சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
சட்ட மாமேதை அம்பேத்கர் 040
சட்ட மாமேதை அம்பேத்கர்
+++++++++++++++++++
ஒதுக்கப்பட்டவர்களின் ஒளியும் நீ?!
மறுக்கப்பட்டவர்களின் மாலுமி நீ!
சட்டவரையறைகள் தந்த சான்றோன் நீ!
அறிவுச் சுடர் பரப்பிய ஆன்றோன் நீ!
நியாயங்கள் சொல்ல பிறந்தவன் நீ!
பாவங்களை அகற்றிய பகலவன் நீ!
மறைந்தும் மறக்கப்படாதவன் நீ!
சுத்தமல்லி உமாஹரிஹரன்
திருநெல்வேலி