புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , அறிவர் அம்பேத்கர் அறிவுச் சுடர் விருது கவிதைப் போட்டி , நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

புரட்சி நாயகன் அம்பேத்கர் 042

05 ஏப்ரல் 2023 540 பார்வைகள்
புரட்சி நாயகன் அம்பேத்கர் 042

புரட்சி நாயகன் அம்பேத்கர்

மத்திய மாகாணத்தில் பிறந்து பாபாசாகேப் அம்பேத்கர்... 

என்ற பெயர் பெற்ற புரட்சி நாயகனே..!

இந்திய விடுதலைக்குப் பின் முதல் சட்டஅமைச்சர்... 

தகுதியைப் பெற்ற புரட்சி நாயகனே..!

உயர்கல்வி நாடி தாய் நாட்டிலிருந்து... 

அமெரிக்க நாட்டிற்குச் சென்ற முதல் புரட்சி நாயகனே..!

பட்டியல் இன மக்களுக்கென முதலில்... 

கழகத்தை ஏற்படுத்திய புரட்சி நாயகனே..!

தீண்டாமையை ஒழிக்க பரோடா மன்னருடன்... 

இணைந்து போராடிய புரட்சி நாயகனே..!

இந்திய அரசியலமைப்பு சட்டவரைவுக்குழு சாசனத்தின்... 

தலைவர் பதவி வகித்த புரட்சி நாயகனே..!

இந்திய அரசியலமைப்பின் சிற்பி நாயகனே...! 

உன்னின் பெருமை எதுவென நான் கூற... 

சட்ட மாமேதை எழுத்தாளர் ஆசிரியர்... 

சமூகப் புரட்சியாளர் பாரத ரத்னா விருதாளர்...!

என அடுக்கிக் கொண்டே செல்லலாம்..!

இந்திய தாய் திருநாட்டில் புரட்சி ஏற்படுத்திய...

புரட்சி நாயகனே உன் புகழ்  வாழ்க..!

உன் புகழ் ஓங்குக...!


 -ப. லாவண்யா,
முழு நேர முனைவர் பட்ட ஆய்வாளர், 
மயிலம் தமிழ் கல்லூரி.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE