magizhchifm2020@gmail.com செவ்வாய், 17 November 2026
⚡ சமீபத்திய
நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் உண்மையின் குரலாக ஒலிக்க வேண்டிய ஊடகங்கள்! பார்போற்றும் பாவையர் பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை எழுதிய ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் பாராட்டு! பாரம்பரியத்தின் நாதமாக ஒலிக்கும் இளம் கலைஞர் விருதுநகர் தினேஷ் ! காலத்தால் அழியாத சித்திரக்கவிதைகளைக் காக்கும் நவீன காலப் புலவர் சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் உண்மையின் குரலாக ஒலிக்க வேண்டிய ஊடகங்கள்! பார்போற்றும் பாவையர் பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை எழுதிய ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் பாராட்டு! பாரம்பரியத்தின் நாதமாக ஒலிக்கும் இளம் கலைஞர் விருதுநகர் தினேஷ் ! காலத்தால் அழியாத சித்திரக்கவிதைகளைக் காக்கும் நவீன காலப் புலவர் சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம்
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்

12 செப்டம்பர் 2022 6,515 பார்வைகள்
தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்

"யாரோ எழுதிய பழையகடிதம்
என் கையில் சிக்கியது"

   தந்தை ! மகனுக்கு, எழுதிக்கொள்வது!!
தடுக்கி விழுந்த குழந்தையை
  தலைதெறிக்க ஓடிவந்து தூங்குவாள் அன்னை!

தன்பிள்ளை எழுகிறானா?
எழமுடியாமல் தவிக்கிறானா?
என ,தனக்குள்ள ,வீரம் தன் பிள்ளைக்கு இருக்கிறதா! என பார்ப்பதுதந்தை!!

நீ! வீரனின் மகன் கோழை அல்ல!
வீழ்ந்தாலும் தன்னம்பிக்கையில் எழுந்து ஓடி சாதனை படைக்க கூடிய
பலம் உன்னிடம் கண்டேன்!!

அதனால் உன்கரங்கள்! நம் குடும்பத்தை உயர்த்தும் எனநம்பி!
உன் கல்லூரி வாழ்க்கை முடிய!

ஆகாத வழியில் கடன் தொல்லை வந்துநிறைய!

ஆடம்பர செலவு எனக்கே செய்யயதால்
ஆகாத நண்பர்களோடு சேர்ந்து !அவர்களையும் கெட வைத்து !
நானும் போதை, புகை பகைக்கு அடிமை ஆனதால்!!

சொந்த ஊர் சொந்தங்கள்! நகைக்க! பகைக்க! வாழ்ந்த
இந்த ஊரையே வெறுக்க!

சொந்தமூளையில் சிந்தித்தேன்!
வலுவிழந்ததேகம்கொண்டு!

சொத்துகளை விற்றும்
அரசியலில் நிற்கமதுபாட்டில்கள்வாரி இரைக்க!

நம் குடும்பத்திற்காய் ஒன்றும் செய்யாது!
கெட்டவனானேன்!

வீட்டார்சொல் கேட்க்காது !விரும்பியவளை திருமணம் முடிக்க!
தீராத பகை யெல்லாம் தேடிக்கொண்டேன்!

படித்தும் பண்பிழந்து!
குடித்தும் போதைக்கு
அடிமையாகி ! உடல் இளைத்தேன்!!

பணம் இருக்க,,! உடன் வந்த நண்பர்கள் பணமிழக்க! என்னை வெறுத்துப்பார்க்க!

எனக்குள் உறங்கிய மூளைக்கு வேலை கொடுத்தேன்!

இனிய கனிகள் இருக்க! காய் கவர்ந்து!!
அடைந்த இன்னல் போதுமென!!
அன்பு மனைவி! ஆசைபிள்ளைகளை !
உன்னிடம் ,வயது வந்த மூத்த மகனே! உன்னிடம் குடும்பபொறுப்பை ஒப்படைத்து!!

நான் விழுந்த குழியில் நீ வீழாதே!
என எச்சரித்து!!

தொடர்பில்லாத! எல்லைக்கு அப்பால்
செல்கிறேன்!!

என் தந்தை! நான்கற்கும் போது கற்றுத்தந்த கைத்தொழில் கைகொடுக்கும்!!

என நம்பிக்கையில் பயணிக்கிறேன்!
நலமோடு இருந்தால்
பத்து வருடம் கழித்து வருகிறேன்!!

என் மனைவி மேல் நம்பிக்கை வைத்து!
என்மகனே! உன்மேல் உயிரை வைத்து! 
என் தவறுகளை திரித்திக்கொண்டு! மனமாற்றத்தோடு!!
பயணிக்கிறேன்!

இந்த கடிதம் நீங்கள் படிக்கும் நேரம்! என் புது பயணம்!
தொடரும்,,,என்று
இந்த கடிதம் எழுதுகிறேன்!!

நீ என்னை போல் ஆகிவிடாதே
நான் செய்த தவறுகளைநீ !செய்து விடாதே!

இப்படிக்கு
அன்புள்ள அப்பா!அப்பா!

கவிதை மாணிக்கம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE