நிலவாய் நீ .. வரிகளால் நான்...
காதல் – காலத்தை கடந்து நிற்கும் பரவசம்
காதல் – இதை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. அது உணர்வின் உச்சம், உயிரின் அடையாளம். காதல் எங்கே இருந்து பிறக்கிறது? அது எப்போது, எப்படி வருமென்று நாம் தீர்மானிக்க முடியுமா? நம்முடைய இதயத்தில்தான் காதல் பிறக்கிறது என்றால், அது யாருக்கு உரியது? நம்முடையதா, இல்லையா?
புராணங்கள், இதிகாசங்கள், மகாகாவியங்கள் – இவை அனைத்தும் காதலை ஒரு புனித உணர்வாகவே எடுத்துரைக்கின்றன. ஆனால் இவை காதலின் ஆழத்தை உணர்த்தினவா? அல்லது காதலை ஒரு விதமான கட்டுப்பாட்டுக்குள் அடக்கினவா?
"காதல் எங்கே இருக்கிறது?"
"அது நம் அருகில், நம் கண்களில், நம் இதயத்தில். ஆனால் நாம் அதை உணருகிறோமா?"
புராணங்களில் காதல் – மறைக்கப்பட்ட உண்மைகள்
நம்முடைய புராணங்களில் காதல் எல்லாமே திருமணத்தோடு முடிந்து விடவில்லை. சில காதல்கள் திருமணமாகி வாழ்வை தொடர்ந்தன, ஆனால் சில காதல்கள் நிலைகுலைந்து போனன. புராணங்களில் பல மறைக்கப்பட்ட கதைகள் உள்ளன – அவை நம் பாரம்பரிய மரபுகளால் வெளிவராமல் மறைக்கப்பட்டிருக்கின்றன.
1. ருக்மிணி – கிருஷ்ணன் காதல்
கிருஷ்ணனும் ருக்மிணியும் திருமணம் செய்துகொண்டார்கள், ஆனால் அந்த காதல் எப்படி தொடங்கியது?
ருக்மிணி தனது கண்ணால் கிருஷ்ணனைப் பார்த்ததில்லை. ஆனால் அவனது புகழைப் பற்றியே காதலிக்கத் தொடங்கினாள்.
இது 'காதல் பார்வையில் ஆரம்பிக்க வேண்டும்' என்ற நம்முடைய நம்பிக்கையை உடைக்கும் ஒரு உண்மை.
ஒரு நபரை பார்க்காமல், காதலிக்க முடியுமா? ஆம், உண்மை காதல் சாத்தியமே!
2. உஷா – அனிருத்தர் காதல்
உஷா, தனது கனவில் ஒரு இளவரசனைப் பார்த்தாள். ஆனால் யார் என்று தெரியவில்லை.
அவளது தோழி, அங்கே காதலை உருவாக்கினாள் – காதல் என்பது உணர்வாக மட்டுமல்ல, அது ஒரு நினைவாகவும் இருக்கலாம்!
இன்று, நாம் சமூக ஊடகங்களில் யாரையேனும் காதலிக்கிறோம். அவர்களை நேரில் பார்க்கவில்லை. ஆனால் நம்முடைய மனதில் அவர்கள் காதலாக மாறிவிடுகிறார்கள். இதை புராணம் ஏற்கனவே சொல்லிவிட்டதா?
3. வள்ளி – முருகன் காதல்
முருகன், வள்ளியை காதலிக்க முற்பட்ட போது, அவர் முதலில் அவரை ஏற்கவில்லை.
அன்பு எப்போதும் ஒரே நேரத்தில் இருவருக்கும் ஏற்படாது. ஒருவருக்குத் தாமதமாகலாம்.
ஆனால் முருகன், வள்ளியின் மனதை பெற தன்னையே மாற்றிக்கொண்டார்.
"காதல் மாற்றத்தை உண்டாக்கும். காதல் வளர, நாம் கூட வளர வேண்டும்."
4. சாவித்திரி – சத்யவான் காதல்
சத்யவானின் ஆயுள் குறைவானது என்று தெரிந்தும் சாவித்திரி அவனை காதலித்தாள்.
காதல் என்பது நேர்மறை சக்தி. அது மரணத்திற்கும் மேலாக உயர்ந்து நிற்கும்.
காதல் ஒரு நபரின் வாழ்க்கையை மாற்றிவிடும், அதை சாவித்திரி நமக்குக் கற்றுக் கொடுத்தார்.
காதல் – நமக்குப் புதிய உண்மைகள்
"காதல் என்பது உயிரின் இரண்டாவது பிறப்பு!"
இன்று காதல் விறுவிறுப்பாகவும், பிழைத்துப் போகும் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.
ஆனால் உண்மையில், காதல் என்ற உணர்வு வாழ்க்கையின் சூட்சுமமான, புரியாத,
ஆனால் உண்மையான ஒரு அடையாளம்.
காதல் நேரடியாக உணர முடியுமா? இல்லை, அது எப்போதும்
ஒரு பனிப்பொழிவு போல நம்மைக் சூழ்ந்து கொள்ளும்.
காதல் கட்டுப்படுத்த முடியுமா? இல்லை, அது சிவபெருமான் இருக்கும்
ஆதியின் இருப்பிடம் போல – காண முடியாது, ஆனால் உணரலாம்.
காதல் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்குமா? இல்லை,
அது ஒரு தரிசனம் போல – ஒருவருக்கு வரும் விதம், மற்றவருக்கு ஒருபோதும் வராது!
"காதல் நம்மை மாற்றும். ஆனால் நாம் காதலை மாற்ற முடியாது!"
காதலின் மறுபரிசீலனை – புதிய புரிதல்
இன்று காதல் என்ன ஆகிவிட்டது?
ஒரு 'ஸ்டேட்டஸ்' – காதலிக்கிறேன், காதலிக்கவில்லை என்று சமூக ஊடகங்களில் பதிவிடும் ஒன்று.
ஒரு வசதி – காதல் வந்தால் வாழலாம், இல்லையென்றால் விட்டுவிடலாம் என சிலர் பார்க்கும் நிலை.
ஒரு விளம்பரம் – காதல் என்பது ஒரு வியாபாரம் போலவும் மாறி வருகிறது.
ஆனால் உண்மையான காதல் என்ன?
காதல் என்பது செயல், அது வெறும் உணர்வு அல்ல.
காதல் ஒரு பயணம், அது ஒரு முடிவு அல்ல.
காதல் ஒரு பரிசு, அதை வாங்குவதற்கு ஒருவரும் தகுதியானவராக இருக்க வேண்டும்.
முடிவுரை – காதல் என்றால் என்ன?
காதல் ஒரு பிரபஞ்ச விசை. அது எல்லாவற்றையும் கடந்து செல்லும். காதலால் மனிதன் மட்டும் மாறவில்லை; அது பிரபஞ்சத்தையே மாற்றியிருக்கிறது.
"காதல் என்பது அசைக்க முடியாதது. ஆனால் அது நம்மை அசைக்கிறது!"
நாம் இதுவரை காதலை எவ்வளவோ புரிந்திருக்கலாம், ஆனால் இன்னும் ஒரு கோடி உண்மைகள் அதைச் சுற்றி உள்ளன. அதனால்தான் யாரும் இதுவரை முழுமையாக காதலை எழுத முடியவில்லை.
எனவே, நம்முடைய காதல் பற்றி யாரும் முழுமையாக எழுதிவிட முடியாது. ஏனெனில், காதல் எப்போதும் புதிதாக இருப்பதால், அதைப் பற்றிய புத்தகம் எப்போதும் முடியாததாகவே இருக்கும்!
நிலவு இரவை ஒளியால் நிரப்பும் போதே,வார்த்தைகள்
உள்ளத்தைக் கவிதையால் நிறைக்கும்.
இந்த தொகுப்பு, காதலின் மாறுபட்ட தோற்றங்களை
உணர்ச்சிப் பெருக்குடன் பேசும் கவிதைகளின் வரிசை.
ஒரு பெண் ஒருவனை நேசிக்கும்போது அதன் நிறைவு, ஏக்கம், உரிமை, பயம்…
காதல் ஒருதரப்பு ஆனபோது, அதன் மௌனம், பிணைப்பு, துளிசிதறிய கனவுகள்…
இருவரும் காதலில் ஆழ்ந்துவிட்டால், அதன் பிரிவும், பரிபூரணமும்…
"நிலவாய் நீ" ஒளியாக, "வரிகளால் நான்" ஏக்கத்தையும்
நேசத்தையும் வார்த்தைகளாய் அழுத்தம் செய்யும்.
இவை வெறும் கவிதைகள் அல்ல—ஒவ்வொரு வரியும்,
ஒரு இதழில் உறைந்த பனித்துளி போல, உங்களது உள்ளத்தை நனைத்து செல்லும்..!
001.உயிர் தொடும் தென்றல்
அவன் என்னை முத்தமிடும் பொழுது
கடல் அலைகள் கரையை தழுவுவது போல்
என் உயிரை வருடியது.
அவன் என் கூந்தலை வருடியபோது
காற்று என் தேகத்தை
தொட்டது போல்
என் உயிரினை அணைத்தது.
அவன் என் கைகளை தொடும் பொழுது
பூக்களில் வண்டு தேன் உறிஞ்சியது போல்
என் உயிர் மென்மையாக தழுவியது.
என்னை அவன் அரவணைத்த பொழுது
சொர்க்கத்தின் வாசல் படியில் நின்றது போல்
என் உயிருடன் கலந்தது.
002."உன் நினைவுகளில் ஒரு பயணம்"
உன் கையில் கோர்த்து உன் தோளில் தலை சாய்ந்ததை ...
நினைவுகளை தேடுகின்றேன்....
உன் இதழ்கள் முத்தமிட்டு
உன் மீசை சிரித்ததை ...
நினைவுகளை தேடுகின்றேன்....
உன் கண்களின் மோகத்தை
உன் அரவணைப்பில்
கண்டதை...
நினைவுகளை
தேடுகின்றேன்....
உன் அருகில் அமர்ந்த போது
உன் காதலை உணர்ந்ததை ...
நினைவுகளை
தேடுகின்றேன்....
003.காதல் சொல்லாத வார்த்தைகள்...
உன் பார்வை மௌன மொழி பேசியது..
உன் உதடுகள் பேச மனம் தடுத்தது.
நான் அருகிலிருந்தும்,
உன் கண்கள் கனவுகளைத் தேடின...
04.நினைவுகளில் வீழ்ந்த தருணங்கள்
உன்னோடு வாழ்ந்த வாழ்க்கையின் நினைவு
அசை போடுதே.
உன்னோடு சென்ற இடங்களில் கால்கள்
நடுங்குதே.
உன்னோடு பேசிய வார்த்தைகள்
மௌனம் கொல்லுதே.
உன்னோடு முத்தத்தின் ஈரம்
கன்னங்கள் தேடுதே.
உன்னோடு தோளில் சாய்ந்த நிமிடங்கள்
ஏங்குதே.
உன்னோடு இழந்த இன்பங்களை
மனம் வாடுதே.
005.பிரிவின் புன்னகை...
புதிதாக பிறக்கின்றேன்
என் காதலை பிரிந்த பின்
இயற்கை வியக்கின்றது
"இவளா?" என்று...
கற்பனையில் மிதக்கின்றேன்
அவன் நினைவுகளோடு
என் வாழ்க்கை புதிதாய் மாறுகின்ற...
006.நான் மட்டும்....
நான் மட்டும் தான்
ஒவ்வொரு நிமிடங்கள்
நினைக்கின்றேன் ,
நீ மட்டும் தான்
தேவையான தருணங்களில் நினைக்கிறாய்...
நான் மட்டும்தான்
நம் உறவை நேசிக்கின்றேன்,
நீ மட்டும் தான் , தேவையெனில் நேசிக்கின்றாய்...
நான் மட்டும் தான்,
என் பாசத்தை உணர வைக்கின்றேன்.
நீ மட்டும் தான்,
என்னை சுமையாக உணர்கிறாய்...
நான் மட்டும்தான் மறக்க முடியாமல் தவிக்கின்றேன் ,
நீ மட்டும் தான்,
நினைக்க வேண்டும் என
தவிக்கின்றாய்....
நான் மட்டும் தான் ,
உன் உணர்வுகளோடு வாழ்கின்றேன்,
நீ மட்டும் தான்,
உன் உணர்வுகளோடு வாழ்கின்றாய்.
007."பிரிவின் பின்னே..."
பிரிந்தால் என் அன்பை உணர்வாய் ...
என்று நினைத்தேன்... ஆனால்,
பிரிந்த பின் உணர்ந்தேன்....
உன் அன்பை...!
008.மாயமான நினைவுகள்
உன்னை நினைத்தால் மழை மணம் வீசும்.
உன்னை நினைத்தால் புன்னகை மலரும்.
உன்னை நினைத்தால் இதயம் பாடும்.
உன்னை நினைத்தால் நேரம் நிற்கும்.
உன்னை நினைத்தால் நிலாவை தொட்டேன்.
உன்னை நினைத்தால் கனாக்கள் விழும்.
உன்னை நினைத்தால்
என்னை மறப்பேன்...
009.அவனின் ஸ்பரிசம்
அவனோடு மூழ்கும் சுகத்தில்,
அவன் கண்கள் பேசும் மௌன மொழி,
அதை பார்த்தவுடனே மனம் ஓடுமே,
அன்பில் மிதந்தபடி ஒரு கனாகாய்!
அவனோடு கைகளை பிடிக்கையில்,
வானம் சேரும் ஒரு தருணம்,
அவன் அரவணைப்பில் ஓர்நிமிடம் கூட,
உலகமே மறந்துபோகும் இசை!
அவனோடு முத்தங்கள்
கன்னத்தில் பதிகையில் ,
காற்றில் நிழலிடும் ஓசை,
அது காதில் விழும்போது,
இதயம் துடிக்கும் ராகம்!
அவனோடு வாழ்ந்த
நொடியில் ,
தீரா நினைவாய் சுற்றிக்கொள்ள,
அவனின் அன்பில் மூழ்கியவளாய்,
நான் என்றும் மலர்ந்திருப்பேன்..!
010."மனத்தின் முழக்கம்"
வலிகளோடு வாழ்க்கையை வாழ வைக்கிறாய்
விழிகளோடு கண்ணீரை வரவைக்கின்றாய்
நினைவுகளோடு மண்டியிட வைக்கிறாய்
மரணத்தின் வாசலில் நிற்கவைக்கின்றாய்...
011."கருணையற்ற காதல் பறவை"
மரணத்தின் வலியை உணர்த்தியவன் நீதானே
மங்கையின் கனவுகளை பூத்தவனும் நீதானே
கற்பனை நகரத்தில் என்னை மிதக்கச் செய்தவன் நீதானே
கருணையின்றி பிரிந்துபோனதும் நீதானே...
012."அன்பின் பயணம்"
உன் பார்வை எனது வாழ்க்கை
உன்னோடு வாழ்ந்தால் நொடி யுகமாகும்
உன் கைகளில் எனது உலகம்
உன்னோடு சேர்ந்தால் வாழ்க்கை
மகிழ்ச்சியாகும்
உன் அன்பு எனது சுவாசம்
உன்னோடு கலந்தால்
காதல் அர்த்தமாகும்
உன் உயிர் எனது ஜென்மம்
உன்னோடு பயணித்தால்
மறுபிறவி தொடக்கமாகும்...
013.உன் பிரிவு
கண்களில் கண்ணீரில்,
உன் பிரிவை உணர்ந்தேன்.
வார்த்தைகளின் மௌனத்தில்,
உன் பிரிவை உணர்ந்தேன்.
உடலின் நடுக்கத்தில்,
உன் பிரிவினை உணர்ந்தேன்.
நினைவுகள் தொடுகையில்,
உன் பிரிவினை மறந்தேன்.
இதயம் துடிக்காது நேரத்தில்,
உன் பிரிவினை உணர்ந்தேன்....
014."உன் நினைவின் நொடி"
உன்னை காணாத அந்த நொடி
என் பார்வை இழந்தேன்
உன்னிடம் பேசாத அந்த நொடி
என் வார்த்தைகளை இழந்தேன்
உன்னை நேசிக்காத அந்த நொடி
என் உணர்வை இழந்தேன்
உன்னை பிரிந்த அந்த நொடி
என் உயிரை இழந்தேன்...
015."அவனோடு சென்ற பாதை"
மரணத்தை உணர்ந்தேன்
நீ என்னை விட்டு சென்ற போது...
நரகத்தில் நிற்கின்றேன்
உன் நினைவு என்னை விட்டு செல்லாத போது...
இருளில் தேடுகின்றேன்
உன் ஒளி என்னை காண மறந்த போது...
வெளிச்சத்தில் மறைகின்றேன்
உன் காதல் சுவாசமாய் இருந்தது நினைவில் நீங்காத போது...
எண்ணியே தொலைக்கின்றேன்
உன்னோடு காலம் விலகிய நாட்களை எண்ணிய போது...
016.என் உலகம் நீ...
உலகத்திற்கு வேண்டுமென்றால்
நீ
யாரோ ஒருவனாக இருக்கலாம்...
ஆனால்...
நீ
தான்
என் உலகம்!
017.உன் இதயத்தில் என் காதல்
உன் இதயத்துடிப்பில்
என் அன்பே
உணர்ந்தேன்......
உன் விழிகள் தேடலில்
என் காதலை
அறிந்தேன்......
018.நேரம் தவறிய காதல்
என் விழிகள் தேடியபொழுது
நீ என்னருகில் இல்லை....
என் விழிகள்
மூடிய பொழுது உன்னருகில்
நான் இல்லை.....
019.அரவணைப்பின் சுவாசம்..
உன் கைகளால் என் கன்னத்தை தழுவும் பொழுது
நான் மயங்கி நின்றேன்...
உன் உதடுகளால் என்னை முத்தமிடும் பொழுது
நான் என்னை இழந்தேன்...
உன் பார்வையால் என்னை அரவணைத்த போது
நான் சொர்க்கத்தின் வாசலில் நின்றேன்...
020.உன் சிறையில் நான்...
உன் கைகள் என்னை அழைக்காத பொழுது
நான் காணாமல் போகின்றேன்
உன் உதடுகள் என் பெயரை உச்சரிக்காத பொழுது
நான் மௌனத்தில் உறங்குகின்றேன்
உன் பார்வை என்னை தேடாத பொழுது
நான் நரகத்தின் வாசலில் நடக்கின்றேன்...
021.உணர்வு என்னை தொடும் போது
நான் எழுதும் வரிகள்,
உனக்கு மட்டுமே சொந்தமானவை,
உன் முகத்தை காணும் சுகத்தில்,
என் கற்பனை
தீர்ந்து போவதில்லை ...
உன் பார்வை என்னை சுற்றும் போது,
என் மனதுக்குள் கவிதை மலர்கிறது,
ஆனால் உன் மௌனம்,
என் வார்த்தைகளை சிதறடிக்கிறது.
உணர்வுகளை அன்பாக ஏற்று,
உன் பதிலில் என் கவிதை செழிக்கட்டும்,
நான் உன்னிடம் ஒரு கவிஞனாய் இல்லை,
அன்பின் மொழியாய் மட்டுமே நின்றிருக்கிறேன்.
022.மழையின் மொழி
வானில் அசையும் மழைத்துளி உன்னை ஈர்க்க ஓடியது,
பூமியை நனைத்த மழைத்துளி உன்னை பார்க்க தேடியது.
பாதத்தை தொட்ட மழைத்துளி உன்னை நினைக்க எண்ணியது,
மார்பில் தழுவிய மழைத்துளி உன்னை காதலிக்க தொடங்கியது.
மேனியில் விழுந்த மழைத்துளி உன்னை அணைக்க தூண்டியது,
மழை சொன்ன காதல் மொழி உன் இதயம் கேட்டதா?
023."நம் உறவில் நான் மட்டும் வாழ்கிறேனா?"
உனக்கு என்னுடைய அன்பு புரிகின்றதா ? என்பதும் தெரியல ...
உனக்கு என்னுடைய நெருக்கம் புரிகின்றதா? என்பதும் தெரியல ..
உனக்கு என்னுடைய உணர்வுகள் புரிகின்றதா ? என்பதும் தெரியல ....
உனக்கு என்னுடைய காதல் புரிகின்றதா? என்பதும் தெரியல ...
உனக்கு என்னுடைய வேதனைகள் புரிகின்றதா? என்பதும் தெரியல ...
உனக்கு என்னுடைய எதிர்பார்ப்புகள் புரிகின்றதா? என்பதும் தெரியல ...
உனக்கு என்னுடைய போராட்டங்கள் புரிகின்றதா ?என்பதும் தெரியல ...
உனக்கு என்னுடைய பொறுமை புரிகின்றதா? என்பதும் தெரியல ...
உனக்கு என்னுடைய வாழ்க்கையின் அர்த்தம் புரிகின்றதா? என்பதும் தெரியல
024.உன்னால் மயங்கியேன்
உன் விழிகள் பார்த்து உன்னிடம் காதல் கொண்டேன்
என் காதலை உன்னிடம் சொல்ல தயக்கம் கொண்டேன்
உன் அன்பை பார்த்து உன்னிடம் மயக்கம் கொண்டேன்
என் மனதில் நினைத்ததை உன்னிடம் சொல்ல மௌனம் கொண்டேன்
உன் உறவு கிடைக்குமா என்று ஆசை கொண்டேன்
025.துடிக்கும் எதிர்பார்ப்பு
என் விழிகள் சண்டை இடுகின்றது உன்னைப் பார்ப்பதற்காக
என் உதடுகள் துடிக்கின்றது உன்னிடம் பேசுவதற்காக
என் கைகள் தேடுகின்றது உன் விரல்களைக் கோர்ப்பதற்காக
என் மனம் போராடுகின்றது உன்
இனிய வருகைக்காக...
026.உலகை உணர்த்தியவன்
சூரியனின் வெப்பத்தை உணர வைத்தவன்
பூக்களின் வாசத்தை சுவாசிக்க வைத்தவன்
பறவைகளின் ஓசையைக் கேட்க வைத்தவன்
அலைகள் கரையை தொடுவதை பார்க்க வைத்தவன்
இரவின் நிலவின் வெளிச்சத்தை காண வைத்தவன்
மேகம் வானை அரவணைப்பது கண்டு வியக்க வைத்தவன்
காற்றில் மரங்கள் அசையும் அழகை கவனிக்க வைத்தவன்
வண்டு தேனை எடுப்பதை கண்டு மகிழ்விக்க வைத்தவன்
அனைத்தையும் உணர்ந்தபின்,
வாழ்வின் அழகையும், அதன் நேசத்தையும் உணர
வைத்தவன் !
027.நீ இல்லா நேரங்களில்...
உன்னை காதலித்து தோற்று நிற்கின்றேன்
உன்னை நினைத்தே நாட்கள் செல்கின்றேன்
உன்னை ஏங்கியே மனம் வாடுகின்றேன்
உன்னைப் பற்றியே கனவு காண்கின்றேன்
உன்னை பார்த்தால் கண்கள் மலர்கின்றேன்
உன்னை இழந்தால் இருளில் மூழ்கின்றேன்....
028."காதல்: இரு முகங்கள் "
காதல் என்பது வரம்,
அதை காதலிப்பவனுக்கு தான் தெரியும்.
காதல் என்பது சாபம்,
அதை தோற்றவனுக்கு தான் தெரியும்.
காதல் என்பது மகிழ்ச்சி
அதை உணர்ந்தவனுக்கு தான் தெரியும்.
காதல் என்பது வேதனை
அதை அனுபவித்தவனுக்கு தான் தெரியும்.
காதல் என்பது கனாக்கள்
அதை நனவில் கண்டவனுக்கு தான் தெரியும்.
காதல் என்பது வருத்தம்
அதை இதயம் உடைந்தவனுக்கு தான் தெரியும்.
029.உன்னோடு…
உன்னோடு கனவில் மிதக்கின்றேன்,
நிஜத்தில் தவிக்கின்றேன்…
உன்னோடு பாதையில்
நடக்கின்றேன்,
தொலைந்ததால் தேடுகின்றேன்…
உன்னோடு வார்த்தைகளை கோர்க்கின்றேன்,
மௌனத்தில்
விழுகின்றேன்…
உன்னோடு ஒளிக்கதிராய்
பரவுகின்றேன்,
இருளில் மறைகின்றேன் ...
உன்னோடு நிழலாய்
நிற்கின்றேன்,
வெளிச்சத்தில் கரையின்றேன் …
030.நான் காதலிக்க...நீ மறுக்க...
நான் அவனை நினைக்கின்றேன்
அவன் என்னை மறுக்கின்றான்
நான் அவனை தேடுகின்றேன்
அவன் என்னை தவிர்க்கின்றான்
நான் அவனை எதிர்பார்க்கின்றேன்
அவன் என்னை புறக்கணிக்கின்றான்
நான் அவனை அழைக்கின்றேன் அவன் என்னை
ஒதுக்குகின்றான்
நான் அவனை நேசிக்கின்றேன்
அவன் என்னை வெறுக்கின்றான்...
031.
031.மௌனத்தின் மொழி
அவன் பாசத்தை வார்த்தைகள் இல்லாமல்
உணர்வுகளில் மட்டுமே என்னை இணைத்தான்.
அவன் காதலை சொல்லாமல்,
பார்வையால் மட்டுமே என்னை அணைத்தான்.
அவன் ஆசைகளை மொழிகளில்லாமல்,
சுவாசத்தில் மட்டும் என்னை இணைத்தான்
அவன் இதயத்தில் இடம் கொடுத்ததை சொல்லாமல்,
உள்ளத்தில் மட்டும் என்னை பதித்தான்...
032."உணர்ந்தவனுக்கு மட்டும்!"
பூவின் சுவாசத்தை
உணர்ந்தவனுக்கு பூவின் அருமை தெரியும்.
இயற்கை ரசிப்பவனுக்கு
மட்டுமே இயற்கையின் அழகு தெரியும்.
மழையில் நனைபவனுக்கு
மழைத்துளியின் மகிழ்ச்சி தெரியும்.
உணவை உண்பவனுக்கு
உணவின் அருமை தெரியும்.
காதல் செய்பவனுக்கு
காதலின் உணர்வுகள் தெரியும்....
033."அவன்... என் ரசனை!"
தூரத்தில் நின்று
அவன் அழகை ரசித்தேன்
பேசுகையில்
அவன் வார்த்தைகளை ரசித்தேன்
நடக்கையில்
அவன் கம்பீரத்தை ரசித்தேன்
சிரிக்கையில்
அவன் மகிழ்ச்சியை ரசித்தேன்
என்னைப் பார்த்ததில்
அவன் காதலை ரசித்தேன்...
034."அவன் – ஒரு இயற்கையின் வடிவம்!"
சூரியன் போல் பிரகாசமாக இருப்பவன் இவன்
நிலவைப் போல் ரசிக்க தூண்டுபவன் இவன்
காற்றைப் போல் தென்றலாய் பேசுபவன் இவன்
நிலம் போல் ஆதரவாக நிற்பவன் இவன்
நெருப்பை போல் நேசம் கொண்டவன் இவன்
035."அவன் அணைந்த பொழுது..."
என் உதடு அவனை முத்தமிடும் பொழுது
என் பெண்மையை உணர்ந்தேன்
என் கைகள் அவனை தொட்ட பொழுது
என் வெட்கத்தை உணர்ந்தேன்
என் கண்கள் அவனை தேடிய பொழுது
என் காதலை உணர்ந்தேன்
என் இதயம் அவன் அருகில் இருந்த போது
என் உயிரை உணர்ந்தேன்...
036."அவன் அருகில் ஆசை"
அவன் மடியில் தலை வைத்து
அவன் முகத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சி
அவன் கைகளை கோர்த்து
அவன் தோளில் சாய்ந்ததில் மகிழ்ச்சி
அவன் விரலைப் பிடித்து
அவன் அருகில் அமர்ந்ததில் மகிழ்ச்சி
அவன் நெஞ்சில் சாய்ந்து
அவன் இதயத்துடிப்பை உணர்ந்ததில் மகிழ்ச்சி
அவன் கண்களைப் பார்த்து
அவன் காதலில் மூழ்கியதில் மகிழ்ச்சி...
037 "அவன் எனது உயிர்"
அவனை எண்ணுகையில் நான் கவிஞன் ஆகின்றேன்.
அவனுடன் பேசுகையில் நான் ராகம் ஆகின்றேன்.
அவனை தொடுகையில் நான் மழைநீர் ஆகின்றேன்.
அவனை பார்க்கையில் நான் ஓவியம் ஆகின்றேன்.
அவனை பிரிகையில் நான் அனாதை ஆகின்றேன்..
38."காதல் ஓசையாய் நீ"
உன் பார்வை தீபத்தின் வெளிச்சம்
உன் சிரிப்பு மலர்களின் மலர்ச்சி
உன் முத்தம் இசையின் ஓசை
உன் தொடுகை தென்றலின் தாளம்
உன் காதல் கடலின் அலைகள்
உன் நினைவுகள் தேனிலவு தரிசனம்...
39.நானாக நான், நீயாக நீ…
மலையாக நான் அருவியாக நீ ....
பூக்களாக நான் வண்டாக நீ ....
மரங்களாக நான் கிளைகளாக நீ .....
பறவையாக நான் வானமாக நீ ....
கடலாக நான் அலைகளாக நீ ...
சந்திரனாக நான் ஒளியாக நீ ....
உடலாக நான் உயிராக நீ ....
40.தாண்டும் காலங்கள், தேடும் நான்.....
காத்திருக்கின்றேன் உன் வரவுக்காக காலங்கள் தாண்டி…
காத்திருக்கின்றேன் உன்னை பார்ப்பதற்காக மாதங்கள் தாண்டி…
காத்திருக்கின்றேன் உன் வார்த்தைகளுக்காக வாரங்கள் தாண்டி…
காத்திருக்கின்றேன் உன் நினைவுகளுக்காக வருடங்கள் தாண்டி…
காத்திருக்கின்றேன் உன் காதலுக்காக யுகங்கள் தாண்டி…
041."நீ இல்லாத தேடல்கள்"
நீ பேசாத மௌனங்களை தேடுகின்றேன்.
நீ தொடாத நினைவுகளை தேடுகின்றேன்.
நீ எழுதிய கவிதைகளை தேடுகின்றேன்.
நீ சென்றிருந்த பாதைகளை தேடுகின்றேன்.
நீ மறைந்த நிழலை தேடுகின்றேன்.
நீ தந்த சுகங்களை தேடுகின்றேன்.
நீ என்னுள் மலர்த்த காதலை தேடுகின்றேன்.
நீ இல்லாத வாழ்க்கையை தேடுகின்றேன்.
042.என் உயிரோடு கலந்தவனுக்கு...
என் காதலை நீ உணர்ந்து விடுவாய் என்று நினைத்து ஏனோ பலமுறை
தோற்று நின்ற போதிலும் மீண்டும் என் மனம் தொடங்கிய இடத்திலே
நிற்கின்றது உன் காதலைப் பெற்று விடுவேன் என்ற எண்ணத்தில்
நினைத்த நொடியில் என் அருகில் வந்து நின்றாய் மகிழ்ச்சி அடைந்தேன்
ஏனோ பின்பு தான் தெரிந்தது வந்தது கனவில் என்று மீண்டும் கண்களை
இறுக்கி மூடி கொண்டேன் கனவு தொடரட்டும் என்ற எண்ணத்தில்
என் விழிகள் உன்னைத் தேடிக் கொண்டிருந்த போதெல்லாம் ஏனோ
உன் விழிகள் என்னை பார்க்க மறந்த போதும் மீண்டும் காத்திருப்பேன்
உன் விழிகள் என்னை தேடும் என்ற எண்ணத்தில்
நினைக்க மறந்தாலும் நீங்காத நினைவு நீ மறக்க நினைத்தாலும் மறக்க
முடியாத சுவடி நீ மீண்டும் நினைக்கத் தோன்றியது ஏனோ
நீ என்னை நினைப்பாய் என்ற எண்ணத்தில்
043."நீயாய் நான்…"
காணும் காட்சியில் நீ
காணாமல் போகின்றேன் நான்...
பேசும் வார்த்தைகளில் நீ
பேசாமல் நிற்கின்றேன் நான்...
சிரிக்கும் முகத்தில் நீ
சிந்தையில் கரைகின்றேன் நான்...
நடக்கும் பாதையில் நீ
நொந்துபோய் தவிக்கின்றேன் நான்...
இரவின் நிலவாய் நீ
இருட்டாய் மறைகின்றேன் நான்...
காதல் நினைவாய் நீ
கண்ணீராய் தோன்றுகின்றேன் நான்...
044."உணர்வின் ஒளியாய்..."
உன் முத்தத்தின் சுகம் –
மௌனமான கவிதையாக உதடுகளில் மலர்ந்தது.
உன் கைகள் தொட்டதில் சுகம் –
விரல்கள் சொல்லாத காதல் கவிதை.
உன் அரவணைப்பில் அடைந்த சுகம் –
உயிரை உருகவைக்கும் வெப்பம்.
உன் மார்பில் சாய்ந்ததில் சுகம் –
காதலும் கடவுளும் கோர்த்த உணர்ச்சி .
உன் அன்பை உணர்ந்ததால் சுகம் –
உணர்வோடு உடலும் உயிரும் கலந்த தருணம்.
045.காதல் பரவசம்
அவனைப் பார்த்தால் முகம் ஆனந்தத்தில் மலர்கின்றது.
அவனை அருகில் சந்தித்தால் மூச்சு முட்டிக் கொள்கின்றது.
அவனை நினைத்தால் இதயம் துள்ளுகின்றது.
அவனைப் பிரிந்தால் இரவுகள் பகலாக முடிகின்றது.
அவனைக் காதலித்தால் மனம் பரவசத்தில் மிதக்கின்றது!
046."காதலித்ததால்..."
காதலித்ததால் நான் கனவில் மிதக்கின்றேன்
காதலித்ததால் நான் வார்த்தைகளில் இசைக்கின்றேன்
காதலித்ததால் நான் மனதுக்குள் சிரிக்கின்றேன்
காதலித்ததால் நான் நாள்களின் மீதும் பறக்கின்றேன்
காதலித்ததால் நான் நிலவில் ஒளியாய் மாறுகின்றேன்
காதலித்ததால் நான் இதயத்தில் இசையாய் இசைக்கின்றேன்
காதலித்ததால் நான் உணர்வுகளின் தென்றலாய் வீசுகின்றேன்
காதலித்ததால் நான் கவிஞன் ஆகின்றேன்...
047."தேடலின் நீரோடை"
தேடித் தேடி தொலைந்தேன் உன் காதலை தேடி
தேடித் தேடி பார்த்தேன் உன் நினைவுகள் தேடி
தேடித் தேடி தவிக்கின்றேன் உன் அன்பை தேடி
தேடித் தேடி நடந்தேன் உன் பாதச் சுவடுகள் தேடி
தேடித் தேடி அழுதேன் உன் மௌனத்தின் அர்த்தம் தேடி
தேடித் தேடி வாழ்கின்றேன் உன் நிழலின் சுகம் தேடி
048."அவன் இல்லையெனில்..."
நான் அவனைப் பார்க்கவில்லை என்றால்
இயற்கை ரசித்திருக்க மாட்டேன்
நான் அவனிடம் பேசவில்லை என்றால்
தமிழ் மொழியின் அருமையை அறிந்திருக்க மாட்டேன்
நான் அவனை நினைக்கவில்லை என்றால்
கனவுகளின் இனிமையை அனுபவித்திருக்க மாட்டேன்
நான் அவனை காதலிக்கவில்லை என்றால்
உணர்வுகளை உயிருடன் உணர்ந்திருக்க மாட்டேன்
நான் அவனை தேடவில்லை என்றால்
என்னை நான் அறிந்திருக்க மாட்டேன்...
049.நேசிக்க நேசிக்க நிறைவில்லா நேயம்...
பார்க்க பார்க்க மயக்குகின்றது அவனது கண்கள்
கேட்க கேட்க இனிக்கின்றது அவனது குரல்
சிரிக்க சிரிக்க மலர்கின்றது அவனது முகம்
பேச பேச இனிக்கின்றது அவனது வார்த்தைகள்
பிரியப் பிரியப் அழியாமல் இருக்கின்றது அவனது காதல்
தொடர தொடர நிலைக்கின்றது அவனது உறவு...
050."உனக்குள் நான் ஒழிந்தேன்!"
உன்னை அழைத்தால் என் சிந்தனை உன் வார்த்தையாகிவிடும்
உன்னை யோசித்தால் என் உள்ளம் உன் மூச்சாக மாறிவிடும் !
உன்னை நேசித்தால் என் உயிரும் உன்னில் இணைந்து விடும்!
உன்னை அனைத்தால் என் ஆத்மாவே உனக்குள் ஒழிந்துவிடும்
051."உன் காதலின் காற்று"
காற்றாய் தொடும் உன் ஸ்பரிசம்,
நிலவாய் உருகிடும் என் தேகம்.
அலையாக வந்திடும் உன் கண்களால்,
கரையாய் கரைந்திடும் என் உள்ளத்தில்.
வாசமாக வீசிடும் உன் நினைவுகள்,
மலராக மலர்ந்திடும் என் மனத்தில்.
மேகமாக சூழ்ந்திடும் உன் காதல்,
வானமாக பரவிவிடும் என் இதயம்...
052."அவன் நினைவின் நிழலில்"
அவன் நினைவுகள் எனை அசை போடுகிறது,
எங்கே சென்றாலும் எதிரில் அவனது பிம்பம்.
அவன் நினைவுகள் என்
உணர்வை தூண்டுகிறது,
இதயம் அவனைவே ஏங்கி தவிக்கின்றது.
அவன் நினைவுகள் என் காதலே நினைக்கின்றது,
நிமிடம்தோறும் எனை வசப்படுத்துகிறது.
அவன் நினைவுகள் எனை வாழவைக்கின்றது,
அவனின்றி கூட இதயம் துடிக்கிறது...
053."அவன் முழுவதுமாக"
கார்மேகம் போல் வானத்தில் வீசும் நிறம் அவனது.
மழைத்துளி போல் காற்றில் விழும் பெயர் அவனது.
மின்னல் போல் ஒருசிறு கணத்தில் ஒளியூட்டும் சிரிப்பு அவனது.
நதி போல் அடங்காமல் வழிந்தோடும் நடை அவனது.
பருத்தி போல் இயல்பும் எளிமையும் சொல்லும் உடை அவனது.
காற்று போல் இல்லாததை உணர்த்தும் பேச்சு அவனது.
பாறை போல் எந்த சூழ்நிலையிலும் நிலைத்திருக்கும் குணம் அவனது.
நெஞ்சின் ஆழத்தில் நுழைந்து உயிரையே தொடும் காதல் அவனது.
"காதலைப் பற்றி நான் உணர்ந்ததை, என் பார்வையில் உங்களுடன் பகிரப் போகிறேன்."
புராணங்கள் என்பது முழுக்க முழுக்க கற்பனை கதைகள் அல்ல; அவை அடிப்படை உண்மைகளை மறைத்து, நுண்ணிய பொருள்களைக் கொண்டு சொல்லப்படும் வரலாற்று நிகழ்வுகளாக இருக்கலாம். காதலின் விஷயத்தில், புராணங்கள் பல உண்மைகளைக் கொண்டுள்ளன.
1. மறைந்துபோன காதல் கதைகள் – புராணங்களில் ஒளிந்திருப்பவை
(i) தேவி நாகமதி – ஒரு முற்றுப்பெறாத காதல்
இந்தக் கதை பலரும் அறியாதது. நாகமதி ஒரு யோகினியாக இருந்தாள். ஆனால் அவள் தன் காதலனாக ஒருவரை நினைத்து கொண்டிருந்தாள்.
பிரச்சனை? – அவள் யோகினி என்பதால் காதலில் ஈடுபடக்கூடாது.
என்ன நடந்தது? – அவள் ஆன்மீக சாதனையின் உச்சத்தில் இருந்தபோது, காதலன் மறைந்துவிடுகிறான்.
கதை சொல்லும் விஷயம்? – உண்மையான காதல் ஒருவரை எதிலும் அடையும், ஆனாலும் சில நேரங்களில் அது முழுமையடையாது.
(ii) உஷா & அனிருத்தன் – காதல் எதிர்ப்புக்கு எதிராக ஒரு போர்
உஷா, பாணாசுரனின் மகள். அனிருத்தன், பகீரதனின் மருமகன்.
திறப்புக் கோணங்கள்:
தந்தை விதிக்கெதிராக, ஒரு பெண் தனது காதலனுடன் தப்பித்து செல்லும் முதல் புராணக் கதை.
காதல் என்பதற்காகவே போர் நடந்த முதல் சம்பவம்.
(iii) கந்தர்ப்பசேனா – மறந்து போன காதலின் சாட்சியம்
கந்தர்ப்பசேனா, ஒரு அழகி. அவள் தனது காதலனாக ஒரு கிராமத்து பையனை தேர்ந்தெடுத்தாள்.
என்ன ஆனது? – அவள் தேவலோகத்தில் பிறந்தவள் என்பதால், அவளை மணக்க முடியாது.
அதன் விளைவு? – அவள் பூமியில் பிறவி எடுத்து காதலனை அடைய விரும்பினாள். ஆனால் காதலன் அடுத்த பிறவியில் யோகியாக பிறந்துவிட்டான்.
கதை சொல்லும் விஷயம்? – காதல் எதிர்பார்த்தபடி நடந்துவிடாது. சில நேரங்களில், அது ஒழுங்கில்லாத முறையில் நிறைவேறுகிறது.
2. யாரும் சொல்லாத உண்மைகள் – புராணங்களில் மறைந்திருக்கும் விஷயங்கள்
(i) காதல் & கர்மா – உண்மையான காதலர்கள் அடுத்த பிறவியில் சந்திக்கிறார்களா?
கீதையில் கிருஷ்ணன் கூறுவது – “நீங்கள் ஒரு உயிருடன் உள்ளார்ந்த பந்தத்தில் இருந்தால், அது மீண்டும் பிறவியில் கூடும்.”
பெரிய கேள்வி:
ஆனால் எல்லோரும் காதலரை அடுத்த பிறவியில் சந்திக்கிறார்களா?
இல்லை என்றால், ஏன்?
புராண விளக்கம்:
காதலுக்கான கர்மா ராசியானது – ஒருவரை விட்டுவிட்டால், அது மீண்டும் யார் உயிரில் தரித்துக் கொள்ளும்?
சில காதல்கள் நம்மைத் தவிர்க்க முடியாமல் வருவது – பின்பிறவியிலோ, வேறு உறவுகளிலோ.
(ii) மறைந்துபோன திருவிளையாடல் கதைகள் – காதல் & தெய்வீகம்
திருமால் தனது பார்வதி பக்தனை தன்னையே காதலிக்க வைத்து, இறுதியில் அவர் பக்தியாக மாறுகிறார்.
கேள்வி:
காதல் பக்தியாக மாறும் என்ற கருத்து எந்த அளவுக்கு உண்மையாக இருக்கிறது?
பக்தியும் காதலாக மாறுமா?
(iii) தேவர்கள் & மனிதர்கள் – காதல் எப்படி ஒளிந்திருக்கும்?
உர்வசி-அர்ஜுனன் – காதலின் சுதந்திரம் ஒரு தேவலோகத்தில்கூட இருக்க முடியாது என்பதன் சான்று.
தேவயானி-கச்ச – காதலுக்காக ஒரு பெண் எந்த அளவு தியாகம் செய்யவேண்டும்?
3. காதல் தோல்வியின் மறைமுக விளக்கம் – புராணங்கள் எதை சொல்கின்றன?
(i) காதலுக்காக விலகும் கதாபாத்திரங்கள்
வசுதத்தன்-விஜயா – ஒரு ஜென்மத்தில் காதல் முடியவில்லை என்றால், அடுத்த ஜென்மத்திலும் முடியுமா?
சாக்ரதேவன் – மரணத்திற்குப் பிறகும் காதல் தொடருமா?
(ii) "இறுதியில் காதல் வெல்லுமா?" – ஒரு ஆழமான கேள்வி
திருமணம் என்ற அடையாளம் காதலுக்கு தேவையா?
பல புராணக் கதைகளில் காதல் முடிவதில்லை, ஆனால் அது மறைந்து செல்லும்.
இவை காதல் வென்றதா, தோற்றதா?
4. புதிய பார்வையில் காதல் – புராணங்கள் நமக்குக் கொடுக்கும் மறைமுக செய்திகள்
(i) காதலுக்கான ஆழமான வார்த்தைகள்
அநுராக (Anuraga) – ஆழமான காதல்
ஸ்னேகம் (Sneha) – பாசம் கலந்த காதல்
மோக (Moha) – ஆசை கலந்த காதல்
(ii) புராணங்களின் மறுபரிசீலனை – காதல் என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன?
> காதல் வெறும் ஒரு உணர்வு அல்ல, அது ஆன்மீக சக்தி.
காதல் & கர்மா ஒன்றாகவே செயல்படும்.
5. புதுக்கவிதை – காதல் & ஜென்மம்
"காதல் ஒரு ஜென்மத்தில் முடிவதில்லை"
காதல் ஓர் ஆற்றல், உயிரைக் கவரும்,
காலம் கடந்தும், ஜென்மங்கள் மறந்தும்,
நிழலாய் அலைகின்றாய், உயிராய் கலக்கின்றாய்,
நீ சென்றாலும், நான் விழுந்தாலும்,
எந்தப் பிறவியிலும் ஒரு தரிசனம் –
அது காதலின் திசையற்ற பயணம்.
"இந்தப் புத்தகத்தை நான் இன்னும் முடிக்கவில்லை… ஆனால், காதலையும் முடிக்க முடியாது. அது ஒரு நிகழ்வாக இல்லாது, ஓர் அனுபவமாகவே தொடரும். காதல் கவிதைகளும் அதேபோல் – ஒரு முடிவில்லா பேரோட்டம், ஒவ்வொரு வரியிலும் புதுவித உணர்வுகளாக மாறிக்கொண்டே இருக்கும். இந்தப் பக்கங்கள் முடிந்தாலும், இந்தக் காதல் கதையும், கவிதைகளும் தொடரும்…"
- என்றும் காதலுடன் ... Lion சைலஜா கணேசன்.