கவிதைகள்
பூக்களின் அரங்கேற்றம்...
துயருற்ற வாழ்வு
தன்னைக் கை கொள்ள
ஒரு தும்பியாய்
பறந்து திரிக இதயமே !
கவலை மறந்து
உன் கவிதைகளை
பூக்களிடம் அரங்கேற்று
இந்தக்கிளையில்
இன்னுமொரு மொட்டு
புதிதாக தோன்றட்டும்
தங்கேஸ்