வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள்

கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம்

23 செப்டம்பர் 2026 Admin 14 பார்வைகள்
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம்

கோபிசெட்டிபாளையம்:
கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை, மகிழ்ச்சி குழு, மகிழ்ச்சி பவுண்டேஷன் மற்றும் புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகியவை இணைந்து பார்போற்றும் பாவையர்” (Globally Celebrated Women) என்ற பொருண்மையில் பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை முயற்சியை வரும் 29.09.2026 அன்று நடத்துகின்றன.

கல்லூரியின் MBA கருத்தரங்க அரங்கில் நடைபெறும் இந்நிகழ்வில், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், கலை, கலாசாரம், சமூகப்பணி, தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பெண்களின் சாதனைகள் மற்றும் சமூகப் பங்களிப்புகள் குறித்து சிறப்பு கருத்துரைகள் இடம்பெற உள்ளன.

இந்நிகழ்வின் முதன்மைச் சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி டி.வி. கிரண் ஸ்ருதி பங்கேற்று சிறப்பிக்கிறார்.

நேரடியாகப் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்கள்

நிகழ்வில் மூத்த ஊடகவியலாளரும், மகிழ்ச்சி பவுண்டேஷன் நிறுவனரும், ரத்தினவாணி சமுதாய வானொலி 90.8 நிலைய இயக்குநருமான முனைவர் ஜெ. மகேந்திரன் நேரடியாகப் பங்கேற்கிறார்.

மேலும், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் செ. வெங்கடேசன், செயலாளர் முனைவர் சி. கலைவாணி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியரும் இணை NCC அலுவலருமான லெப்டினன்ட் டாக்டர் ஆர். சிவக்குமார், கவிஞர் திருமதி சைலஜா கணேசன், மகிழ்ச்சி FM இணை இயக்குநர் திருமதி . புவனேஸ்வரி, ஆன்மிக எழுத்தாளர் ஜோதிட கலையரசி திருமதி எம். தனம் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

சர்வதேச அறிஞர்கள் இணையவழிப் பங்கேற்பு

இக்கருத்தரங்கின் முக்கிய சிறப்பம்சமாக இந்தியாவைத் தவிர மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் இணையவழியில் பங்கேற்கின்றனர்.

மலேசியாவின் சுல்தான் இத்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகத்தைச் (UPSI) சேர்ந்த பேராசிரியர் முனைவர் மனோன்மணி தேவி, தமிழ் மற்றும் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவரும், அமெரிக்காவின் புளோரிடா பன்னாட்டுப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியருமான பேராசிரியர் முனைவர் கலைமதி, பெங்களூரு டி. ஜான் தொழில்நுட்பக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் திருமதி ஜெ. ஆர்த்தி சுகந்தி கனி, குவைத் தேன்தமிழ் கவிவனத்தின் நிறுவனர் திருமதி தமிழ்நதி கிருஷ் அபி ஆகியோர் இணையவழியில் பங்கேற்கின்றனர்.

சர்வதேச அளவில் பங்கேற்கும் அறிஞர்கள், பெண்களின் சாதனைகள், சமூகப் பங்களிப்புகள், கல்வி, அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் சமூக மாற்றம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்புகள் குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

பெண்களின் சாதனைகளைப் போற்றும் முயற்சி

பார்போற்றும் பாவையர்என்ற தலைப்பில் நடைபெறும் இந்நிகழ்வின் மூலம் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களின் சிறப்புகளை வெளிப்படுத்துவதுடன், அவர்களின் பங்களிப்புகளை இளம் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லும் நோக்கமும் முன்னெடுக்கப்படுகிறது.

பெண்களின் சாதனைகள், சமூகப் பங்களிப்புகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சவால்களை கடந்து பெற்ற வெற்றிகளை எடுத்துரைக்கும் வகையில் கருத்தரங்கில் சிறப்பு உரைகள் இடம்பெற உள்ளன. இதன் மூலம் பெண்களின் திறன், அர்ப்பணிப்பு மற்றும் சமூகப் பங்களிப்புகளைப் பதிவு செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

உலக சாதனை முயற்சியாக முன்னெடுப்பு

பார்போற்றும் பாவையர்நிகழ்வு பன்னாட்டு கருத்தரங்கமாக மட்டுமின்றி உலக சாதனை முயற்சியாகவும் முன்னெடுக்கப்படுகிறது. பெண்களின் சாதனைகளை ஒருங்கிணைத்து ஆவணப்படுத்தி, அவற்றை பரவலாக எடுத்துச் செல்லும் வகையில் இம்முயற்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை புதுச்சேரி ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு இணைந்து நடத்துகிறது.

கல்லூரி நிர்வாகத்தின் ஆதரவு

இந்நிகழ்வுக்கு பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியின் தாளாளர் திரு. பி.என். வெங்கடாசலம், துணைமுதல்வர் திருமதி எஸ்.. தனலட்சுமி ஆகியோர் முதன்மை ஆதரவளிக்கின்றனர்.

தமிழ்த்துறை சார்பில் துறைத் தலைவர் முனைவர் . உமாமகேஸ்வரி தலைமையில் நிகழ்வுக்கான ஒருங்கிணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர்களான முனைவர் . மோகனா, முனைவர் . அமிர்தக்கொடி, முனைவர் . அரியநாச்சியம்மாள், முனைவர் சு. காயத்ரி, செல்விகள் . மலர்விழி, . சுஜித்ரா, . சிவவர்த்தினி, . பூர்ணாம்பிகா மற்றும் பா.. விசாலி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்படுகின்றனர்.

இந்த பன்னாட்டு கருத்தரங்கிற்கு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு கோல்டன் க்ளோபல் விருது 2026 வழங்கப்படுகிறது.

மேலும் இந்த நிகழ்வில், மகிழ்ச்சி பதிப்பகம் வெளியிடும் கவிஞர் சைலஜா கணேசன் அவர்கள் எழுதிய "பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான்" கவிதை நூல் சிறப்பு விருந்தினர்களால் வெளியிடப்படுகிறது.

பங்கேற்க அழைப்பு

பெண்களின் சாதனைகளைப் போற்றுவதுடன், அவர்களின் சமூகப் பங்களிப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் நோக்கில் நடைபெறும் இப்பன்னாட்டு கருத்தரங்கில் மாணவிகள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

நிகழ்வில் பங்கேற்க விரும்புவோர் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவரும் அறிஞர்களின் கருத்துரைகளைக் கேட்டு பயன்பெறுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புக்கு: 8838078388,

 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE