புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , பெண்கள், பெண்கள், கவிதைகள்

அன்பு ..! 032

07 பிப்ரவரி 2023 487 பார்வைகள்
அன்பு ..! 032

சொற்ப நேரம்
உன் மௌனம் பிடிக்கும்!
சில நேரம்
உன் கவி அலசல் பிடிக்கும்!
பல நேரம்
உன் Cal msg பிடிக்கும்!

என்னுடனான
உன் வருகை பிடிக்கும்!
எனக்கே எனக்கான
உன் அன்பு பிடிக்கும்!
எனக்காக ஆசையுடன்
சேகரித்து வைத்து
தரும் பொருட்கள் பிடிக்கும்!
என்னை எனக்கே 
உணர வைத்த 
உன் அருகாமை பிடிக்கும்!

நான் நேசித்து வாழ 100 உறவுகள்
என்னைச் சுற்றியிருக்கலாம்!
என்னை நேசிக்கும் 
ஒரு உயிரிருந்தால்
அது.....நீ தான்!

இத்தனை காலமாய் நான் நடந்த
வாழ்க்கைப் பாதை தான்....ஆனால்
உன்னோடு நடக்கும் போது மட்டும்
வெகு அழகாய் தெரிகிறது!

எனக்கும் நிலவுக்கும்
சிறு வித்தியாசம் தான்....
அது ஆதவன் வருகை நோக்கி விண்ணில்!
நான் ஈஸ்வரன் வரம் தேடி
மண்ணில்!

அன்பு
மனம் நிறைந்த அன்பு
உளம் குழைந்த அன்பு
கண் விரித்து எதிர்நோக்கும் அன்பு
அது ஒன்றே போதுமென்ற
எதிர்பார்ப்பில்....

தமிழ்!

முனைவர். பெ. தமிழ்ச்செல்வி, வாலாஜாபேட்டை.

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE