குடியரசு தினம் கவிதை
குடியரசு தினம்
15. 08 .1947 ல் சுதந்திரம் அடைந்த இந்தியாவில்,
24 .01 .1950 ல் தனி அரசியல் அமைப்பு சட்டம் இயற்றப்பட்டு,
26.01.1950 ல் செயலாக்கம் கண்ட *குடியரசு தினம்!*
சமத்துவம் தொடர்ந்து
சம உரிமை நீடித்து
பாரதம் செழித்து
மக்கள் வாழ்வு சிறக்கும்
*குடியரசு தினம்!*
தாயை நேசிப்பது போல
தாய் நாட்டை மூச்சாய் சுவாசித்து வந்தே மாதரம் எனும் முழங்கும்
*குடியரசு தினம்!*
எத்தனை மதம்
எத்தனை மொழி
எத்தனை ஜாதி
எத்தனை பிரிவுகள் இருந்தாலும்
நாம் அனைவரும்
பாரத தாயின் பிள்ளைகள்
என இதயத்தில் முழக்கமிடும்
*குடியரசு தினம்!*
தேசிய தலைநகரில்
ராஜ்பாத்தில்,
குடியரசுத் தலைவர் உரையும்
குடியரசு தின அணிவகுப்பும்
இந்திய கலாச்சாரம் /சமூக
பாரம்பரியத்தை வெளிப்படுத்தும்
*குடியரசு தினம்!*
நீதி/சமத்துவம்/சுதந்திரம் சகோதரத்துவத்தை உறுதி செய்து மக்களின் உரிமைகளோடு
கடமைகளை நினைவூட்டும்
அரசியல் சாசனமான
*குடியரசு தினம்!*
மக்களுக்காக
மக்களுடைய
மக்கள் அரசு என
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் ஜனாதிபதி
ஆபிரகாம் லிங்கன்
குடியரசு என்பதன் இலக்கணத்தை வகுத்து தந்த *குடியரசு தினம்!*
பாரதப் பிரதமரின்
*ஜன் பாகிதாரி* எனும் கருப்பொருளை பிரதிபலிக்கும்
74 ஆவது *குடியரசு தினம்!*
சிறந்த சேவை புரிந்தவருக்கு,
வீர தீர சாகசம் செய்தவர்களுக்கு, விருது/பாராட்டு/பதக்கம் வழங்கி கௌரவிக்கும் *குடியரசு தினம்!*
அடிமைப்பட்டுக் கிடந்த தாய் நாட்டை தன்னுயிர் துச்சமென எண்ணி போராடி/சுதந்திரத்தை பெற்று தந்த தலைவர்களை/தியாகிகளை
நினைவு கூர்ந்து மரியாதை செய்யும் *குடியரசு தினம்!*
ஒரே நாடு
ஒரே பார்வை
ஒரே அடையாளம்
ஒரே கொடி
நமது இந்தியா
என நினைவிலேந்தும்
*குடியரசு தினம்!*
இறையாண்மை கொண்ட
ஜனநாயக நாடாக
பாரத அரசு பிரகடனப்படுத்திக் கொள்ளும் *குடியரசு தினம்!*
எகிப்து அரபு குடியரசின் அதிபர்
அப்துல் ஃபத்தா அல் சிசி
சிறப்பு விருந்தினராக
இந்திய குடியரசு தினத்தில்
கலந்து கொண்டு
தூதரக உறவினை பேணும்
சிறப்பு மிகு *குடியரசு தினம்!*
ராணுவ அணி வகுப்பை பார்த்து தேசமே பெருமை கொண்டு தேசப்பற்றினை வளர்த்து,
மாவட்ட ஆட்சியர்கள் பறக்க விடும் மூவர்ண கொடியால்
தேசத்தை உற்று நோக்க வைக்கும்
*குடியரசு தினம்!*
அரசர்களைக் கொண்டது முடியரசு மக்களால் உண்டானது குடியரசு
என அன்று முதல் இன்று வரை நம்மோடு/நம் உணர்வோடு
முடிவை எட்டா தீப ஒளியாய் வேற்றுமையில் ஒற்றுமையை வலுவாக்கும் *குடியரசு தினம்!*
அனைவரும் சமம் என்ற அரசியலமைப்பின் அடித்தளமாகி இடைவெளி இல்லா காற்றாக
பாரதமெங்கும்
சமத்துவத்தின் சான்றாகி
காலம் காட்டும் கடிகாரமாக அனைவருக்கும் ஒரே சட்டம்
என உணர்த்தும் *குடியரசு தினம்!*
மாநிலங்களில் கவர்னரும் மாவட்டங்களில் ஆட்சியரும்
கம்பத்தில் உச்சியில் உள்ள
கொடியை அவிழ்த்து
பறக்க விடும் *குடியரசு தினம்!*
ராணுவ வலிமை
கலாச்சார பன்முகத் தன்மை நிகழ்வோடு
நாட்டின் வளத்தை
குடியரசு தலைவர்
ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் உரையாற்றும் *குடியரசு தினம்!*
சுதந்திரம் காப்போம்
சுதந்திரப் பிரஜையாய்
பெருமிதம் கொள்வோம்!
முனைவர் பெ. தமிழ்ச்செல்வி வாலாஜாபேட்டை .