புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அபியின் கவிதைகள் , அபியின் கவிதைகள் , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

உலக இதய தினம் செப்டம்பர் 29

29 செப்டம்பர் 2023 1,279 பார்வைகள்
உலக இதய தினம் செப்டம்பர் 29

உலக இதய தினம் செப்டம்பர் 29

காக்க காக்க ...இதயம் காக்க....

நான்கு
அறை
வாடகைக்கு
எடுத்து...!
உன்னை
இயங்க
இரத்தத்தை
சுத்தம்
செய்து....!
தேவையற்ற
கழிவுகளை
நீக்கம்
செய்து....!

உந்து
சக்தியாகவும்
இயங்கு
சக்தியாகவும்
ஓய்வில்லாமல்
உழைக்கும்
எனக்கோ
தண்டனை
இப்படி
கொடுக்கிறீர்கள்....??

கண்கள்
செய்த
தவறுக்கு
எனக்கு
தண்டனை
கொடுக்கிறீர்கள்...?

நாக்கு
ருசிச்சி
சாப்பிட்டதற்கு
எனக்குள்
கொலுப்பை
கொடுக்கிறீர்கள்...?

சொந்த பந்தம்
செய்த
சூனியத்திற்கு
வலியை
எனக்குள்
ஏற்படுத்துகிறீர்கள்

மனம்
மயங்கி
செய்த
லீலைக்கு
குணம்
கெட்டு
என்னை
நிறுத்த
பார்க்கிறீர்கள்...?

உண்டு
பெருக்கும்
ஊளைச் சதையை
தவிர்த்து...!

புகையெனும்
நஞ்சை
புன்சிரிப்போடு
எனக்கு
பகையாக்காமல்
நிறுத்து...?

சினம்
கொண்டு
அழுத்தம்
கொடுக்காமல்
புன்னகையுடன்
இதமான
இதயத்தை
இதமாக
இயங்க
இதயகீதம்
ஒலிக்க
இணைந்தே
இயல்பாய்
இருப்போம்

இதயம் காப்போம்...
 

கவிஞர் ப.சூர்யசந்திரன்
கம்மங்குடி- நன்னிலம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE