magizhchifm2020@gmail.com திங்கள், 16 November 2026
⚡ சமீபத்திய
பார்போற்றும் பாவையர் பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை எழுதிய ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் பாராட்டு! பாரம்பரியத்தின் நாதமாக ஒலிக்கும் இளம் கலைஞர் விருதுநகர் தினேஷ் ! காலத்தால் அழியாத சித்திரக்கவிதைகளைக் காக்கும் நவீன காலப் புலவர் சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள் பார்போற்றும் பாவையர் பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை எழுதிய ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் பாராட்டு! பாரம்பரியத்தின் நாதமாக ஒலிக்கும் இளம் கலைஞர் விருதுநகர் தினேஷ் ! காலத்தால் அழியாத சித்திரக்கவிதைகளைக் காக்கும் நவீன காலப் புலவர் சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தடைகளைத் தாண்டி தடம் பதிக்கும் படைப்பாளி ஆர்த்தி வருண்ராஜ் ! நவம்பர் 1 தமிழ்நாடு தினம் வரலாற்றின் வேர்களும், தமிழர் பெருமையும், தமிழகத்தின் தனித்துவச் சிறப்புகளும்! இதயங்களை வென்ற பன்முக ஆளுமை முனைவர் ஜா. பிரிஸில்லா பாண்டியன் மனதில் நிற்கும் மகத்தான பெண்மணி திருமதி கே. ஜெயலட்சுமி மகிழ்ச்சி தமிழ் மன்றம் கவிஞர் சா.பாரதியின் கவிதைகள்
மகியின் கட்டுரைகள், நிகழ்வுகள், கட்டுரைகள்

பார்போற்றும் பாவையர் பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை எழுதிய ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் பாராட்டு!

15 நவம்பர் 2026 Admin 6 பார்வைகள்
பார்போற்றும் பாவையர் பன்னாட்டு கருத்தரங்கில்  கட்டுரை எழுதிய ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் பாராட்டு!

குழந்தைகள் தினத்தில் ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு!

“பார்போற்றும் பாவையர்கள்” பன்னாட்டு கருத்தரங்கில் 5,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் – ஈரோடு மாணவர்கள் சாதனை!

கோபி / ஈரோடு:

பி.கே.ஆர். மகளிர் கலைக்கல்லூரி, கோபி, மகிழ்ச்சி FM & மகிழ்ச்சி பவுண்டேஷன் மற்றும் ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், புதுச்சேரி ஆகியவை இணைந்து பெருமையுடன் நடத்திய பன்னாட்டு இணைமுறை வழிக் கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை முயற்சியாக “பார்போற்றும் பாவைகள்” (Globally Celebrated Women) என்ற தலைப்பிலான சிறப்புக் கட்டுரைத் தொகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

செப்டம்பர் 8 – சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், உலகம் போற்றும் பெண் ஆளுமைகள், விடுதலைப் போராட்ட வீராங்கனைகள், பெண் அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், கலைத்துறையினர், விளையாட்டு வீராங்கனைகள், சமூகப் போராளிகள், அறிவியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அறியப்பட்ட மற்றும் அறியப்படாத பெண்களின் வாழ்க்கை வரலாறு, சாதனைகள் மற்றும் சமூகப் பங்களிப்புகளை ஆவணப்படுத்துவதாகும்.

பெண்களின் வரலாற்றையும், அவர்களின் சாதனைகளையும் அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் உயரிய நோக்கத்துடன் முன்னெடுக்கப்பட்ட இம்முயற்சியில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 5,000-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்தப் பன்னாட்டு அளவிலான முயற்சியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து பள்ளி மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது கட்டுரைகளைச் சமர்ப்பித்து சாதனை படைத்துள்ளனர்.

இம்மாணவ, மாணவிகளின் எழுத்தாற்றல், ஆய்வுத் திறன் மற்றும் சாதனை முயற்சியைப் பாராட்டும் வகையில், குழந்தைகள் தினத்தன்று தமிழ்நாடு கைத்தறி, ஜவுளி மற்றும் கதர் துறை அமைச்சர் மாண்புமிகு. மா. விஜய் பாலாஜி அவர்கள் மாணவ, மாணவிகளை நேரில் அழைத்துப் பாராட்டினார்.

அப்போது மாணவர்கள் எழுதிய கட்டுரைகள் குறித்தும், அவர்கள் தேர்ந்தெடுத்த பெண் ஆளுமைகள் குறித்தும் ஆர்வத்துடன் கேட்டறிந்த அமைச்சர், மாணவர்களின் முயற்சியை வெகுவாகப் பாராட்டினார். மேலும், இளம் வயதிலேயே வாசிப்பு, எழுத்து, ஆய்வு மற்றும் படைப்பாற்றலில் ஆர்வம் காட்டுவது பாராட்டுக்குரிய செயல் என்றும், இதுபோன்ற முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு எதிர்காலத்தில் பல்வேறு துறைகளிலும் சிறந்த சாதனைகளைப் படைக்க வேண்டும் என்றும் ஊக்கமளித்தார்.

 

மேலும், இம்மாணவ, மாணவிகளை எழுத்தாளர்களாகவும் கட்டுரையாளர்களாகவும் அறிமுகப்படுத்தி, அவர்களது திறமைகளை வெளிக்கொண்டு வந்த எழுத்தாளர் திருமதி வாசுகி முத்தையன் அவர்களையும் அமைச்சர் பாராட்டினார். குழந்தைகளின் தனித்திறன்களை அடையாளம் கண்டு, அவர்களைப் பல்வேறு போட்டிகள், இலக்கிய நிகழ்வுகள் மற்றும் படைப்பாற்றல் சார்ந்த செயல்பாடுகளில் பங்கேற்கச் செய்து அவர்களின் திறமைகளை உலகறியச் செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

பள்ளிப் பருவத்திலேயே பன்னாட்டு அளவிலான கருத்தரங்கில் பங்கேற்று, பெண் ஆளுமைகளின் வரலாற்றையும் சாதனைகளையும் பதிவு செய்துள்ள ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து மாணவ, மாணவிகளின் இந்த முயற்சி பாராட்டுக்குரியதாகும்.

 

இளம் தலைமுறையினரிடம் வாசிப்புப் பழக்கம், எழுத்தாற்றல், வரலாற்று விழிப்புணர்வு, பெண்களின் சாதனைகள் குறித்த புரிதல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில் அமைந்துள்ள “பார்போற்றும் பாவைகள்” நிகழ்வு, மாணவர்களின் திறமைகளை உலகிற்கு அடையாளப்படுத்தும் ஒரு சிறப்பான முன்னெடுப்பாக அமைந்துள்ளது.

மாணவர்களின் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தினால், நாளைய சமுதாயத்தின் சிறந்த எழுத்தாளர்களாகவும், சிந்தனையாளர்களாகவும், சாதனையாளர்களாகவும் அவர்கள் உருவெடுப்பார்கள் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE