எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...!
"முயற்சி திருவினையாக்கும்" என்பதற்கே வாழ்வில் உந்துசக்தியாய் பயணிக்கிறார்
முனைவர் அனிதா சந்திரசேகர். கல்வியால் கருவூலம் சேர்த்துக் கொண்டு,
எழுத்தால் எண்ணங்களை எழுச்சியாய் மாற்றியவர். பரமக்குடி என்னும்
பண்பாட்டு மண்ணில் பிறந்து, இலக்கியத்தின் இமயத்தை நோக்கி பயணிக்கும் இவர்,
பெண்களுக்கு முன்னுதாரணமாய் திகழ்கிறார்.
பள்ளிக்கூட காலத்திலேயே எழுத்தின் மீதான ஆர்வம் பளபளப்பாய் வெளிப்பட்டது.
கட்டுரை, கவிதை, கோலம், ஓவியம் என பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு
வெற்றிகளை குவித்தவர். ஒரு குழந்தை தினசரி, வார, மாத இதழ்களை படிக்கும்
பழக்கத்தை வளர்த்துக் கொண்டால், அவர் எதிர்காலத்தில் எந்த உயரத்தையும்
தொட்டுவிடுவார் என்பதற்கு அனிதா சந்திரசேகர் சிறந்த எடுத்துக்காட்டு.
பள்ளியிலிருந்தே நூலகம் சென்று வாசிப்பு பழக்கத்தை வளர்த்ததோடு,
தனது சிந்தனைகளை எழுத்தாக வடிவமைத்தார்.
இயற்கையின் அரிய அன்பளிப்பு "நடனம்" என்ற கலைக்கணுக்கு
கற்றுக்கொண்டவர், "ஹிந்தி" மொழியையும் ஆர்வத்துடன் பயின்றார்.
ஆனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு என்பதால் இரண்டையும் பாதியிலேயே
நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. அதேபோல், இளங்கலை முடிந்ததும்,
முதுகலை கல்வியை தொடரும் முனைப்பில் இருந்த போது,
திருமண ஏற்பாடு செய்யப்பட்டு, வாழ்வின் புதிய அத்தியாயம் தொடங்கியது.
சில ஆண்டுகள் கணவருடன் வெளிநாட்டில் இருந்தாலும்,
கல்வி குறித்த ஆர்வம் சிறிதளவும் குறையவில்லை.
அவரது இரண்டாவது மகன் பிறந்தபின், தனது கனவை நிஜமாக்க
பல முயற்சிகளை மேற்கொண்டார். குழந்தையின் இரண்டாம்
பிறந்த நாளில் B.Ed படிப்பைத் தொடங்கியவர், கைக்குழந்தையோடு
படித்து முதல் வகுப்பில் (distinction) தேர்ச்சி பெற்றார். திருமணத்திற்கு
முன்பு உயிர்வேதியலில் B.Sc பட்டம் பெற்றவர், திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து
தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், M.Ed என மொத்தம்
ஏழு பட்டங்களை முதல் வகுப்பில் பெற்றார்.
எழுத்துலகில் தனது பெயரை பதிக்க முகநூலில் தன் எண்ணங்களை எழுத ஆரம்பித்தார்.
சமூக வலைதளங்களில் பெற்ற ஊக்கமே அவரை தொடர்ந்து எழுதும் பணியில்
முன்னேற வைத்தது. தொடக்க காலத்தில் எழுத்துகளை பத்திரிகைகளுக்கு
அனுப்பியும் பல தடைகள் ஏற்பட்டன. ஆனால், முயற்சி முளைத்தது!
இதுவரை 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், மற்றும் சிறுகதைகள் தினசரி,
வார, மாத இதழ்களில் வெளிவந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக,
தனது முதல் கவிதை தொகுப்பு "உன்னை சுமந்த போது" வெளியானது.
இதனுடன் "மனக்கூடு, கிராமிய வாசம், மாண்புமிகு மாதர்கள்"
என ஐந்து நூல்களை உலகிற்கு அர்ப்பணித்துள்ளார்.
அவரது பங்களிப்பை பாராட்டும் விதமாக அப்துல் கலாம் விருது,
அமெரிக்க தமிழ் பல்கலைக்கழகம் விருது, அண்ணா விருது, மகத்துவ மகளிர் விருது,
கவி வழுதி விருது என 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
இலக்கியத்திற்காக சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் முனைவர் பட்டத்தையும் வழங்கியுள்ளது.
கொஞ்சம் காலம் தனியார் கல்லூரியில் பணிபுரிந்தவர், பிள்ளைகளின்
கல்விக்காக தனது தொழிலை விட்டு முழுமையாக கவனம் செலுத்தினார்.
ஓய்வு நேரங்களில் ஓவியம் வரைவது, விதவிதமான சமையல்களை
செய்து மகிழ்வது போன்ற பல்வேறு ஆர்வங்களோடு குடும்பப் பொறுப்பையும் சிறப்பாக நீட்டிக்கிறார்.
இத்தனை தடைகளையும் மீறி, கல்வியிலும், எழுத்திலும், குடும்பத்திலும் வெற்றி கண்ட
முனைவர் அனிதா சந்திரசேகர் மாதிரிப் பெண்ணாக திகழ்கிறார். குடும்பம், பிள்ளைகள்,
சமூகம் என அனைத்திற்கும் சமமாக நேரம் ஒதுக்கி, தனது கனவை
வாழ்வாக்கிய பெருமைக்குரிய பெண்மணி!
"முயன்றால் முடியாதது எதுவும் இல்லை" என்பதற்கே அவர் வாழ்வே
நிரூபணமாக உள்ளது. மேலும் மேலும் உயரக்க, இன்னும் பல நூல்கள்
வழங்க அவருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
மேலும் முனைவர் அனிதா சந்திரசேகர் அவர்களின் பணி சிறக்க நமது மகிழ்ச்சி Fm
சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் ...
நீங்களும் உங்கள் வாழ்த்துக்களையும் கருத்துக்களையும்
நமது இணையத்தளத்தில் பதிவிவிடுங்கள்...
இதைப் போன்று நீங்கள் சாதனைப் பெண்மணியா ...?
உங்கள் சாதனைகளும் இதைப் போன்று கட்டுரையாக
வெளிவர எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்
மேலும் தொடர்புக்கு - 8838078388