டாக்டர் கோ. லதா – தொல்காப்பிய வாழ்வியல் கூறுகளை மக்களுக்கு எடுத்துச் சென்ற ஒளிக் காப்பியம்
தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு பெருமைகள், நெறிமுறைகள், மனித வாழ்வியலை உயர்த்தித் தாங்கி நிற்கும் தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிகப் பழமையான தமிழ் இலக்கண நூலாகும். தொல்காப்பியரால் இயற்றப்பட்ட இந்நூல் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று பெரும் பிரிவுகளால் அமைந்து, இலக்கணத்தையும் வாழ்க்கை ஒழுக்க நெறிகளையும் ஒருங்கிணைத்து எடுத்துரைக்கிறது. இந்தப் பெரும் நூலின் ஆழத்தையும் அகத்தையும் இன்றைய தலைமுறைக்கு எளிமையாகவும் உணர்ந்து கொள்ளும் விதமாகவும் அறிமுகப்படுத்தி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவராகத் திகழ்பவர் டாக்டர் கோ. லதா.
சென்னை மாநகராட்சி பள்ளியில் 27 ஆண்டுகளாக சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். பி.ஏ., எம்.ஏ., எம்.பில்., பி.எட்., டி.டி.எட்., பி.சி.டி.சி.ஏ., போன்ற பட்டங்களைப் பெற்ற இவர், தன்னம்பிக்கை, தெளிவான இலக்கு, தொடர்ந்து செயலாற்றும் முயற்சி ஆகியவற்றின் மூலமாக கல்வித்துறையில் உயர்ந்த சாதனைகளைப் படைத்துள்ளார். கல்வித் துறையில் சிறந்து விளங்கியதற்காக, தமிழக அரசின் உயரிய டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் பல்வேறு சர்வதேச அமைப்புகளின் உலக சாதனை விருதுகள், பாரத் சேவா ரத்னா, லைஃப்டைம் அச்சீவர், பில்லர் ஆஃப் எஜுகேஷன், இந்தியன் ஐகானிக் உமன் அச்சீவர் போன்ற விருதுகள் இவரது அர்பணிப்பு பணியின் சான்றுகளாக திகழ்கின்றன.
கல்வி மற்றும் சமூகச் சேவையின் ஒளியூற்று
42 மாணவர்களை ஒரே மணி நேரத்தில் 1330 திருக்குறள்கள் எழுதி உலக சாதனை படைக்கச் செய்தார்.
225 மணி நேரம் நீடித்த தொல்காப்பிய பல்சுவை விழா நிகழ்வினை நடத்தி, மாணவர்களுக்கு ஓவியம், பரதநாட்டியம், வில்லுப்பாட்டு, பட்டிமன்றம், நூற்பா வாசிப்பு உள்ளிட்ட பல்துறைறிவு பயிற்சிகளைக் கற்றுத் தந்தார்.
49 மாணவர்களுக்கு உலக சாதனை சான்றிதழ்கள் மற்றும் தொல்காப்பிய சுடராழி விருது பெற்றுத் தந்தார்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், இளைஞர்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் ஆலோசனை, யோகா, நலப்பணி என தொடர்ந்து சேவை செய்து வருகிறார்.
இலக்கிய படைப்புகள் & ஆர்வம்
திருக்குறள் கூறும் நன்னெறிகள் நூல் வெளியீடு.
தற்போது வெளியிட்டுள்ள தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல் கூறுகள் என்ற நூல், தொல்காப்பியத்தை வாழ்வியலோடு இணைத்து சாதாரண மக்களும் புரியும் வகையில் பத்து படிநிலைகளில் விளக்குகிறது.
கவிதை, நூல் தொகுப்பு, கருத்தரங்கக் குறிப்புரை, சமூக விழிப்புணர்வு நிகழ்வுகளில் பங்கேற்புகள்.
பல பத்திரிகைகள், தொலைக்காட்சி, டிஜிட்டல் மீடியாக்களில் இவரது சாதனைகள் பிரசுரம்.
இதயம் நிறை வாழ்வுக் குறிக்கோள்
“தொல்காப்பியம் தேசிய நூலாக அமைய வேண்டும்” என்ற உயர்ந்த நோக்கம் இவரை இன்று ஆயிரக்கணக்கான மாணவர்களின் உள்ளத்தில் ஒளியாக நிறுத்தி வருகிறது. தமிழ் இலக்கிய மரபை இன்றைய தலைமுறைக்கு நவீன சிந்தனையோடு இணைத்து வழங்கும் முனைப்பில், அவர் மேற்கொள்ளும் பணிகள், சாத்தியமற்றதைச் சாத்தியமாக்கும் உதாரணமாக திகழ்கின்றன.
புதியதோர் பாரதம் படைப்போம்…
வாழ்க பாரதம்! வெல்க தமிழ்!
டாக்டர் கோ. லதா அவர்கள் போன்ற கல்வி ஒளிச்சுடர்கள், தமிழ் மக்கள் மட்டுமல்ல உலகறிய தமிழ் பண்பாட்டின் உயரத்தை உணர்த்தும் பெரும் தளமாக உள்ளனர். இவர் சாதனைகள் எண்ணிலடங்கா; ஆனால் அவரின் சேவை நோக்கம் இதைவிட பெரியது – தமிழ் வளர வேண்டும், மனிதம் வளர வேண்டும்.