magizhchifm2020@gmail.com திங்கள், 23 November 2026
⚡ சமீபத்திய
தென்காசியில் டிசம்பர் 5-ஆம் தேதி “YOUTH FACES OF INDIA இளைய இந்தியா முகங்கள்” சர்வதேசக் கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை முயற்சி! நவம்பர் 21 – உலகத் தொலைக்காட்சி நாள்! நபிகள் நாயகம் பன்னிரு பாடல் ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானாவின் படைப்பில் இலக்கிய நயம் நவம்பர் 19 – ஆண்கள் தினம் ! குழந்தைகளின் கனவுகளுக்கு கதை சொல்லும் பேராசிரியர் கார்த்திகா கவின் குமார்! நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் உண்மையின் குரலாக ஒலிக்க வேண்டிய ஊடகங்கள்! பார்போற்றும் பாவையர் பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை எழுதிய ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் பாராட்டு! பாரம்பரியத்தின் நாதமாக ஒலிக்கும் இளம் கலைஞர் விருதுநகர் தினேஷ் ! காலத்தால் அழியாத சித்திரக்கவிதைகளைக் காக்கும் நவீன காலப் புலவர் சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் ! தென்காசியில் டிசம்பர் 5-ஆம் தேதி “YOUTH FACES OF INDIA இளைய இந்தியா முகங்கள்” சர்வதேசக் கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை முயற்சி! நவம்பர் 21 – உலகத் தொலைக்காட்சி நாள்! நபிகள் நாயகம் பன்னிரு பாடல் ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானாவின் படைப்பில் இலக்கிய நயம் நவம்பர் 19 – ஆண்கள் தினம் ! குழந்தைகளின் கனவுகளுக்கு கதை சொல்லும் பேராசிரியர் கார்த்திகா கவின் குமார்! நவம்பர் 16 தேசிய பத்திரிகை தினம் உண்மையின் குரலாக ஒலிக்க வேண்டிய ஊடகங்கள்! பார்போற்றும் பாவையர் பன்னாட்டு கருத்தரங்கில் கட்டுரை எழுதிய ஈரோடு பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தில் அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் பாராட்டு! பாரம்பரியத்தின் நாதமாக ஒலிக்கும் இளம் கலைஞர் விருதுநகர் தினேஷ் ! காலத்தால் அழியாத சித்திரக்கவிதைகளைக் காக்கும் நவீன காலப் புலவர் சித்திரக்கவி முனைவர் பீ. ரகமத் பீபி தீபாவளி இருள் நீங்கி ஒளி பிறக்கும் திருநாள் !
நிகழ்வுகள்

தென்காசியில் டிசம்பர் 5-ஆம் தேதி “YOUTH FACES OF INDIA இளைய இந்தியா முகங்கள்” சர்வதேசக் கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை முயற்சி!

23 நவம்பர் 2026 Admin 24 பார்வைகள்
தென்காசியில் டிசம்பர் 5-ஆம் தேதி “YOUTH FACES OF INDIA இளைய இந்தியா முகங்கள்” சர்வதேசக் கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை முயற்சி!

1,700 ஆய்வுக் கட்டுரைகள்... 3,135 பக்கங்கள் கொண்ட பிரம்மாண்ட நூல் வெளியீடு! 5,000-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் வரப்பெற்று புதிய உலக சாதனை முயற்சி!

தென்காசி: இந்திய இளைஞர்களின் திறமைகள், சாதனைகள், தலைமைத்துவப் பண்புகள், புதுமையான சிந்தனைகள் மற்றும் சமூகப் பங்களிப்புகளை உலக அரங்கில் எடுத்துச் செல்லும் நோக்கில், “YOUTH FACES OF INDIA – இளைய இந்தியா முகங்கள்” என்ற தலைப்பிலான சர்வதேசக் கருத்தரங்கம் மற்றும் உலக சாதனை முயற்சி வரும் டிசம்பர் 5, 2026 அன்று தென்காசியில் நடைபெற உள்ளது.

JP கல்விக் குழுமம், தென்காசி, மகிழ்ச்சி FM, மகிழ்ச்சி பவுண்டேஷன், மகிழ்ச்சி பதிப்பகம், ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் (All India Book of Records) மற்றும் TAF IAS Academy ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்நிகழ்வை நடத்துகின்றன.

இளம் ஆளுமைகளின் சாதனைகளைப் போற்றும் வகையில், ஆய்வுக் கட்டுரைகளின் சர்வதேசத் தொகுப்பாக இம்முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் மாணவர்கள் இதில் பங்கேற்று, சாதனை படைத்த இளம் ஆளுமைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.

உலக சாதனை முயற்சி – 3,135 பக்கங்களில் பிரம்மாண்ட ஆய்வு நூல்!

“YOUTH FACES OF INDIA – இளைய இந்தியா முகங்கள்” என்ற தலைப்பிலான இம்முயற்சிக்காக 5,000-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் பெறப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 1,700 ஆய்வுக் கட்டுரைகள் நூல் தொகுப்பிற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 600 தமிழ் ஆய்வுக் கட்டுரைகளும், 1,100 ஆங்கில ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெறுகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கட்டுரைகள் அனைத்தும் 3,135 பக்கங்கள் கொண்ட பிரம்மாண்டமான ஆய்வு நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளன. இந்நூலின் தொகுப்பாசிரியராக முனைவர் ஜெ. மகேந்திரன் செயல்படுகிறார். இந்தப் பிரம்மாண்ட நூல் வெளியீட்டை ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் உலக சாதனை முயற்சியாக அங்கீகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்திய இளைஞர்களின் சாதனைகள், ஆளுமைகள், அறிவாற்றல், சமூகப் பொறுப்பு மற்றும் ஊக்கமளிக்கும் வாழ்க்கைப் பயணங்களை ஆவணப்படுத்தும் முக்கியமான முயற்சியாக இந்நூல் அமையவுள்ளது.

சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நிகழ்ச்சி விவரங்கள்

நிகழ்ச்சிக்கு JP College of Education முதல்வர் முனைவர் ஏ. சுரேஷ் ஜான் கென்னடி வரவேற்புரையாற்றுகிறார். DFT கல்லூரிகளின் தாளாளர் அருட்சகோதரி முனைவர் ஐ. அரோக்கியமேரி மற்றும் JP College of Education நிர்வாகி அருட்சகோதரி எல். ஞானக்கண்ணு ஆகியோர் தலைமையுரையாற்றுகின்றனர்.

மகிழ்ச்சி பவுண்டேஷன் நிறுவனர், மூத்த ஊடகவியலாளர் மற்றும் இரத்தினவாணி சமுதாய வானொலி 90.8 MHz நிலைய இயக்குநர் முனைவர் ஜெ. மகேந்திரன் தொடக்கவுரையாற்றுகிறார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் குற்றவியல் மற்றும் குற்றவியல் நீதி துறையின் இணைப் பேராசிரியரும், துறைத் தலைவர் பொறுப்பாளரும், இணை NCC அலுவலருமான லெப்டினன்ட் முனைவர் ஆர். சிவகுமார், TAF IAS Academy இயக்குநர் எம். மாரியப்பன், TAF TET/TRB பிரிவுத் தலைவர் பி. பாலமுருகன், பயிற்சியாளர் கவிப்ரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் மற்றும் உலக சாதனையாளர் முனைவர் சே. வெங்கடேசன், அதன் செயலாளரும் உலக சாதனையாளருமான முனைவர் சி. கலைவாணி, மகிழ்ச்சி FM மற்றும் மகிழ்ச்சி பதிப்பகத்தின் பதிப்பாளர் மற்றும் இணை இயக்குநர் திருமதி டி. புவனேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.

TAF IAS Academy நிறுவனர் ஜெ. ஆகாசமூர்த்தி மற்றும் இத்தாலியைச் சேர்ந்த அருட்தந்தை ஏ. வின்சென்ட் மதன் பாபு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். அருட்தந்தை ஏ. வின்சென்ட் மதன் பாபு இணையவழியில் பங்கேற்கிறார்.

இக்கருத்தரங்கில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்க உள்ளனர். கோபிசெட்டிபாளையம் பி.கே.ஆர். கலை அறிவியல் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கே. உமா மகேஸ்வரி நிகழ்ச்சி அறிக்கை சமர்ப்பிக்கிறார். JP College of Education ஆங்கிலத் துறையைச் சேர்ந்த பி. அப்துல் ரசாக் நன்றியுரையாற்றுகிறார். இறுதியாக நாட்டுப்பண்ணுடன் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

கல்வி, ஆராய்ச்சி மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கு முக்கியத்துவம்!

நேரடி மற்றும் இணையவழி என இரு முறைகளிலும் நடைபெறும் இக்கருத்தரங்கில் கல்வி, ஆராய்ச்சி, புதுமை, இளைஞர் மேம்பாடு, நிலையான வளர்ச்சி, ஆய்வு மற்றும் நூல் வெளியீடு, உலகளாவிய ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இளைஞர்களின் பங்களிப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நிகழ்வு நடைபெறும் நாள்: 05.12.2026, சனிக்கிழமை

நேரம்: காலை 9.00 மணி

இடம்: JP College of Education அரங்கம், தென்காசி.

இந்நிகழ்வில் பங்கேற்க அனுமதி இலவசம். முன்பதிவு கட்டாயமாகும். மேலும் விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு 8838078388 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

“இளைய மனங்கள்... உயர்ந்த கனவுகள்... வலிமையான இந்தியா...” என்ற உயரிய நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இம்முயற்சி, இந்திய இளைஞர்களின் சாதனைகளை ஆவணப்படுத்துவதோடு, அவர்களின் திறமைகளையும் ஆளுமைகளையும் சர்வதேச அளவில் எடுத்துரைக்கும் கல்வி, ஆராய்ச்சி மற்றும் பதிப்புத்துறையின் குறிப்பிடத்தக்க முன்னெடுப்பாக அமையவுள்ளது.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE