செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, பெண்கள், நிகழ்வுகள், நிகழ்வுகள்

கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...

10 மார்ச் 2025 542 பார்வைகள்
கலைச்செல்வியின்  ஓயாத கலைப்பயணம் ...

இரா. கலைச்செல்வி, மேனாள் அரசு துணை செயலாளர். இவர் வீரமங்கை வேலு நாச்சியார்  அரசாட்சி செய்த , சிவகங்கை சீமையில் பிறந்து , வளர்ந்து , கல்லுரி படிப்பை சிவகங்கையில் முடித்து,  திருமணத்துக்குப் பிறகு சென்னை வந்து , தலைமை செயலக அரசு பணியில்  32 வருடங்கள் பணிபுரிந்து , பல அரசுத் துறைகளில் பணிபுரிந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ள ,உயர் அரசு அதிகாரி.

இவரது கணவர்   மத்திய அரசு  நிறுவனத்தில் , தலைமை விஞ்ஞானியாக பணியாற்றி, ஓய்வு பெற்றவர் . ஒரே மகன் மென்பொருள் நிறுவனத்தில் திட்ட மேலாளராய் பணி புரிகிறார்.

 தமிழ் இலக்கியத்தின் மீதும் , வாசிப்பின் மீதும் தீரா காதல் கொண்ட எழுத்தாளர் கலைச் செல்வி  அவர்கள் நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒளிபரப்பாகி உள்ளன . நிலா முற்றம் நேர்காணல் போன்ற பல வானொலி நிகழ்வுகளில்  பங்கெடுத்துக் கொண்டுள்ளார்.

அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். சிறு கதைகள் தவிர , கவிதைகளும்,  ஆய்வு கட்டுரைகளும் நிறைய எழுதி வருகிறார்.
இவரது கதைகளும் கவிதைகளும்   தாமரை,  புதிய பார்வை, முதலெழுத்து மின்னிதழ், வானவில் மின்னிதழ் , அமெரிக்கா முத்தமிழ் நேசன் மின்னிதழ் மற்றும் தென் தமிழ் நியூஸ் டாட் காம், சிறுகதைகள் டாட் காம் ஆகியவற்றில் தொடர்ந்து பிரசுரமாகி வருகின்றன.

இவர்  சமூகத்தில் மகளிர் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும், அவர்களின் மேம்பாடு குறித்தும் ,பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை, நெகிழி பயன்பாட்டின் தீமைகள்,  மண்வளம் காத்தல், உலகம் வெப்பமயமாதல், பெண்கள் சந்திக்கும் குடும்ப வன்முறை ,பெண் குழந்தைகளின் விடா முயற்சி, முதியோர் பிரச்சனைகள்,  உயிரை மாய்த்துக் கொள்ளும் வளர்இளம்பெண்கள், கிராமத்து மகளிரின் கஷ்டங்கள் ,  ஒட்டுமொத்த பெண்களின்  மனக்குமுறல்கள், பெண்  சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தும் பெண்கள்,  தாய்மையின் மகத்துவம் , பெண்களின் சுய முன்னேற்றத்தில்   அவர்கள்  சந்திக்கும்  குடும்பத் தடைகள் , சமுதாய தடைகள் போன்ற, பல்வேறு சமூக நலன் , மகளிர் நலம்  சார்ந்த  விஷயங்கள் குறித்து ,இவர் நிறைய எழுதி வருகிறார்.

இவர்  சமுக சேவைக்கான   குளோபல் அச்சீவர்ஸ் கவுன்சில் வழங்கிய " சேவா ரத்னா விருது" ,    நந்தனம் பவுண்டேசன் வழங்கிய "சாதனைப் பெண் விருது ",  கலைஞர் தமிழ் ஆய்வு இருக்கை வழங்கிய "கவிஞாயிறு விருது" , உலகளாவிய கவிதை போட்டியில்  வென்றதற்காக கொரியா தமிழ் சங்கம் வழங்கிய "வெற்றிச் சான்றிதழ்",  சிறந்த திறனாய்வாளர் விருது ,தியாகிச் செம்மல் விருது ,போன்ற பல விருதுகளையும், பல்வேறு வெற்றி  சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். யோகா,  பிரானிக் ஹீலிங் உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுள்ளார்.. உளவியலில் முதுகலை பட்டம் பெற்றவர்.   இவரது கவிதைகளும்  சிறுகதைகளும் கட்டுரைகளும் பல புத்தகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

பிற்படுத்தப்பட்ட ஏழை எளிய மக்கள், மாணவ மாணவிகள்  அவர்களின்  முன்னேற்றத்திற்காக அறக்கட்டளை துவங்கி ,அதன் துணைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். மகளிர் மேடை என தனி தளம் துவங்கி மகளிரின் மேம்பாட்டிற்காகவும்,    பெண் குழந்தைகளுக்கு   விழிப்புணர்வு அளிக்கும்  பொருட்டு பல்வேறு விதமான  போட்டிகள் நடத்தி,   அவர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார்.

மேலும் இரா. கலைச்செல்வி அவர்களின் பணி சிறக்க நமது மகிழ்ச்சி Fm சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ...நீங்களும் உங்கள் வாழ்த்துக்களையம் கருத்துக்களையும் நமது இணையத்தளத்தில் பதிவிவிடுங்கள்... 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE