சிறப்பு தினங்கள் கவிதை, சிறப்பு தினங்கள் கவிதை, நிகழ்வுகள், நிகழ்வுகள், கவிதைகள்
உலக தாய்மொழி தினம்
உதிரத்தில் ஊறிய உயிரானவள்
என்றோ தோன்றி
எத்திக்கும் முழங்குவது
அன்றே உயிரோடு
அனைவரிலும் துடிப்பது
அன்னை என்பவளாய்
அகிலத்தை ஆள்பவளாய்
பண்பை புகட்டிடும்
பைந்தமிழ் மொழியாள்
இலக்கிய வழியோடு
இலக்கணம் உரைப்பவளாய்
பலத்தை கொடுத்து
பாரினை வென்றவளாய்
ஏடுகள் புகட்டிய
ஏகாந்தக் கலையாய்
தொடுக்கும் பூந்தமிழ்
தொடரான மாலையாய்
கல்வெட்டுக்களிலும் பழமையினை
கரையாது பறைசாற்றும்
எல்லா மொழிகளிலும்
எம்மன்னை மூத்தவளே
உயிர்மெய்யோடு ஓங்கி
உதிரத்தோடு உணர்வானவளே
துயிலாத தூரிகையில்
துரிதமாய் முத்தமிடுவாள்
வள்ளுவனோடு குலவிகுறளில்
வலுவாய் உரமானவள்
பாரதியும் கம்பனும்
பருகி ருசித்த சொத்து
தோண்டத் தோண்ட
தொல்லியல் வடிவமாய்
தமிழ்மொழியும் மறையாது
உதிக்கும் ஆதவனே
கிருஷ் அபி இலங்கை