புதன், 23 September 2026
⚡ சமீபத்திய
கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ... கல்வியில் புதுமை புகுத்தும் ஆசிரியர் தா. சிலம்பரசி...! எழில்மிகு கவி நிலா முனைவர் அனிதா சந்திரசேகர்...! மகிழ்ச்சி தின போட்டிக்கான கவிதைகள் சேவைச் செம்மல் பிரியதர்சினி மகிழ்ச்சி FM பெருமையுடன் வழங்கும் கவிச்செம்மல் விருது 2025 மக்களின் சேவையில் Dr. A. பாத்திமா கரிக்கோல் ஓவியத்தில் ஜொலிக்கும் நக்க்ஷட்ரா நிலவாய் நீ .. வரிகளால் நான்... அற்பணி செய்யும் அன்பு ஆசிரியர்... கலைச்செல்வியின் ஓயாத கலைப்பயணம் ...
தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , தமிழரின் பெருமை கட்டுரைப் போட்டி , பெண்கள், பெண்கள், கவிதைகள்

காதல் சிலிர்த்துக் கொள்ளட்டும்.. !.005

27 ஜனவரி 2023 703 பார்வைகள்
காதல் சிலிர்த்துக் கொள்ளட்டும்.. !.005

காதல் சிலிர்த்துக் கொள்ளட்டும்...

என் குறுஞ்செய்திக்கு
பதில் அளிக்காதே...
என் அழைப்புகளை அலட்சியப்படுத்து...
உனக்காக காத்திருப்புகளில்
என்னை கரையவிடு...
எப்போது பேசுவாய் என்று
ஏங்கவிடு...

நொடிகள் தோறும்
நின் நினைவினில் நொறுங்கிட செய்..
ஆதி முதல் அந்தம் வரை
நின் நினைவுகளை புரையோடவிடு...
நான் ஆசையாய் பேச நினைக்கும்
பொழுதுகளில் எல்லாம்
வேலைபளுவென்று சொல்லி விலகியே நில் ..

நான் அனுப்பும் முத்த குறியீடுகளை
காரணங்களின்றி காயப்படுத்து..
உன்னை தழுவிக்கொள்ள விடாமல்
தடுத்து விட்டு எனை தவிக்கவிடு..

ஏனென்று வினவாதே..
எளிதில் கிடைத்துவிடும் எதற்கும்
மதிப்பு தெரியாமல் போய்விடுமாம்...
உந்தன் முதல் முத்தமும்
முதல் ஸ்பரிசமும்
எத்தனை மதிப்பானதென்று
எனக்கு மட்டுமே தெரியுமடா..

பின்னொரு நாளில்
நீ விடும் மூச்சுக்காற்றிலிருந்து
தரைவிழும் நின் நிழல் வரை
எனக்கே உரிமையென என்னுயிரினில்
உயிலொன்றை எழுதிவிடு...
காதல் சிலிர்த்துக் கொள்ளட்டும்...

-சசிகலா திருமால்
கும்பகோணம்.

 

பகிர்க

மகிழ்ச்சி FM
இணைகிறோம்...
● LIVE