புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்

இனிய புத்தாண்டு பூவே உனக்காக...

01 ஜனவரி 2023 1,643 பார்வைகள்
இனிய புத்தாண்டு பூவே உனக்காக...

இனிய புத்தாண்டு பூவே உனக்காக,,,

இனிமையாய், இளமையாய்,, வருவாய் என்று! புன்னகையில் காத்திருந்தோம்!

பூவாய் மலர்ந்து! புன்னகை தேசத்தில் புதுப்பொலிவுடன்
பூத்துக் குலுங்கிய புத்தம் புது மலரே!

வாடிய முகமலர்களை எல்லாம்,, எந்நாளும் 
வாட விடாது,, வளம்நலம் சேர்க்க வந்தாயோ!

வருடத்தில் ஒருமுறைதான் பிறப்பு!! உனக்கு! எங்கள்,,
வாழ்வை வசந்தகாலமாக்கிசொன்றால்!நாங்கள்வாழும் நாளெல்லாம்
உனக்கு சிறப்பு!

இயற்கை சீற்றம் காணாது!!
எழில் கொஞ்சும்அழகு சோலைகளைஉதிர்க்காது!

ஓங்கி உயர்ந்த மலை வளங்களை தகர்க்காது!

அகன்ற ஆழ்கடலை கொந்தளிக்க விடாது!
சுற்றும் பூமியை சுழற்சியை மாற்றாது!

தென்றலை வீசிச் செல் வாயா! உள்ளத்தை தேன் மழையில் நனைத்து செல்வாயா!

பிரிந்த உறவுகளை எல்லாம் சேர்த்து வைப்பாயா !
சேர்ந்த உறவுகளை எல்லாம் பிரிக்காது,, செம்மையாய் வாழ வைப்பாயா!

உழவுகளையும், நெசவுகளையும்,
வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்வாயா!

செல்ல சின்னங்களுடன் வந்த குழந்தையாய்! செழுமையாய் ஓங்கி உயர்ந்து !உயரமாய்சிங்காரதேராய் பவணிவர!
 இனிய புத்தாண்டே உனக்கு வாழ்த்துக்கள்!

கவிதை மாணிக்கம்

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE