வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

பெரியாரின் மகத்துவம்

17 செப்டம்பர் 2022 825 பார்வைகள்
பெரியாரின் மகத்துவம்


பெரியாரின் மகத்துவம்

சுயமரியாதை இயக்கத்தின்  தூண் ஆகவே/
சுயநலமற்ற  சீர்திருத்த  திருமகனாம் ஈவேராவே/ 
சமுதாய அவலங்களை 
வேரோடு சாய்த்திடவே/
சத்திய தலைவராய் தரணியில் மிளிர்ந்தாயே/

பகுத்தறிவு பகலவனாய் 
பாரெங்கும் புகழடைந்தே/
பழம்பெருமை பெற்ற திராவிடர்களின் தோழனானாய்/
தீண்டாமை என்றொரு 
வார்த்தைக்கு முடிவுகட்டிடவே/
தீயாய் உருமாறி புரட்சி தீபமேற்றினாய்/

மங்கையர் வாழ்விலே அடிமையென்றொரு விலங்கொடிக்க/
மண்டிக்கிடந்த சாதிய சாக்கடையை அகற்றிடவே/
மதங்களைக் கடந்த மகத்தான தெய்வமாய்/
மண்ணில்  வாழ்ந்த உண்மைச்  செம்மலே/

சீர்மிகு ஆற்றலாய் சிந்தனைச் சிற்பியாய்/
கூர்மிகு ஆயுதமாம் எழுதுகோலை விரும்பியே/
போராட்டக்   களத்தில் 
வேட்கையாய் அரிமாவொப்ப/
வாராத துன்பம் வந்திடினும் வாடாமலரே/

எடுத்த கொள்கையில் 
ஏற்றம் கண்டிட/
எண்ணிய காரியம் திண்ணமாய் அமைந்திட/
எழுச்சி மாநாடு பல கண்ட/
எங்கள் வைக்கம் வீரரை 
போற்றுகிறோமே/

சாதனைப் பெண்மணி கவிஞர் முனைவர் 
செ .ஆயிஷா 
காருண்யம் அறக்கட்டளை நிறுவனர்.
பல்லடம் .

 

​​​​​

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE