செவ்வாய், 22 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , பெண்கள், பெண்கள், கவிதைகள்

ரோஜா தினம்

07 பிப்ரவரி 2023 1,174 பார்வைகள்
ரோஜா தினம்

ரோஜா ரோஜா

வண்ண நிறத்தில்
வடிவாக நீ
கண்ணைப் பறித்து
கவர்கிறாய் நீ

காந்தமாய் ஈர்த்து
மனதைக் களவாடுகிறாய் நீ
மென்மையான பட்டு
மேனியோடு தென்றலைக் 
கொஞ்சுகிறாய் நீ

இதழ்களால் இனிக்கிறாய்
இதயங்களைத் தொடுகிறாய் நீ
முதல் காதல்சொல்ல
முன்னிலையில் நிற்கிறாய் நீ

விழாக்களின் போது
வினோதமாய் ஆகிறாய் நீ
உலவிடும் பொழுதுகளில்
உள்ளத்தைக் கொய்கிறாய் நீ
பல சிகை அலங்காரத்தில் பயன்பாடாயிருக்கிறாய் நீ

எங்கு சென்றாலும் 
எதிலும் பதிலுமாக நீ
பங்கு கொள்ளுமிடத்திலும்
பார்த்திடத் தூண்டும் நீ

அழகாய்த் தோன்றினாலும்
அருகில் முள்ளோடு நீ
உன்னைப் பறித்தால்
குத்திடுவேன் என்கிறாய் நீ

 வலியினைத் தந்து உதிரம் சொட்டினாலும்
உன்னைத் தொலைக்க மனமே வராது
 எனென்றால் உன்னை நான் விரும்புகின்றேன்

ரோஜா  ரோஜா ரோஜா..

கிருஷ் அபி, இலங்கை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE