நிர்மலா மகளிர் கல்லூரியின் முதல்வருக்கு கோல்டன் குளோபல் விருது
கோயம்புத்தூர்-அக்டோபர் 16,
கோபி , பிகேஆர் மகளிர் கல்லூரி ,மகிழ்ச்சி எப்.எம் மற்றும் மகிழ்ச்சி பவுண்டேஷன், ஆல் இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் (புதுச்சேரி) இணைந்து "பார்போற்றும் பார்வையர்" என்னும் பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்தில் பங்கேற்ற பேராசிரியர்களுக்கும் மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முத்தாய்ப்பாகச் சிறப்பான ஆய்வுக்கட்டுரை வழங்கியதோடு பேராசிரியர்களையும் மாணவியரையும் ஊக்குவித்த கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா அவர்களுக்குக் கோல்டன் குளோபல் விருது வழங்கிக் கௌரவித்தார் கோவை இரத்தினவாணி வானொலி நிலைய இயக்குநர் முனைவர் ஜெ மகேந்திரன். இந்நிகழ்ச்சியில் தமித்துறைத்தலைவர் முனைவர் மகேஸ்வரி. ப, தமிழ்த்துறையின் உதவிப் பேராசிரியர்களான முனைவர் சு. இராமதிலகம் மற்றும் அருட்சகோதரி முனைவர் தோ. கிரேசி ஆகியோருக்கும் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. 310 பேர் கட்டுரை வழங்கியது குறிப்பிடத்தக்கது. கட்டுரை எழுதிய பேராசிரியர்களுக்கும் மாணவியர்க்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 800 க்கும் மேற்பட்ட இளநிலை முதலாமாண்டு பயிலும் மாணவியர் கலந்து கொண்டனர்.