வியாழன், 24 September 2026
⚡ சமீபத்திய
கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு கோபி பி.கே.ஆர். மகளிர் கலைக் கல்லூரியில் “பார்போற்றும் பாவையர்” உலக சாதனை முயற்சிக்கான பன்னாட்டு கருத்தரங்கம் பார் போற்றும் பாவையர் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் பட்டியல் GLOBALLY CELEBRATED WOMEN GOLDEN GLOBAL AWARD 2026 AWARDEES ஜோதிட உலகில் தனித்துவம் படைக்கும் கோவை எம். தனம் வறுமையின் வடுவில் மலர்ந்த சமூக ஒளி: நல்லாசிரியர் ப. சாந்தி அவர்களின் சாதனைப் பயணம் உலக பல்லி தினம் – World Lizard Day டிஜிட்டல் யுகத்தின் குற்றவியல் காவலர் லெப்டினன்ட் டாக்டர் ஆர்.சிவகுமார் பெண்ணே… நீ பிறந்ததே வெல்லத்தான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களின் பங்கு இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண் வீராங்கனைகளின் பங்கு
நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

இந்தியாவின் முகவரி

02 அக்டோபர் 2022 958 பார்வைகள்
இந்தியாவின் முகவரி

இந்தியாவின் முகவரி... 

போர்பந்தரில் பிறந்து 
நாட்டிற்காய் போராடிய 
ஒப்பற்ற தலைமகன்
பார் முழுவதும் திரும்பி பார்க்க வைத்த
பாரதத்தாய் வணங்கும்
ஒப்பற்ற திருமகன்.. 

இந்தியாவின் முகவரியும்
எளிமையின் திருவுருவமும் நீ
விடுதலைக் கிழக்கை காட்டி
சுதந்திர வேட்கையை
உணர்வில் ஊட்டியவர்... 

உண்மையின் இலக்கணம்
அகிம்சையின் பிறப்பிடம்
மனித ஆத்மாவாக தோன்றி
மகாத்மாவாக உயர்ந்தவர்...
ஆடையைக் குறைத்து
அகிம்சையை அணிந்தவர்...

ஆயுதத்தால் வெல்ல முடியாததை
அகிம்சையால் வென்று காட்டியவர்...
வெள்ளைப் பரங்கியரை
வெளியே ஓட்டியவர்
அரை நிர்வாணத்தால் வெளிச்சம் கூட்டியவர்.. 

இந்தியா எனும் அருமை ம(க்)களை
கைப்பிடித்து நல்வழி நடத்திச் செல்லும்
வல்லமை உடைய தந்தையவர்... 
மண்ணிற்காக போராடி வாழ்ந்தவர்களிடம்
மரணமும் இங்கு தோற்றுதான் போகும்
மண்ணில் வாழும் காலம் வரை
மக்களிடத்தில் நின் புகழ் ஓங்கும்.. 

கோ. ஶ்ரீஆதேஷ்
கும்பகோணம்..

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE