தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , பெண்கள், பெண்கள், கவிதைகள்
காதலர் தினம் ..! 014
காதலர்கள் தினம்
காதல் கூட பணத்தில்தான்
நிச்சயமாகிறது!
காதல் கோட்டை கடனில் கட்டப்பட்டு
மறுநாள்
கட்டிய இடம் காணாமல் போக
ஒவ்வொரு வருடமும் தொடரும் கதை இது!
இன்னமும் கொண்டாடுகிறோம்!
ஒரு விதத்தில் இது சரிதான்!
அனைத்து கவலைகளும்
மறக்கப்படும் நாள்!
மறுநாள்-
தொலை(ந்)த்த காதல் அல்லது
புதிய காதலை
தேடும் பயணம் தொடரும்!
வாக்குறுதிகள் அள்ளி வீசப்படும்!
(மூச்சுக்) காற்றுக்கு அவை கனமாகும்!
அன்பில் மிதக்கும் உள்ளத்திற்கு
அழைப்பிதழ் தேவையில்லை!
அலங்காரம், ஆடம்பரம் அவசியமில்லை!
நோவும் தனிமையும்
அவர்களைத் தொடுவதில்லை!
இதை உணர்ந்தால்,
எல்லா நாளும் காதலே! காதலர் தினமே!
- முனைவர் இரா சீதா, புனித பிலோமினாள் கல்லூரி, மைசூரு.