உயர்ந்த பண்புகளுக்கு சொந்தக்காரர் அண்ணா..! 042
உயர்ந்த பண்புகளுக்கு சொந்தக்காரர் அறிஞர் அண்ணா
அறிஞர்' என்னும் சொற்பொருளுக்கு உரியவராய், 'அண்ணா' என்னும் உறவுக்குப் பெருமை தந்தவராய் வாழ்ந்தவர் அறிஞர் அண்ணா
அரசியலில் மறுமலர்ச்சியை உருவாக்கியவர் அறிஞர் அண்ணா
சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு' என்று பெயரிட்டு மகிழ்ந்தவர் அறிஞர் அண்ணா
மதுவிலக்கை நடைமுறைப்படுத்தியவர் அறிஞர் அண்ணா சுயமரியாதைத் திருமணங்களை செல்லுமெனச் சட்டமியற்றியவர் அறிஞர் அண்ணா
மதச் சார்பின்மையை நிலைநாட்ட படுப்பட்டவர்
அறிஞர் அண்ணா
ஆணவம் இல்லாதவர் அறிஞர் அண்ணா தன்னம்பிக்கையுடையவர் அறிஞர் அண்ணா
நடுவுநிலை தவறாதவர் அறிஞர் அண்ணா எதிரிகளுங்கூட அன்பும் மரியாதையும் செலுத்தும் வகையில் நடந்துகொள்ளும் பண்பாளர் அறிஞர் அண்ணா
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முயன்றவர் அறிஞர் அண்ணா
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியன கைக்கொண்டவர் அறிஞர் அண்ணா
மனித நேயங் கொண்ட மாண்பாளர் அறிஞர் அண்ணா.
- ஷீலா ஜெயந்தி பாப்பா
ஆசிரியை
சைதாப்பேட்டை