மகிழ்ச்சி Fm ன் தங்கத் தமிழ் மகன் விருதுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்வு !

மகிழ்ச்சி இணைய வானொலியின் தங்கத் தமிழ் மகன் விருது,திராவிட ரத்னா,திராவிடச் சுடர் விருதுகளுக்கு தமிழத்தில் 2022 சிறந்த முறையின் மக்களுக்காக பணியாற்றிய அரசியல் ஆளுமைகள் யார் என்பதை தேர்ந்தெடுப்பதற்காக நமது மகிழ்ச்சி இணைய வானொலி சார்பாக குழு அமைக்கப்பட்டு, சமூக வலைத்தளங்களில் வாயிலாகவும், பொதுமக்களிடையே நேரடியாகவும் கள ஆய்வுகள் கடந்த டிசம்பர் மாதம் முழுவதும் நடைபெற்றது, இந்த வாக்கெடுப்பில் நமது இணையத்தளம் வாயிலாக நேயர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினார்கள். நமது மகிழ்ச்சி fm க்கு வாக்கு செலுத்தியவர்கள் அடிப்படியில், அதிக வாக்குகளை பெற்று தமிழக அரசியல் ஆளுமைகளுக்கு சிறந்த ஆளுமைக்கு இந்த ஆண்டுக்கான "தங்கத் தமிழ்மகன் விருது " க்கு தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தேர்வாகியுள்ளார்.இதைப்போன்று

திராவிட ரத்னா விருதுக்கு மதிமுக நிறுவன பொதுச்செயலாளர் வைகோ அவர்களும், திராவிடச் சுடர் விருதுக்கு விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் அவர்களும் தேர்வாகியுள்ளார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறோம்.
விருதுக்கு தேர்வான தலைவர்களை நேரில் சந்தித்து விருதுகளை மகிழ்ச்சி இணையவானொலி நிர்வாக குழுவினர்கள் வழங்க இருக்கிறார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.இந்த வாக்கெடுப்பிற்கு வாக்களித்து ஒத்துழைப்பு நல்கிய அனைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மகிழ்ச்சி FM
இது ஆனந்தத்தின் அலைவரிசை...
விபரங்களுக்கு 8838078388