magizhchifm2020@gmail.com வியாழன், 15 October 2026
⚡ சமீபத்திய
கவிதாயினி புவனா சிவம் கவிதைகள் அக்டோபர் 15 டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை சங்ககிரி ஸ்ரீ வித்யாசாகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலம்! நவராத்திரி பெண் சக்தியின் மகத்துவத்தைப் போற்றும் ஆன்மிகத் திருவிழா உலக பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11 கவிஞர் மு.ரம்யாமுத்துபாபு கவிதைகள் அக்டோபர் 9 உலக அஞ்சல் தினம் ஆயிரமாயிரம் ஆய்வுக் குரல்களை ஆவணமாக்கும் ஆளுமை மாணிக்கவாசகர் கண்ட பெண்மை  எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் மகிழ்ச்சி பண்பலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கவிதாயினி புவனா சிவம் கவிதைகள் அக்டோபர் 15 டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை சங்ககிரி ஸ்ரீ வித்யாசாகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா கோலாகலம்! நவராத்திரி பெண் சக்தியின் மகத்துவத்தைப் போற்றும் ஆன்மிகத் திருவிழா உலக பெண் குழந்தைகள் தினம் அக்டோபர் 11 கவிஞர் மு.ரம்யாமுத்துபாபு கவிதைகள் அக்டோபர் 9 உலக அஞ்சல் தினம் ஆயிரமாயிரம் ஆய்வுக் குரல்களை ஆவணமாக்கும் ஆளுமை மாணிக்கவாசகர் கண்ட பெண்மை  எக்ஸல் வணிகவியல் மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் மகிழ்ச்சி பண்பலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
கவிதைகள்

கவிதாயினி புவனா சிவம் கவிதைகள்

15 அக்டோபர் 2026 Admin 19 பார்வைகள்
கவிதாயினி புவனா சிவம் கவிதைகள்

001.என்னம்மா சிட்டுக்குருவி 

உன் கணவனை கட்டித்தழுவி

பிறந்ததே இரட்டை குருவி

அதன் சத்தங்கள் கொட்டும் அருவி

பசிக்கு உணவு தந்தேன் உனக்கு

பார்த்து விட்டு மௌனமாய் நிற்பது எதற்கு

ஒரு தாயாக உணவை உட்டுகிறாய் அதற்கு

தாய்ப் பாசத்திற்கு ஈடு இல்லை எதற்கும்

ராமருக்கு உதவி செய்த அணிலே

உன் வரலாற்றை பேசுகின்றது இந்த தமிழே

மனிதனை போல் கைகளை வைத்து உண்ணும் உன் அழகு

அந்தக் கடவுளுக்கே உதவி செய்ய நினைத்த உன் அறிவு

சுறுசுறுப்பாக இருக்கும் உன்னுடைய துடிப்பு

இன்னும் என்ன சொல்வது நீ ஒரு அற்புதமான படைப்பு

இருப்பதே தெரியாமல் வாழுகின்றாய் மண்ணில்

அதை தெரிந்தும் பாதங்களை வைக்கின்றோம் உன்னில்

உனைப்போல் ஒற்றுமை இல்லை மனிதர்கள்

போராட்டம் என்று வந்தால் ஓங்கி நிப்பான் நம் தமிழர்கள்

சிறியவன் தானே இந்த எறும்பு என்று எண்ணாதீர்

அவன் பாதையை குறுக்கிட்டாள் உங்கள் உடம்பு முழுவதும் புண்ணாவீர்

அழகிலே மிகஅழகாக இருக்கும் இந்த ஆண்மையில்

நீ தோகை விரித்து ஆடினாள் மழை வரும் உண்மையில்

மனிதர்களை விட உன் பார்வை தெளிவானது கண்ணிமையில்

உன் அழகைப் பார்த்து ஏங்குவாள் இந்த பெண்மையில்

 

002.முதல் வணக்கம்

தமிழுக்குச் சொல்லுங்கள் முதல் வணக்கம்

என் முருகனுக்கும் சொன்னேன் இறைவணக்கம்

திருக்குறளை பாடுங்கள் நம் வாய் மணக்கும்

இதை நன்கு சிந்தித்துப் பாருங்கள் புரியும் உமக்கும்

செந்தமிழ் நாடு நம் நாடு

தமிழே இந்த உலகம் எங்கும் நாடு

தமிழுக்கு எதற்கடா வீடு

இந்த உலகமே தமிழ் தங்கும் கூடு

தமிழ் பாடல் ஒன்று பாடு

அந்தப் பாட்டுக்கு இறைவன் விடுவான் தூது

உலகத்திலே பழமையானது நம் தமிழ்

அதை படிக்க படிக்க

புதுமையாகும் நம் செந்தமிழ்

உலகத்தில் உண்டு பழமொழி

அதில் சுவை தருவதோ நம் தமிழ் மொழி

நம் தமிழுக்கு உண்டு செம்மொழி

அதைக் கற்றுக்கொள் உனக்குக் கிடைக்கும் நல் வழி

நமக்கெல்லாம் முதல் அன்னை தமிழ் அன்னை

அந்த தமிழுக்கே முழுமையாக அர்ப்பணிப்பேன் என்னை

நம் வீடுகளை காப்பது நம் தாய்

இந்த உலகத்தையே காப்பவள்  நம் தமிழ்த்தாய்

இந்த உலகத்தில் எத்தனையோ குரலைக் கண்டேன்

இந்த திருக்குறளுக்கு என்  மனம் மயங்கி நின்றேன்

இந்த உலகத்தில் ஏழு அதிசயம் என்பார்

இதில் என்னடா அதிசயம் உள்ளது

திருக்குறளைப் படித்துப் பார் இந்த உலகமே அதில் தான் வாழுது

முப்பாலையும் படித்துப் பார் உன் வாழ்விற்கு அது நல்லது

உலகத்தில் உள்ளபஞ்ச பூதங்களும் அதை தான்சொல்லுது.

003.தாய்மொழி

தாய்மொழி என்று நமக்கு ஒன்று உண்டு

தன்னலம் போக்கிடு தைரியம் கொண்டு

தமிழாய் என்றும் ஒலித்திடு இன்று

தமிழைக் காத்திடு தனித்து நீ நின்று

தமிழுக்கு ஒளி தருவான் முருகன்

தமிழ் நாட்டுக்கு கொடிகாத்தான் திருப்பூர் குமரன்

நம் வீட்டுக்கெல்லாம் ஒவ்வொரு தாய் உண்டு

நம் நாட்டுக்கு ஒரே தாய் நம் தமிழ்த்தாய் இன்று

உலகத்தையே அலசிப்பார் கொஞ்சம்

மொழிகளிலே நம் தமிழ் மொழி மழலையைப் போல் கொஞ்சும்

 பாலினிலே சிறந்த பால் தாய்ப்பால்

தமிழிலே சிறந்த பால் நம் வள்ளுவன் தந்த முப்பால்

ஒரு குழந்தைக்கு பசியை போக்குவது தாய்ப்பால்

அதே குழந்தைக்கு அறிவை ஊட்டுவது

நம் வள்ளுவன் தந்த முப்பால்

ஒரு குழந்தைக்கு பசியாற ஊற்றுவது தாய்ப்பால்

அதை குழந்தைக்கு அறிவை உற்றுவது

நம் வள்ளுவன் தந்த முப்பால்.

உறவிலே சிறந்தவன் தாய் மாமன்

அவன் சூழ்ச்சிக்கு பலியானான் துரியோதனன்

அறிவிலே கூர்மையானவன் இந்த சகுனி

அது  தவறாகிய காரணம் இதோ கவனி

சகோதரன் பாசம் வைத்தான் காந்தாரி மீது

பெண் கேட்டு வந்தார் பீஷ்மர் தூது

பார்வை இல்லை என்பதை கேட்டதும் அழுதால்

தன் கண்களை துணிகளால் மூடிக்கொண்டால்

அதைக் கேட்டதும் கொதித்து எழுந்தான்

அஸ்தினாபுரத்தை அழிக்கத் துடித்தான்

அதற்காக பரம பதத்தை கையில் எடுத்தான்

பாண்டவர்களை விரோதியாக நினைத்து அடித்தான்

அவன் உறவுகள் அழிந்ததை எண்ணி வாடினான்

அவன் ஆணவம் அவனையே அழித்தது

அளவுக்கு மீறிய அறிவு இருந்தால்

அதை சரியாக உபயோகிக்க வேண்டும்

இல்லையென்றால் இதுவே இறைவனின் உரையாகும்.

 

004. கறுப்பன் சாமி,,!!

 

கறுப்பன் சாமி,,!!

 

எழுந்து வரான் கருப்பன் எங்க சாமி கருப்பன்

திரண்டு வரான் கருப்பன் அடி வெளுக்க போறான் கருப்பன்

 

ஓடி போறான் உருண்டு உசுரு மேல பயந்து

நீதி நியாயம் இழந்து அப்பன் கருப்பன் வரான் எழுந்து

வாடா கருப்பா விரைந்து வாடா

வாடா கருப்பா விரைந்து வாடா

 

எழுந்து வரான் கருப்பன் எங்க சாமி கருப்பன்

விரைந்து வரான் கருப்பன் அடி வெளுக்க போறான் கருப்பன்

 

முடிஞ்ச வரைக்கும் பார்த்து புட்டேன் என்

பொறுமையத்தான் இழந்து புட்டேன்

பிஞ்சு குழந்தை அழுகும் சத்தம் என்

உடம்பு முழுக்க கொதிக்கும் ரத்தம்

 

பதினெட்டாம் படிக்கு காவல் இருந்தேன்

மகா காளி போல எழுந்து நடந்தேன்

ராமன் அன்று சொன்ன சொல்லில் தாய்

சீதையோடு நெருப்பில் விழுந்தேன்

 

எழுந்து வரான் கருப்பன் எங்க அப்பன் கருப்பன்

திரண்டு வர்றான் கருப்பன் அடி வெளுக்க போறான் கருப்பன்

 

வெறி புடிச்ச வேங்க வரான் வெள்ளை குதிரை ஏறி வரான்

புகையிலை சுருட்டிக் கிட்டு புகைய விட்டு நடந்து வரான்

 

பொண்ண தொட்டு அழிப்பவன் குடலை

கிழிச்சு மாலை போடப் போறான்

தப்பு செய்ய நினைப்பவன

தடியெடுத்து அடிக்க வரான்

 

தாயார தொட்டவன சாட்டையால வெளுக்க வரான்

வாளெடுத்து சுழட்டிக்கிட்டு வாஞ்சிநாதன் நடந்து வர்றான்

 

வாடா கருப்பா எங்க கருப்பா

வந்து பாரு எரியும் நெருப்பா

 

உனக்கு சுருட்டு கூட வாங்கி தரேன் கேட்டதெல்லாம் செஞ்சு தரேன்

உனக்கு ஆடு கோழி பலி கொடுத்து ஆராதனை செஞ்சிடுறேன்

 

வாடா கருப்பா நல்ல கருப்பா

கண்ண உருட்டு நல்லா வெரப்பா

 

ஆறு அடி உயரத்துல அசஞ்சு வரான் அய்யனாரு

உசுரு போகும் நேரத்துல ஊருக்குள்ள நீ இருக்க

காவல் தெய்வம் கண்ணெதிரே தப்பு நடக்குதடா இருட்டுக்குள்ளே

தட்டிக் கேட்க நீ இருந்தால் தப்பு ஒன்று நடந்திடுமா

 

சத்தம் போட்டு விட்டு நீ போனா ஊரு என்ன திருந்திடுமா

எழுந்து வாடா கருப்பா எங்க சாமி கருப்பா

விரட்டி வாடா கருப்பா விதியை மாற்றப் போற கருப்பா

 

வாடா கருப்பா வாடா கருப்பா

வாடா கருப்பா வாடா கருப்பா...

 

005.என்னம்மா சொல்லம்மா என் தாயே அங்காளம்மா

என்னம்மா பொன்னம்மா என் தாயே அங்காளம்மா

உனைப் போலே பெண் தெய்வம் உலகினிலே வேர் ஆர் அம்மா

சிங்கத்திலே பவனி வரும் என் தாயே அங்காளம்மா

உனையின்றி வேறில்லை காத்திடவே வருவாய் அம்மா

என்னம்மா சொல்லம்மா என் தாயே அங்காளம்மா

உனைப் போலே பெண் தெய்வம் உலகினிலே வேரா அம்மா

பட்டாட கட்டிக்கிட்டு பம்பரமா சுழண்டுகிட்டு

பாம்பாக நீ  வந்தா படையெல்லாம் நடுங்குமடி

வேப்பஞ்சேல கட்டிக்கிட்டு வெத்தலைய போட்டுக்கிட்டு

வேட்டையாட நீ வந்தா வெளு வெளுத்து போகுமடி

அந்த ஈசனுக்கு மனம் முடிச்சு தேவி ஈஸ்வரியாக நீ இருக்க

உன் மன்னவனின் அங்கத்திலே அரவாணியாக அமர்ந்திருக்க

உன்னைப்போல நான் இருக்க இந்த ஜென்மத்திலே பிறந்திருக்கேன்

என்னவனின் பாதியாக இந்த காலம் எல்லாம் வாழ்ந்து இருக்கேன்

என்னம்மா சொல்லம்மா என் தாயே அங்காளம்மா

உனைப் போலே பெண் தெய்வம் உலகினிலே வேர் ஆர் அம்மா

பெண்களிலே நீ பாதி அம்மா ஆண்களுக்கு  அன்னை தேவியம்மா

தப்பு செய்பவருக்கு நீ காளியம்மா மனம் திருந்தி விட்டால் நீயேவேலி அம்மா

தேடி வரும் பக்தனுக்கு தேவை என்ன  கேளம்மா

அந்த சங்கடங்கள் தீர்ந்து வைக்க நல்ல வழி தருவாய் அம்மா

ஆதிசக்தி தாயே அன்னபூரணி தாயே

அங்காளம்மன் தாயே அகிலாண்டேஸ்வரி நீயே

என்னம்மா பொன்னம்மா என் தாயே அங்காளம்மா

என் தாயை நீ இருக்க வேற குறை எனக்கேது அம்மா

தாயே அங்காளம்மா சிங்கத்திலே பவனி வந்தாளம்மா

தாயே அங்காளம்மா சிங்கத்திலே பவனி வந்தாள் அம்மா

 

006.நெஞ்சம் மறப்பதில்லை 

அன்றொரு நாள் கண்டேன் என் ராமனை

ஆகாயத்தாமரை போல் மலர்ந்தால் மாதுளை.

வெட்கத்தில் சொன்னேன் என் காதலை

பக்கத்தில் நின்றான் எதிர் பார்க்கலை.

சொர்க்கம் தெரிந்தது அவன் முன்னே

சோகம் விளைந்தது அவன் சென்ற பின்னே.

எப்போ வருவான் என்னை கூட்டிச்செல்ல

எப்பொழுது வருவான் தாலிக்கட்டி அள்ள.

காத்துக் கிடந்தேன் கண்களில் மைபூசி (என்)

திருமணம் நடந்தது தைக்கு பின் மாசி.

 

அவனை கண்டதும் அடைந்தேன் வெட்கம்

அவன் வந்தான் இப்பாவையின் பக்கம்.

தொட்டதும் மலர்ந்தது இந்தப் பூ

என் நெஞ்சை மயக்கியது அவன் சிரிப் பூ.

தினமும் மலர்ந்தது எங்கள் காதல்

அதற்குப் பரிசாய் தந்தேன் இரு மலர்கள்.

உன் பாசம் ஒன்றே எனக்கு போதும்

உன் வார்த்தை தான் எனக்கு வேதம்

நீ இருக்கும் வரை உன் அருகில் இருப்பேன்

நீ இல்லை அக்கணமே என் உயிரை இழப்பேன்

ஆம் இது போன சென்மத்திலே முடிபோட்ட பந்தம்(இன்னும்)

ஏழேழு சென்மத்திலும் தொடரும் நம் சொந்தம்

பாசம் குறையவில்லை காதலோ மறையவில்லை

ஆம் நடந்த அனைத்து நிகழ்வுகளும் என்நெஞ்சம் மறப்பதில்லை...

 

007.நீதி பேசிய சிலம்பு

 

களவுச் செய்தியைக் கொண்டான் மன்னன்

கோவலனே கள்வனென்று கொன்றான் அரசன்

செய்தியை கேட்டதும் கொதித்து எழுந்தாள்

என்ன நடந்தது மன்னனிடம் வழக்கறிந்தால்

உண்மையை மன்னனிடம் உரக்கச் சொன்னால்

அவன் தவறை உரைக்கும் படிச்சொன்னால்

மன்னா நீயே செய்த பாவம்

தீக்கரியாக மதுரைக்கு விடுகிறேன் சாபம்...

 

008.தமிழன்

 

தமிழன் வந்தோரை வாழவைப்பான் தமிழன்

தமிழன் என்றால் ஒருசொல் தைரியம்

தைரியமாய் தலை நிமிர்ந்து நில்லடா

நில்லடா தலைவனே துணிந்து செல்லடா

செல்லும் பாதை நேராக இருக்கட்டும்

இருக்கட்டும் என்று விட்டு விடாதே

விடாதே எவனாக இருந்தால் என்ன

என்ன நடந்தாலும் துணிச்சல் மனதில்வை

வைகைப் போல் பொங்க வேண்டும்

வேண்டும் நம் நாட்டுப் பற்று

பற்றுதல் ஒன்றே பகைவனைத் தேடும்

தேடு நம் நாட்டின் எதிர்காலத்தை

எதிர்காலம் என்றால் என்ன தெரியுமா

தெரியுமா தமிழ் மூத்தமொழி என்று

என்றும் இறுதிவரை ஆள்பவனே நம் தமிழன்

 

009.அன்பே சிவம்

 

இந்தக் கொடி என்றும் உன் வசம்

நான் உங்கள் மீது வைத்திருக்கும் பாசம்

நீங்கள் என் மீது வைத்திருக்கும் நேசம்

இதில் ஒன்று குறைந்தாலும்

இந்த பூவிலிருந்து வராது சுவாசம்...

 

010.வேலவா வடிவேலவா...!!

 

கண்ணுக்குத் தெரியாமல் கருணை உள்ளம் கொண்டவனே

கந்தா என்று அழைத்தால் கார்த்திகேயன் வருவானே

 

கல்குத்தும் பாதையிலே காவலனாய் நீ இருக்க

காவடியை தூக்கிக்கிட்டு கால்நடையா வந்தோமையா

 

காத்திருக்கும் போதெல்லாம் என் காலெல்லாம் நோகுதையா

கந்தன் பூமுகம் பார்க்கையிலே மனசெல்லாம் குளிருதையா

 

கடினமுன்னு வந்தவனை காக்க வச்சு பாக்குறியே

காத்துதான் கடந்த பின்னே கடினமெல்லாம் போக்குறியே

 

ஊர் பூரா சாமி இருக்கு உன்ன போல யாரும் இல்ல

உன் பால் முகத்த பார்க்கையில என் பஞ்சனையில் தூக்கம் வல்ல

 

அழகினிலே உனை வெல்ல இந்தஉலகினிலே யாரும் இல்ல

பால் வடியும் பிள்ளை தானே தப்பா நீயும் எண்ணிடாது

 

அப்பங்கிட்ட பாடம் கற்ற புள்ளைய தான் பார்த்திருக்கேன்

அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனாக நீ இருக்க

 

உலகம் என்றால் நீயே என் தாய் தந்தையை வடித்தாயே

மாங்கனியை தரவில்லை என அண்ணனிடம் துடித்தாயே

 

மாடு மேய்க்கும் பையனாக அவ்வையிடம் நடித்தாயே

தள்ளாடும் கிழவியையும் தாலாட்ட வைத்தாயே

 

கந்தா என உனை அழைத்தால் கவலை எல்லாம் ஓடிவிடும்

கடம்பா என்று உன்னை அழைத்தால் காரியம் கைக்கூடி விடும்

 

வீடு இல்லை என்று நீயும் எண்ணி விடாதே

என் ஆறுபடை வீடு உண்டு மறந்து விடாதே

 

தித்திக்கும் தமிழ் தேன் உண்டால் அமிர்தம்

முருகன் ஆலயத்தில் கிடைப்பதுதான் பஞ்சாமிர்தம்

 

அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா

உன்னை சிறுவனாக நினைத்தாலது தப்பையா

 

தமிழுக்கு தலைமகனே உன் தாய்க்கு இரு மகனே

வேலவா வடிவேலவா வாழவா உன்னை நினைத்து வாழவா...

 

011.பரமன் கழுத்து பாம்பு

 

பரமன் தன் கழுத்தில் பாம்பு வைத்தால்

பார்வதி தேவியை தன் உடலில் பாதி வைத்தான்.

பூமியை படைத்தான் அதில் மனிதனை வைத்தான்

அழகோடு வாழ அங்கத்தை வைத்தான்

‌‌அளவோடு வாழ ஆசையை வைத்தான்

அறிவோடு வாழ அனைத்தையும் வைத்தான்

அனைத்தையும் பெற்றுக் கொண்டாய்

நீ அவனிடமே ஆட்டம் கொண்டாய்

முதலில் எழவைத்துப் பார்ப்பான்

பின்பு அழ வைத்து பார்ப்பான்

பிறகு கீழே விழ வைத்து பார்ப்பான்

ஏ மனிதா ஆடாதீர்கள் அவனிடம் ஆட்டம்

ஆடும் முன்பு மருத்துவமனையில் வந்து விடுங்கள் நோட்டம்

இந்த நோட்டம் உங்கள் வாழ்விற்கு நல்ல வழிகாட்டும்

பின்பு எடுப்பீர்கள் ஓட்டம்

ஒரு நாள் இரவு நன்கு உறங்கிக் கொண்டு இருந்தேன்

திடீரென கேட்டது அலறல்

அதுதான் மகளின் அழுகுரல்

தாயே என்னை விட்டு பிரிந்தாயே

இரவு முழுவதும் ஒலித்தது மின் வாகனம்

இதனைக் கண்டால் ஒழிந்தது விடும்உங்கள் ஆணவம்

இளமையில்ஆடும் வரை ஆடு என ஆட வைப்பான்

முதுமையில் நீ ஆடியதை பார் என்று விளங்க வைப்பான்

இறுதியில் தான் உன் விளக்கை அணைத்து வைப்பார்

மீண்டும் மறு ஜென்மத்தில் அனைத்தும் வைப்பான்.

 

012.எங்க அம்மா அலமேலு

 

எங்கம்மா போன. நீ என்ன விட்டு

பெத்த புள்ள அழுகிறேன் கண்ணுல தண்ணி விட்டு

 

பத்து மாசம் சுமந்து பெத்த என்ன

பத்து நாள் தான் மருத்துவமனையில் பார்த்தேன் உன்ன

 

பள்ளிக்கூடம் பக்கம் நீயும் போனதில்ல

ஆனா உன் அறிவுக்கு ஈடு வேற யாருமில்ல

 

பக்குவமா சமைச்சு நீயும் போடு வல்ல.

பாசத்துல உன்ன போல யாரு புள்ள

 

நாலு மணிக்கு மேல நீயும் தூங்கவில்லை

இரவு பத்துமணி ஆகி கூட வேலை தீரவில்லை

 

நீ பட்ட பாடு அப்ப எனக்கு புரியவில்லை

இப்ப ஊரு முழுக்க தேடுறேன நீ எங்கு உள்ள

 

உன் வாழ்வெல்லாம் எனக்காகத் தந்தாயே

உன்னைக் காப்பாற்ற முடியவில்லை சென்றாயே

 

பெற்ற தாயைக் காக்க என்னால் முடியவில்லை

உன் உயிர் பிரியும் போதும் கூட நான் அங்கு இல்லை

 

தாயே நான்உனக்கு செய்த பாவம்

ஏழேழு சென்மத்திலும் தீராது சாபம்

 

தாயே நீ மீண்டும் பிறப்பாயாக

என் மடியினில் தவழும் பிள்ளையாக

 

நான் செய்த பாவம் தீர வேண்டும்

இறைவா மீண்டும் என்தாயே பிறக்க வேண்டும்...

 

013.கர்ணன்

கேட்டதை அள்ளிக் கொடுப்பான் இந்த கர்ணன்

அஸ்தினாபுரத்துக்கு நீ அல்லவா மன்னன்

உன்னை போல நண்பன் இல்லை

நீ அந்த சூரிய தேவனியின் பிள்ளை

வில்லில் சிறந்து ஆள்பவனும் நீயே

நட்பில் உயர்ந்தவனும் உலகில் நீயே

அன்று தகுதியற்றவன் என்று விளக்கினார்கள்

இன்று கேட்டதை கொடுப்பான் கர்ணன் விளங்கினார்கள்

குந்தி தேவியின் மூத்த மகனும் நீயே

அந்த அஸ்தினாபுரத்தை ஆளச்சிறந்தவனும் நீயே

உடலோடு ஒட்டி இருக்கும் உன் கவசம்

அதையும் தருவேன் இதுவேஎன் பழக்கம்

இவள் தாய் என்றதும் கலங்கவில்லை

ஐவரும் சகோதரர் என்றும் நடுங்கவில்லை

தன்னிடம் வா என்றான் கிருஷ்ணன் மயங்கவில்லை

என் நண்பனுக்காக உயிரையும் கொடுப்பேன்

தேவைப்பட்டால் சகோதரனின் உயிரையும் எடுப்பேன்

இல்லை மாண்டு மண்ணுக்குள் வீழ்வேன்.

 

014.தாய் மாமன் 

உறவிலே சிறந்தவன் தாய் மாமன்

அவன் சூழ்ச்சிக்கு பலியானான் துரியோதனன்

அறிவிலே கூர்மையானவன் இந்த சகுனி

அது தவறாகிய காரணம் இதோ கவனி

சகோதரன் பாசம் வைத்தான் காந்தாரி மீது

பெண் கேட்டு வந்தார் பீஷ்மர் தூது

பார்வை இல்லை என்பதை கேட்டதும் அழுதால்

தன் கண்களை துணிகளால் மூடிக்கொண்டால்

அதைக் கேட்டதும் கொதித்து எழுந்தான்

அஸ்தினாபுரத்தை அழிக்கத் துடித்தான்

அதற்காக பரம பதத்தை கையில் எடுத்தான்

பாண்டவர்களை விரோதியாக நினைத்து அடித்தான்

அவன் உறவுகள் அழிந்ததை எண்ணி வாடினான்

அவன் ஆணவம் அவனையே அழித்தது

அளவுக்கு மீறிய அறிவு இருந்தால்

அதை சரியாக உபயோகிக்க வேண்டும்

இல்லையென்றால் இதுவே இறைவனின் உரையாகும்.

 

கவிதாயினி திருமதி புவனாசிவம்

கனகரத்தினம் கவிமன்றம் நிறுவனத்தார்

ஈட்டிவீராம்பாளையம் - திருப்பூர்-641666

 

 

 

 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE