீதனே !
நீதியிலே சிங்கநடைபோட்ட நீதிமானே ! 
தமிழக முதல்வராக பதவியேற்று 
தன் நாட்டிற்காக உழைத்த 
தன்னிகரில்லா வரம் நீர் அய்யா ! 
அக்டோபரிலே உயிர்மாய்த்த 
அடங்காத காளை நீரே அய்யா  ! 
உம் பெருமை கோடியுள்ளது 
என் பொறுமை எங்கோ ?‌
சீறிவிட்டேன் சிட்டெரும்பாக உந்தன்  வரிகளில் மயக்கம்கொண்டு !
கர்மவீரரே ! காமராசரே ! 
கல்விக்கண் திறந்த தாரக மந்திரமே ! .

-   கவிஞர் கு. ஜனனி ,
    நாமக்கல்.

 

099.

தலைப்பு: காமராஜரின் பெருமைகள் 

கீர்த்தி குறையாத மக்கள் தலைவர்

போராட்டங்களைக் கண்டு அஞ்சாத தலைவர்

அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தின் மூலவர்

இந்திய நாட்டில் ஆங்கிலக் கல்வியைக் 

கற்றுக் கொள்ளாத முதல் முதலமைச்சர் 

பள்ளிகளில் மதிய உணவுத்திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் 

ஆசிரியர் ஓய்வூதியத் திட்டத்தை ஆரம்பித்தவர்

பெரியாரால் பச்சைத் தமிழன் என்றழைக்கப்பட்டவர்

சமூக நீதிக்கான ஆட்சியாக வழிவகுத்தவர்

குலக்கல்வி முறையினை ஒழித்து கல்விப்

புரட்சிக்கு வித்திட்ட கல்விப் புரட்சியாளர்

தொழிற்சாலைகளை உருவாக்கி தொழிற் புரட்சிக்கு

வழிவகை செய்த தொழில் புரட்சியாளர்

 நீர் வளத்தைப் பெருக்கும் முயற்சியாகப் 
 
பாசனத் திட்டங்களைக் கொண்டு வந்தவர்

மின்உற்பத்தியில் மகத்தான சாதனைகள் நிகழ்த்தியவர்

நில உச்சவரம்புச் சட்டத்தின் மூலம்

நிலச் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டவர்

எளிமை, நேர்மை, தூய்மை ஆகியவற்றை 

வாழ்வின் தாரக மந்திரம் ஆக்கியவர்

நாடு போற்றும் உத்தமனை நினையாத

நாளில்லை என்று சொல்லும் அளவுக்கு

நல்லாட்சி செய்த நன்மகனை நாளைய

இளைய தலைமுறையினரும் நினைவு கூறும்

வழிமுறைகளைத் தொடர்ந்து செய்து வருவோமாக..

பெயர்: க.ஹெலன்
ஊர்.

 

100.

வியப்புக்குரிய மாமன்னரே

விருதுப்பட்டியீன்ற வள்ளலே பல
விருதுக்கு ஏற்புடையவரே
முதல்வன் பதவியிலே
மும்முறை பணியாற்றியவரே
சொந்த விருப்பங்களின்றி நாட்டு
சொந்தங்களின் விருப்பத்தை_உம்
விருப்பமாக ஏற்று வாழ்ந்த
வியக்கத்தக்க மாமனிதரை!
அரசியலின் முன்னோடியான உம்
அரசாட்சியில் பிழையேதும் காண 
இயலவில்லையே !கல்வி கற்க
இயலாத மாணாக்கர்க்கென பல
திட்டமமைத்து பிறர் நலனுக்கென
திட்டங்கள் வகித்தவரே   கல்வி
கண் திறந்த நீர்
கண்ணிமை மூடும் வரை
வறியவரின் துன்பத்தையும் நாட்டு
வறுமையையும் நீக்க முயன்ற
மாமன்னரே _நீர் பிறந்த
மண்ணில் பிறக்க நான்
எத்தவம் புரிந்தேனோ!

பெஹாஷினி.தே.ஆ.
எஸ்.என்.எம்.வி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
கோயம்புத்தூர்.

 

0101

கார்த்திகைக்குப் பின் மழை இல்லை கர்ணனுக்குப் பின் கொடையும் இல்லை காமராஜருக்கு பின் அணையும் இல்லை குமரிக்கோர் காமராஜர் என்ற பட்டம் இந்த தண்ணின் மைந்தருக்கு உண்டு பல தொழிற்சாலைகளும் பல அணைகளும் உன் சிந்தனையில் உதித்தது உயிர்பெற்று கம்பீரமாய் காட்சி தருகிறது இன்று  அணைகளின் நாயகன் நீ விவசாயிகளின் ஒளிவிளக்கு நீ   கேரளா தமிழ்நாடு தண்ணீர் இணைப்பு திட்டம் தேசம் காக்கும் பேராவல் கொண்ட தலைவர் தான் காமராஜர் விவசாய வளர்ச்சி திட்டம் எல்லையற்ற வறுமை நோயால் இன்னல் பட்ட மக்களின் அல்லல் யாவும் ஒழிக்க எண்ணில் அணைகள் கட்டி வளமிலாக் கொல்லையாவும் நெல்லை ஏந்திக் கொஞ்சும் நன்செய் ஆக்கிய வல்ல ஆட்சி மாட்சி பேசும் வாயில் அமுதம் ஊறுமே பாசன வசதியை பெருக்கியவர் காமராஜர் காமராஜர் கண்மூடினார் அவரது வீட்டை உரிமையாளர் எடுத்துக்கொண்டார் காரை கட்சி எடுத்துக் கொண்டது உடலை 
நெருப்பு எடுத்துக்கொண்டது அவரது பெயரை வரலாறு எடுத்துக்கொண்டது.


ஆர்.அபிராமி
சிதம்பரம்.

 

102

உத்தமத்தின உற்ற வரவு 
   ************************
கறுப்பு நிறத்தில் 
கர்ம வீரர்
காலம் போற்றும்
காம ராசர்
பொறுப்பு ணர்ந்த
பிறவி சூரர்
பணியில் தேர்ந்த 
பொறுமை காரர்

பதினைந் தேழில்
பாரில் பிறந்தார்
பயனாய் வாழ்க்கை 
பயணம் சிறந்தார்
நிதியை ஏழை
நாடித் தந்தார்
நலிந்தோர் இதயம் 
நிலைத்து வாழ்ந்தார்

சென்னை ஆண்டார் 
தலைவர் என்று
சீர்மை மிகுந்து
செய்தார் தொண்டு
உண்மை உழைப்பு
ஊனில் உண்டு
உலகம் வியக்கும் 
உவகை கொண்டு

கல்வி அறிவு 
குறைந்த போதும்
கடமை புரிய 
கடக்கும் பாதம்
வில்லத் தனமும் 
வெறுப்பார் தீதும்
வள்ளல் குணமே 
மதியின் வேதம்

வானைப் போன்று
வளர்ந்த உருவம் 
வாய்மை கால்கள்
வீற்று உலவும்
ஆன மட்டும் 
அற்றோர்க் குதவும்
அவனி பார்த்த 
அருமை வடிவம்

பள்ளிக் குழந்தை 
பசிக்கு உணவு
பலிக்க வைத்தார் 
பலநாள் கனவு
உள்ளம் முழுதும் 
ஒழுக்கம் உறைவு
உத்த மத்தின் 
உற்ற வரவு

 கவிவேந்தர் டாக்டர் சோமதேவன் சோமசன்மா ஜொகூர் மலேசியா

 

0103

தன்னிகரில்லா பெரும் மனிதன் கு. காமராஜர்..

என்னவென்று சொல்வேன், 
எப்படி சொல்வேன்,
உன்னை போன்று ஒரு தலைவனை மீண்டும் நம் நாடு கண்டிடுமா என்று!

தோற்றத்திலோ அவன் ஒரு மாவீரன், 
குணத்திலோ அவன் ஒரு குசும்புக்காரன், 
படித்ததோ வெறும் ஆறாம் வகுப்பு ஆனால் பாடம் புகட்டுவதோ பட்டம் எட்டியவர்களுக்கு, 
தனக்காக வாழும் இந்த சுயநல உலகில், 
தனக்கென்று வாழாமல் தன் மக்களுக்காக வாழ்ந்த தவப்புதல்வன்!

கனிவான முகம்,
கல்லமில்லா சிரிப்பு, 
சோர்வில்லா பேச்சு,
கண்ணியமான நடை,
சாமர்த்திய சிந்தனை,
மக்களிடையே வேறுபாடு காணாத குணம்,
சுகத்தை ஒருபோதும் அவர் விரும்பியதில்லை,
ஆடம்பர வாழ்க்கையில் அவர் பெரிதும் நாட்டம் காட்டியதில்லை,
பொய் பிடிக்காது, 
உண்மையின் மருஉருவம் அவரே கர்மவீரர் காமராசர்!

காமாட்சி என்னும் பெயர் கொண்டு பிறந்தவர் அவர்,
தாயின் ஆசையினால் ராஜா என்று செல்லமாய் அழைக்கப்பட்டார்,
காலத்தின் திட்டத்தினால் என்னவோ காமாட்சி கூட்டல் ராஜா காமராஜா என்று பெரும் தலைவராய் உருவெடுத்தவர் பெருந்தலைவர் காமராஜர்… 

மக்களின் முன்னிலையில் மக்களுக்காக ஒருவனாய்!
எத்தனை சட்டங்கள், 
எத்தனை திட்டங்கள், 
எத்தனை போராட்டங்கள்,
எத்தனை திருத்தங்கள், 
எத்தனை தொழிற்சாலைகள், எத்தனை அணைகள், 
எத்தனை கல்விக்கூடங்கள் என எத்தனை எத்தனை சொல்வேன் என்று தெரியவில்லை அவரைப் பற்றி கூற!

சாமானிய மக்கள் அனைவரும் தலைவனாவதில்லை, 
ஒரு நல்ல தலைவன் தனக்கென்று ஒருபோதும் வாழ எண்ணியதில்லை!


செல்வி. கவிதாயினி. மு.கோபிகா, ராமநாதபுரம் மாவட்டம், 
கடலாடி.

104

கவிதைப்போட்டி
 தலைப்பு : காமராஜர்
--------------------------------------

 படிக்காத மேதை என்று பெயர்பெற்றீரே

 பள்ளிகள் பலகட்டி சாதனை படைத்திட்டீரே

 அறிவுக் கண்ணை திறந்து வைக்க

 ஆரம்பக் கல்வி அவசியம் என்றே

 கல்வித் தந்தையாய் புரட்சி செய்திட்டீரே

 பள்ளிக் கல்வி தடையின்றி கிடைத்திட 

மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தீரே

 நீரின்றி பாசனம் செய்யாது விவசாயம்

 செழிக்காது என்றே முயற்சி முன்வைத்து

 அணைகள் பலகட்டியே நீரைத் தடுத்து 

பசுமைப் புரட்சிக்கு வித்திட்டு சென்றீரே

 கரை படியாத கரங்களைக் கொண்டவரே

 உம்மைப் போன்ற தலைவர்கள் இனிமேலும் வருவாரோ 

விளக்கை அணைத்து விட்டுபோ என்று கூறி

 இந்த மண்ணை விட்டு மறைந்தீரே

 அணைந்த விளக்கை ஏற்றி வைக்க

 சரியான தலைவரே இன்னும் தேடுகின்றோம்.


 சு. நடராஜன் ,
சிவகிரி,
 ஈரோடு மாவட்டம்

 

105

 

தலைப்பு:சரித்திரம் பேசிடும் அணையா ஒளிவிளக்கு:-
நேர்மையே தனது வாழ்வாக வெண்மை உடையில் காட்சியளித்த எளிமையானவரே//
பள்ளிகள் பல நிறுவி கல்விக்கண் திறந்த படிக்காத மேதையே//
மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்து மாணவர்களின் பசியை போக்கிய பண்பாளரே//
புத்தகமும் சீருடையும் வழங்கி மாணவர்களை ஊக்கப்படுத்தி அறிவுக் கண்ணைத் திறந்தவரே//
நீரினை சேர்த்து வைக்க அணைகள் பல கட்டி அனைவரையும் வியக்க வைத்த வித்தகரே//
மேலோர் கீழோரென்ற ஏற்றத் தாழ்வை அகற்ற பாடுபட்ட தன்னலமற்றவரே//
விருதுகள் பல பெற்றாலும் எளிமையே தனது வாழ்வாகக் கொண்ட கண்ணியமானவரே//
மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து பண்பில் உயர்ந்த கர்மவீரரே//
உலகம் உள்ளவரை அணையா ஒளி விளக்காக உம் புகழ் வாழியவே//
...…….…......................….....
சி.குமுதா
உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)
கோயம்புத்தூர் .

106

எளிமையின் இலக்கணம் காமராசர்         _____________________________உலகம் கண்ட உண்மைத் தலைவர்!!!!!      எளிமைக்கு இவர் தான் அடையாளம்!!!!                       எளிய மாணவர்களின் பசியை அறிந்தார்!!!             மதிய உணவுத் திட்டத்தைக் கொணர்ந்தார்!!!!                    கடமை ஒன்றே கண்ணாக இருந்தார்!!!        விருதுநகர் கண்டெடுத்த தங்கம் அவர்!!!                        கல்விக் கண்தந்த வள்ளல் அவர்!!!                      தொட்டிப்பாலம் விவசாயத்திற்கு கட்டித் தந்தார்!!!!                                   காலத்தால் அழியாத கர்மவீரர் காமராசர்!!!!             தன்னலம் கருதாத கருப்பு வைரம்!!!!                  இவரைப் போல் இன்னொருவர் யாருமேஇல்லை!!!!                 ராஜாக்களை உருவாக்கும் ராசாதி ராசர்!!!!                                       பதவி மோகம் இல்லாத மன்னர்!!!!                                 தமிழகத்தின் தரம் உயர்த்த பாடுபட்டவர்!!!!         தனக்கென வாழா தகைமை கொண்டவர்!!!!            நல்ல காங்கிரசின் முக்கிய  தலைவர்.!!!!       _

முனைவர் பீ.ரகமத் பீபி ஆத்தூர்

 

107.         


கல்விக்கண் திறந்தவர்.

கருப்பு வைரமே!

களங்கம் இல்லாப்
புகழே!

காலத்தால் அழியாத கருவூலமே!

தமிழகம்
பெற்றெடுத்த
தவப்புதல்வனே!

எங்கள் நாட்டின்
தன்னேரில்லாத
தலைவனே!

ஏழைக்கு எளிய
இனிய பண்பாளனே!

மதிய
உணவுத்திட்டம்
வழங்கிய
மாபெரும் வள்ளலே!

மக்கள் நெஞ்சில்
நீங்காத இடம் பெற்ற தூயவனே!

அனுபவத் தேரில்
ஏறி

ஆன்றோர் அறிவுரை நடந்து

பழக எங்களுக்கோர்
வழிகாட்டினாய்.

தினமும் உழைப்பில் ஊறி

தேசபக்தியை நாடி

தீரத்தை மக்கள்
நெஞ்சில் மிக
ஊட்டினாய்.

வீரத்தின் நிலமே!
ஏழைகளின் வரமே!

விரைந்தே
செயல் எதுவும்
நிறைவாக்கினாய்

பாரதத் திலகமே!
பணிந்தே போற்றுகிறோம்.

பார் புகழ
உனது கொள்கை
பரப்பிடுவோம்.

புலவர் ஆ.இன்பவல்லி
ஏம்பலம், புதுச்சேரி

 

108.

*கர்மவீரர் காமராசர்*

விருதுநகரில் விளைஞ்ச வீரமே//

எதற்கும் அஞ்சாத சிங்கமே//

கர்மமே கண்ணாக
செயல்பட்ட கருப்புத்தங்கமே//

கர்மவீரரே,
ஏழைகளின் பங்காளரே//

செய்யும் செயலில்
செம்மையாக செயலாற்றிய செயல்வீரரே//

ஆறாம் வயதில் தானிழந்த கல்வியை//

ஆடுமேய்க்கும் சிறுவனுக்கு  மதியஉணவுடன் வழங்கிய வள்ளலே//

தன்னலமற்ற புனிதமே//

எளிமையே தவமாக
நல்அறமாக வாழ்ந்த
புனிதமே//

அணைகள்,தொழிற்சாலைகள் பலவற்றை உருவாக்கிய உயர்ந்தவரே//

அரசியல் வாழ்க்கையில் உண்மை,நேர்மை,வாய்மையென வாழ்ந்தவரே//

கறைபடியா
கரங்களின் சொந்தமே//

மூன்று வேட்டிசட்டை,
ஒரேவீடுயென வாழ்ந்த உத்தம முதல்வரே//

உமைபோன்ற ஒரு
தலைவனை  தரணி
காணுமோ?

அனைவரின் இதயத்திலும் ஆணித்தரமாக 
பதிந்த இதயமே//

பார்போற்றும் தலைவனே//

ஏழைகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை உருவாக்கியவரே//

மங்காத நாயகனே
பணம்,பொருள்,
புகழ்ச்சிக்கு மயங்காத மாணிக்கமே//

ஒரே சூரியன்;
ஒரே கர்மவீரர் காமராசர்//

நீவிர் மறைந்தாலும்
நின்புகழ் மறையாதய்யா//

ந.ராஜசுலோச்சனா
ஆவடி,திருவள்ளூர்
மாவட்டம்.

 

109

வள்ளலின் அடையாளங்கள்

எளிமையாக வாழ்வதும்;

அன்புடன் நடப்பதும்;

பிறர் துன்பத்தை தம்முடையதாக்கிக் கொள்வதும்;

மனிதர்களை மனிதனாக மதிப்பதும்;

விருது- என்றும் ஊரில் பிறந்து - பல 

விருதுகளை வழங்குவதும்;

வாரம் ஒரு முட்டை மட்டுமே ருசிப்பதும்;

 வாழ்நாள் முழுதும் ரேஷன் அரிசி ருசித்ததும்;

மக்களோடு மக்களாய் வாழ்ந்ததும்;

கதிர்வெட்டி சட்டை அணிந்ததும்;

பார்ப்போர் உள்ளத்தை கவர்ந்ததும்;

எளிமை நடை போடுவதும்;

சிரிப்பில் நினைந்த தருணங்களும்;

ஏழை பணக்காரன் பாகுபாடு இன்றியும்;

நாட்டு வளம் அதிகரிக்கவும் - நீர் ஆற்றிய சேவைகளும்;

நினைக்கத் கண் முன் தோன்றும் அந்த கம்பீர நடையும்;

மாணவர்களுக்கு ஏற்ற பல திட்டங்களை அறிவித்ததும்;

மக்களோடு மக்களாய் இணைந்ததும்; 

கருணை உள்ளம் ததும்பும் - உங்களது

சேவைகள் என்றும் அழியா;

உங்களிடம் கற்றுக்கொள்ள இருப்பது நிறைய;

வாழ்க நீ வீர்- எங்கள்

கருமை நிறக் கண்ணன்

கர்மவீரர் காமராஜர்; உங்கள் பெயர் என்றும் ஓங்குக!!!

 இந்திரஜித் பா . ஊர்: திருவள்ளூர்-602024 

 

110

கருணை வள்ளல் காமராசர்


கர்மவீரரே காமராசரே
காலமெல்லாம்- எங்கள்//

உள்ளத்தில் நிலைத்து நிறகும் கருப்புக்காந்தியே//

முத்தமிழ் நாட்டில் பிறந்த முத்தான 
பெருந்தலைவரே//

நீ படிக்கவில்லை என்றால் என்ன//

பல ஏழைக்குழந்தைகளின் கல்விக்கு காரணமான படிக்காத மேதையே//

உழவும் தொழிலும் சிறக்க உழைத்த உத்தமரே//

தமிழகம் செழிக்க பல அணைகளைக் கட்டிய வற்றாத நதியே//

நீ இல்லாமல் இங்கு அணைகளும் வற்றி 
அல்லவா கிடக்கின்றன//

தொழிற்பேட்டைகளை உருவாக்கி நாட்டின்//

பொருளாதாரத்தை உயர்த்திய தென்னாட்டுக் காந்தியே//

பாரதப் பிரதமர்களைச் சிறந்த முறையில் தேர்வு செய்த ஏழைப்பாங்காளரே//

மதிய உணவுத்திட்டத்தைக் கொண்டு வந்த சகலகலாவல்லவரே//

உந்தன் புகழ் அன்றும், இன்றும்,என்றும் மறையாது நீடூடி வாழ்கவே//
       

தமிழ்கவி.
அ.பாண்டிமுனியம்மாள்,
இடைநிலை ஆசிரியர்,
மதுரை.

111

தெய்வம் தந்த ஆட்சி 
    

என்ன தவம் செய்தது பூமி

 உங்கள் பாதம் மண்ணில் பட

 தெய்வம் தந்த வீடா உங்களுக்கு

 படிக்கின்ற வயதில் முடியும் என்று பார்த்த பார்வை 

12 ஆயிரம் கல்வி கனல் ஏற்றி வைத்தீர்கள்

 படிப்பு அறிவை விட பட்ட அறிவு தான்

 பாடசாலையை திறக்க வைத்த தீர்ப்பு 

நீரின்றி அமையாது உலகம் 

நீங்கள் இன்றி அமையாது அணைகள்

 9 ஆண்டுகளில் ஒன்பது அணை

 வருங்காலங்கள் வாடக்கூடாது  என்று எண்ணிய மகன்

 துண்டை மாற்றிப் போட்டு நீங்கள்

 தொண்டை மாற்றிக் கொள்ளவில்லை

 அதனால் மறந்து போனார்கள் மக்கள் 

மறந்து போனவர்கள்  மரித்துப் போனார்கள்

 நீங்கள்  உயிரில் வாழ்கிறீர்கள் 

டி .எம் .ஆர். இளங்கோவன் குன்னத்தூர் திருப்பூர் மாவட்டம்.

 

112.

 

கர்மவீரர் காமராசர்..
 
விருதுநகரில் பிறந்த கர்மவீரர் காமராசரே 

வியக்கும்படி  வாழ்ந்த மண்ணின் அரசரே 

பெருந்தலைவர் என்று அன்புடன் அழைக்கப்பட்டவரே

நேர்மை குணம் நிறைந்த பண்பாளரே

எளிமையின் நாயகரென்று எல்லோராலும் அழைக்கப்பட்டவரே 

கல்வியை இலவசமாக கொடுத்த நேசரே

கல்லாமையை இல்லாமையாக்கின கருப்பு தங்கமே 

கிராமம் தோறும் பாடசாலை திறந்தவரே 

பல்கலைக்கழகம் அமைத்த பண்பில் சிறந்தவரே 

பாமரரையும் படிக்க வைத்த படிக்காமேதையே

சத்துணவு தந்த தர்மத்தின் தலைவரே

தொழிற்சாலை நிறுவுவதற்கு வித்திட்ட வித்தகரே

உண்மையும் உறுதியும் கொண்ட உத்தமரே

ஒடுக்கப்பட்டவர்களின் உயர்வுக்காக உழைத்த உன்னதமானவரே 

அயராத உழைப்பினால் தமிழ்நாட்டின் முதல்வரானவரே

எளிமையின் சிகரமே ஏழைகளின் அகரமே

ஐந்தாண்டு திட்டங்களுக்கு  அதிகாரம் தந்தவரே

அணைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியவரே

உன்னைப்போல்  முதல்வரை கண்டது இல்லை 

உன்னைப்போல் முதல்வரை இனி காணப்போவதுமில்லை

திருமதி அ கனகவள்ளி காரைக்கால்.

 

113

 தமிழகத்தின் பொற்காலமே....
 

கருப்பு வைரத்திற்குக் கவிதையால் கவிதாஞ்சலி
கனிவான  நெஞ்சத்திற்கே அன்பான கீதாஞ்சலி

தமிழகத்தின் நெற்களஞ்சியம்
தந்த தலைவனே
தென்னகத்தில் பொற்காலம்
தேனமுதாய் படைத்தவனே....

சுதந்திரப் போராட்டத்திலும்
சிங்க மகனாய்
இணைந்தே சிறைபல
இடங்களில் கண்டவனே....

எளிமைக்கே எடுத்துக்காட்டாய்
ஏழைகளின் மனங்களில் 
என்றுமே சிம்மாசனம்
ஏறிய சக்கரவர்த்தியே.....

தீமைகள் கண்டு
திணறி நின்றிடாமல்
தீண்டாமைகள் நீக்கி
தீதில்லா ஆடச்யமைத்தவனே....

 அணைகள் கட்டினாய்
அரசு மருத்துவமனைகள்
அமைத்தே இலவசமாக
அரும்பெரும் சேவைகளாற்றினாய்....

 வசந்த காலத்தில்  நாங்கள் 
வலம் வந்திடவே
சாலைகளை அமைத்தாய்
சாதனைகள் புரிந்தாய்

 மதிய உணவு
மதியாய் தந்த
மன்னவன் புகழை
மண்ணுள்ளவரை போற்றிடுவோம் .....

கவிஞர் இரஜகை நிலவன்
மும்பை

 

114.

கவிதைத் தலைப்பு: காமராசர்..

 

சிவகாமி குமாரசாமியின் சிங்கப் புதல்வனே...

சிங்காரச் சென்னையை ஆட்சி செய்தவரே.... 
 
கடைக்கோடி ஏழைக்கும் கல்வியை கொடுத்தவரே....

கல்விக் கண் திறந்த காமராசரே....

மாணவர்க்கு மதிய உணவளித்த மாமனிதரே....

மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவரே....

மும்முறை தமிழகத்தை ஆட்சி செய்தவரே....

மூத்தோர் வழிநடந்து முத்திரை பதித்தவரே.... 

படிக்காத மேதையாய் பாடம் புகட்டியவரே....

பண்பில் சிறந்தவராய் பாமரனாள் போற்றப்பட்டவரே.... 

ஏழைகளின் பங்காளனே எங்களில் ஒருவரே....

சத்திய வழியில் நடந்து சத்தியமூர்த்தியைத்.... 

தன் குருவாக ஏற்ற சாதனையாளரே.... 

பாரத ரத்னா விருதுக்குச் சொந்தக்காரரே....

பாரே போற்றிப் புகழ்ந்திடும் பண்பாளனே.....

கருணைக் கடலான கருப்புக் காந்தியே.....

காலம் உள்ளவரை உம் புகழ் ஓங்கட்டுமே....!

 ப.லாவண்யா,

விக்கிரவாண்டி.

 

115.

காமராஜர்..

பிறந்த மண்ணில் பரந்தமனமுடன் காலம்
காலம் கைகாட்டும் மாமனிதர் காமராசர்
ஏழைக்கென பிறப்பு இம்மண்ணின் சிறப்பு
மக்களின் அரசர் மனித கடவுள்
தன்னலம் கருதாமல் பிறர்கென வாழ்ந்த மகான
கல்வி கண் திறந்த கல்வியரசர்
மனிதநேயத்தின் மாமனிதர் பன்பின் அரசர்
காலம் கடவுளையும் உயிரை பிரிக்கிறது
எளிய மனிதராய் மனதில் புனிதராய்
வலம் வந்த அன்பான பங்காளர்
தனக்கென இல்லாமல் பிறர்கென வாழ்ந்த
மனித பிறவிதான் புனித மனிதர்தான்
பிறந்த பொழுது சிறப்பின் சின்னமாய்
மண்ணில் சிலருக்கே சிறப்பு இங்கே
அடுத்த அடுத்த தலைமுறையும் பேசும்
காமராசர் ஐயா புகழ் எண்ணாலும்வீசும்..


பா.வெண்ணிலா பாலாஜி நெய்வேலி.

 

116.

கர்மவீரர் காமராசர்

தன்னலம் கருதாது
பொதுநலம் கருதியவர்..
எளிய மக்களும்
ஏடு எடுக்கட்டும் ..
பாமர மக்களும்
பட்டம் பெறட்டும்..
என்று கருதிய
நல் தலைவர்...
படிக்காத 
மேதை
பலரையும் 
படிக்க வைத்தார்...
படிக்க வருபவர்கள்
பசியில் வருவார்கள்..
என்று அறிந்ததாலோ'
மதிய உணவுத்திட்டம்'..
யாவர்க்கும் ஆனதே
மாணவர்க்கு நல்திட்டமாய்...
கதராடையில் கம்பீரம்
ஆசானாக சத்திய மூர்த்தி..
ஏற்று அரசியலில் நுழைந்தவர்;சிறந்தவர்
எளியவர்களின் வாழ்வில்
கல்வி 
ஒளியேற்றியவர் ..
தென்னாட்டு காந்தி
அன்போடு 
அழைக்கப்பட்டார் ..
நாளிதழ் படித்து
நாட்டுநடப்பு அறிந்தார்..
பாரத நாட்டின்
இரு பிரதமர்கள்..
தேர்வு செய்த
தமிழர் காமராசர்..
எளிய உருவம்
எளிமையான வாழ்க்கை
பொற்கால ஆட்சியின்
எளிய முதல்வர்...
அண்ணல் காந்தியடிகள்
அகவை நாளலது..
நெஞ்சு வலியால்
உயிர் நீத்தார்..
எளிய உருவம்
மக்கள் ஏற்றனர்
கல்விக் கடவுளாய்
கல்வி வள்ளலாய்..
பாமரனின் பசியறிந்த
தலைவனாய்
என்றுமிவரே...
கர்மவீரர் காமராசர் ஐயா தான் 
தென்னாட்டு காந்தி
எந்நாளும் சரித்திரமாய்

 சே. லோக சுந்தரம்
பென்னாகரம் ( தருமபுரி )

 

117.

காமராஜர் கவிதை
" விருதுநகர் விஞ்ஞானியே ! இன்றே
விழந்து பார்க்குதே விஞ்ஞானம்!
அரசியலுக்கே ஆசானே ! இன்றே 
அன்னாந்து பார்க்குதே அகிலம்!
பட்டம் பெறாத பகுத்தரிவாளரே!
பல்கலைக்கழகமாக பட்டொளிறுதே உன் பெயர்!
திகைட்டாத திட்டங்களை திகழ்ட்டியவரே !
திகைத்து போய் நின்றே திருப்பி படித்தேன்!
புத்தகங்கள் புரட்டி படிக்காத புத்தரே !
அணைகள் கட்டித்தந்த அண்ணலே ! மீண்டும்,
எங்களை அள்ளித் தழுவ வருவாயா...?
பெருமைமிகு பெருந்தலைவா..! இன்னொரு 
பிறப்பொன்று இருந்தால் பிறந்திடுவாயா ?இந் தமிழ்நாட்டில் "....!!! 

பா.தீர்த்தமலை, B.Sc, B.Ed.,
கள்ளக்குறிச்சி மாவட்டம்.

 

118.

*கர்மவீரர் காமராஜர் விருது 2023 கவிதைப் போட்டிக்காக…*

*கர்மவீரர் காமராஜர்*

சிவகாமி மகனாய் வந்துதித்த சிகரம்!

கல்வி வளர்ச்சிக்கு வித்திட்ட நல்லிதயம்!


செயல்களை நேர்த்தியார் செய்யும் கர்மவீரர்!

மக்கள்நலனை நாடிய தனித்துவமான தீரர்!


தாழ்ந்தோரை உயர்த்துவதில் உயர்ந்த உள்ளம்!

எக்காலத்திலும் வற்றாத கர்மவீரரின் புகழ்வெள்ளம்!


படிக்காத போதும் நிறைந்திருந்த அறிவு!

செய்யும் செயல்கள் அனைத்திலுமே செறிவு!


அரசியல் களத்தினிலே நேர்மையான செயல்பாடு!

ஏழைகளின் உயர்வினிலே குறையா ஈடுபாடு!


துடிப்பும் உற்சாகமும் கொள்கையும் உயிர்நாடி!

செய்த நற்செயல்களால் புகழேவந்தது இவரைத்தேடி!


செயல்படுத்திய திட்டங்கள் அனைத்திலும் தொலைநோக்கு!

மக்கள் நல்வாழ்வொன்றே கர்மவீரரின் உயர்நோக்கு!


நல்லோரின் நற்செயல்களை பேசும் வரலாறு!

அவ்வரலாற்றுக்கே கிடைத்தது இவரால் பெரும்பேறு!

ச. கோபிநாத்,
சேலம்.

 

119.

*வெண்ணிற வேந்தனே*

விருதுநகரின் விருதாக விளைந்த வித்தகர் 

விண்ணை தாண்டும் புகழேந்திய கர்ம வீரர் காமராஜரே

ஆறு அகவையில் தந்தையும் இழந்தனன்

அன்னையே தந்தையாயும் ஏழ்மையில் போராடிட

பள்ளிப்படிப்பும் பாதியிலே நிறுத்திட்ட  நிலையிலே

பணியில் சேர்ந்திட்டே வாழ்வாதாரம் உயர்த்திடவே 

தேர்தலில் நின்றே முதல்வராக வாகைசூடவே 

கற்கும் கல்வியில் தாழ்வின்றி கற்றிட

சீருடை திட்டமே சீர்கொண்டே சிறப்பித்ததென்

பள்ளியோடு நில்லாது உயர்கல்வி கல்லூரிகளுமே

கல்வியின் முக்கியத்துவம் கட்டணமில்லா கட்டாயகல்வியே

மாணவர்கள் ஏழ்மையாலே பசியின்றி படித்திடவே

மதிய உணவை பரிமாறிய வள்ளலே 

நீர்ப்பாசனமும்  நிலைத்தே இன்றும் நின்றிட

தொழிற்சாலைகளோ தொழிலாளியின் நிலை மாற்றிட

படிப்பைத்தொடர முடியாத  நிலையிலும் மேதையவர் 

தொண்டுகளின் சிறப்பே தென்னாட்டு காந்தியே

ஏழை கல்வியின் கண் திறந்தவரே

மறைந்த பின்னும்  பாரத ரத்னா விருதே

ஒன்பது ஆண்டு வெற்றியின் ஆட்சிகாலமே

ஒப்பில்லா ஆட்சியென போற்றப்படும் பொற்காலமே !!!

 

திருமதி  மு. சுகந்தலட்சுமி பிரதாப்,
சார்ஜா, 
ஐக்கிய அரபு அமீரகம்.

 

120.

 

அன்புடையீர் 
வணக்கம். கர்ம வீரர் காமராசர் விருது2023 க்கான கவிதையை
அனுப்பியுள்ளேன். கவிதையைக் கனிவுடன் ஏற்றுக் கொள்க.
தலைப்பு:-
          செயல் வீரர் காமராசர் 

விருதுபட்டியில் தோன்றி விருது
ஆனவரே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாயகன் ஆனவரே

கல்லாதபேர் இல்லாத நிலை
உருவாக
கருத்தாய்க் கொண்டு உழைத்த
வரே

ஊர் தோறும் திறந்தீர் பள்ளி
ஒப்பற்ற மதிய உணவுத் திட்டமும் 

இலவசக் கல்வியும் சீருடையும்
தந்து
எல்லோரும் கற்க வழி கண்டீர்

ஆசிரியர் அனைவருக்கும் ஓய்வூதியம் அறிமுகம்
முதியோர்க்கும் ஓயவூதியத் திட்டம் வழங்கினீர்

பொறியியல் கல்லாத பொறிஞர் 
நீர்கண்ட
பெரும் நீர்த் தேக்கங்களோ பத்து

மாத்தூர் தொட்டிப் பாலமின்று முன்
மாண்பினைப் பறைசாற்றுதே ஆசியாவில் பெரிதென்று

இந்திய தொழில் நுட்பக் கழகம்
சென்னையில்
பாரத மிகுமின் நிறுவனம் திருச்சியில்

எத்தனை எத்தனை திட்டங்கள்
உன்னாட்சியில்
அத்தனையும் உன்பெயர் சொல்லுது மாட்சியில்

உடல் கருப் பென்றாலும்
உள்ளம் முழுவதும் வெள்ளை

மண்ணடிப் பாலத்தில் மாட்டுவண்டி கீழிறங்க
மனம் பதைக்க ஓடோடி
பின்நின்று மேற் தள்ளியவன்

அன்று நீ தமிழக முதல்வன் 
அய்யா நீ ஏழைப் பங்காளன்

நாட்டு  நலன் காக்கத் தன்
நலன் துறந்த  தூயவன் மாயவன்

மூத்தோர் பதவி விலக முன்மொழிந்து
முன் வந்து பதவி துறந்தவன்

ஒன்ப தாண்டுகள் உன்னாட்சி
உயரிய 
பொற்கால நல்லாட்சி இனிவருமோ செயல்வீரா

சிவகளை கவிஞர்       சே.முத்துவிநாயகம்
திருநெல்வேலி

 

121

கர்மவீரர் காமராஜர்

காரியத்தில் கண்ணாயிருப்பார்
காலத்தை பொன்னென்ன மதிப்பார்
கொள்கை பிடிப்பு உள்ளவர்
கண்னென்ன மக்களை போற்றுபவர்
அணைகள் கட்ட காரணமாயிருந்தவர்
தொழிற்சாலைகள் திறக்க வழி செய்தவர்
பல பள்ளிகளை உருவாக்க பாடுபட்டவர்
சீருடை திட்டத்தை கொண்டு வந்தவர்
பள்ளி மதிய உணவு திட்டத்தை துவக்கியவர்
தன் அரசியல் திறமையால் உலகினை ஆண்டவர்
இந்திராகாந்தி பிரதமராக காரணமாயிருந்தவர்
எதிர்கட்சி தலைவர்களை தன் உடன்பிறப்பாய் நினைத்தவர். 
காமராஜரின் ஆட்சி பொற்காலமாகும்

                   கவிஞர்  திருமதி லலிதா ஷ்யாம்
                                      மதுரை
                                    

122.

கர்மவீரர் காமராசர்

தெய்வக் கலையும் ராஜ நடையும் ஒருங்கு இணைந்தது உனது பெயரோ!

வடக்கு ஒரு மகாத்மா காந்தி
தெற்கு நீயொரு கறுப்பு காந்தியோ!

சிறு வயதிலேயே தந்தையை இழந்ததால் தமிழ்நாட்டிற்கு சிறந்த தந்தையாக விளங்கினாயோ!

மூடிய ஆறாயிரம் தொடக்கப்பள்ளியை திறந்ததினால் கல்வி கண் காமராசர் என்றார்களோ!

பசியின்றி படிக்க மதிய உணவு கொடுத்ததால் கருமமே கண்ணாக கொண்டவனோ!

தான் பெறாத கல்லூரி படிப்பை மற்றவர்களுக்கு அளித்த கொடை வள்ளலோ!

ஒன்பது கிரகங்கள் உலகை 
ஆள்வதுப்போல்
உமதொன்பது
நீர்ப்பாசன திட்டத்தால்
தமிழனை ஆள்கிறாயோ!

தொழிற்சாலையால் தமிழ்நாட்டை வளரச் செய்தாயோ!

கிங்மேக்கராக திகழ்ந்து பொற்காலம் 
ஆட்சிசெய்தாயோ!

முனைவர்
ந.கல்யாணி
உதவி பேராசிரியர்
எஸ்.ஆர்.எம் திருச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

123

 

கண்ணியம் தவறாத கர்மவீரர்

 தன்னலம் கருதாத தியாகச் செம்மலே//

 ஏழைப் பங்காளனே! தென்னாட்டு காந்தியே//


 கடமை கண்ணியம் கட்டுப்பாடும் என்றும்//


 உன்னை வாழ்த்தி போற்றி வணங்குமே//


 அரசியல் மூலம் உயிரிடத்தில் சென்றாலும்//

 கறைப் படாத கையாக வாழ்ந்தவரே//


 பிறருக்காக மட்டும் வாழ்ந்த வள்ளலே//


 கடமையை கண் போல் காத்தவரே //

மக்களை மட்டுமே செல்வாக்காய் நினைத்தவரே //


உன்னைப் போன்ற மாமனிதர் மறுபடியும்//


 பாரதத்தில் தடம் பிடிக்க நாங்களனைவரும்//


 வழிமேல் விழிவைத்து மனதாரக் காத்திருக்க//

 விரைந்தே பிறப்பாய் எம் துயர்த்துடைப்பாயே. . . //


 இசைப்பேரரசி
ல தா சங்கரன் 
சென்னை.

 

124

கண்கண்ட தெய்வம்

பிறந்தவர்கள் விருது பெற்றால் பெருமை! அந்த 
விருதே (ஒருவரை) பெற்றெடுத்தால் பெருமையோ பெருமை!

விருதுநகர் பெற்றெடுத்த அப்பெருமைக் குரியர், 
பெருமைக்கே பெருமை சேர்க்கும்நம் கர்மவீரர்! 

ஏடெடுத்துப் படித்ததில்லை, ஆனாலும் நாட்டிலுள்ள 
ஏரி குளங்கள் நன்கு அறிவார்! 

ஆறாம் வகுப்போடு அவருந்தான் நின்றிட்டார், 
ஆறாம் நதிகளில் அணைபோட்டுச் சென்றிட்டார்! 

அணைபோட்ட ஆறும் ஆறாகும் கேளாய், 
மணிமுத் தாறு, மதுரையில் வைகை,

அணிதரும் கீழ்பவானி, அழகூட்டும் சாத்தனூர், 
இணையிலாப் பரம்பிக்குளம், இனிய புள்ளம்பாடி! 

முற்காலத் தமிழகத்தில் மூவேந்தர் ஆட்சியைத்தான் 
பொற்கால ஆட்சியென்றே புகழ்ந்து ரைத்தார்! 

அக்கால ஆட்சியைப்போல் ஆண்டவர்தான் நம்ராசர், 
இக்காலம் நாம்போற்றும் இணையிலாக் காமராசர்! 

விவசாயம், தொழில்துறை, விரைந்து கல்வியில் 
எவராலும் முடியாததை இந்தியாவில் செய்தவர்! 

கிராமங்கள் தோறும் கல்விக் கூடங்கள்,
ஆராய்ந்தே மதிய உணவுத் திட்டங்கள்,

புத்தகப் பையை எல்லோரும் கண்டுநிற்க, 
இரைப்பையைக் கண்ணுற்ற இறைவனல்லவா அவர்! 

இந்தியாவில் மதிய உணவுத் திட்டத்தை 
முந்தி செய்தவர் முதன்முதலாய் இவரேதான்! 

குப்பனும் சுப்பனும் கல்வி கற்றிட 
எப்படி முடிந்தது இவரால் தானே!

அரசியல் பீஷ்மரென அனைவராலும் போற்றப்பட்டார் (ஆம்)
திருமணம் செய்திட இவர்மனம் விரும்பவில்லை !

கே பிளான் எனச்சொல்லும் காமராசர் திட்டம் 
மூத்தத் தலைவர்கள் முறையாக இளையவர்க்கு 

வழிவிடல் வேண்டுமென வகுத்திட்ட திட்டம்! 
வழிகாட்டும் திட்டம்; வாய்ப்பளிக்கும் திட்டம்! 

இத்திட்டம் செயல்பட இவரென்ன செய்தார்?
முதலமைச்சர் பதவியை முதலில் துறந்திட்டார்! 

அரியணையில் முதல்வராய் அவரிருந்த காலத்தில் 
அன்னை சிவகாமி அம்மைக்கு மாதம்

நூற்றைம் பதுரூபாய் முடங்காமல் அனுப்பிவந்தார்! 
கூடஇரு பத்தைந்து கொடுவென்று கேட்டதற்குத் 

தன்சம்பளம் சொல்லித் தன்செலவையும் சொல்லி 
என்சம் பளத்தில் இவ்வளவுதான் முடியும்!

அதற்குள் செலவை அடக்கிக்கொள் என்றார் !
இப்படிப்பட்ட தலைவரை இப்போது காண்போமா?

நீண்ட கைகள் உடையவர் என்றாலும்
நீட்டிய தில்லை எவரி டத்தும் 

மக்கள் பணத்தை வங்கிக் கணக்கிலே 
ரொக்கமாய் வரைந்து கொள்வா ருண்டு! 

இவர்கணக்குப் புத்தகத்தைக் கண்ணுற்ற போது 
கணக்காய் இருந்ததுவாம் நூற்றியாறு  ரூபாய்! 

விமர்சிக்கும் எவரையும் விருப்போடே நோக்குவார், 
அவருக்கு அவ்வளவே அறிவென்று இருந்திடுவார்! 

நெஞ்சில் பட்டதை நிமிர்ந்து சொல்லும் 
வஞ்சமில்லா நெஞ்சினர்; வீரக் குணத்தினர்! 

காந்தியின் பாதையில் காலடிப் பதித்திட்டார்! 
காலா காந்தி எனப்பெயர் எடுத்திட்டார்!

எளிமை, அடக்கம், எல்லையிலாத் திறமை, 
எளிதில் முடிவெடுக்கும் இணையில்லா அறிவு, 

பதவிக்கு அலையாத பண்பட்ட உள்ளம்,
உதவிக்கு வந்திட்டால் உறுதுணை நிற்றல்! 

ஆகட்டும் பார்க்கலாம் என்றே சொல்லுவார்! 
ஆனாலும் அதனை முடித்தே காட்டுவார்!

வந்த பதவியையும் வெறுத்தே ஒதுக்கியவர்!
எந்தக் காலத்தும் எரிசுடராய் நிமிர்ந்தவர்! 

அவரைப் போலவே அறிவோடு வாழ்ந்து 
எவரும் போற்ற யாவரும் வாழ்வோம்!

கண்கண்ட காம ராசரை 
எண்ணித் தொழுவோம்! ஏற்றம் பெறுவோம்!

முனைவர் கா.இராசகுமாரன்,
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்),
தருமபுரி மாவட்ட அரசு மாதிரிப் பள்ளி,
தருமபுரி -636701

 

125.

"கர்ம வீரர் காமராஜர்"
கல்விக்கண் திறந்தவர்
ஏழைகள் அனைவரும் 
கல்வி பயில வேண்டுமென்று
இலவசக்கல்வி தந்தவர்
நல்மனம் படைத்தவர்
மருத்துவம் பயில 
ஏழை மாணவர்களைத்
தேர்வு செய்வதில் சிறந்தவர்
எளிமையாய் வாழ்ந்து காட்டியவர்
எளிமைக்கு இலக்கணமாய்த் திகழ்ந்தவர்
தொழிற்சாலைகள் பலவற்றைத் திறந்து வைத்தவர்
நாட்டின் முன்னேற்றம்
விவசாயமே என்பதால்
அணைகள் கட்டியவர்
பொற்கால ஆட்சி தந்தவர்
கல்வியே மனிதனை நல்வழிப்படுத்தும்
பெருந்தலைவர் மீண்டும் பிறந்தால் கல்வி 
இலவசமாகும்
பொற்கால ஆட்சி மலரும்
இவரைப்போல் இனி வருவாரில்லை. 

முனைவர்.ம. வனத்தையன்
இணைப்பேராசிரியர்
தமிழ்த்துறை
தூய வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) கடலூர்.

 

126.

காமராஜர்// விருதுநகரின் விலைமதியா முகவரி//
வெள்ளைநிற ஆடை மட்டுமல்ல//
வெள்ளை உள்ளமும் கொண்டவர்//
தனக்கென ஒருபோதும் வாழாதவர்//
தமிழகத்தையே குடும்பமாய் நினைத்தவர்//
தாயிடமும் நீதி நியாயத்தை// நித்தமும் நிலை நாட்டியவர்//
தாய்மாமனாய் இருப்பதை விட//
தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவனாய்//
இருப்பதையே எந்நாளும் விரும்பியவர்//
வயிறார உணவு உண்டு//
மனதார படிக்க வைத்தவர்//
தாயாய் பெருமை கொள்கிறேன்//
தங்க தலைவர் பிறந்த//
நன்னாளில் என்மகனை ஈன்றெடுத்ததினால்//
அறுவை சிகிச்சையே ஆயினும்//
ஒருதுளி கண்ணீர் சிந்தவில்லை//
அமுதநாளில் என்மகனை பெற்றெடுத்ததினால்/
தன்னலம் கருதாத தலைவருக்கு//
நன்றி காணிக்கையாக்குகிறேன் இக்கவிதையை.//
இது என் சொந்த படைப்பு. இக்குழுவிற்கு மட்டுமே என் கவிதையை அளித்துள்ளேன்.


 ஞா. எபினேசர் ஹெலன், காயல்பட்டினம்.

 

127

தலைப்பு:கர்ம வீரர் காமராசர்

அறிவும் அன்பும் நிறைந்தவரே! 

ஆற்றல்கள் பற்பல புரிந்தவரே! 

இன்னல் எல்லாம் போக்கியவரே!  

ஈடில்லா  ஈகை கொண்டவரே! 

உழைப்பில் உண்மை தந்தவரே! 

ஊருக்கு  உழைக்கும் நல்லவரே! 

என்றும் எளிமை நின்றவரே! 

ஏற்றம் நமக்கு கொடுத்தவரே! 

ஐக்கியம் கொள்கை என்றவரே! 

ஒன்றாய் உலகம் ஆக்கியவரே! 

ஓர்உன்னத  தமிழ்நாடு
படைத்தவரே! 

ஔடதமானவர்  அதே
கர்மவீரரே! 

த. ஹரிஹரன்

9-ஈ, ஈ. கே. எம். அப்துல் கனி

மதாரஸ  இஸ்லாமிய
உயர்நிலைப்  பள்ளி. 
ஈரோடு-638001

128.

 

உன்னைப் போல் ஒருவன் 

 
படிக்காத மேதையே
அரசியலின் சொத்து
தமிழனின் வித்து
சட்டங்களில் சிறந்தாய்
திட்டமிட்ட சத்துணவு
எட்டுத்திக்கும் கல்வி கற்க
சட்டைப் போட்ட 
ஏழைக் கனவு
பட்டுப் பகட்டில்லாமல்
கட்டுக் கோப்புடன் 
நிறைவாழ்வு
பட்டப்படிப்பு பெறவில்லை எனினும்
கல்வி உன்னை
ஒட்டிக் கொண்டு 
தான் பிறந்திருக்கின்றது அறியாமையை நீக்க அற்புதக் கல்வியை அளித்தவரே
ஏழைக் குழந்தைகளை
யும் ஏட்டினைத் தொட வைத்தவரே
 கல்வி வளர்ச்சி நாயகனே
ஏடெடுத்து நாடு 
படிக்க நீங்கள்
பட்ட பாடுகளோ
எத்தனை எத்தனை
உம்மைப் போன்ற
பெருந்தகை இனியும் இப்பாரினில்
வந்தனைப்புரிய இயலுமோ 
உமக்கு நிகர்
என்றென்றும் நீவீரே!!!!

கவிஞர் மு.கீர்த்தனா தூத்துக்குடி.

 

129.

கல்விக்கண் தந்த காமராஜர்

* குமாரசாமி -சிவகாமிஅம்மாள் தம்பதியினருக்கு
ஆயிரத்தி தொள்ளாயிரத்து மூன்றாமாண்டு
ஜூலைத் திங்கள் 15 -ஆம் நாள்
விருதுநகரில் அரும்புதல்வனாக அவதரித்தவர்

* காமாட்சி என்ற பெயரே பின்னர்
காமராஜ் என அன்போடு அழைத்தனர்

* உண்மை, ஒழுக்கம்,நேர்மை,எளிமை
தியாகம் இவரது அணிகலன்கள்

* மதம் கொண்ட கோயில் யானையை
அடக்கிய வீரர்

* ஏழைக் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடங்கள்
பசியைப் போக்க மதிய உணவுத்திட்டம்
முதியோருக்கு ஓய்வூதியத் திட்டம் வழங்கியவர்

* எல்லோருக்கும் இலவசக் கல்வி வழங்கியதால்
கல்விக்கண் தந்த காமராஜர் எனப் போற்றப்பட்டவர்

* நாட்டிற்காக சிறை சென்ற தியாகச் சுடர்
தேசத் தொண்டினால் மக்களிடம்
செல்வாக்குப் பெற்றவர்
தன்னிகரில்லா தலைவர்
காலா காந்தி என அழைக்கப்பட்டவர்

* தந்நலம் கருதாது பொதுநலத்துக்காக 
உழைத்த உத்தமரைப் போல்
இனி பிறப்பதில்லை இவ்வுலகில்
வாழ்க! அவர் புகழ் என வாழ்த்துகிறேன்

முனைவர் சு.முருகலெட்சுமி

தூத்துக்குடி

 

130.

 

 காமராசர் உணர்வைக் காப்போம் 

(1)
தேசப் பற்றால் நெய்தவுடல்;
தொண்டே இயல்பாய்க் கொண்டநடை;
வேசம் அறியா உயர்தோற்றம்;
உண்மை அறிவு; செயலாற்றல்;
நேசம் நாட்டு மக்களிடம்;
நினைப்பெல் லாமே பொதுநலமே;
மாசில் மனத்து மாமேதை!
மனித குலத்து வழிகாட்டி!

(2)
கர்ம வீரர் காமராசர்
காசைத் தேடா கோமகனார்!
தர்ம வடிவாய்த் திகழ்ராசா;
தரணி காணாத் தனிமகனார்!
ஒருமை உள்ளம்; தாய்நாட்டின்
ஒற்றுமை ஒன்றே அவர்நாட்டம்!
பெருமை மகனால் பெற்றனளே
பாரதத் தாயும் பாரினிலே!

(3)
உதறி யுடுத்த உடையன்றி
உடைமை யில்லா உடையவர்தான்!
இதயம் இமயம் எனவுயர்ந்த
இணையில் லாத எளியவர்தான்!
சிதறிக் கிடந்த சமூகத்தை
சீராய் இணைத்தார்! சிறந்தறிவால்
உதய மாகும் வளர்ச்சியென
உணர்ந்தே கல்வி வழிதிறந்தார்!

(4)
எதைக்கேட் டாலும் 'ஆகட்டும் '
என்பார், 'பார்க்க லாம்'என்பார்!
அதையே பின்னர் அலசித்தான்
அதனால் மக்கள் பயனுண்டேல்,
விதியாய் ஆணை யுடன்நிதியும்
ஒதுக்கி நன்மை விளைவிப்பார்!
துதிப்போர் தன்னைச் சூழவிடாத்
தன்மை கொண்ட பெருந்தலைவர்!

(5)
தேசம் சுவாசம் எனவாழ்ந்த
தலைவன் அவனைத் தலைமுறைகள்
நேசம் கொண்டே நினைத்திருக்க
நல்ல வழிகள் நாம்செய்வோம்!
வீசும் காற்றில், ஒளிர்வெளியில்,
விரிநீர் சூழ்ந்த வளர்மண்ணில்,
காசில் கொற்றவன் கனியுணர்வு
கலந்தே உலாவும் நிலைகாண்போம்!

சின்மய சுந்தரன்
  (கோ.முத்துசுவாமி)
   ஐதராபாத் 

 

131

கர்ம வீரர் காமராஜர்
         -------------------------------------

கல்விக்கண் திறந்தவர் காமராஜர்-கொண்ட
கடமையில் சிறந்தவர் காமராஜர்
கர்மத்தின் வீரர் காமராஜர்-என்றும்
தர்மத்தின் தலைவர் காமராஜர்

தலைவரில் பெருந்தலைவர் காமராஜர்-நம்
தமிழகத்தின் பெருமையே காமராஜர்
முதல்வரில் முன்னோடி காமராஜர்-செயல்
முடிப்பதில் கில்லாடி காமராஜர்


ஆறாம் வகுப்பே படித்தவராம்-ஆனால்
அகிலமே அவரைப் படித்ததுவாம்
ஆருமே படிக்காமல் கூடாதாம்-என்று
அகிலமே பள்ளிகள் வடித்தவராம்

ஆங்கிலம் இந்தியும் அறிந்தவராம்-அதில்
அழகாய்ப் பேசவும் தெரிந்தவராம்
நேருக்கே புத்தி சொன்னவராம்-கேட்ட
நேரும் வியந்து நின்னவராம்

விருதுநகரிலே உதித்தவராம்- பல
விருதுகள் அவர் தேடி ஓடியதாம்
விருதுகள் வாங்க ஓடாமல்-மக்கள்
வியர்யைத் தாங்க ஓடினாராம்

படிக்காத மேதை ஆனவராம்-பல
படித்த மேதைகள் ஆக்கினாராம்
நடிக்காத அரசியல் செஞ்சவராம்
நாடே தன் வீடாகக் கொண்டவராம்

மத்தியான உணவு கொடுத்தவராம்-பள்ளிக்கு
அத்தனைச் சிறுவரையும் அழைத்தவராம்
புத்தகம் சிலேட்டும் கொடுத்தவராம்-சமதர்ம
புத்தாடை சீருடையும் கொடுத்தவராம்

காமராஜர் திட்டம் கண்டவராம்-எதிர்
கட்சியினரும் அதைப் போற்றினராம்
அண்டை மாநிலங்களும் பின்பற்றினராம்
அதை
அயல் நாட்டினரும் பின்பற்றினராம்

காந்தியப் போராட்டம் பல செய்தவராம்-சிறையில்
கடும் தண்டனைகள் பல எய்தவராம்
கதராடை அழகரும் ஆனவராம்-இந்திய
காங்கிரஸ் தலைவரும் ஆனவராம்

இந்தியாவின் திசைகாட்டி பேரெடுத்தவராம்-தானே
இரண்டு பிரதமரைத் தேர்ந்தெடுத்தவராம்
அரசனைத் தேர்ந்திட்ட மகான் ஆனார் -அந்த
அமெரிக்கா புகழ்ந்திட்ட கிங் மேக்கர் ஆனார்

பிரதமர் பதவியும் கிடைத்ததுவாம்-அதை
பிறருக்கே கொடுத்து மகிழ்ந்தவராம்
கர்ணனின் தம்பியும் ஆனவராம்-அமைச்சர்
கக்கனின் அண்ணனும் ஆனவராம்

ஏழைப் பங்காளன் ஆனவராம்-தானும்
ரேசன் அரிசியே உண்டவராம்
ஏசி கார் எல்லாம் மறுத்தவராம்
எங்கும் நடைப்பயணமே ஏற்றவராம்

எளிமையின் தோழன் ஆனவராம்-என்றும்
ஏய்ப்பின் எதிரி ஆனவராம்
நேர்மையின் நண்பன் ஆனவராம்-சமத்துவ
நீதியின் நிழலாய் ஆனவராம்

ஆகட்டும் பார்க்கலாம் என்பவராம்
சொன்னதை ஆக்கியும் காட்டி வென்றவராம்
போகட்டும் தன்னலம் என்றவராம்-அதனால்
போட்டதே  கே பிளான் என்றவராம்

தியாகத்தின் மெழுகாய் எரிந்தவராம்-பாரத
தாயகத்தின் தவமாய்ப் பிறந்தவராம்
தென்னாட்டுக் காந்தி என்பவாரம்-அந்த
தெய்வத்தின் அவதாரம் என்பவராம்

வளர்த்துவிட்டவரைக் கொண்டாடுவோம்-கல்வி
வளர்ச்சி நாளாகவே கொண்டாடுவோம்
தூக்கிவிட்டவரைக் கொண்டாடுவோம்-துயர்
துடைத்தவரை நாளுமே கொண்டாடுவோம்
     
          

                     கவிஞர்
               கவிக்காந்தன்
          தென்காசி முருகன்

 

132

கர்ம வீரர் காமராசர் 

#விருதுபட்டி வழங்கிய அரிய விருது!!
#இந்தியவின் தீட்டிய கருப்பு வைரம்!!
#சிவகாமியின் செல்வ(ல)ப்  தவப் புதல்வன் 
#அறம் வழியே உன் அரசியல் வழி!!
#தொண்டனுக்கு தொண்டு செய்த தலைவன்!!
#தலைவனுக்கே தலைவன் பெருந் தலைவன்!! 
#பகல் உணவு தந்த பகலவன்!!
#படிப்பறிவை  அனுபவ அறிவால் வென்றவன்!!
#வலிமை  திட்டங்கள் தீட்டிய எளிமை!!
#சாதனை படைத்த 
வேட்டி தமிழன்!!
#திருமணம் செய்ய மனம் இல்லாதவன்!!
#கடமையையே கல்யாணம் மக்களே மகவு!!
#சாமானியர் மக்களின்
எளிய தோழ(ள)ன்!!
#பட்டியும் தொட்டியும் பள்ளிகள் நிறை(ரை)த்தான்!!
#தேசத்தை படித்த படிக்காத மேதை!!
#தேசத்தை படிக்க வைத்த கல்வி தந்தை!! 
#தேசமே பிடித்த கர்ம வீரர்!!
#இலவச மதிய உணவுத் தந்தவன்!!
#பரம்பிக் குளம் சான்று சொல்லுமே!!
#பழுப்பு நிலக்கரி நித்தம்
சொல்லுமே!!
#அழியாத அசத்தல் ஆட்சி என்றே!!
#இளைஞர்கள்  புக வழி விட்டவன்!!
#பதவி உதறி கொள்கை பிடித்தவன்!!
#காவியம் தலைவன் கண்ணதாசன் கூற்று!!
#காலத்தின் கடைசிக் கருணை காமராஜரே!!
#அரசியல் உலகின் ஆச்சர்யம் காமராஜர்!!

- லதா முருகன்,

நெல்லை.

 

133.

கர்மவீரர் காமராசர்...


குமாரசாமி சிவகாமி பெற்றெடுத்த காமாட்சியே//

காமாட்சி+ராசா  காமராசா என்றே பெயரானதே//

பொறுமையும் விட்டுக்கொடுக்கும் பண்பும் பெற்றவரே//

தேசத் தலைவர்களின் பேச்சினால் கவரப்பட்டவரே//

உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து சிறைசென்றாயே//

விருதுநகர் நகராட்சித் தலைவராகத் திகழ்ந்தவரே//

ஒழுக்கமும் கடமையும் நேர்மையும் கொள்கையே//

சத்தியமூர்த்தியை அரசியல் தலைவராக ஏற்றாயே//

இந்திய அரசியலுக்கு குருவாகத் திகழ்ந்தாயே//

தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வனாக வலம்வந்தாயே//

எளிமையான முறையில் வாழ்ந்த உத்தமனே//

எதிரியையும் அரசவையில் அமரவைத்து உயர்ந்தாயே//

தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக பாடுபட்ட முதலமைச்சரே//

ஏழைகளின் பசியாற்றிய சத்துணவுத் திட்டமே//

சத்துணவுத் திட்டத்தால் பள்ளிமாணவர்  பயனுற்றவரே//

நீர்பாசனத் திட்டத்தினால் வேளாண்மை உயர்ந்தே//

ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்தி மகிழ்ந்தீரே//

 தேசப்பணி கட்சிப்பணி ‌
முக்கியத்துவம் உணர்ந்தவரே//

காமராசர் திட்டத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தவரே//

வாழ்நாளில் மறக்க முடியாத தலைவரே//

 
எளிமையும்ப் சிக்கனமும் உன்னிரு கண்களே//

உந்தன் பெயரால் திரைப்படமும் வந்ததே//

வெளிப்படையான தலைமைப் பண்பு கொண்டவரே//

உலகளாவிய தலைவர்களும் கொண்டாடும் தலைவரே//

தமிழக மக்களால் கருப்புக் காந்தியானாயே//

மக்களின் நெஞ்சமதில் நீக்கமற நிறைந்தவரே//

காமராசரின் காலம் தமிழகத்தின் பொற்காலமே//

உந்தன் பிறந்தநாள் கல்விவளர்ச்சித் திருநாளே//

ச.சுதாராணி
கவிஞர்/தலைமை ஆசிரியை பூலப்பாளையம்
பவானி ஒன்றியம் ஈரோடு மாவட்டம்.

 

134.

தலைப்பு: கல்விக் கண் திறந்தவரே காமராஜரே//


கனன்றது உன்னுள் பெரும் நெருப்பு
கல்வியின் பால் நீ கொண்ட நல்ஈர்ப்பு
சுழன்றாய் கதிராய் முதல்வராய் பதவி ஏற்று
சூரராய் நெஞ்சுரம் நெடுமைக் கொண்டு
சூழலை கல்வியால் மாற்றம் கண்டு
சுழியமாய் இருந்த வாழ்வை ஏற்றம் செய்து
சூத்திரத்தின் விதையாய் முளைத்தாய் அன்று
நேத்திரங்கள் கல்வியால் நிறைந்தது இன்று
கீரிவிட்ட பாதையினிலே செழித்த விருட்சம்
கீழை மேலை தேசங்களை கூவி அழைக்கும்
வாழையாய் எண்ணி கல்வி மரத்தை நட்டாய் அன்று
வானளவு சந்தன மரமாய் மணம் வீசுது உயர்ந்து
உணவோடு உன்னத கல்வியை ஊட்டி வளர்த்தாய்
உணர்வோடு உன்னைத் தொழுது வாழ்கிறோம் இன்று//

இளங்கவிஞர் இ.ஜீனத் நிஸா
காயல்பட்டினம்.

 

135.

கல்விக் கண் திறந்த காமராஜரே
************************************

தென்னாட்டு காந்தியே சுயநலமில்லா உள்ளமே

பள்ளிச் செல்லாத படிப்பில்லாத மேதையே

உணவு வழங்கி ஏழைகளை பட்டதாரிய்க்கினாயே

கல்விக்கண்  திறந்து அறியாமை அகற்றியவரே

ஆரம்பக்கல்வியை பெண்ணுக்கும் ஆணுக்கும் ஆதாரமாக்கியவரே

பாமரர்களுக்கும் படிப்புக்கொடுத்து பறக்கச் செய்தவரே

இலவசமாய் கல்வி வழங்கிய உத்தமரே

அரசியலாட்சியில் பணமில்லாது புண்ணியம் சேர்த்தவரே

பள்ளிக்கட்டிடம் இல்லா போதிலும் படிப்புக்கொடுத்தவரே

அறியாமை எனும் இருள் அகற்றியவரே

ஞானமெனும் சுடரை வீடுதோறும் ஏற்றியவரே

வாழ்க்கையை வசந்தமாக்க கல்விக்கொண்டு வந்தவரே

வாடகை வீட்டிலிருந்தபடியே வருமானம் எதிர்பாராதிருந்தாயே

கதருடையணிந்து கல்வி வளம் பெருக்கியவரே

உலகில் மறைந்தாலும் உள்ளத்தில் உதிப்பவரே

வாடிவதங்கயிருந்த ஏழைகளை கல்விநீரூற்றி வளர்த்தவரே

கவித்தென்றல் அபிதா.வி
மூணார்.

 

136.

ஏழைப்பங்காளன் காமராஜர்.


விருதுநகர் பெற்றெடுத்த தமிழகத்தின் முகவரி/
கருப்பு காந்தியாய் கல்விக்கண் திறந்தவர்/
முக்காற்கைச் சட்டை முழந்துண்டு வேட்டியோடு/
எக்காலமும் நினைக்கும் வண்ணம் வாழ்ந்தவர்/

பொற்கால ஆட்சியாலே நிலைத்து நிற்பவர்/
உற்றாரைத் தள்ளி வைத்த உத்தமரிவர்/
பெற்றவளுக்கும் சொத்துசுகம் கொடுக்க மறுத்தே/
கற்காத ஏழைக்கிவர் அள்ளித் தந்தவர்/

பாதம்பட்ட இடமெல்லாம் பள்ளிக்கூடம் அமைத்தார்/
வேதனையுற்ற ஏழைகளுக்கு ஏற்றம்பல தந்தார்/
ஏழைகளின் பங்காளன் எதிரிகளுக்கும் பண்பாளன்/
மழைதரும் மேகமென கொடைபல அளித்தவர்/

பணம்காசு நாடாமல் பதவிசுகம் தேடாமல்/
குணத்திற்கு விளக்காக வாழ்ந்திட்ட வீரனவர்/
வெட்டொன்று துண்டிரண்டாய்ப் பேச்சுடையவர் நான்கு/
வேட்டிசட்டை மட்டுமே சொத்தாய் வைத்தவர்/

சமூகநீதி காக்க சந்தனமாய்த் தேய்ந்தவர்/
அமுதான கல்வியைக் கொடுத்து மகிழ்ந்தவர்./
கருத்த தேகத்தில் கம்பீர வலிமையோடு/
வருத்தங்கள் ஏதுமில்லா நல்லாட்சி தந்தவர்/

கண்ணியத்தின் மறுவுருவாய்க் கறைபடியாக் கரங்களோடு /
எண்ணம் எல்லாம் ஏழையரின் நலம்நாடி/
தென்திசை இமயமாய் அறிவுச் சுடரேற்றிய/
தன்னிகரற்ற காமராசரைப் போற்றிடுவோம் எந்நாளும்/

நட்புடன்,
நா.அருண் பிரசாத்,
(கவிஞர், முதுகலைத் தமிழாசிரியர்) 
த/பெ, திரு. வே. நாகராஜ்,
82/C, மதுரை வீரன் கோவில் தெரு,
எடத்தெரு ரோடு,
திருச்சி.620008

 

137.

 

தலைப்பு : கர்ம வீரர் காமராஜர் 

விருதுப்பட்டி பெற்றெடுத்த விருதுபெறா தங்கமே

விருதாளரை வளர்த்தெடுத்த கருப்புநிற சிங்கமே

மணமாலை சூட்டாத குணமான ரோஜாவே

ராஜாக்களை உருவாக்கிய நல்லிணக்க ராஜாவே

மேதைகளை வார்த்தெடுத்த படிக்காத மேதையே

பாதைகளை வகுத்துக்கொடுத்த பண்பான தோழனே

வெள்ளைக் கதருக்குள்பூத்த கருப்புக் கதிரவனே

வாரிச் சுருட்டத் தெரியாத காரியதரிசியே

வார்த்தை ஜாலம் இல்லாத வர்ணஜாலமே

ஆகட்டும் பார்க்கலாமில் வெட்டும் துண்டுமானவரே

தென்கோடி தென்றலாய் வடகோடி புயலானவரே

கடையெழு வள்ளல்களுடன் எட்டாவது வள்ளலானவரே

மதியஉணவுத் திட்டத்தால் புதியபாதை வகுத்தவரே

எளிமை வாழ்க்கையால் ஏழைகளின் ஏந்தலானவரே

கல்விக்கண் திறந்ததினால் கல்வித்தந்தை ஆனவரே

தொழிற்சாலையும் நீரணையும் அளவில்லாது தந்தவரே

கவிஞர். பா. தங்கேஸ்வரி, அவிநாசி.

 

138.

*கர்மவீரர் காமராசர் 
மெட்டு ....என்னடி ராக்கம்மா*

கல்வியைப் பயிராக்கி
நீ தந்த விவசாயப் பெருமை சொல்லட்டுமா?
நாடு உன்னாலே தான் கண்ட பெருமையை எண்ணி 
என் கவியைப் பாடட்டுமா? 
                   (1)
ஆரம்ப பள்ளி தந்த ஆனந்தமே 
அதில் உன் பங்கை சொல்லட்டுமா? கல்லாமை  காணாமல் செய்தவரே
இன்று உன் புகழைப் பாடட்டுமா

மாடு மேய்க்கும் குச்சியை தூர
போடச் சொல்லி 
பள்ளி பாடல் நூல் தந்தவர் நீ! துளிர்கல்வி ,தொழிற்கல்வி, கலைக்கல்வி ,
தரச் சொல்லி உயர்வாக நின்றவர் நீ!
                    (2)
ஏர் உழவும் பார் புகழச் செய்திடவே 
பல நீர்த்தேக்கம் தந்தவன் நீ 
பெரும் தொழிலும் சிறு தொழிலும் பெருகிடவே புது பொருளியலை சொன்னவன் நீ 

மாணவன் வயிராற சாப்பிடவே
சத்துணவு தந்தவன் நீ!
உன் நினைவும் உன் செயலும் 
என் நினைவில் தினம்  வாழும் கிங்மேக்கர் காமராசர் நீ !

முனைவர் பெ. தமிழ்ச் செல்வி,

வாலாஜாப் பேட்டை .

 

139.

பெருந்தலைவர்

ஏழ்மைக்கு கைகொடுத்த கருப்பு காந்தியே!!
ஆரம் தவிர அரசியல் கோனே !! 
ஏழைக்கும் கல்விபுகட்டிய படிக்காத மேதையே !!
கரைப்படியாத தென்னாட்டு காந்தியே !!!
வானெட்டும் பாரிபறக்க கண்டேன் உன் பெருமையை
பாட்டிலோ  எழுத்திலோ சொல்லலாகுமோ  பெருந்தலைவா !!
பிறப்பால் பெருமை இல்லை வாழ்ந்த வாழ்வே 
சாதனை என்று உணர்த்திய கர்மவீரரே !!
என்றும் உன்னை வாழ்த்தி வணங்குவதில் 
இந்தியனாகக் கர்வம் கொள்கிறேன்.

- சாயிராம் ர.சி, 
குலசேகரன்புதூர், கன்னியாகுமரி.

 

140.

 

தலைப்பு:???? கர்மவீரர் காமராசர்.????

இலக்கியமும் கவிதையும் உயர்ந்த பிரிவினருக்கு

என்ற தத்துவத்தை மாற்றியமைத்த தமிழ்சுயம்பு

வார்த்தைகளுக்கு உயிர் கொடுக்கும் பிச்சைக்காரன்

நாட்டுக்கொட்டையில் பிறந்து  தன்கவிதையால் 

தமிழ்பேசும்  உலகினில் தனிராஜ்ஜியம் நடத்தியவன்

ஆணவத்திற்கு அறிவிற்கும்  வித்தியாசம் கண்டவன்

ஆன்மீக வரலாற்றையும் அறிந்தவன்

பகுத்தறியும் பண்பாட்டையும் உணர்ந்தவன்

குடித்துக்கொண்டே குடிமறக்க கவிதை புனைந்தவன்

தாயின் அன்பையும் தமிழால் அளந்தவன்

தந்தையின் பண்பையும் கவியால் கரைந்தவன்

சகோதரனின் சாயத்தை கவியால் சாடியவன்

நான் நிரந்தரமானவன் எனக்கு அழிவில்லை

என்று தன்வார்த்தைகளால் உரக்கக் கூவியவன்

வளர்ந்த உருவமானாலும் வளராத குழந்தையின் உள்ளம் உடையவன்

அதனால்தான் கண்ணதாசன் மறைந்த போது

கலைஞர் தன் இரங்கற்பாவில் கூப்பிட்ட குரலுக்கு தாவிச்  செல்லும் கண்ணதாசா

காலன்  அழைத்தவுடன் தயங்காமல் 

காலனைதழுவினாயோ எங்களை 

என்று கண்ணீர் மல்க கவிப்படைத்தார்

காலத்தை வென்ற காவிய நாயகனே

உன்னை நான் கண்டதில்லை எனினும்

உன் பாடல் மூலம் தினமும் காணுகின்றோம்.

கவிஞர்.  லோ. வரகுண பாண்டியன் உத்தரமேரூர்.

 

141.

கவிதை தலைப்பு: காமராஜர் ..... விருதுநகரில் பிறந்த விண்ணுயர உயர்ந்தவராய்//எளிமையினால் எழுக்கடல் எல்லையாய்//சிக்கனத்தினால் சிகரத்தின் முகடுவாய்//பள்ளிகள் பலதிறந்த நற்பண்பாளராய்//மதிய உணவு வழங்கிய மாமனிதராய்//சீருடைகள் வழங்கி எங்கும் சமச்சீராக்கியவராய்//கல்விக்கண் திறந்த கல்விக்கடவுளாய்//கர்மவீரராய் காலம் கடந்துஎன்றும் வாழ்பவராய்//தலைவர்கள் பலரை உருவாக்க்கிய தலைவராய்//அணைகள் பலகட்டிய அருந்தமிழ் ராய்//தொழிற்சாலைகள் பலதிறந்த தொன்மையானவராய்//ஏழைகள் வாழ்வு உயர்த்திய ஏழைப்பங்காளராய்//ஆட்சியில் என்றும் பொற்காலமாய்//புவியெங்கும் புதுமைகள் பலபடைத்த புனிதராய்//புன்னகைப் பொங்கும் முகம் கொண்ட புதுமனிதராய்//புவியெங்கும் உம் புகழே எங்கும் ஒலிக்குதையா// 

பெயர்:மா.சந்திர சேகரன், ‌வையக்கவுடண்பட்டி திருவேங்கடம் வட்டம் தென்காசி மாவட்டம்.

142

கருப்பு மாணிக்கமே


தலைவர்கள் பலர் உண்டு நம்நாட்டில்
உன் போல் யாரும் இங்கு இல்லையே
உன் முன்னால் அனைவரும் சமம்
நீயே அறிவில் கலங்கரை விளக்கம்
ஆடம்பரம் தவிர்த்த அரசியல் சிங்கம்
ஏழை மக்களின் கல்வி என்று உண்டு
பல பள்ளிகளை திறந்தாயே
இந்தியா நாட்டின் பெருந் தலைவரே 
ஈட்டிய பல திட்டங்கள் எம்மிதம்
விருதுநகர் வீரரே கல்விகண் திரந்தவரே 
பெண் கல்வி குலநாசம் என்பதை மாற்றி
பெண் கல்வி நாட்டின் வளர்ச்சி என்றாயே
தன்னலம் இல்லா காவியரே
மக்களின் கண்ணிரை துடைத்தவரே
மற்றவர்க்கு உதவ தயங்கா உள்ளம்
பகைவரையும் அரவனைக்கும் கரம்
படிக்காத மேதை கருப்பு மாணிக்கமே
மீண்டும் இந்த பூமியில் பிறக்க வேண்டும் ஐயா.

                  த.நந்தினி
                     ஈரோடு.

 

143.

கர்மவீரர் காமராசர்.

கதர் ஆடை அணிந்த 
கருப்பு காந்தி! 
கருத்து நிறைந்த 
பெரியார் கொள்கையாளர்!
கல்லாமையை இல்லாமையாக
செய்த ராமசாமி புதல்வன்!
துலாக்கோல் முனை நிற்கும் நேர்மையாளர்!
 மண்வாசனை மறவாது 
வாழ்ந்த சித்தர்!
 பேராசை கறை நிறம்
படியாத புத்தர்!
 மாலை நேர கல்லூரி கொடுத்த படிக்காத மேதை!
 ஏழைகளின் இன்னல்களை 
தீர்த்த மானுடர்!
 மூளையை மட்டும் பயன்படுத்த தெரிந்த பகுத்தறிவாளர்!

தனக்கென தனி முத்திரை பதித்த சிவகாமி மைந்தன்!
ஆகட்டும் பார்க்கலாம் என்ற
வார்த்தையின் முகவரி!
உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்த பொதுநலவாதி!
மதிய உணவு திட்டம் தந்த 
அட்சய பாத்திரம்!
 நீர் மின் /நீர் பாசன திட்டங்கள் செயல்படுத்திய கர்மவீரர்!
 ஒற்றுமை மலர சீருடை திட்டம் சீரமைத்த ஏழை பங்காளன்! சத்தியமூர்த்தியை குருவாக ஏற்ற ஏகலைவன்!
 தொழிற்சாலை சீரமைப்பு அளித்த பொருளாதார வித்தகர்!
 ஆடம்பரம் /புகழ்ச்சிக்கும் மயங்காத தென்னாட்டு காந்தி!

கடமை கண்ணியம் தவறாத
 எஃகு மனிதன்!
 காந்திய நெறி வாழ்ந்த 
சாந்த சொரூபி!
அரசாங்க வரிகளை மக்கள் சுமை 
என்று தராத சத்திய நாயகன்!
சட்டம் கற்காமல்/ பட்டம் பெறாமல் திட்டங்கள் தந்த அறிவு பெட்டகம்!
சந்திக்க வருவோரை சிந்திக்க 
வைத்த  காந்தி பற்றாளர்!
மாணாக்கரே மகத்துவன் என்ற 
ஏழைப் பங்காளன்!
ஆறாம் வகுப்பு படித்த அரியணை அலங்கரிப்பாளன்!      
  எட்டாக் கல்வியை இலவச கல்வி ஆக்கிய கல்வியாளர்!
பணம் என்று ஆண்டோருக்கு 
குணம் என்று பாடமாகியவன்! 

எளிமையே ஏற்புடையது என்று கற்பித்த தலைவன்!
எப்படியும் வாழலாம் என்போர்க்கு
பரமவிரோதி!
 இப்படித்தான் வாழ வேண்டும்
 என்று நினைப்பவரின் நண்பன்!
6000 பள்ளிகள் திறந்து ராஜாஜியின் குலக்கல்வி முறை ஒழித்த புரட்சியாளன்!
தேசியத்தை/மாநிலத்தை உயிராய் மதித்த ஒன்பதாண்டு  முதலமைச்சர்!
லட்சியங்களுக்காக லட்சங்களை 
புறம் தள்ளிய இலட்சயவாதி!
எதற்கும் விலை போகாத மனமுடைய சலிக்காத உழைப்பாளி!
இரண்டு பிரதமர்களை இந்தியாவிற்கு அளித்த சாணக்கியன்!
ஆரம்பக் கல்வியை ஆதார
வித்தாக்கிய  திறமைமிகு அரசியல்வாதி!

சோசியலிச சமுதாயம் பற்றி 
விளக்கம் கூறிய பேச்சாளர்!
பச்சை தமிழன் என பெரியாரால் புகழப்பட்டவர்!
எதற்கும் கையூட்டுப் பெறாத 
அரசாங்கம் கண்ட நல்முத்திரை!   
பாதம் பட்ட இடமெல்லாம் பள்ளிக்கூடம் திறந்த பண்பாளர்!
நேத்திரம் செழித்திட சட்டை பையை நிரப்பாத சூத்திரதாரி!
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பாசறை!
பாரதமிகு மின் நிறுவனத்தின் ஒளியேற்றிய மெழுகுவர்த்தி!
நீரைத் தேக்கி அணை கட்டிய
தமிழகத்து கரிகாலன்!
சிபாரிசு விரும்பாத வாரிசில்லா வாழும் வரலாறு!
வங்கிக் கணக்கின் நீதியினை 
மேட்டூர் காகித தொழிற்சாலையின்
மூலாதாரம்!
சேலம் இரும்புருக்கு ஆலை
 திறந்த அரசியல்வாதி!
கல்பாக்கம் அணு மின் நிலையம் கண்ட அபிவிருத்தியாளன்!
வங்கிக் கணக்கு ஏதுமில்லாத 
பாரத ரத்னா விருதாளன்!
அனுபவத்தாலே நாட்டு பூகோளம் அறிந்த ஆசான்!
தாயார் இறப்பில் சாவுக்காசு போடக் கூட காசில்லா சட்டைப்பைக்காரன்!

மொத்தத்தில் 
சரித்திரம் புரட்டிப் பார்க்கும் 
சாகா வரம் பெற்ற 
சாமானியனின் பிறந்தநாளை 
கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுவதை எண்ணி 
அகமகிழும் தமிழச்சி

பெ. கலைச்செல்வி சுந்தரேசன்,

காட்பாடி..

144.

காமராஜரே ,
உம்போல் நடிக்கமுடியும்,"இனி நடக்கவே முடியாது"

 விருதையில் பிறப்பு வளர்ப்பாகி!
 விரும்பியதை படிக்கமுடியா! வறுமையாகி!

வரதராஜிலு பேச்சில் ஈர்ப்பாகி!!
வாலிப முறுக்கில் மாமா உதவியில் துணிக்கடை
பணியாகி!

விடுதலை போராட்டங்களில் பங்கெடுப்பு!
விருப்பமில்லாதே,,! போனதுதிருமண ஈர்ப்பு!

நாட்டு நலப்பணிக்காய் தன்னை ,அர்ப்பணிப்பு!
நல்தமிழகமுதல்வராய்மும்முறைபதவியேற்பு!

ஒன்பது அணைகட்டுகல்திறப்பு!!
ஒருவரும் செய்யமுடியாததே சிறப்பு!!

பூட்டப்பட்ட கல்விச்சாலைகள் திறப்பதில்அதகரிப்பு !!
பூரணகல்வி திட்ட சட்டவிதிப்பு!

முதல்வர்அவையை ஒன்பதே முக்கியமந்திரிகள் அலங்கரிப்பு!

கரைபடாத கக்கன் தாழ்த்தபட்ட இனத்தவர்! காமராஜர்மந்திரி சபையில் காவல்துறை முக்கியமந்திரி!! அறநிலையத் துறை அதிகாரி!

 பயணநேரங்களில்கூட சகபயணிகளை தூங்கவிடாது
 பயண இடைவெளியில் பயணவாகனங்களை! எண்ணவைத்து பல்க்குகளை அதிகரித்தவர் !

தன்னைபார்க்கவரும் உறவுகளை! தகுதிபார்க்காது,,
தக்கநேரத்தில் பதில்அளித்து பயணிக்கவைத்தவர்!!

மதிய உணவு போட்டு! கற்பிக்கும் மாணவர்களை சேர்க்க வைத்து!!

 கற்றோர்விழுக்காடை உயர்த்தியவர்!
படிக்கும்மாணவர்களைபணியில்அமர்த்த விரும்பாதவர்!!
 பனைமரம் ஏறுபவரையும்படிகச் சொன்னவர்!

முன்னூறுபேருக்கும் மூன்றுமைல்லுக்கும், ஓர் பள்ளிகூடம்"தன்
முதல்வர்பணியிலே!

சர்க்கரை ஆலை அவதரிப்பு!
சட்டெனவேமின்கம்பம் பனைமரமாகி! மின்விக்கு உடன்அலங்கரிப்பு!!

மதுவிலக்குச்சட்டம்! குலகல்வி ஒழிப்புசட்டம்! மனிதன்சகசமாய் சகலரும் கோவிலுக்குச் சென்றுவரச்சட்டம்!!

ஆசியாவிலேயே அதிசயம் !மாத்தூர் தொட்டிப்பாலம் முதலிடம்!!

 மனமுடையபேசிய மண்ணாங்கட்டிக்காக
மனமுவந்து போட்டசட்டத்தையே மாற்றியவர்!

 நண்பர்களை,!தனக்காக
செலவு செய்யவைக்காதவர், சிக்கணமாய் வாழச்சொன்னவர்!

மூன்றுமுறை இருந்தமுதல்வரைகூட!
திமுக இளைஞன் தோற்கடித்தார்!

அரசியல் நாணயமிக்கவர்
எதிரியானவரையும்
எதார்த்தமாகசந்சித்துபேசுபவர்

தோற்றாலும் துவளாது
துள்ளியவரை !
பட்டாசுவெடித்து! தனக்கெதிரானவரை! கூடகடிந்துபேசாதவர்!

 தன்வாழ்நாளை! தனியொருவர்வாடகைவீட்டிலே !ஆயுள்வரை களித்தவர்!!

 தன்மீதோ! தன்மந்திிரிகள்மீதோ! புலன் விசாரணை செய்யாதவண்ணம்! வாழ்ந்துமுடித்தமகான்!!

முந்தியில் முந்நூறுரூபாயும்! மூக்குபொடிடப்பாவுமே! இவர்சொத்து!

முதல்வர்களிலே முதன்மையானவர்!
தன்பெயரில் காணிநிலம்கூட  இல்லா உத்தமர்!

   காலத்தைவென்றவர்!
 காணாதோர் நெஞ்சத்தில்நிற்ப்பவர்!

படிக்காதமேதை, பாரதபிரதமர், பண்டித ஜவஹர்லால்நேருவுக்கு அறிவுரை ஊட்டிய ஆசான் !

கர்மவீரரே! காந்தியபிரியரே!
காலத்தால் அழிக்கமுடியா சாதனையாளரே!

கண்டுபடிக்கிறோம் !
கண்டேவியக்கிறோம் !!
பொய்யாய்திரைப்படம்நடிக்கிறோம் !!

 ஆனால் உம்போல் நடக்க அகிலத்திலே! இனியாரும்பிறப்பார் இல்லையே!

  கவிதைமாணிக்கம்
சங்குபட்டி ,தென்காசி மாவட்டம்
சங்கரன்கோவில் வட்டம்

145.

 

*உள்ளத்தோடு உறவாடிய உறவு*

கடமையும் கட்டுப்பாடும்
கள்ளமில்லா இருதயமும்
கொண்ட கருப்பு காந்தியே!

கற்றோருக்கும் கல்லாதோர்க்கும்
கலங்கரை விளக்காய்
திகழ்கின்ற தமிழ் மகனே!

கனவுகள் கலையாமல்
கண்ணியத்தோடு வாழ்ந்து
கண்டவர்கள் கண்களில்
கற்கண்டாய் இனித்து
கருணையில்லாதவர்கள் மத்தியில்
கருணையோடு வாழ்ந்து
பூமியின் கருவறையில்
பூத்த ஒரு பூவாய்
கண்டோம் உன் நேர்மையை.

கற்றுக்கொடுத்த உம்வார்த்தைகள்
கரையாமல் கொட்டிக்கிடக்கிறது
உம் வரலாற்று படியில்
கருத்தோடு கரைசேர்வோம்
கர்மவிரா உன் புகழ் சேர்க்க.

தே. பிரவினா பிளஸ்ஸி புளோரிடா
ஆயத்துறை,
பேருர் திருவைகுண்டம்.

 

146.

 கர்மவீரர் காமராஜர்

 

அகத்திலும் புறத்திலும் நல்லஎண்ணம் கொண்டவர்.
இல்லற வாழ்க்கையின்றி மக்களுக்காக பணிசெய்தவர்

 

கையூட்டுபெறாத அரசாங்க முத்திரை இவர்
நேர்மை கொண்ட ஆட்சி தந்தவர்
தன்னலமின்றி மாணவர்களின் நலனுக்காக பாடுபட்டவர்

மற்றவர்கள் மனம் நோகாமல் நடந்து கொள்பவர்
இல்லையென்று சொல்லாமல் உதவும்கரம் உடையவர் 
எளிமையின் சிகரம் தன்னடக்கம் கொண்டவர்

சட்டங்கள் கற்றதில்லை பட்டங்கள் பெற்றதில்லை
திட்டங்கள் பலகோடி தந்துவிட்ட அறிவு களஞ்சியம்
மாற்றம்ஒன்றே மாறாதது மாற்றம் கொண்டுவந்தவர்

குலகல்வியை அகற்றி மதிய உணவுதிட்டம் கொண்டுவந்தவர்
படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்த்தியவர்
கிராமங்களுக்கு பேருந்துவசதி ஏற்படுத்தி கொடுத்தவர்
கல்விக்கண்ணை திறந்த மனிதருள் மாணிக்கம் இவர்

இடையனின் பணியால் இடைநிற்ற கற்றலை
இடைவிடாமல் கற்பதற்கு இலவச கல்வியோடு
அயராமல் படிக்க அரும் பசிக்கு உணவோடு

அள்ளிகொடுத்த கறை படியாகரங்கள் கர்மவீரர் காமராஜர்அவர்கள்
ஓடாய்உழைத்து தேய்ந்தும் வாடகை வீட்டிலே இருந்தவர்
தனக்கென வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்தவர்

அரசியல் தெரிந்தோர் ஆள்வது உண்டு
அறியாமையில் வாழ்வோர் தாழ்வதும் உண்டு, ஆனால்
இன்றளவும் பேசக்கூடிய நேர்மையான மனிதர் இவரே
கறைபடியாத முதலமைச்சரும் அரசியல்வாதியும் இவரே

இறந்தும்இரவா புகழோடுவாழும் மனிதர்

எங்கள் மனங்களை வென்றவர் கர்மவீரர் காமராஜர் அவர்களே

 வி.கணேஷ்பாபு, ஆரணி

 

147.

பெருந்தலைவர் காமராசர்

 

பெருந்தலைவர் காமராசர் தமிழ்நாட்டில் கல்விக்கண்

 

திறந்தவர்! முதல்வராகப் பொறுப்பேற்றவுடன் மாணவர்களுக்கு

இலவசக் கல்வி வழங்குவதையும்! மதிய 

உணவு வழங்குவதையும் உறுதி செய்தவர்! 
    
"வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு

பயிற்சி பலகல்வி தந்து" என்ற

பாரதியின் அற்புத வரிகளைப் பின்பற்றியவர்!!

ஏழைக் குழந்தைகளுக்கு இலவசமாக புத்தகமும்

சிலேட்டும் தந்தவர்!! பள்ளிப் பிள்ளைகள் 

சமத்துவம் பெறவே சீருடைத் தந்தவர்!! 

'பெரியாரால் பச்சைத் தமிழன் காமராசர்'

என்றே போற்றப்பட்டவர்!! தமிழகத்தில் பல்வேறு 

அணைகளைக் கட்டியவர்!!  தமிழகத்திற்கு மத்திய 

தொழிற் சாலைகள் வருவதற்குக் காரணமானவர்!!  

அகில இந்தியக் காங்கிரசுக் கமிட்டித் 

தலைவராய் இருந்தவர்! சோசலிச சமுதாயம்

குறித்து நேருவிற்குப் பிறகு விரிவாக

காங்கிரசு மாநாடுகளில் பேசிய தலைவர்!

பிற மாநிலங்களில் பேசும் பொழுதும் 

தமிழிலேயே பேசினார்!! அம்மாநில மக்களுக்கு 

மொழிமாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் செய்தவர்!!

தூய கொள்கைத் தமிழனாய் உலகையீர்த்தக் 

காமராசர் பெரும் சகாப்தம் அன்றோ!!

 

முனைவர் வே.விஜி, சென்னை.

 

148.

காமராசரை போற்றும் கவிதை தலைப்பு!விடிவெள்ளி காமராசர்!!!!!


சமூகத்தின் விடிவெள்ளிஅவர்!

கல்விக்கண் திறந்த காமராசரேஅவர்!

எட்டா கனியாக இருந்த கல்வியை!


உள்ளங்கை நெல்லிக்கனியாக தந்தவர்!


ஆடம்பரத்தின் உச்சமாக கல்வி அன்றைய நிலை!


காமராசரின் முயற்சியால் கல்வி பாமரனுக்கும் இன்று கிடைக்கும் நிலை!

அனைவருக்கும் கல்வி பொதுவென்று வைத்தார்!

சீருடை அறிமுகம் செய்து ஏற்றத்தாழ்வுகளை நீக்கினார்!

உயர்கல்வியை பெற வழிவகை செய்தார்!

தமிழக மக்கள் உயர திட்டங்களை தீட்டினார்!

பொற்கால ஆட்சி நாயகன்!

நம் மனதில் எல்லாம் நீங்கா இடம் பிடித்த கதாநாயகன்!

எளிமையை தன் வாழ்வில் கடைபிடித்தவர்!


தனக்காக எதுவும் சேர்க்கத் தெரியாதவர்!

தமிழக மக்களின் வளர்ச்சிக்காகவே பாடுபட்டவர்!

பல தலைவர்களை உருவாக்கிய கிங்மேக்கர் அவர்!

எண்ணம் செயல் அனைத்திலும் தூய்மையை கடைப்பிடித்தவர்!


அப்பழுக்கற்ற சிறந்த அரசியல்வாதி அவர்!

ஏழைக்காகவே ஆட்சி செய்த ஆட்சியாளர்!

பல அணைகளைக் கட்டி விவசாயத்திற்கு உயிர் தந்தவர்!

தொழிற்சாலைகளை அமைத்து தொழிற் கல்வி தந்தவர்!


இளைஞர்களுக்கு வாழ்வாதாரத்தை பெற்று தந்தவர்!

பதவி அதிகாரத்தை எங்கும் பயன்படுத்தாதவர்!

மிகச் சிறந்த முதலமைச்சர் தமிழகத்திற்கு கிடைத்த பொற்கால ஆட்சியாளர்!

அவரே நம் கல்விக் கண் திறந்த காமராசர்!

திருக்குறள் தூதர்! 
செ. ரத்னா செந்தில் குமார் திருவண்ணாமலை.

 

149.

கர்மவீரர் காமராசர்
வாழும்.  காலம் மட்டும்
     அல்லாது
வாழ்ந்து மறைந்த 
 பின்னும் பேசப்படுபவர்
நமது கர்மவீரர் கடமை
   தனை கண்ணாக
செயல்பட்ட  கறுப்புத்
   தங்கம் நம் செயல்வீரர்
தமிழக கடைக்கோடி
   வரை கல்வி
சென்று சேர வேண்டும்
   என்ற முனைப்புடன்
ஆரம்பக் கல்வியுடன்
  மதிய உணவுத் திட்டம்
தந்த தமிழகத்தின்
  தந்தை நம்கர்மவீரர்
அணைக்கட்டுகள் பல
  கட்டிய உலகப்பேரறிவு
மனப்பான்மை கொண்ட
   பார் போற்றும்
பகலவன் பொருளாதார
  புரட்சி உருவாகக்
காரணமான பொருள்
   ஆதார வித்தகர்
எத்தனையோஅடித்தட்டு
   மாணவர்களை கரை
சேர்த்த கல்வி மாலுமி
  கடையனுக்கும் கடைத்
தேற்றம் வழங்க உறுதி 
   கொண்ட செம்மல்
இந்திய பிரதமர்களை
  உருவாக்கிய சிற்பி...


திருமதி.கோ.சங்கரம்மாள்.திருவில்லிபுத்தூர்.

 

150.

அரசியல் ஆளவந்தானே! விருதுநகரில் வீரனே! வியக்க வைத்த விந்தையே! படிக்காத மேதையே!
பள்ளிகளை திறந்த பகுத்தறிவு பகலவனே! எளிமையின் ஏகாந்த தலைவனே!
பாமரனின் பங்காளனே!
உண்மையின் உறைவிடமே!
ஒரு முறை தான் ஆட்சிக்கு வந்தாய்!
பல ஆட்சிகள் பேசும் அளவிற்கு நல்லது செய்தாய்!
தன்னையும் வீட்டையும் மறந்து நாட்டுக்காக
 வாழ்ந்தவர்! விவசாயம் செழிக்க மின்சாரம் கொடுத்தவர்!
பொருள் தேடலில் இவர் இறங்கவில்லை!
செல்வ வளத்தை இவர் சேர்க்கவில்லை!
அழகு தமிழ் இவரது பேச்சு!  சமத்துவம் இவரது மூச்சு!
மனிதாபிமானம் கொண்ட காந்திய இவர்! கதர் ஆடை அணிந்த கல்வியின் தந்தை இவர்! பால் உயர்ந்த வல்லர்  இவரே!
ஊருக்கு உழைத்த உத்தமர் இவரே!


கு. பாக்கியலட்சுமி
 வாவு வஜீஹா வனிதையர் கல்லூரி.

 

151.

கர்மவீரர் காமராஜர்


கர்மவீரராம் காமராஜர் 

கல்விக்கண் திறந்த வள்ளல் 

கருப்புக் காந்தி என்றெல்லாம் 

புகழப்படும் புகழ் மொழிக்கு உரித்தானவர் 

புரியும் நற்செயல்களால் நாடே நலம் பெற்றது 

மங்கிய குழந்தைகளின் எதிர்காலத்தை மீட்டெடுக்க

மதிய உணவு திட்டத்தை கொடுத்து 

அறியா பிள்ளைகளின் அறிவை வளர்த்தாய் 

அணைக்கட்டுகள் பலகட்டி அனைவரையும் கவர்ந்தாய் 

வாடகைக்கு வீட்டில் வசித்த தெய்வமே !

வாசல் தோறும் வீசுகிறது உன் புகழ் !

ஏக்கமாய் இருந்த கல்வியைக் கொடுத்த 

ஏழைகளின் பங்காளனே என்றும் நீ வாழ்க !

எளிமையின் நாயகனே ! எங்கள் தலைவனே !

நாட்டு நலனுக்காக உழைத்த நல்லவரே !

நீ வாழ்க ! உன் புகழ் வாழ்க ! 


ஜோ.உதயலெட்சுமி,
புன்னைச் சாத்தான் குறிச்சி

 

152.

தன்னலம் கருத  தமிழ்நாட்டின் தலைமகனே கருப்பு வீரனே !
எங்கள் பெருந்தலைவனே!!

குமாரசாமியின் அன்பு காமாட்சியே!
சிவகாமியின் அழகு ராசாவே!
எங்களின் கருப்பு  காமராசவே!

கொண்டுவந்தாய் மதிய உணவு திட்டம் , 
அது கொடுத்தது மாணவர்களுக்கு இன்று கல்லூரியில் பட்டம் !!

கதர் சட்டையும் ,வேட்டியும் உன் எளிமை,
அதுவே என்றும் உன் வலிமை!!


உன் அரசியல் நிர்வாகம்  , அதற்கு நீ கை காட்டிய  இரண்டு பிரதமர்களே உதாரணம்!!

பல தலைவர்கள் மத்தியில் நேர்மையே அண்ணாந்து பார்க்கும் பெருந்தலைவனானாய்!!

இருகரை தொடும் நதிகளை தடுத்தாய்! 
விவசாய நிலங்களை அணை கட்டி காத்தாய் !!

பொதுவாழ்க்கைக்கு பலகினாய்!
மக்கள் வாழ்க்கைக்கு பாலமாகினாய்!
தொழிற்சாலைகளால் பொருளாதாரத்தை பலப்படுத்தினாய்!!

மக்கள் பணி மகேசன் பணி!
இனி என்றும் உன் பாதையில் நடப்பது  எங்கள் பணி!!


கவிதை நண்பன் ந.தினேஷ்
25A ஆரம்ப பாடசாலை தெரு ,
குமாரபாளையம் 
நாமக்கல் மாவட்டம் (638 183).

 

153.

எங்கள்  காமராஜர் 
 

விவசாயத்துக்கும்  மக்களின் குடிநீர் தேவைக்கும்

நீர்தேக்க  அணைகளை கட்டிய  காமராஜரே

ஏழை குழந்தைகளுக்கு மதிய  உணவு

அளித்த  எங்கள் பெருந்தலைவர் காமராஜரே

தொலைநோக்குப் பார்வையில் தமிழ்நாட்டு மக்களுக்கு

சிறப்பான நலத்திட்டங்கள் கொண்டுவந்த காமராஜரே

இந்திய அரசியலில் இரண்டு பிரதமர்களை

உருவாக்கிய தந்த கிங்மேக்கர்  காமராஜரே 

ஏழை குழந்தைகளுக்கு இலவச கல்வி

அளித்த  படிக்காத மேதை  காமராஜரே 

கம்பீரமான தோற்றம் கொண்ட காமராஜரே

காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் காமராஜரே

தமிழகத்தில் பொற்கால ஆட்சி தந்த

கறைபடியாத கரங்கள் கொண்ட காமராஜரே

கருணையின் முழுவடிவம் எங்கள் காமராஜரே 
 
அன்பின் சிகரம் எங்கள் காமராஜரே


கவிஞர் கணுவாய் கிருஷ்ணமூர்த்தி

கோயம்புத்தூர் மாவட்டம்

 

154.

கல்விக்கண் திறந்தவர் காமராசர்

கல்வியின் அன்னை
ஏழையின் தந்தை//

பாரியும்  வணங்கும்
பார்புகழின் வேந்தர்//


கல்வியெனும் கொடை
தந்த  கர்மவீரர்//

பள்ளிக்கூட கட்டடம்
பாருலகில் கட்டினார்//

பாமரும்  தங்கும்
மணிமண்டப கூடம்//

உணவுதந்த  உயிர்
களஞ்சிய பிறப்பிடம்//

தலைவரை உருவாக்கிய
தரணியின் தலைவர்//


ஏங்கிநின்ற பிஞ்சினை
ஏணிமேலே ஏற்றினார்//

எளிமை வாழ்க்கை
வாழ்ந்த மாணிக்கம்//

மத்திய உணவு திட்டம்   மாணவருக்கு
வகுத்தார்//

மாணவர் குலத்தை
வளர்க்க செய்தார்//

வறுமையை சொத்தாக 
கொண்ட மனிதர்//

சொத்தின் மேல்துளி
ஆசையில்லா மனிதர்//

காந்தியின் கொள்கையை
கொண்ட மனிதர்//


இயக்கத்தில் தன்னை
இணைத்துக் கொண்டார்//

மக்கள் இதயத்தில்
நிற்காமல் இயங்கிவந்தார்//

 

சோ.அனிதா,
தமிழ்த்துறை,
உதவிப் பேராசிரியர்,
ஜி.டி.என்.கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திண்டுக்கல்.

 

155.

பொற்காலம் தந்தவரே! - மீண்டும்
நற்காலம் அமைந்திட எழுந்து வா!!

கர்மவீரரே- புகழ் 
விருதுநகர் புதல்வரே!

அரசியல் வேந்தரே - எங்களை 
ஆள வந்த தலைவரே!

படிக்காத மேதையே- பிறர் 
படிக்க கல்விதந்த தந்தையே!!

கரைவேட்டி பிரியரே - மக்கள்மனக்
கறைகள் நீக்க வந்தவரே!

எளிமைக்கு உவமையே - எங்கள்
ஏகாந்த விந்தையே!

தொழிற்சாலைகள் பல தந்தவரே-  அனைத்து 
தொழிலாளர்களுக்கும் தோழரே!

அணைகள் பல அமைத்தவரே - உணவு 
அனைவருக்கும் சமமாய் கொடுத்தவரே!

தென்னகத்து தென்றலே - நீர்
தென் திசையின் அதிசயமே!

பாரத ரத்னாவே- மக்கள் 
போற்றும் பெரும் தலைவரே!

உழைப்பால் உயர்ந்தவரே- ஊருக்கு 
உண்மையாக உழைத்த உத்தமரே!

அணையா விளக்கே -  தாம்
அகிம்சைக்கு தலைமையே! 

எளிமைக்கு  எடுத்துக்காட்டே -  நீர் 
எங்களின் முதல்வரே !

அன்று உங்களின் ஆட்சி எங்களின் பொற்காலம்***  
இனி என்று கிடைக்கும் அந்த நற்காலம் ***?

 ஏக்கத்துடன் ஏங்கும் மக்களில் ஒருவள்…..,

                 
இவள் : மாலதி சுரேஷ்.கோ 
(கோவை சங்க இலக்கிய ஆய்வு நடுவத் தலைவர்)

 

156.

தென்னாட்டு காந்தி

விருதுநகரிலே வித்தாகி வேந்தர்களுக்கெல்லாம் சொத்தாகி,
தாய் தந்தையருக்கு ராஜாவாக தோன்றி,
சமத்துவமே தத்துவமாய் வாழ்ந்த உத்தமர், தமிழ்நாட்டுக்கே தவமாய் கிடைத்த தத்துவர்,


ஏழைகளின் வாழ்வுக்கு ஏற்றத்தைத் தந்தவர்,
படிக்கும்  குழந்தைகளுக்கு உணவு படைத்தவர், கல்விக்கண் திறந்த எங்கள் கர்மவீரர்,
தென்னாட்டு காந்தி என்று போற்றப்பட்டவர்,

தொழில்துறையில் மாற்றம் தந்த மகத்துவர், பல தலைவர்களை உருவாக்கிய பெருந் தலைவர்,
பகைவர்களும் பாராட்டும் பெரும் பண்பாளர்,
படிக்காத மேதை எனும் கல்வியின் நாயகர்,

மனிதநேயமே மறு உருவமே மக்கள் தெய்வமே,
தேசப் பணியும் கட்சிப் பணியும்  தன் உழைப்பே உறுதுணையும்,
கல்வி வளர்ச்சியில்
சிந்தனையும் எண்ணத்தையும் தந்தவர்,
களங்கமில்லா உள்ளம் கொண்ட இரும்பு மனிதர்,

இல்லறத்தில் என்றும் ஈடுபடாத இலக்கியவாதி,
தனக்கென நாட்டம் இல்லா தத்துவவாதி,
எவற்றின் மீதும் ஆசைப்படாத அரசியல்வாதி,
மறைந்தாலும் மக்கள் மனதில் நீங்கா கருப்பு காந்தி.

 கு.சுரேஷ்
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,

வேல்டெக் ரங்கா சங்கு கலைக்கல்லூரி,

ஆவடி, சென்னை- 600062.

 

157.

சீர்திருத்த உழவன்

 படிக்காத மேதையாக உயர்ந்தவரன்றோ!!

அனைவருக்கும் மரியாதை கொடுப்பதில் சிறந்தவரன்றோ!!

 ஒரு நாட்டின் முதலமைச்சராக இருந்தாலும் எளிமையாக இருந்தவரன்றோ!!

ஏழைகளையும் சமமாக மதித்தவரன்றோ!!

தனக்கென வாழாமல் மக்களுக்காக வாழ்ந்தவரன்றோ!!

தன்னுடைய வாழ்வில் எளிமையை கடைபிடித்தவரன்றோ!!

அனைத்து மாணவர்களுக்கும் படிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவரன்றோ!!

எந்த ஒரு செயலிலும் எல்லோரிடத்திலும் நேர்மையை கடைப்பிடித்தவரன்றோ!!

கல்விக்கண் திறந்த காமராசர் அவர்கள் ஆடு மேய்க்கும் சிறுவர்களிடமும் பழகியவரன்றோ!!

பல அரசியல் கட்சித் தலைவர்கள் நேர்மையை கடைப்பிடித்தவரன்றோ!!

பெரியாரிடமும்  மற்றும் மக்களிடமும் நேர்மையா இருந்தவரன்றோ!!

கடுமையான உழைப்பு வறுமையிலிருந்து மீட்டெடுக்கும் என்பதை உணர்ந்தவரன்றோ!!!

தென்னாட்டு காந்தி, கருப்பு காந்தி யான இவர் ஒரு சீர்திருத்த உழவனன்றோ!!

 

திருமதி.ஒ. அமுதா முருகையன். 

 

சேலம் மாவட்டம்.

 

158.

பொதுவாழ்வில் நேர்மை

அன்பும் பண்பும் நிறைந்த ஏழைப்பங்காளன் காமராஜரன்றோ!!

ஆண்டுதோறும் காமராஜர் பிறந்தநாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகின்றதன்றோ!!

இலவச கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றியவரன்றோ!!

ஈடுபாட்டுடன் பல கல்லூரிகளைத்  திறந்தவரன்றோ!!

உடனடியாக மூடப்பட்ட பள்ளிகளை திறந்தவரன்றோ!!

கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்டதன்றோ!!

பள்ளிகளின் வசதிகளைப் பெருக்க பள்ளி சீரமைப்பு மாநாடுகள் நடத்தியவரன்றோ!!

குழந்தைகள் ஏற்றத்தாழ்வின்றி படிப்பதற்கு சீருடை திட்டத்தை கொண்டு வந்தவரன்றோ!!

விவேகமான புத்திக்கூர்மை உடையவரன்றோ!!தனக்கென வாழாத தலைவனன்றோ!!

நாடு தான் என் குடும்பம் என்று கூறியவரன்றோ!!

ஏழை மக்களுக்கு உணவு உடை கல்வி என அனைத்தும் கொடுத்தவரன்றோ!!

தென்னாட்டு காந்தி என்று அனைவராலும் போற்றப்பட்டவரன்றோ!!

 இவ்வளவு சிறப்புகள் பெற்ற தாலே இளைஞர்கள் இதனை கடைபிடித்தால் மிகவும் சிறப்பே!!

அ.மு.தர்ணிகா ஸ்ரீ

ஒன்பதாம் வகுப்பு சேலம் மாவட்டம்.

 

159.

பொதுவாழ்வில் நேர்மை:-

அனைத்து மக்களின் இதயத்தில் இடம் பிடித்தவரன்றோ!!

ஆடு மேய்க்கும் சிறுவனர்களுக்கும் கல்வியறிவைக் கொடுத்தவரன்றோ!!

இந்திரா காந்தி அவர்களும் பிரதமராகப் பாடுபட்டவரன்றோ!!

ஈடுபாட்டுடன் மக்களுக்காக  உழைத்தவரன்றோ!!

உழவர்களின் பசியாற்ற வந்த மாமேதையன்றோ!!

ஊர் முழுதும் பள்ளிக்கூடங்கள் அமைத்தவரன்றோ!!

எளியவருக்கும் வறியவருக்கும்  பல உதவிகள் செய்தவரன்றோ!!

எப்பொழுதும்  தமிழ் நாட்டிற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் உழைத்தவரன்றோ!!

ஐயமின்றி அன்றும் இன்றும் என்றும்  கிராமப்புற மக்களின்  கல்வியறிவு வளர்வதற்கு பாடுபட்டவரன்றோ!!

ஒத்துழையாமை இயக்கம் போன்ற பல விதமான போராட்டங்களை செய்து சிறையிலேயே வாழ்ந்தவரன்றோ!!

ஓடி ஓடி உழைத்து நாட்டுக்காக சீர்திருத்த பணிகளை செய்திடும் சமூக பற்றாளன்றோ!!

ஔவைத் தமிழில் அனைத்து பாடப் புத்தகங்களிலும்  நீங்கா இடம் பிடிதவரன்றோ!!!

இஃது அனைத்திற்கும் மேலாக கருப்பு காந்தி மற்றும் தென்னகத்து காந்தி என்று அனைவராலும் போற்றப்பட்டவரன்றோ!!


அ.மு.வித்யா சாரா
பதினோராம் வகுப்பு

சேலம் மாவட்டம்.

160

கர்ம வீரர் காமராஜர்
கருமமே கண்ணான காமராஜர் தருமமே தலைகாத்த முதலமைச்சர்

 முட்டையை மட்டுமே அசைவமாக உண்டவர்! கோட்டையை மட்டுமே கொத்தளமாகக் கொண்டவர்!

கருப்பு காந்தி என்று பெயரெடுத்தவர்!
செருப்பு போடாமல்
கால்நடந்தவர்!

காங்கிரஸ் இயக்கத்தின்
செயல்பாட்டாளர்!
கிங் மேக்கர் என்று
செயல்பட்டவர்!!

மதிய உணவளித்துப்
படிக்க வைத்தவர்!
சாதிய சிந்தனையை
ஒடுக்கி வைத்தவர்!

படிக்காத மேதை என்ற
மேரு மலை!
பிடிக்காத மனிதர் என்று எவருமில்லை!

முனைவர் வ ஹரிஹரன்
திருநெல்வேலி

161

காமராசர் புகழ்மாலை

தென்னாட்டுக் காந்தியை வணங்கிப் போற்றுவோம்

 படிக்காத மேதையை
வியந்துப் பாராட்டுவோம்

எளிமை நாயகனை
வகுப்பில் பேசுவோம்

ஏழைக்கு உழைத்த
உத்தமரை வாழ்த்துவோம்

கல்விப் புரட்சிக்கு
அடித்தளம் வித்திட்டார்

கள்ளுக்கடைப் போராட்டத்தில் ஆங்கிலேயரை எதிர்த்திட்டார்

போராட்டத்தில் ஒன்பதாண்டு சிறைவாசம் அனுபவித்தார்

இலவச உணவுடன்
சீருடையும் தந்திட்டார்

தொழிற்சாலை பெருகிட காரணமாய்
விளங்கிட்டார்

தன்னலம் கருதாத
தலைவனாய் உயர்ந்திட்டார்

தலைவரை உருவாக்கும்
சக்தியாக அமைந்திட்டார்

சொந்தமும் சொத்தும்
தூரமே வைத்திட்டார்

தொலைநோக்குப் பார்வையில்
எல்லோரையும் விஞ்சிட்டார்

தோல்வி அடைந்தாலும்
வெற்றியாளராக மிளிர்ந்திட்டார்

பிறப்பும் இறப்பும்
நேர்மையாக வாழ்ந்திட்டார்.


 கவிஞர்.ச.குமார்
 சிவகங்கை

 

162

கர்மவீரரே...

விருதுநகர் தந்த விடியலின் அற்புதமே..!!!

பாடசாலைகள் தந்த படிக்காத மேதையே!!!

கண்ணியத்துடன் வாழ்ந்த கதராடை காந்தியே!!

கதராடை அணிந்த கருப்பு வைரமே!!!

எளிமையாய் வாழ்ந்து ஏழைகளை ஓழித்தவரே!!!

அணைகள் பலதந்த அற்புத தலைவரே...!!!

அற்பமாய் இருந்த ஏழைக்
 குழந்தைகளை

சிற்பமாய்
மாற்றிய அறிவுச் செம்மலே !!!

ஏழை மாணவர்களின் ஏக்கத்தை போக்கியவரே!!!

விவசாயத்தை மீட்டுத் தந்த விடிவெள்ளியே...!!!

எளிமையின் உதாரணமாய் வாழ்ந்த வலிமையே !!!

ஏழைகளின் இதயமாய் விளங்கிய அற்புதமே!!!

 அன்று அரசியலில் தோற்றது நீங்களில்லை///

அதன்பிறகு உங்கள் பெயரை உச்சரிக்காத

உத்தம அரசியல்வாதிகளை நாங்கள் கண்டதில்லை!!

நாடும் காணாது உன்னைப்போன்ற உத்தமத்தலைவனை!!!

உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும்....

உமது புகழ் அரசியலின் தூய்மையென்று...!!!

அன்புடன்

பட்டுக்கோட்டை கவிஞர். ப.ஆறுமுகம்

 

163.
காமராஜர்.

கல்விக் கண்ணைத் திறந்து வைத்தவர்//
கடமையே கண்ணான கண்ணியமான கருமவீரர் //
ஏழைகளுக்கு உணவு
படிப்பு வழங்கியவர்//
அழியாச்செல்வம் அனைவரும் பெறவேண்டும் என்றவர்//
அரசியல் தலைவர்களை உருவாக்கிய கிங்மேக்கர்//
ஏழைகளுக்கு இறங்கி ஏழ்மையில் வாழ்ந்த//
ஏழைப்பங்காளன்
பொற்கால ஆட்சி தந்த//
தமிழக முதல்வர்
வேளாண்மை நீர்ப்பாசனம் அணைக்கட்டுகள்//
அமைத்தவர்
கறுப்பு நிறத்தில் இருக்கும்//
கறுப்பு காந்தி  விருதுநகரின் வீரசிங்கம்//
துணிச்சல் நிறைந்தவர்
 தூய  உள்ளத்தவர்//
படிக்காத மேதை
பண்பாட்டில் சிறந்தவர்//
உலகம் போற்றும் உண்மைத் தலைவர்//
நல்ல தொண்டர்
மனிதநேயம் கொண்டவர்//
மண்ணுலகம்  போற்றும்
மறைந்தாலும் நிலைக்கும்//
வரலாற்று ரீதியான முக்கியத்துவம்  பெற்றவர்//
வாழும் தெய்வம்
மக்கள் போற்றும்//
மாபெரும் சீர்திருத்தவாதி சிகரம் தொட்டவர்//
வாழ்க பெயர் நாமம் வளர்க... ///

கவிபேரரசி
வீ மீனாட்சி மதுரை

 

164

காலத்தை வென்ற காமராசர்..

விருதுப்பட்டி வேந்தனிவர்! காமாட்சி என்றயிவர்!

தந்தையின்
ஆவலினால்
காமராசர் ஆனாரே!

நேருவின் இதயம்
கவர்ந்த கள்வனிவர்!
பிறந்தோம்! மறைந்தோம்!
என்று வாழாத!!

சரித்திரச் சாதனையாளர் எம்காலாக்
காந்தியிவர்!
கல்வியைக் கரையிருந்தும்
பாராமல் நம்மைக்
கரைசேர்த்தக்
கருணைக்கடல்!
காமராசர்!
கல்விக்கே இலக்கணமாய் திகழ்ந்தவர்!
பாரதத்தை வளப்படுத்த பாதைகள்
வகுத்துத்
தந்தவர்!

மக்களின் மனங்களில் நிலைத்தே
நிற்பவர்!!

பொன்னை நாடார்! பொருளை நாடார்!
புகழை நாடார்!
பெண்ணை நாடார்!
தமிழ் மண்ணின் உயர்வை மட்டுமே நாடியவர்!

கல்விக் கண்திறந்து!
ஏழ்மை!
வறுமை!
அறியாமை!இயலாமை!
என்பதனை அகற்றியவர்!

கொடிபிடித்த
தொண்டனிவர்!
கோட்டைகே
முதல்வரானார்!

ஏழ்மையின் சின்னமென! இலட்சிய  வாதியாக!

தன்னலம் கருதாத
தானைத் தலைவர்!

எட்டாண்டு வரலாற்றில்
எத்தனையோ சேவைசெய்தார்!
கருணையின்
வடிவாக!
மக்களின் மனங்களில் வாழ்கின்றார்!

கதராடை உடுத்திய காங்கிரசு வாதியிவர்!

மூடநம்பிக்கை யில்
மூழ்காத பெருந்தலைவர்!
எளிமை! தூய்மை! நேர்மை! வாய்மை! தியாகம்! உழைப்பு! இவற்றையே
சொந்தமாக்கி
காலத்தை வென்ற காமராசர்!

இவரது வாழ்க்கைமுறை!
இந்திய
அரசியலில்
இலக்கணமாய்
அமைந்திட
வேண்டுமே!!

ஜே .குணசுந்தரி.
ஒத்தக்கால் மண்டபம்.

 

165

கல்விக்கண் திறந்த காமராசர்
***********
கல்விக்கண் திறந்த கர்ம வீரா/
நல் விதையினை
விதைக்கும் புனிதமே/
சுயநலமற்ற சத்திய திருமகனாக சிறந்து/
பயமறியா நேர்மையான
குணத்தோடே பிறந்தாய்/

பள்ளியில் தீட்டிய
திட்டம் ஏழை/
பசியாற்றிட வைத்தது
எண்ணாலும் மறவோமே/
தண்ணீரின் மகத்துவம்
உணர்ந்து பொன்னாக/
தரணிக்கு அணை கட்டிக் காத்தீரே/

ஊழலற்ற அரசியலை
உலகிற்கு பறைசாற்றியே/
உன்னத வரமாக வந்த அவதாரமே/
எளிமையான வாழ்வியலை வாழ்ந்து
காட்டி/
ஏற்றம் பல கண்டு வாழ்ந்தீரே/

ஏழையின் தோழனாகத்
திகழ்ந்து சாதித்த/
ஏற்றமுள்ள எங்கள் கருப்பு தங்கமே/
தமிழ் போல் அழியாது
நின்புகழ்/
தரணியெல்லாம் மிளிரும்  காமராசர் பெயர்/

கவிஞர் முனைவர் செ.ஆயிஷா
பல்லடம்

 

166.

கர்மவீரர்  காமராசர்....

விருது நகர் தந்த கருப்புத் தங்கமே/
விலை மதிப்பில்லா செயலின் சிங்கமே/
பள்ளிச் சாலையெல்லாம் துள்ளி வரச்செய்த தூயவரே/
மதிய உணவு தந்த மகத்தான நாயகரே/
மக்கள் மத்தியில் மனம் கவர்ந்தவரே/
ஏழை மக்களின் தலைவனாய் சிறந்தவரே/
அணைகள் பல கட்டிய அரியாசனமே/
எதிர்க்கட்சிகளுக்கு உம் ஆட்சி சிம்மசொப்பனமே/
விவயாசம் பெருக்கித் தந்த வீரரே/
குலக்கல்வியை கூறு போட்ட சூரரே/
எல்லா நலமும் ஈந்திடும் கல்வியை/
இல்லாதோர்க்கும் இலவசமாய் தந்த இதிகாசமே/
தொழில் வளம் தந்த தொல்காப்பியமே/
துறைகள் தோறும் ஒளிரச்செய்த ஓவியமே/
ஆடு மேய்த்த  கல்லாச்  சிறுவனையும் /
அரவணைத்துச் சென்ற நல் ஆதவனே/
ஏர்முனையை கல்விக் கூர்முனையாக்கிய காமாட்சியே
என்றும் எதிலும் சிறந்தது உம் ஆட்சியே! -உம்
பொற்கால ஆட்சியே பிற்கால அரசின்  சாட்சியே.!
என்றும் உம் அகம்  போல் ஆடையும்  வெண்மையை சிந்தட்டும்
எல்லோர் மனங்களிலும் உம் பெயரே முந்தட்டும் !

திருமதி.இள.செல்வமணி
தலைமைஆசிரியை ,
ஊ.ஒ.தொ.பள்ளி,சித்தமல்லி.
கோட்டூர் - ஒன்றியம்
திருவாரூர் - மாவட்டம்.

 

167

 

காமராஜர்

காந்தி வழி வந்த
எங்கள் தென்னாட்டு காந்தி...

இவர் காந்தி பிறந்த நாளில் மண்ணை மறந்தார்...

பதவிக்கு படிப்பறிவு தேவையில்லை என்று காட்டிய முதல் அரசியல்வாதி...

சரஸ்வதி இருக்கும் இடத்தில் விருந்தோம்பலாம் மதிய உணவு திட்டம்...

 தனக்கான பிரதமர் பதவியை பெண்ணுக்காக விட்டுக் கொடுத்த ஆண் மகனார்...

பொன்னான ஆட்சிக்காக
இன்னொரு காமராஜரை
தேடும் மக்களில்
நானும் ஒருவர்...

வே. சாந்தி
இடைநிலை ஆசிரியர்
எஸ் எஸ் கே வி சாலா ஆரம்பப்பள்ளி முக்கூடல்
திருநெல்வேலி மாவட்டம்.

 

168

உயர்ந்த மனிதர்
******
எளிமையில் உயர்ந்தவர் எண்ணத்தில் உயர்ந்தவர் கருணையில் உயர்ந்தவர் கருத்தினில் உயர்ந்தவர் விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை விட்டுக் கொடுத்து உயர்ந்து போனவர்

திட்டங்கள் தீட்டுவதில்
அனுபவத்தில் வல்லவர்
திடமாய் வென்று செயலில் காட்டியவர் கள்ளம் கபடு இல்லாத உயர்ந்தவர்
கர்மவீரர் கடமை தவறாத உத்தமர்

காலத்தை வென்று இன்றும் நிலைத்தவர் காலத்தை அறிந்து பணிகள் செய்தவர் விருது பட்டியில் பிறந்தவர் விருப்பம் அற்றவர்
விருப்பம் உள்ளவரை உயர்த்திப் பார்த்தவர்

அரசியல் என்பது சமூக நலன் உள்ளது
அரசியல்வாதி என்பது தூய்மை சமூகத் தொண்டன்
வாழ்ந்து காட்டி வழிகாட்டியாக இருந்தவர்
வாழ்ந்த உத்தமர்
உயர்ந்த மனிதர்

கே. சுகுமாரன் M.Sc.M.A.
143/1 திருக்கயிலை இல்லம்
கோபால் நகர் ஓய்எம்ஆர் பட்டி
திண்டுக்கல்...624 001

 

169.

 

 காமராசர்

ஏழ்மையின் சிகரம் ஏழைகளின் ஆதாரம்//

தன்னலம் மறந்து பொதுநலம் பேணி//

இல்லறம் துறந்து இன்பம் துறந்து//

நாடே வீடாய்
மக்களே உறவாய்//


சத்தியமே மூச்சாய்
சமத்துமே பேச்சாய்//

அகிம்சையின் அடையாளமாய் ஆண்டவனின் மறுரூபமாய்//

பதவி துறந்த
பகட்டு துறந்த//

பாசம் துறந்த நேசம் துறந்த//

வெள்ளாடை உடுத்திய வீரத் துறவி//

தென்னாட்டில் பிறந்த கருப்பு காந்தி//

தேசம் போற்றும் தெய்வீக வாதி//

முனைவர் சு.சோனைமுத்து.
உதவிப் பேராசிரியர், சிவகங்கை மாவட்டம்
.
 

170

மாமனிதர்

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களில் ஒருவரே!

ஏழை எளிய மக்களின் காவலனே!

மிகச்  சிறந்த அழகான பேச்சாளரே!

இலவசமதிய
உணவு திட்டத்தை கொண்டுவந்தவரே!

பல திட்டங்களை வகுத்த வள்ளலே!

தொண்டர்களிடமும் மக்களிடமும் மரியாதைக்குரிய தலைவரே!

இந்தியாவில் இந்திராகாந்தியை அடுத்தபிரதமர் ஆக்கியவரே!

சமூகத் தொண்டின் எல்லையற்ற அற்புத நாயகனே!

நேர்மையான உலக வரலாற்றின் தலைவரே!

சமூகத் தொண்டினை பெரிதாக நினைத்தவரே!

இந்திய அரசின்மிக உயரிய
பாரத ரத்னாவை பெற்றவரே!

பகைவரும் மதிக்கும் பண்பான படிக்காத மேதையே!

ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழி வகுத்ததலைவரே!

இந்திய அரசியலில் மக்களாட்சியை வழங்கியவரே!


தமிழகத்தில் பொற்காலத்தை ஏற்படுத்திய சிங்கமே!

     முனைவர்
இரா.வனிதாமணி
தஞ்சாவூர்

 

171.

கர்மவீரர் காமராஜர்:
எளிமையின்
தலைமை!
ஏழைகளின் வலிமை!
வறியவரின் வாழ்வை!
வாழ்வித்த நேர்மை!
நாட்டின் வளர்ச்சியை
உயிர் மூச்சாய் கருதியமை!
கல்வி கண் திறந்த
காந்தி மகானை!
தொழில் வளர்ச்சியைத் தந்த தூயவரை!
விவசாயத்தைக் காத்த காவல் தெய்வத்தை!
தன்னலம் கருதா தியாகச் செம்மலை! தமிழ்நாட்டின் தூணை!
நடுநிலை நாயகத்தை!
மக்களின் மாணிக்கத்தை!போற்ற ஒரு  வார்த்தை போதாது -எனினும்
காமராஜர்
தொண்டைப்
போற்றுவோம் ,
நினைவுகூர்வோம்.
அவர் வழி வாழ்வோம்!சிறப்போம்!
வாழ்க! அவர் புகழ்!வளர்க! தமிழ்நாடு!
 -கவிகலை

கலைவாணி வேலுமணி

 

172. கல்வி வள்ளலே...

கல்வி வள்ளலாய்
அவதரித்த
கர்ம வீரரே!
காமராசரே!

பல ஆயிரம்
பள்ளிகள் திறந்த
படிக்காத மேதையாம்!

எளிமையின் சின்னமாய்;
வளம் பெறக் கல்வியும்
நலம் பெற உணவையும்
 கொடுத்தவராய்
வீறுநடை போட்டவராம்!

ஏழை எளிய மக்களுக்கு  உதவியவரே,
விட்டுக் கொடுக்கும் மனது கொண்டவரே,
16 வயதில் சுதந்திரப் போராட்டங்களில் ஆர்வம் காட்டி காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக ஆனவரே!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் போராட்டத்தில் கைதானவரே!

முதலமைச்சராக பதவியேற்று 
நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம்,
 கல்வி தொழில்  முன்னேற்றம்,
என்று நாட்டின் வளத்துக்காக முன்னுரிமை அளித்தவரே;

பல திட்டங்களை நிறைவேற்றி,
மலை கிராமத்தில் வாழும் மக்கள் குடிநீர் பிரச்சினையை தீர்க்க  மாத்தூர் தொட்டி பாலம் அமைத்தவரே!

பாரத மிகு மின் நிறுவனம்;
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்;
மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம்; 
இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை;
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை;
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள்; தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை; 
என் எத்தனை எத்தனை நிருவனங்கள்!

தென்னாட்டு காந்தியாம்..
கருப்பு காந்தியாம்..
மறைந்த பிறகும்
பாரதரத்னா விருது பெற்றதால் அவ்விருதிற்கே‌ பெருமை!

உன்
வாழ்வே ஒரு பாடம்! 
இன்றைக்கு உன்றன் பிறந்த நாள் -
என்றைக்கும் அது சிறந்த நாள்!


- திருமதி  ச. இராமலக்ஷ்மி

ராஜபாளையம்

சின்மயா வித்யாலயா ஸ்ரீமதி பி.ஏ.சி ஆர் சேது ராமம்மாள்

மழலையர் மற்றும் துவக்கபள்ளி 

விருதுநகர்.

 

173.

 

பெருந்தலைவர் காமராசர்...

அழியாத கல்வி செல்வத்தை தந்தவர் .

பள்ளிக்கூடங்கள் கட்டி கல்வி  தரத்தை உயர்த்தியவர்

ஏழை மாணவர்களுக்கு சத்துணவு அளித்தவர்

பள்ளி சீருடைகள் கொண்டு வந்து ஏற்றத்தாழ்வை ஒழித்தவர்

மாடு மேய்த்த சிறுவர்களை பள்ளிக்கு  வரவழைத்தவர்

அணைகளைக் உருவாக்கி விவசாயத்தை வாழ வைத்தவர்

கிராமங்களுக்கு மின்சாரத்தை கொண்டு வந்தவர்

தொழில் புரட்சி மூலம் உற்பத்தியை பெருக்கியவர்

சுதந்திரப் போராட்டத்தில் 
கலந்து கொண்டவர்.

சுதந்திரத்துக்காக ஒன்பது  ஆண்டுகள் சிறையில் இருந்தவர்

காங்கிரஸ் கட்சியில்  தனக்கென்று ஒரு சிம்மாசனத்தை வகித்தவர்

இந்திய தேசிய காங்கிரஸில் தலைவராக இருந்த ஒரே தமிழன் இவர்

 முதலமைச்சராக மூன்றுமுறை இருந்து பொற்கால ஆட்சியை செய்தவர்

 இரண்டு இந்திய  பிரதமர்களை உருவாக்கிய. ஜாம்பவான் ஆவார்

ஜாதி மதங்களை தாண்டி வாழ்ந்து  மாமனிதர்.

- க. சைலஜா கணேசன்,
கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்.

174

தென்னாட்டு காந்தி 
/////////////////////////

தமிழ்நாட்டின் மக்களுக்கு தலைவர் இவரே/

தாழ்த்தப்பட் டபழங்குடினார் தாகம் தீர்க்க/

அமிழ்தமழையாய் ஊற்றெடுத்த அறிவுக் கோவை/

ஆலமரமாய் வேரூன்றியே அஞ்சா நெஞ்சம்/

திமிலுடைய காளையாய் தினமும் உழைத்து/

தியாகங்கள் பலசெய்தார் திசைகள் தோறும்/

உமிழ்நீராய் அனைவருக்கும் உதவிகள் செய்தே/

உலகெங்கும் தொண்டாற்றிய உத்தமன் நீரே/


பள்ளிக்கூ டம்பலதிறந் தபங்களான் கடலே/

படிப்பறிவுப் பெற்றுயிங்கே பாரதம் செழிக்க/

அள்ளிதந்தாய் திட்டங்களை ஆறும் மழையாய்/

அறியாமை இருள்போக்க     அனுபவம் பெற்றே/

கள்ளமில்லா இதயத்தோ டுகறுப்பு காந்தி/

கடமைகளை ஆற்றிடவே கட்சியில் இணைந்து/

உள்ளத்திலே எழுந்துள்ள உறுதி மொழியை/

ஊக்கமுடன் செய்கின்ற உத்தம வேந்தனே/


ஆங்கிலேயர் இந்தியாவை அடிமைப் படுத்த/

அரசியலில் களமிறங்கிய ஆற்றல் வேங்கை/

தீங்கினையும் தட்டிக்கேட் கதிரண்டக் கூட்டம்/

தீப்பொறியாய் வெடித்துசிதறி தீங்குகள் குறைய/

தூங்குகின்ற மானுடத்தை துணிவாய் மாற்றி/

தூண்ணாக வலம்வந்தார் துள்ளல் இசையாய்/

ஓங்குதமிழ்ச் பேச்சாலே ஒற்றைக் கட்சியில்/

ஒவ்வொன்றைப் பகுத்தாரே ஒற்றுமைக் கூட்டே//

செல்வி. கவிதாயினி. 
பா. ஜெயபிருந்தா,
முதுகலைக் கணினி அறிவியல் துறை, 
பாவை பொறியியல் கல்லூரி,
நாமக்கல் மாவட்டம் - 637 409.

 

175.

கர்மவீரர் கருணை வல்லள்
////////////////////////////////////

சமுதாயம் மலர்ந்து சரிநிகராய் பூத்துகுலுங்கிட//

பாடசாலைப் பலதிறந்து 
படிப்பறிவைத் தந்திடவே//

அணைகள் அமைத்தாய்
அகிலம் செழித்திட//

பட்டினியைப் பகலவனாக்கி
பாலமாக உயர்ந்திட//

எளிமையின் தோற்றமே
உழைப்பின் நாயகரே//

வித்தாய் வெடித்தாய்
வெள்ளிப் பனிமலையாய்//

 அறிவுப்பெட்டகத்தின்
அணையா மகுடமாகி//

பசியை மறந்தாயே
படிப்பை உணர்ந்தாலே//

பகுத்தறிவு  பகலவரே
தன்னலமில்லா தலைவரே//

வரலாறுப் படைக்க
வறுமையைக்கண்டு
எழுந்தவரே//

சிந்தனையில் உதித்தது
சிற்பமாய் எழுந்திருக்க//

மனதையுருக்கும்
மந்திரமாய்
ஏடுகளில் தவழும்//

எளிமையிலும் நேர்மையிலும் எல்லோருக்கும் ஏணியாக//

உருவச்சிலையாய்
உருவெடுத்தாய்
உலகெங்கும் புதுமையாய்//

ஏழைகளின் ஏக்கங்களை
ஏட்டினில் தந்தவரே//

ஏர்பிடித்து சீராக்கி
கல்வியைத் தந்தவரே//

இளமைப் பருவத்தில்
அனலாகும் போராட்டத்தை//

புரட்சிகளோடு செய்தாய்
பொங்கிஎழுந்த புனலாக//

தென்னாட்டு மண்ணிலும்
கற்கலைச் சிலையானவரே//

உன்னைத்தேடும் இருவிழியும்
இனிமையாகப் போற்றிட//

மகத்தான திட்டங்களை
மானிடத்திற்கு அளித்தாயே//

சிறைகள் பலகண்டு
சித்திரங்கள் தீட்டி/

முத்திரையும் பதித்துவிட்டாய்
முகமலர்ந்த சிரிப்பாலே//

நித்திரைகளை நினைவாக்கி
கனவுகளை நனவாக்கினாய்//

///////////////////////////////////

முனைவர். கவிஞர். 
இரா.  பாண்டியராஜன்                  
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
லதா மாதவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கிடாரிப்பட்டி, அழகர்கோவில், 
மதுரை மாவட்டம் - 625 301.

////////////////////////////////////

176.

கர்மவீரர் காமராசர் 
மெட்டு ....என்னடி ராக்கம்மா

கல்வியைப் பயிராக்கி
நீ தந்த விவசாயப் பெருமையை  சொல்லட்டுமா?
நாடு உன்னாலே தான் கண்ட பெருமையை எண்ணி 
கவிப் பாடட்டுமா? 
                   (1)
ஆரம்ப பள்ளி தந்த ஆனந்தமே 
அதில் உன் பங்கை சொல்லட்டுமா? கல்லாமை  காணாமல் செய்தவரே
இன்று உன் புகழைப் பாடட்டுமா

மாடு மேய்க்கும் குச்சியை தூர
போடச் சொல்லி 
பள்ளி பாடல் நூல் தந்தவர் நீ! துளிர்கல்வி ,தொழிற்கல்வி, கலைக்கல்வி ,
தரச் சொல்லி உயர்வாக நின்றவர் நீ!
                    (2)
ஏர் உழவும் பார் புகழச் செய்திடவே 
பல நீர்த்தேக்கம் தந்தவன் நீ 
பெரும் தொழிலும் சிறு தொழிலும் பெருகிடவே புது பொருளியலை சொன்னவன் நீ 

மாணவன் வயிராற சாப்பிட தான் 
சத்துணவு தந்தவன் நீ!
உன் நினைவும் உன் செயலும் 
என் நினைவில் தினம்  வாழும் கிங்மேக்கர் காமராசர் நீ !

- முனைவர் பெ தமிழ்ச்செல்வி,

வாலாஜாப் பேட்டை.

 

177

 கர்ம வீரர் காமராஜர்...

தேசங்கள் புகழ்ந்து பேசும் காமராஜவே /

சூரியன் ஒளியாய் 
நாட்டில் உதிர்த்து /

இருளை என்னும் 
தீமையை ஏறித்தவரே /

விருதுபட்டி நகரில் 
எழுந்து வந்து /

கல்வி கண்ணை 
திறந்து வைத்தவரே /

அறிவு ஆற்றல்
சூழ்ந்து இருக்க /

படிக்கும் பிள்ளைகளுக்கு
கல்வியை ஊட்டியவரே/

மனிதநேயம் கொண்டு 
நாட்டை காத்து /

மக்கள் மனதில்
இடம் பிடித்தவரே /

பதவி பட்டத்தை 
நினைத்து பார்க்காமல் /

தமிழ் தலைவனாய் 
மண்ணில் வாந்தவரே/

வறுமை காலத்தில்
 துணை நின்று /

மக்கள் முகத்தில் 
சிரிப்பை பார்த்தவரே /

ஏழையின் வாழ்வில் 
துன்பதை கண்டு /

ஆடை உணவுகளை 
வழங்கி வந்தவரே /

உதவி தருமாங்கள் 
வாழ்வில் செய்து /

கருப்பு காந்தியென்று
பெயர் பெற்றவரே /

எளிமை நேர்மை 
செயலில் இருக்க /

நாட்டின் வளர்ச்சி 
ஏற்றம் கொண்டு /

வாழ்ந்த காலம் 
சாதனையாக மாறியதே /

இரா.மோகனதாஸ் சிவலிங்கம்,

மலேசியா,

 

178.

காமராஜர்

கல்விக் கண் திறந்தவரே......

கல்வியைப் பாதியில் நிறுத்தியவரே.......

 கல்வியை இலவசமாகத் தந்தவரே.....

மத்திய உணவு திட்டத்தைய அறிமுகம் செய்தவரே........

சிறு வயதிலேயே தந்தையை இழந்தவரே.......

காங்கிரசின் உறுப்பினரே......

தமிழகத்தின் முதல்வரே......

தென்னகத்துக் காந்தியே......

ஏழ்மையில் வாழ்ந்தவரே......

ஏழைக்காக வாழ்ந்தவரே.....

பாரத ரத்தனா விருதுக்குச் சொந்தகாரரே.....

பெருமைக்குரிய தலைவரே......

கர்மவீரரே காமராசரே......

உன் புகழைப் பாடவே இக்காவியம்.......

இக்காவியம் புகழவே உன் புகழ்......

 

இளங்கவி வ.ஜீவஸ்ரீ
கரூர்

179.

காமராசர் பிறந்த நாள் விழா...

ஆடுமேய்த்து வாழ்வையிழந்தோர்
அகிலமெல்லாம் பெரும் புகழோடு வாழ ஊர்கள் தோறும் பள்ளிக்கூடம் அமைத்த கல்வித்தந்தையே!

நன்செய்யானாலும் புன்செய்யானாலும் கார்முகிலின் தேவையை உணர்ந்து வான்மழையைத் தேக்கி விவசாயிகளின் கவலைப்போக்க அணைகள் பல கட்டிய ஆண்டவரே!

நாளெல்லாம் உழைத்து உழைத்து வறுமையில் வாடும் தொழிலாளர் நலன்காக்க திட்டங்கள் பல வகுத்த பெருந்தலைவரே!

காமாட்சியெனும் பெரும் பேர் பெற்ற உத்தமரே உமது ஆட்சியில் உம் உதிரத்தை மக்களுக்காக வழங்கியவரே எளிய வள்ளலே!

பட்டங்கள் பல பெறாவிட்டாலும் திட்டங்கள் போட்டு சட்டங்கள் பல இயற்றி உலகநாட்டிற்கே முன்னுதாரணமான பெருந்தலைவரே!

ந.வினோத்
தமிழாசிரியர்
K.m.m பதின்மப் பள்ளி
இருகூர்
கோவை.

180.

தமிழ் தாயின் தவப்புதல்வன் காமராஜர்


இந்திய தாயின் தலை மகனே/
விருதுநகர் தந்த விடியலின் விளக்கே/
 கல்வி கடை கோடி மனிதனுக்கும்/
 கல்வி கற்க செய்தவரே நீரே/
எளிமையின் முதன்மை சிகரம் நீரே/
 ஏழை மக்களின் கடவுளும் நீரே/
 ஏழை மக்களுக்காகவும் அரசியல் செய்தவரே/
 உணவு திட்டம் கொண்டு வந்தவரே/
 உன்னத மனித உருவம் கொண்டவர் நீரே/
 பதவி சுகம் இல்லாத பண்பாளரே/
 கருப்பு நிற கடவுளும் நீரே/
 கதர் அணிந்த கனிவானவரும் நீரே/
 அரசியல் வாதிகளின் கற்கும் கல்லூரியே/
 சொன்ன சொல் தவறாத உத்தமரே/
  வாழும்போதே தெய்வமாய் வாழ்ந்தவரே/
 மனிதம் இல்லா தமிழகத்தை மீட்டெடுப்போம்/
பிறந்து வாரீர் எங்களை காக்க/

முனைவர். ஜெ. ராஜகுமாரி.

உதவிப் பேராசிரியர் -தமிழ்துறை.

கிறிஸ்டோபர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.

நான்குனேரி. திருநெல்வேலி.

 

181.

உன் காலத்தில்
எதுவுமே செய்யவில்லை நீ !
 
உன் காலத்தில்
எதுவுமே நடக்கவில்லை..

எதுவுமே செய்யவில்லை
எதுவுமே நடக்கவில்லை
உன்னை ஏன் போற்று கிறார்கள் ?

உன் காலத்தில்
ஊழல் இல்லை
 இலஞ்சம் இல்லை
கள் இல்லை
கமிஷன் இல்லை
கல்வி கட்டணம் இல்லை.
கழிப்பிடங்களில் கூட
கட்டணம் இல்லை

மனைவி இல்லை
துணைவி இல்லை.
தாயையும் தள்ளி வைத்தாய்

பற்று இல்லை
குடும்பத்திலும்
வங்கிகளிலும்.

நீ சொல்லவில்லை
ஏழைத்தாயின் மகன் என்று

இல்லை உன்னிடம்
கோடீஸ்வர குபேரன்களின்
சிநேகம்..

உன் வாழ்க்கை வரலாற்றை
நீயே எழுதிக்கொள்ளவில்லை

முப்பது வகையான
மந்திரிகள் இல்லை

பள்ளிக்கு போகவில்லை
பட்டம் பெற்றவன்
என பம்மாத்துமில்லை..
உன்னிடம்

கோட்டு சூட்டு மாட்டியதில்லை
கோர்ட் சூட்டும் போனதில்லை.

நீ எதுவுமே செய்யவில்லை
நன்மைகளை தவிர..

உன் படத்திற்கு மாலையிட
தகுதி உள்ளோர் மட்டும் வருக என்றேன்..
வெட்கத்துடன் எல்லோருமே
விலகி கொண்டனர்.

 Ar ரமேஷ் குமார் அ நா.

 

182.

தலைப்பு கர்மவீரர் காமராசர்

குமாரசாமி சிவகாமியம்மை
தவத்தின்   பயனே

விருதுநகரில் பிறந்திட்ட
வீரத்தின்  விளைநிலமே

படிக்காத  மேதையே
பாமரனின்  தோழனே

வெள்ளையாடை  அணிந்த
வெள்ளையுள்ளம்  கொண்டவரே

திட்டங்கள் பலதீட்டி
திறமையுடன்  நடந்தவரே

மூன்றுமுறை  முதலமைச்சராய்
முத்தாக  ஆண்டவரே

மக்கள் நலன்களை
மகத்தாக  செய்தவரே

பாலங்கள்  இணைத்து
அணையும்  கட்டியவரே

தேசங்கள்  போற்றிடும்
தென்னாட்டு காந்தியவர்

அரசியல்  களத்தின்
ஆசானாய் உதித்தவரே

அன்பையே  விதைத்து
அறிவைக்  கொடுத்தவரே

பாமரனும்  படித்திட
பாடசாலை  தொடங்கியவரே

ஏழைக்கும் கல்வியென்றே
ஏற்றம்பெறச் செய்தவரே

சத்துணவுத்    திட்டத்தை
பள்ளிகளில் தந்தவரே

பாரதத்தாய்  பெற்றெடுத்த
பார்புகழும்  பாவலரே

காலங்கள் கடந்தாலும்
கர்மவீரர்  நீயன்றோ

போற்றிடுவோம் புகழ்ந்திடுவோம்
வாழ்த்திடுவோம்
வணங்கிடுவோம்

-ஆன்மிக லட்சுமி =( சி. மீனாட்சி)

 

183.

கர்மவீரர் காமராசர்.

இராசா என்று அழைக்கப்பட்டு பின்னர் //

தமிழ்நாட்டுக்கு முதலமைச்சர் என்ற இராசாவானார் //

ஆடு மேய்த்த பையனின் கேள்விக்கு //

மத்திய உணவே சிறந்ததென அறிந்தவர் //

மக்கள் வரிப்பணத்தில் எதையும் அனுபவிக்காதவர் //

ஏழைகளை வாழ வைத்த  பங்காளன்//

எளியாக வாழ்ந்த கருப்பு தங்கம்//

மூடியிருந்த கல்விச்சாலைகளை திறந்த செம்மல் //

உழவர்களும் உழவுத் தொழில் சிறக்கவும் //

ஆறுகளின் குறுக்கே அணைகளை கட்டியவர் //

மக்களின் வாழ்க்கையை மட்டுமே சிந்தித்தவர் //

கக்கனை கையிலே கொண்டு சாதித்தவர் //

மாட மாளிகையில் வசதியாக வாழவில்லை //

இறுதி வரை வாடகை வீடுதான் //

கிழிந்த துணியை தைத்து அணிவார் //

மகாத்மா காந்தியின் பிறந்த தினம் //

காமராசரின் இறப்பு தினமாக மாறியது //

பொ.ச.மகாலட்சுமி
கோவை.

 

ஆனந்தத்தின் அலைவரிசையாக உலகெங்கும் இன்னிசை ஸ்வரங்கள் மீட்டும்...

உங்கள் மகிழ்ச்சி Fm ல் 24×7 இனிய பாடல்களோடு,புதுமையான நிகழ்ச்சிகளையும்...

கேட்க உடனே PlayStore ல் Download பண்ணுங்க

மகிழ்ச்சி FM HD APP செயலியை பதிவிறக்கம் செய்ய..

Magizhchi FM HD App

https://play.google.com/store/apps/details?id=com.magizhchi.fm

 

இணையதளத்தில் கேட்க ...  www.magizhchifm.com

காணொளி காண:- https://www.youtube.com/channel/UC5pu...

மகிழ்ச்சி Fm சேனலை Subscribe பண்ணுங்க.

மறக்காமல் லைக் போடுங்க.

Telegram குழுவில் இணைய.. https://t.me/magizhchifmandsocialmedia

Face book பக்கம் https://www.facebook.com/Magizhchifm-...

Twitter பக்கம் https://twitter.com/magizhchifm

Instagram பக்கம் https://www.instagram.com/magizhchifm/

தொடர்புக்கு - 8838078388

மகிழ்ச்சி FM
இது ஆனந்தத்தின் அலைவரிசை

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE