புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
காந்தி கவிதைகள், காந்தி கவிதைகள், நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

குளம்

05 அக்டோபர் 2022 973 பார்வைகள்
குளம்

விளையாட்டுப் போல
ஒடுகிறது பொழுது
சோழிகளை உருட்டுபவன் 
யார் என்றே தெரியவில்லை

நிலவின் மீது 
தவளை குதிக்க
தவளையைப் பிடித்து 
நீர்பாம்பு விழுங்க
இரண்டையும் கபளீகரம் 
செய்கிறது இரவு

தொடரும் விளையாட்டை
வேடிக்கை பார்க்கும் குளத்திற்கு
சொல்வதற்கு ஒரு வார்த்தை இல்லை
ஒரு அலகிலா விளையாட்டின்
சாட்சி என்பதை தவிர

தங்கேஸ்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE