புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
காந்தி கவிதைகள், காந்தி கவிதைகள், நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

உலக மகள் தினமிது

11 அக்டோபர் 2022 1,287 பார்வைகள்
உலக மகள் தினமிது

உலக மகள் தினமிது...:
&&&&&&&&&&&&&&&&&&&&&
உலக மகள் தினமின்று,
எப்போதும்
போற்றிடுவோம்...
கலகலப்பு தந்திடுவார்
கவலைதனைப்
போக்கிடுவார்..
உழைப்பெலாம்
அவருக்காக
களைப்பேதும்
தெரியாதே...
இலகுவாய்
நடந்திடுவார்;
இலட்சியமும்
பெரிதாகும்...

கல்வியதில்
தனித்தன்மை;
கற்றதனைப்
பயன்படுத்தி...
ஆல்விழுது
குலம்காக்கும்
மனம்மகிழ்வு
அவராலே...
வெல்லும்வழி
தொடர்ந்தாங்கே
முடிப்பதினில்
நன்முனைப்பு...
சொல்லாலும்
செயலாலும்
நமக்காக
நிறைத்திடுவார்...

வல்லோனிடம்
வேண்டுதல்
அளவற்ற
கோரிக்கைகள்...
இல்லாதார்
இடமறிந்து
கொடுத்துதவும்
நற்பாங்கு...
நல்லவர்கள்
உடனிருக்க
இல்லமது
இனித்திடுமே...
மென்மலரின்
பண்புகளாலே
விண்ணையும்
மிஞ்சிடுமே...

மெல்லினமே
வல்லினத்தின்
ஊன்றுகோல்;
மறுப்பரோ...
சில்லென்ற
தென்றலது
மனக்கவலை
உடன்அகலும்...
உலகமது அவரன்றோ
கடந்திடுமே நொடிப்பொழுதாய்...
மகளவரின்
எவர்க்குமினி
பெற்றதாய்
மறுபிறப்பாய்...
&&&&&&&&&&&&&&&&&&&&&&
          சா.சையத் முகமது
          கிருட்டிணகிரி
&&&&&&&&&&&&&&&&&&&&&&

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE