எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் மகிழ்ச்சி பண்பலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பாக மகிழ்ச்சி ரேடியோ நிலையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை 30.09.26 ஆம் நாள் அன்று கையொப்பமிட்டது. ஒப்பந்தமானது, எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரா.விமல் நிஷாந், புலம் முதன்மையர் முனைவர் கு.மஞ்சுளா தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர் திரு லோ.கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் மகிழ்ச்சி வானொலி பண்பலை( FM) நிர்வாக இயக்குநர் முனைவர் ஜெ மகேந்திரன் அவர் ஒப்புதல் தெரிவிக்க இருவரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒப்பந்தத்தின் நோக்கமானது எதிர்காலத்தில் தமிழ்த்துறை மாணவ, மாணவியர்கள் வானொலி பண்பலை நிலையத்தில் ஏதேனும் பணியிட வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் மாணவர்களுக்கு பணியானது பயனுள்ளதாக அமையும் என்ற நோக்கத்தோடும், மாணவர்கள் ஊடகம் , வானொலி பண்பலை நிலையம் சார்ந்த பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ளும் நோக்கத்தோடும் ,சமூக நடப்பியல்புகளை வானொலி நிலையத்தில் பரப்பக்கூடிய ஒளி பரப்பாளராக, செய்தியாளராக, விளையாட்டு வீரர்கள், அரசியல், தொழிலதிபர்கள்,சிறந்த கவிஞர்களிடையே நேர்காணல் செய்பவராக தம்மை மேம்படுத்திக் கொள்ளும் பட்சத்தில் இவ்ஒப்பந்தமானது மேற்கொள்ளப்பட்டது. இது மாணவர்களுக்கு ஒரு நல்ல பணி வாய்ப்பாக அமையும் என்பதை கருத்தில் கொண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை தமிழ்த்துறை உதவி பேராசிரியர் திருமதி நித்யா அவர்கள் செய்திருந்தார்.