புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
காந்தி கவிதைகள், காந்தி கவிதைகள், நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

விடியல் காணட்டும் பெண்கள்

11 அக்டோபர் 2022 1,569 பார்வைகள்
விடியல் காணட்டும் பெண்கள்

விடியல் காணட்டும் பெண்கள்
-------------------------------------------------------------
வேத காலத்தில்
   வென்றே இருந்தவள், 
தேக பலத்தில்
      திமிராய் தெரிந்தவள், 
மாய சக்தியாய்
     மன்றத்தில் நின்றவள், 
பாரை ஆண்ட
       பராசக்தி ஆனவள்,, 
இல்லம் என்னும்
         இனிய சிறையில், 
விரும்பியே வீழ்ந்திடும்
       விண்ணின் மகள், 
பூதேவியை மிஞ்சிடும்
       பெண்ணவள் பொறுமை, 
ஒன்றை ஒன்பதாய்
        பெருக்கியே காட்டுவாள், 
கல்வியில் என்றும்
       முன்னிலை கண்டே, 
கனவை  நனவாக்கி
      நாட்டையும் ஆளுவாள், 
விருப்பம்  இல்லை
       என்றால்   -  கொடிய
அமில   வீச்சும்
         அவள் முகத்தில், 
மூடியே   வைத்த
      முத்தைப் போலன்றி, 
குடத்திலே வைத்த
     விளக்காய் இல்லாது, 
முட்டியே  முளைத்திடும்
      பெண்ணெனும் பேராற்றல், 
இனியேனும் விடியலைக்
      காணட்டும் பெண்மை.  
 
              முனைவர்                                                   
   சகுந்தலா ராமலிங்கம்.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE